கிளாசிக் மேட்னி..(மட்டன்/சிக்கன் ) வறுவல்:

கிளாசிக் மேட்னி..(மட்டன்/சிக்கன் ) வறுவல்:

தேவையானவை:
- ஆட்டுக் கறி .......................1 /2 கிலோ
- வெங்காயம்.....................150 கிராம்
- இஞ்சி.................................1 இன்ச் நீளம்
- பூண்டு................................50 கிராம்
- முந்திரி...............................20
- மிளகு................................1 /4 தேக்கரண்டி
- சீரகம்.................................. 1தேக்கரண்டி
- சோம்பு..............................1 /4 தேக்கரண்டி
- ஜாதிக்காய் (தேவையானால் )......1 சிட்டிகை
- மிளகுப்பொடி.........................2 தேக்கரண்டி
- சீரகப்பொடி...............................1 தேக்கரண்டி
- மல்லிப் பொடி...........................1 தேக்கரண்டி
- மஞ்சள் பொடி...........................கொஞ்சம்
- தயிர்...........................................2 தேக்கரண்டி
- எலுமிச்சை.................................1 மூடி
- தேங்காய்/எந்த எண்ணெய் ....4 தேக்கரண்டி
- உப்பு..............................................தேவையான அளவு
- கறிவேப்பிலை + மல்லிதழை....கொஞ்சம்
செய்முறை:
- ஆட்டுக்கறியை நன்கு கழுவிக்கொள்ளவும் .
- பூண்டையும், வெங்காயத்தையும் உரித்துக் கொள்ளவும்.
- இஞ்சி,+10 பூண்டை நன்கு அரைக்கவும்.
- 10 வெங்காயம்+ 1 /2தேக்கரண்டி சீரகம் +ஜாதிக்காயை நன்கு அரைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும், அதில் மிளகு, சீரகம் + சோம்பு போட்டு பொரிக்கவும்.
- இவை சிவந்ததும், முந்திரி, மீதமுள்ள பூண்டு, வெங்காயம் முழுதாகப் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கிய பிறகு, தீயைக் குறைக்கவும். வெங்காயத்துடன், மிளகுப் பொடி , சீரகப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள்பொடி போட்டு இவற்றை நன்றாக, ஒன்றாகப் பிரட்டவும்.
- ஒரு பெரிய பாத்திரத்தில் கழுவிய கறியைப் போடவும். அதனுடன், அரைத்த இஞ்சி, பூண்டு, வெங்காயம், வதக்கிய வெங்காயம், பூண்டு, வறுத்த மிளகு,சீரகம்,சோம்பு,முந்திரி, மிளகுப்பொடி, சீரகப்பொடி,மல்லிப் பொடி , தயிர்,எலுமிச்சை சாறு,2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் + உப்பு போட்டு நீர் ஊற்றாமல் நன்கு பிசையவும்.
- இதனை அப்படியே குளிர் பதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும்/வெளியிலும் வைக்கலாம்.
- அடுப்பில் தவா/கடாயை வைத்து அதில் இதனை எடுத்து அப்படியே போட்டு, தீயை சிறுத்து வைத்து வதக்கவும்.
- எண்ணெய் விட வேண்டியதில்லை.
- இதனை குக்கரில் வைக்க வேண்டாம். அரை மணி நேரத்துக்குள் கறி வெந்துவிடும்.
இந்த கிளாசிக் மேட்னி மட்டன் வறுவல் சும்மா கலக்கலா இருக்கும்...! குக்கரில் வைக்காததால் இதன் சுவை கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். இதனை இட்லி, சப்பாத்தி, சாம்பார்சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், புதினா சாதம்,புளிசாதம், குஸ்கா,பிரியாணி எதனுடன் சேர்த்து சாப்பிட்டாலும் செமையான மேட்சிங் தான்..! என்ன செய்து பார்க்கலாமா ..?

No comments:
Post a Comment