Thursday, February 20, 2014

லுட்விக் எட்வர்ட்டு போல்ட்ஸ்மேன் (Ludwig Eduard Boltzmann (February 20, 1844 – September 5, 1906)

லுட்விக் எட்வர்ட்டு போல்ட்ஸ்மேன் (Ludwig Eduard Boltzmann (February 20, 1844 – September 5, 1906)

February 21, 2014 at 1:49am
லுட்விக் எட்வர்ட்டு போல்ட்ஸ்மேன் :


  இனிய அதிகாலையின் அன்பு சூழ்ந்த மகிழ் வணக்கம். ஆஸ்திரியா நாட்டு விஞ்ஞானியான லுட்விக் எட்வர்ட்டு போல்ட்ஸ்மேன் என்ற அற்புதமான விஞ்ஞானியின் பிறந்த தினம்..இன்று பிப்ரவரி 20.லுட்விக் எட்வர்ட்டு போல்த்மேன் அடிப்படையில் ஒரு இயற்பியலாளர்.மற்றும் தத்துவ ஞானி. அவரின் வாழ்வில் சாத்தித்தது என்னவென்றால்,புள்ளியியல் இயக்கவியல் (statistical mechanics) என்ற புதிய இயற்பியல் துறையை உருவாக்கி வளர்த்தவர். இதுதான்  வாழ்நாள் சாதனையாகும்.

   

இந்த புள்ளியியல் இயக்கவியலில், இங்கே, அணுக்களின், நிறை (mass),மின்னூட்டம் (charge) மற்றும் கட்டமைப்பு (structure) போன்ற  குணங்கள்/பண்புகள் எப்படி இருக்கும் என்றும், அவை எப்படி நடந்து கொள்ளும் என்றும், முன்கூட்டியே அனுமானம் செய்தது விளக்கி இருக்கிறார்.இவைதான் ஒரு பொருளின், பிசுக்குத்தன்மை (viscosity), வெப்பம் கடத்தும் திறன் ( thermal conductivity) மற்றும் விரவுதல் (diffusion) போன்ற பொருட்களின் தன்மையை  உருவாக்குகின்றன என்றும் முன் அனுமானம் செய்து விளக்கம் தந்தவர் லுட்விக் எட்வர்ட்டு போல்தட்மேன்

  

இயற்பியலின் அடிப்படை தத்துவ மமற்றும் பண்புகளான இவைதான், முக்கியமானவை..எனற இயற்பியலின் அடிநாதத்தை தொட்டவர் லுட்விக் எட்வர்ட்டு போல்ட்ஸ்மேன்..இதுவே இவாது வாழ் நாள் சாதனை ,மட்டுமல்ல. இவரின் தனிப்பட்ட  சாதனையும் கூட.

 லுட்விக் எட்வர்ட்டு போல்த்மேன், 1844, பிப்ரவரி 20ம் நாள். ஆஸ்திரிய சாம்ராஜயத்தின் தலைநகரான் வியன்னாவில் பிறந்தவர் லுட்விக் எட்வர்ட்டு போல்ட்ஸ்மேன்.இவரின் தந்தை , லுட்விக் ஜார்ஜ் போல்ட்மென் (Ludwig Georg Boltzmann) வருவாய்த்துறையில் பணியாற்றும் ஓர் அதிகாரி. அவரின் தாத்தாதான் குடும்பத்தை பெர்லினிலிருந்து, வியன்னாவுக்கு மாற்றியவர்.அவர் அடிப்படையில் ஒரு கடிகார உற்பத்தியாளர்.அதனை .உருவாக்கும் தொழில் செய்து வாழ்க்கையை நகர்த்தியவர்;. 

  

லுட்விக் எட்வர்ட்டு வியன்னா பல்கலையில் 1863 ல்  இயற்பியல் படித்தார். 1866ல் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.பின் அவரது ஆசான் ஸ்டீபனின் (Stefan’) கீழேயே உதவியாளராகப் பணிபுரிநதார்.தான் படிதஹ வியன்னா பலகலையிலேயே கணிதப் பேராசிரியராகவும் பணி செய்தார்.

   

அதன்பின் 1870ல் இவர் தனது கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்.அதில் வெப்ப இயக்கவியலின் இரண்டாவது விதியை(Second law of thermodynamics,) தெளிவாக விளக்கினார். இதில் இயக்கவியலின் விதிகளையும் சொன்னார். 1876 வரை வியன்னா பல்கலையிலேயே கணிதவியல்  பேராசியராக இருந்தார்.

   

பின் 1872ல், ஒரு கண்டிப்பான, கறாரான பெண் ஹென்ரிஎயட் வான் ஐஜெ ண்ட்லெர் (Henriette von Aigentler,) என்பவரைச் சந்தித்தார்.இது லுட்விக் வாழ்வில் ஒரு  அமைந்தது. ஹென்ரிஎயட் வானின் கணிதம் மற்றும் இயற்பியலின் அசகாய திறமை. அவரை லுட்விக் பால் ஈர்த்தது.1876, ஜூலை 17 ம் நாள் லுட்விக் , ஹென்ரிஎயட் கரம் பற்றி தன இல்வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகளும், 2 ஆண்  மகவுகளும் பிறந்தன.

   லுட்விக் எட்வர்ட்டு போல்ட்ஸ்மேன் தனது வாழ்நாளை  மிக சந்தோஷமாவே  க்ரெசில் (Graz) கழித்தார்.பின் 1885 ல், ஆஸ்திரியாவின் அறிவியல் ராயல்  அகாடமியில் உறுப்பினராகவும் இணைந்தார் பின் மூனிச் பல்கலையின் Theoretical Physics துறை இயக்குனராக1890 ல் பொறுப்பேற்றார். 

  .

 இவ்வளவு அறிவும் திறமைகளும் ஒருங்கே அமைந்த லுட்விக் எட்வர்ட்டுபோல்ட்ஸ்மேன் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர். திடீர்  திடீரென கோபம், வருத்தம், கவலை என பன்முக  உணர்வுகளுக்கு தாவிக்  கொண்டே இருப்பார்.எப்போதும்  ஒரு  உணர்வுடன் இருக்கவே  மாட்டார்.மேலும் இவருக்கு நரம்பு தொடர்பான சின்ன வியாதி (bipolar disorder) இருந்தது. அ தனாலும் அதனைத் தொடர்ந்த மனக் குழப்பத்தினாலும்,மன அழுத்தத்தாலும்  அ டிக்கடி தற்கொலை முயற்சிகள் செய்திருக்கிறார். அவரால் அவரின் இறுதிக் காலத்தில் நிம்மதியாகவே வாழ முடியவில்லை.அடிக்கடி வாழ்நாளை முடிக்க முயன்றவர்,

  

ஒருநாள் இயற்கையாக அன்றி, செயற்கையாக அவரின் வாழ்வில் முடிவு ஏற்பட்டது.அதுதான் இறுதியாக போல்ட்ஸ்மேன் 1906, செப்டம்பர் 5 ம் நாள் டுயூனொவில் (Duino), ஒரு கோடை விடுப்பில் தன்னைத்தானே தூக்குப் போட்டுக்  கொண்டு தன உயிரை மாய்த்துக் கொண்டார்.இது கொடுமையான செயலதான். 


  

நிலவில உள்ள ஒரு பள்ளத்திற்கு லுட்விக் எட்வர்ட் போல்ட்ஸ்மேன் என்று பெயர் சூட்டி இருக்கின்றனர.
  • Named for Ludwig Eduard Boltzmann (1844-1906), an Austrian physicist.
  • This name was assigned in the Rectified Lunar Atlas (1963), based on Earth-based photos of the libration zones, and approved by the IAU in 1964, to which it was described as a 70 km diameter crater at 75.5°S, 96.0°W.
  • In preparing its initial long list of farside names, the IAU Working Group for Lunar Nomenclature was initially unable to find evidence in space-based overhead views of a significant crater at that location, and announced at the August 1970 meeting its plan of deleting the 1964 approval and reassigning the name to the larger nearby crater now known as Lippmann.



.