Wednesday, January 18, 2012

பழங்கால பெண் கணிதவியலாளர்கள்:

பழங்கால பெண் கணிதவியலாளர்கள்:

by Mohana Somasundram on Monday, January 16, 2012 at 11:57pm

பழங்கால பெண் கணிதவியலாளர்கள்:

அறிவியலின்.. மகாராணி

அறிவியலின் மகாராணி என்றால்அது கணிதத்தை மட்டுமே.குறிக்கும்..! கணிதம் இன்றி ஒரு செயல்பாடும் செய்ய முடியாது. எதைச் செய்தாலும், அதன் பின்னணியில் கணிதம் இருக்கும். மனிதன் முதலில் அறிந்து கொள்ள முயன்றது கணிதவியல் முறைதான். சூரியன் எப்போது உதிக்கிறது, இரவு எப்போ வரும்,, எவ்வளவு வேகத்தில் கல் வீசி, விலங்கைக் கொல்லலாம், குடும்பத்தில் எத்தனை பேர், எத்தனை விலங்குகள் துரத்தின, குடும்பத்திற்கு எத்தனை விலங்கு வேண்டும் என்பதெல்லாம் கணிதம் தொடர்பான தகவல்கள்தானே..! அதன்பின், வீடு கட்டும்போதும், எவ்வளவு நீளம், எவ்வளவு உயரம் என்றெல்லாம் தெரிய வேண்டியிருந்தது..! மனிதகுல நாகரிகத்துக்கு முன்பே, உயிர் உருவாக்கத்திற்கான காலம் கணிக்க, மாதவிடாய் நாட்கள் கணிக்க,மகப்பேறு காலம் அறிய தேவை ஏற்பட்டது. இவையும் கணிதம்தான்.! எனவே, கணிதத்தின் பிதாமகனான எண்கள் உருவானதும், எண்ணிக்கை வந்ததும், சுவையான கதையே..!

மனித.இன.பதிவுகளும்..பொருள்களும் ..!

மனிதன் ஆதி காலத்தில், கற்காலத்தில் பயன்படுத்திய கற்கருவிகள்,ஈட்டி, கோடரி, பானைகள்,எலும்பு ஊசி,எலும்பு தூண்டில், பொத்தான்கள், செருப்பு இவற்றை ஒட்டுமொத்தமாக, கலைப்பொருட்கள் என்கிறோம். மனிதன் ஆதிகாலத்தில், தான் வாழ்ந்த குகைகளில் இவற்றை ஓவியமாக வரைந்து வைத்திருக்கிறான். பயன் படுத்திய பொருட்கள் அந்த மலைக்குகைகளில் கிடைக்கின்றன. பாறைகளில் அவனது உற்று நோக்கல்கள், வான்பட வரைவு போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆப்பிரிக்காதான் மனித இனத்தின் தொட்டில் என கருதப்படுகிறது. மனிதன் முதன் முதலில் தங்கி வாழ்ந்த இடமும் இதுதான். தென்னாப்பிரிக்காவின் தென் முனையில் உட்கார்ந்துள்ளது பிலோம்போஸ் குகைகள் (Blombos Caves).இங்கேதான் மனிதன் கூட்டாக வாழ்ந்த துவக்ககால நாகரிகத்தின், மிக, மிகப் பழைய, ஆதிகால பொருட்கள் காணப்படுகின்றன. அங்கே செம்பழுப்பு நிற சுண்ணாம்பு பாறைகளில் செதுக்கப்பட்ட துண்டுகள் கிடைத்தன. இவைதான், உலகில் மனிதனால் முதலில் கலைவடிவமாக செதுக்கப்பட்டவை என கருதுதப்படுகிறது.வயது சுமார் 75,000 ஆண்டுகள்.இவற்றுடன் 80,௦௦௦000 வயதுடைய சில எலும்பு சாதனங்களும் கிடைத்தன. மேலும் இங்கே, எலும்பு கருவியால் , துளையிடப்பட்டு , அணிகலன்களாக அணிந்த நத்தையின் கூடுகளும் கிடைத்துள்ளன. இவைதான், மனித இனம் முதன்முதல் பயன்படுத்திய நகைகள்.

முதல்..காலண்டர்...பாறை.!

அது மட்டுமல்ல. ஆப்பிரிக்காவில், மனிதன் தான் உருவாக்கிய காலண்டரை, ஒற்றைப் பாறைகளில் வடித்திருக்கிறான்.அவை அங்கு ஏராளமாக விரவிக் கிடக்கின்றன. அங்கு கிடைத்த பொருட்களிலிருந்து, மனிதன் அங்கே, சுமார் 2,00,000 ஆண்டுகளுக்கு முன்பே தங்கி வாழ்ந்திருக்கவேண்டும் என்பதும் தெரிகிறது. சுமார் 6 ஆண்டுகால ஆராய்ச்சி மூலம் கிடைத்த தகவல்கள் இவை.

கணிதத்தின்..பொருள் என்ன?

இன்று நாம் உச்சரிக்கும் கணிதம் (Mathematics) என்ற வார்த்தையே கூட கிரேக்கத்திலிருந்து வந்ததுதான். அதன் பொருள் என்ன தெரியுமா? methamaa என்ற கிரேக்க சொல்லுக்கு, அறிவு,படிப்பு, கற்றல் என்ற பொருளாகும். இது அளவு,வெளி, அமைப்பு மற்றும் மாற்றம் போன்றவற்றைப் படிப்பதாகும். கணிதம் புதிய புதிய வழி முறைகள் கண்டறிந்து அதற்கான இலக்கணம் வகுப்பதாகும்.கணிதவியலாளர்கள், கணிதத்தின் நிரூபணம் மூலம் ஒரு விஷயம் உண்மையா, பொய்யா என்பதை சொல்லிவிடுவார்கள். ஆனால் அறிவியலின் ராணியான கணிதத்தில் பல விற்பன்னர்கள் இருக்கிறார்கள். இதில் இருபதாம் நூற்றாண்டு வரை, பெண்களுக்கு பெரும்பாலும் இடம் தரப்படவில்லை என்பதே உண்மையும் கூட.

முதல் கணிதப் பதிவு..!

கணிதத்தின் பரிணாமம் என்பதே அதனுடைய காரண காரியமான உண்மைகளைத் தேடுவதைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதே..! இது விலங்குகளைப் பங்கு போடுவதிலிருந்து துவங்கி இருக்கக் கூடும். . இதுதான் எண்கள் உருவாகக் காரணி. இரண்டு ஆடுகளும், இரண்டு மாடுகளும் சேர்ந்தால் என்ன கணக்கு/எண்ணிக்கை என்பது இன்று நமக்குத் தெரியும். ஆனால் ஆதிகால மனிதனுக்கு குகைகளில் வாழந்தவனுக்கு எப்படி இதனைப் புரிந்து கொண்டிருக்க முடியும். இதன் விளைவாக உருவாகி விளைந்ததே கணிதம். அது மட்டுமா?வரலாற்றுக்கு முன் வாழ்ந்த மனித சமுதாயத்திற்கு,சூரியன் எப்போது உதித்தது, எப்போது மறைந்தது, எப்போது மழைவரும், எப்போது காற்றடிக்கும் என்பதை அறியவும், நாட்கள், காலம், ஆண்டுகள் அறிய ஏதாவது தகவல் வேண்டி இருந்தது. அதைவிட முக்கியமாக, உடலில் மாற்றம் ஏற்பட்டு கரு உருவானவுடன், எப்போது அது பிறக்கும், அதன் காலம் தெரிய வேண்டி இருந்தது, எனவே, அதற்கு முக்கியமாக, சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறை குறிப்புகளே உதவின.மேலும் கணிதத்தின் முதல் உருவாக்கம் கோடுகள் போட்டு எண்ணுவதிலிருந்தே துவங்கியது என்பதும் கூட பதிவுகள் மூலம் தெரிய வருகிறது. இதனை செய்தது ஒரு பெண்தான் என்று பழங்கால சான்றுகள் நிரூபிக்கின்றன.

சரித்திரம்& கணிதம் பேசும் எலும்பு..!

வரலாற்றில், அதுவும் ஐரோப்பியர்கள் தொடர்பான சரித்திரத்தில், ஆப்பிரிக்க எகிப்திய கணிதம் அடியோடு மறுக்கப்பட்டது. அல்லது வரலாறும் , கணிதமும் அதன் அடிப்படை தன்மைகளிலிருந்தே ஒதுக்கப்பட்டன. ஆனால் பதிவு செய்யப்பட்ட வரலாற்ரின் முகம் வேறு விதமாக இருக்கிறதே..! மத்திய நிலநடுக்கோட்டு ஆப்பிரிக்காவின் மலைப்பகுதியில் உள்ள , உகாண்டா மற்றும் சைரே நாடுகளுக்கிடையில் உள்ளது எட்வர்ட் (Lake Edward) என்னும் ஏரி.இதன் நீர்வள ஆதாரம் நைல் நதி. இதன் கரைகளில் தற்போது இது குறைவான மக்கள் வசிக்கும் பகுதியாக இருந்தாலும், சுமார் 25,000 ஆண்டுகளுக்கு முன் இங்கு மீன் பிடித்து, விவசாயம் செய்த சமூகம் வாழ்ந்தது. அவர்கள் அங்கு நிகழ்ந்த எரிமலை வெடிப்பு அப்படியே அந்த மக்களை விழுங்கி விட்டது. அவர்களின் அனைத்துப் பொருட்களையும் எரிமலை கபளீகரம் செய்துவிட்டது. 1960 களில் பெல்ஜியத்திலிருந்து வந்த ஜீன் டி பிராகூர்ட் (Belgian Jean de Heinzelin de Braucourt ) என்ற விஞ்ஞானியின் குழு புதைவுற்ற எரிமலைக் குழம்பிலிருந்து அந்த இடத்திலிருந்து சில பொருட்களை எடுத்துள்ளனர். அதில் கணிதத்தின் வரலாறு பேசும் மிக முக்கியான பொருட்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்றுதான் இஷாங்கோ எலும்பு (Ishango bone) எனப்படும் ஒரு பபூன் குரங்கின் முன்னங்கால எலும்பு.. அதுதான் உலகத்தின் மிகப் பழமையான இரண்டாவது கணிதப் பதிவு கிடைத்துள்ளது.இதுதான் உலகின் மிகப் பழமையான முக்கிய எண்கள் (Prime Numbers) என்றும் கூட சிலர் சொல்கின்றனர். அதனை நுண்ணோக்கி மூலம் ஆராய்ந்ததில், அதில் 6 மாத கால சந்திர காலண்டர் குறியீடு செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.

முதல் கணிதக் கருவி பெண்ணாலா?

அந்த இஷாங்கோ எலும்பு பழைய கற்காலத்தின் முற்பகுதியைச் சேர்ந்தது என்று தெரியவருகிறது.எலும்பு கரும்பழுப்பு நிறத்தில் உள்ளது.மேலும் இதன் முனையில் ஒரு படிகக்கல் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம்தான்

இந்த எலும்பின் மேல் எழுதப்பட்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இதுதான் உலகில் பதிவு செய்யப்பட்ட கோட்டுக்கணக்கு டாலி குச்சி( Tally stick) என்றும் சொல்லப்படுகிறது. இதில் மூன்று வரிசை கோடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவைதான் முதல் கணித பதிவு என்றும் தெரிய வருகிறது. துவக்க காலத்தில் இதன் வயது கி.மு 9,500 -6 ,500 என்று கணக்கிட்டனர். பிறகுசுமார் பத்தாண்டுகளுக்கு முன் கார்பன் மூலம் ஆராய்ந்து இந்த எலும்பின் வயது சுமார் 20, 000 ஆண்டுகள் என்று அறிவியல் பூர்வமாக அறியப்பட்டுள்ளது.இதன் அருகின் உள்ள சுவாசிலாந்தில் கிடைத்த மற்றொரு எலும்பின் பெயர் லேம்போம்போ எலும்பு(Lembombo Bone in Swaziland ). இதன் வயது 43 ,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. இதுதான் உலகின் முதல் கணிதப் பதிவு. இதனை ஒரு பெண்தான் தான் கருவுற்ற காலத்தின் நாட்களை அறிய பயன்படுத்தி இருக்கவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

கணிதத்தின் பிதாமகள்..!

இறுதியில் இஷங்கோ எலும்பினை ஆராய்ந்த கிளாடியோ, இதனை உருவாக்கியது ஒரு பெண் என்றும், அவள் தன் மாதவிடாய் பற்றிய குறிப்புகளைப் பதிவு செய்ய சந்திரனின் பிறைகளைப் பயன்படுத்தி இருக்கிறாள் என்றும் தெரிவித்தார். அந்தக்கால நேரப் பதிவு, சந்திரனின் பிறைநிலைகள் கொண்டு உருவாக்கப் படவில்லை, மேலும் உயிர்கள் உருவாகக் காரணமான , பெண்களின் புனிதமான மாதவிடாய் சக்கரத்திற்கும், சந்திர பிறை நிலைகளுக்கும்தான் தொடர்பு படுத்தினர். எனவே, பெண்கள்தான், கணிதவியலின் பிதாமகர்கள்/தாய் என்று கருதப் படுயறது. இதனைப் பற்றி, வரலாற்றியலாளர்கள் பிளினியும், மார்க்கோபோலோவும் கூட குறிப்பிடுகின்றனர். இப்போது இந்த இஷாங்கோ எலும்பு, பெல்ஜியத்திலுள்ள அருங்காட்சியத்தில் , பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கிறது.

.பெண்கள் கணிதவியலாளர்கள் ..!

இருபதாம் நூற்றாண்டுக்கு முன், குறிப்பிட்ட மிகச் சில பெண்களே கணிதத்தில் திறமை பெற்றிருந்தனர். அவர்களும் கணித மேதைகளின் மனைவியாகவோ, மகளாகவோ அன்றி சகோதரியாவோ இருப்பார்கள். அது மட்டுமல்ல அவர்கள் மேல்தட்டு வர்க்கத்தினராகத்தான் இருப்பார்கள். அதுவும் பெரும்பாலும் அவர்கள் கிரேக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஏனெனில் கிரேக்க நாடுதான் அறிவியல் தொடபான அனைத்தையும் பதிவு செய்து வைத்திருக்கின்றது . அப்படிப்பட்ட பெண்களில் 10 முக்கியமான பெண் கணிதவியலாளர்கள் இருக்கின்றனர். அவர்களில் மிக முக்கியமானவரும் முதன்மையானவரும் பித்தகராஸ் தேற்றத்தின் உரிமையாளரான, கணிதவியலாளர் பித்தாகரசின் மாணவியும், பின்னர் மனைவியுமான தியானோ ஆவார். தங்க விகிதத்தை உருவாக்கியவர் தியானோதான். இவர்தான் பித்தகரசையும், அவரது கணிதப் பள்ளியையும், அவரது/ அறிவியலின் எதிரிகள் எரித்து துவம்சம் செய்த பின்னும் கூட., கணிதத்தையும் அதன் மாணவர்களையும், பித்தாகரசின் மகள் மற்றும் மகனையும் காப்பாற்றியவர். பித்தாகரசின் மாணாக்கர்களுடன் இணைத்து பித்தாகராஸ் பள்ளியை நடத்தியது மட்டுமின்றி, அதில் வெளியான அனைத்து கணித சூத்திர விதிகளுக்கும், பித்தாகரசின் பெயரை சூட்டினர்.தியானாவே பித்தாகரசின் வாழ்க்கைச் சரிதத்தையும் எழுதியுள்ளார். ஆனால் துரதிருஷ்டவசமாக அதுவும் காணாமல் போய்விட்டது.

கிரீசின் பெண் கணித மேதைகள்..!

பழங்கால கணிதம் பற்றி சில சுவையான தகவல்கள் கிடைத்துள்ளன. அதுவும் முக்கியமாக கிரீசில் வாழ்ந்த 330 கணித வியலாலர்களில் 12 % பேர் பெண்களாம். அவர்களில் பெரும்பாலோர் பித்தகரசின் மாணவர்களாம். இதில் 25% பேர் பித்தாகரசின் மாணாக்கர்கள். அதுவும் பெரும்பாலோர், இன்றைய துருக்கி எனப்படும் பழங்கால இயோனா என்ற கடற்கரையை ஒட்டிய இடத்தில் வாழ்ந்த ஆதிவாசிகளின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தான். இந்த சமுதாய கலாச்சாரத்தில் பெண்கள் சுதந்திரமானவர்களாகவும், பலசாலிகளாகவும் இருந்தனராம். சில பெண் கணிதவியலாளர்கள் இந்த காலத்தை "ஏதென்ஸின் பொற்காலம்" என்றும் அழைக்கின்றனர். இந்த பெண் kanithaviyalaalarkalil முதல் பெண் என்பவர் கணிதமேதை அய்த்ரா (Aythra) என்று அழைக்கப்படுகிறார். அய்த்ரா என்ற சொல்லுக்கு தூய்மை/தெளிவு (clarity) என்று பொருளாம். இந்த பெண்களின் பட்டியலில் கடைசியில் வந்து இணைபவர், கொடூரமாக மத வெறியர்களால் கிழித்து எறியப்பட்ட ஹைப்பேஷியா என்ற பெண் கணிதவியலாளரும், வானவியலாளரும் ஆவார்.ஆண்கள் அவரது அதீத திறமையை முன்னிட்டே தவிர்க்க முடியாமல் குறைவாக மதிப்பிட்டே பதிவு செய்தனர் அப்போது.

டாமோ..அவரின் இரத்தங்கள்..கணிதம்..!

கிரேக்கத்தில் குரோடோன் நகரில் வாழ்ந்த கணிதமேதை பித்தாகராஸ் மற்றும் தியானோவின் மகள்களில் ஒருவர் டாமோ (Damo ca. 535 BC - 475 BC ).அவர் குரோட்டனில் பிறந்தவர் அவரது பெற்றோர் இருவரும் தத்துமேதைகள் மற்றும் கணிதத்தில் விற்பன்னர்கள். அவரது சோதரிகள் அரிக்நாட், மையா . சகோதரர் டேலாஜெஸ்.டாமோ குரோட்டனிலேயே படித்து, அங்கேயே வரும் மாணாக்கர்களுக்கு கல்வியும் போதித்தார். டாமோ அவரது திறமையால், அவரது தத்துவம், கணிதத்திறமை, அவரது பொறுப்பான செயல்பாடு இவற்றால் பெருமை பெற்றார். பித்தாகராஸ் அவரது இறப்புக்கு முன்னரே, பித்தாகராஸ் தனது மகள் டாமோவின் திறமை மற்றும் பொறுப்பை நம்பி தனது கையெழுத்துப் கை எழுத்துப் பிரதிகளை எல்லாம்,டாமோவிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்கச் சொன்னார்.இதனை பின்னர் தன் மகளான பிடலே ( Bitale) மூலம் பத்திரமாக வைத்திருந்து பதிவு செய்யத் தந்தார். குரோரோனில் பித்தாகரசின் பள்ளி மூடப்பட்டபோது, டாமோ ஏதென்ஸ் நகருக்கு இடம் பெயர்ந்தார். அங்கும் டாமோ தத்துவம், கணிதத்தைப் போதித்தார். பித்தாகர்சுக்குப் பின் டாமோ மற்றும் டேலாஜெஸ் தான் கணித ஆசிரியராக இருந்தனர் என்றும், அதுவும் கி.மு 5 ம் நூற்றாண்டில் வாழ்ந்த எம்பீடொக்லெஸ்( Empedocles. ) என்ற தத்துவஞானிக்கு கல்வியும், கணிதமும் போதித்ததனர்.

பித்தாகராஸ் பள்ளியில் பெண்கள்..!

பழங்கால கிரீசில் பித்தாகராஸ் காலத்தில் வாழ்ந்த பெண் கணிதவியலாளர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களில் சிலர் முக்கியமானவர்கள். பித்தாகரசின் ஆசிரியரும், அவரை உருவாக்கியவருமாகிய, தெமிச்டோக்லையா (Themistocleia ) ஒருவர்.இவர் கி.மு.6 ம் நூறாண்டில் வாழ்ந்தார். இவரை பித்தாகரசுக்கு ரொம்பவும் பிடிக்கும்.அவரின் சீடராக இருந்தார். அதனாலேயே பித்தாகராஸ் தன் பள்ளியில் பெண்களுக்கு சுதந்திரமும், படிக்கும், போதிக்கும் வாய்ப்பும் மற்றும் ஆராய்ச்சியும் செய்யப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. பித்தாகரசின் மாமியாரான டைனோ(Deino ,6th century B.C.) பித்தாகரசின் மாணவராகவும், பள்ளியில் போதகராகவும் இருந்தார். எலோரிஸ்(Eloris),பின்டைஸ் (Phintys)மற்றும் மெலிசா (Melissa) ஆகிய பெண்களும் பித்தாகரசின் மாணவர்களே ..!

கணிதப் போதகர்கள் பெண்கள்..!

டைமிச்சா (Tymicha) என்ற பெண் ஸ்பார்டா விலிருந்து கணிதம் பயில,போதிக்க பித்தாகரசிடம் வந்தவர். அவர் பித்தாகரசின் பள்ளிக்கு நிறைய அர்ப்பணிக்குகளைத் தந்துள்ளார் என அயம்ப்ளிசூஸ் (Iamblichus ) என்ற வரலாற்றியலாளரால் சொல்லப்பட்டவர். ஆனால் அவர் கருவுற்றிருந்த போதும் கூட பித்தாகராஸ் பள்ளியின் ரகசியங்களைச் சொல்லுமாறு சைராகுயூசின் கொடூரனான டையோநிசியசால் (Dionysius ) நிர்பந்திக்கப்பட்டார். ஆனாலும் கூட பித்தாகரசைக் காட்டிக் கொடுக்காமல், தன் பல்லாலேயே தன் நாக்கை கடித்து வெட்டிக்கொண்டார்.அதன் பின் இறந்தார். இருப்பினும் அந்த கொடூரன் நிறைய பித்தாகரசின் மாணவர்களையும், ஆசிரியர்களையும் கொலை செய்தான். அது மட்டுமல்ல தாலமைஸ்,லைசிஸ், ரைடாக்கோ, ஊக்கேலோ, எக்கலோ, க்கிலோனுஸ்,க்ரதீஸிலையா என ஏராளமான பெண்கள் பித்தகராஸ் பள்ளியில் பணியாற்றி கணிதம் போதித்துள்ளனர். சாக்ரடீசின் ஆசிரியரான டையோடிம (Diotima , 6th-5th cenury B.C.)வும் பித்தாகராஸ் கணிதக் கூடத்தில் பணியாற்றிய பெண் கணிதமேதை. பிளாட்டோ என்ற தத்து வஞானியின் தாயான பெரிக்தியோன் (Periktione)என்பவரும் பித்தாகராஸ் பள்ளியில் பணியாற்றியவர்தான் .எனவே, பதிவு செய்யப்பட்ட பெண் கணிதமேதைகள் குறைவாக இருந்தாலும், ஏராளமான பெண்கள் கல்விக்கும், கணிதத்திற்கும் தங்களின் அர்ப்பணிப்பைச் செய்துள்ளனர்.


உலகின் மிகச் சிறிய முதுகெலும்பி... குட்டியூண்டு தவளை..!

உலகின் மிகச் சிறிய முதுகெலும்பி... குட்டியூண்டு தவளை..!


உலகின் மிகச் சிறிய முதுகெலும்பி... குட்டியூண்டு தவளை..!

அமெரிக்க ஐக்கிய நாட்டு விஞ்ஞானிகளின் குழுவைச்சேர்ந்த கிரிஸ் ஆஸ்டின் என்ற விஞ்ஞானி , சமீபத்தில் நியூகினியாவில் இரண்டு புதிய இனங்களைச் சேர்ந்த தவளைக் கண்டுபிடித்துள்ளார். எலும்புள்ள விலங்குகளில் இதுதான் உலகிலேயே மிக மிகச் சிறியது என்பது வியப்புக்குரிய விஷயமாகும். இந்த தவளை எவ்வளவு பெரிசு தெரியுமா? சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். இதன் அளவு 7 .7 மி.மீ தான். ஒரு இன்ச் நீளம் என்றால் உங்களுக்குத் தெரியுமல்லவா ? அந்த ஒரு இன்ச்சில் மூன்றில் ஒரு பகுதியைவிடச் சிறியது. இதற்கு முன் உலகின் சிறிய முதுகெலும்பி என்று பெயரும், பெருமையும் பெற்றிருந்த 8 மி.மீ நீளமுள்ள இந்தோனீசிய சின்ன மீனை இந்த தவளை பின்னுக்குத் தள்ளி விட்டது. இந்த குழு மூன்று மாதங்களாக உலகில் மிகப் பெரியதும், உயரமான வெப்ப மண்டல தீவான நியூகினியாவின் தீவை ஆராய்ந்து தேடித் தேடி இந்த தவளை இனங்களை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பானது ஆஸ்டின் குழுவினருக்கு மிகப் பெரிய சவாலும்,சாதனையுமாகும்.

இம்மாத்தூண்டு தவளையைக் கண்டுபிடிப்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. இதன் பெயர் பீடோபைரினி அமானூன்சிஸ்(Paedophryne amauensis) என்பதாகும் .இதன் ஆண் தவளையின் கீச்சிடும் ஒலி , ஒரு பூச்சியின் ஒலியைப் போலிருக்குமாம் . அதன் மூலம்தான் இந்த தவளையைக் கண்டுபிடித்தோம் என்று ஆஸ்டின் கூறுகிறார் . ஆனால் இது மிக மிகப் பெரிய கண்டுபிடிப்புதான்...! இதனைக் கண்ணால் காண்பதே பெரிய் விஷ்யம்தான். பொதுவாக நியூகினியா அதிகவகையான உயிரினங்கள் வாழும் ஓர் உயிரிப்பன்மையின் உச்ச பட்ச இடம். அந்த இடத்தில் எப்போதுமே புதிய வகை உயிரினங்களை கண்டுபிடிக்கலாம். கண்டுபிடிக்க முடியும்.அதனால்தான் ஏதாவது புதிய வகை உயிரினங்கள் கிடைக்குமா என்று தேடியவர்களுக்கு மிகப் பெரிய புதையல் அகப்பட்டதுபோல் கிடைத்ததுதான் இந்தப் புள்ளித் தவளை.இந்த தவளை பற்றிய தகவல் வெளியுக்லகுக்கும், அறிவியல் இதழிலும் 2012 , ஜனவரி 11 ம நாள் வெளியிடப்பட்டது.

அங்கு கிடைத்த இரண்டாவது தவளை., இந்த பீடொபைரீன் அமானூன்சிஸைவிட துளியூண்டு பெரிது. அதன் அளவு, 8 .5 மி.மீ ஆகும். இந்த குட்டியூண்டு தவளையின் பெயர் பீடோபைரினி ஸ்விப்ட்டோரம் (Paedophryne swiftorum ). பொதுவாக முதுகெலும்பிகளில் மிகச் சிறியதும், மிகப் பெரியதும் கொஞ்சம் பெருமையும், பிரபலமும் உடையவை. மனித இனம் அறிந்த 60,000 வகை முதுகெலும்பிகளில், மிகப் பெரியது நீலத் திமிங்கலமே..! அது எவ்வளோ பெரிசு தெரியுமா? சுமார் 25 மீட்டர் அளவு இருக்கும். அதாவது 75 அடி. அம்மாடியோவ் ஒரு வீடு சைஸ் என்று சொல்லலாமா? அதற்கு அடுத்த படி, மிகச் சிறிய முதுகெலும்பி, இந்தோனீசிய மீன்தான் என்று இதுவரை நம்பிக் கொண்டிருந்தோம்.அதன் சைஸ் வெறும் எட்டு மி.மீ மட்டுமே. ஆனால் அந்த எண்ணத்தை தூக்கி கபளீகரம் பண்ணி சாப்பிட்டுவிட்டது இந்த துளியூண்டு பூச்சி சைஸ் தவளை. ஒரு தண்ணீர்ப் பூச்சியைவிடச் சிறியது. இந்த குட்டி,பொட்டுத் தவளையின் சைஸ் 7 .7 மி.மீ. இதுவரை உலகின் மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய முதுகெலும்பிகள் நீரில்தான் இருக்கும் என்றும் நினைத்தோம். அந்த எண்ணத்தையும் முறித்துவிட்டது இந்த தவளையார். ஆமாம் இது தரை வாழ் விளங்கல்லவா ? வாழிட சூழலில் மழைக்காடுகளின் தரையில், இலைகளில்தான் இந்த மாதிரி சிறிய விலங்குகள் வாழ்க்கை நடத்துகின்றன என்று ஆஸ்டின் தெரிவிக்கிறார் . அமெரிக்க பணமான டைமில்(Dime) .(.நம்ம ஊரு ஒரு பைசா நாணயம் போலத்தான் இந்த டைம்.).இந்த தவளையை வைத்து படம் எடுத்துள்ளனர். பாருங்களேன்..!

Sunday, January 15, 2012

நான் வளர்கிறேனே மம்மி..அயொடின்.!

நான் வளர்கிறேனே மம்மி..அயொடின்.!

by Mohana Somasundram on Wednesday, December 14, 2011 at 8:59pm

நான் வளர்கிறேனே மம்மி..அயொடின்.!

உங்கள் வளர்ச்சியில்.. அயொடின்!

நான் வளர்கிறேனே மம்மி..என்று உங்கள் அம்மாவிடம் தமிழில் கொஞ்சினாலும், கொஞ்சாவிட்டாலும், உங்களின் வளர்ச்சிக்கு அயொடின் அவசியத் தேவை.சார். நீங்கள் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வளர்கின்றன. வளர்ச்சிதான் உயிரோடு இருப்பதை நினைவூட்டும் விஷயம். அந்த வளர்ச்சிக்கு தூண்டுகோல் எது தெரியுமா? அயோடின்தான்உயிருக்குஉயிரான முக்கிய கனிமம். ஆனால் பூமியில்

கிடைக்கும் தனிமங்களில் மிகவும் அரிதானதும்,அதிக கனமானதும் இதுதான் .ஆனால் இது பொதுவாக கடல் உணவிலும் சில காய்கறிகளும் உள்ளது. இருப்பினும் அயொடின் உயிரிகளின் உயிர்வாழ்தலுக்கும், உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கும் மிக மிக இன்றியமையாதது. அது மட்டுமல்ல. இது உடல்நிலை வெப்பம் தக்கவைக்கவும், முடி, தோல், பல் மற்றும் நகங்களை நல்ல நிலையில் பாதுகாக்கவும் உதவுகிறது.

எங்கெங்கு அயொடின் உள்ளது.?

நம் உடலில் கழுத்துப்பகுதியில் தைராய்டு என்ற சுரப்பி ஒன்று இருக்கிறது. அதுதான் உடல் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் முக்கிய காரணி. தைராய்டு சுரப்பில் சுரக்கும் தைராய்டு ஹார்மோன்தான் வளர்ச்சியைத் தூண்டுகிறது.தைராய்டு ஹார்மோனின் அடிப்படைப் பொருள் அயொடின் (Iodine). 15 -20 மி.கி அயோடின் தைராய்டு சுரப்பியிலும், மீதி 65 % உடலின் அனைத்து திசுக்களிலும் உள்ளன.உடலின் தற்காப்புத் திறன் உருவாக மிகவும் அயொடின் உதவுகிறது. அயொடின் பல தளங்களிலிருந்து கிடைத்தாலும் கூட, எளிதில் கிடைக்குமிடம் உப்பு மட்டுமே. அயொடின் ரொட்டி, கடல் உணவு மற்றும் கடல் தாவரங்களின் திசுவுடன் பிரிக்க முடியாத இணைப்பாக உள்ளது.

அயொடின் என்றால் என்ன?

அயோடின் ஒரு வேதியல் தனிமம். இதன் குறியீடு "I". அயோடின் என்ற சொல் கிரேக்கத்துக்கு சொந்தமானது.ஐயோடேஸ் (Iyodes)என்ற கிரேக்க சொல்லுக்கு வயலட்/கருநீலம் நிறம் உள்ளது என்று பொருள். இதன் நிறத்தை ஒட்டியே அயொடின் எனற பெயர் இதற்கு சூட்டப்பட்டது..சூரிய குடும்பத்திலேயே இது ஓர் அரிதான தனிமம். இதன் அணு எண் 16 .அதன் அணு எடை:126.9045 g.mol -1இது புவியில் கிடைக்கும் அரிதான தனிமங்களில் 47 வது இடத்தில் உள்ளது . இது 114 °C யில் உருகும். ஆனால் திட நிலையிலிருந்து நேரிடையாக வாயு நிலைக்குப் போய்விடும். இதற்கு பதங்கமாதல் நிகழ்வு என்று பெயர்.இதன் உப்புக்கள் நீரில் கரையக்கூடியவை. அதன் மூலம்தான் அயோடின் கரைசல் கிடைக்கிறது.

அயொடினின் குணங்கள்.!

அயொடின் ஒரு கலப்பில்லாத அலோகத் (non-metallic)த்னிமம். இது கருஞ்சாம்பல்/கரு நீலம் கலந்த பளபளப்பான வனப்புமிகு அலோகத் தனிமம்..இது ஹாலோஜன் (halogen) குடும்பத்தைச் சேர்ந்தது. இது பல உலோகங்களுடன் இணைந்து காணப்படுகிறது.இது இயல்பாகவே காற்று, நீர் மற்றும் நிலத்தில் காணப்படுகிறது. அயொடின் நச்சுத்தன்மை வாய்ந்தது. இதன் வாயு கண்ணையும் நுரையீரலையும் எரிச்சலடையச் செய்யும். ஆனால் முக்கியமாக அதிக அளவு அயொடின் பெருங்கடலில்தான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உத்தேசமாக, 400.000 டன்கள் அயொடின் அயோடைடு,ஹைடிரோ குளோரிக் அமிலம் மற்றும் மீத்தைல் அயொடைடு என்று கடல் உயிரிகள் மூலம் உற்பத்தியாகை கடலில் பரவிக்கிடக்கிறது. இவற்றில் பெரும்பான்மையானவை அங்கேயே நிலத்தில் படிந்து உயிர்ச்சுழற்சியின் பிரிக்க முடியா பங்காளியாகி விடுகிறது. அயொடின் 131 என்ற அதன் ரேடியோநியூக்ளிடைடுகள் (radionuclides) வான்வெளியில் வெடிக்கும் அணு ஆயுதகருவிகள் உறபத்தியில் பங்குபெறுகின்றன. அதன் பயன்பாடு 1945,ல் துவங்கி 1980 ல் சீனா சோதனை செய்ததுடன் அதன் சரித்திரம் முடிந்துவிட்டது. அயொடின் 131 புற்றுநோய் அபாயத்தை அதிரிகரிக்கிறது.

அயொடின் கண்டுபிடிப்பு.ம் பயனும்.!

பூமிலிருந்து அயோடின் கிடைத்தாலும், முதன் முதலில் இந்த தனிமத்தைக் கண்டறிந்தவர் பிரெஞ்சு விஞ்ஞானியான பெர்னார்டு கூர்டாய்ஸ்(Bernard Courtois ) என்பவர் தான். பெர்னாட்ர்டு கடல் பாசியுடன் கந்தக அமிலத்துடன்க் கடல்பாசி சாம்பலைக் கலந்தபோது,1811 ம ஆண்டு இந்த தனிமத்தைக் கண்டுபிடித்தார்.உலர்ந்த கடல் பாசிகள், குறிப்பாக, லிமினரியா (Liminaria) குடும்பத்தைச் சேர்ந்தவைகளில் அதிகம் அயொடின் உள்ளது. . இதில் ௦. 0.45 % அயொடின் உள்ளது.அயொடின் மருத்துவத்துறையிலும், புகைப்படக்கலையிலும், சாயம் தோய்க்கவும் பெரிதும் பயன்படுகிறது. அயொடின் இயற்கையாக, கடல்நீரில் சூழலுட்ன் இணைந்து கரைந்த நிலையில் உள்ளது.சிலசமயம் இது சில தாது உப்புக்களுடன் கலந்து நிலத்திலிருந்தும் கிடைக்கும்.

அயொடின் சொல்லும் கதை..!

ஒவ்வொரு தனிமத்தின் கண்டுபிடிப்பும் சுவை நிரம்பியதும்,,கதைநிரம்பியதும்தான். ஒருக்கால் அப்போது நோபல் பரிசு இருந்திருந்தால், பெர்னார்டு நிச்சயம் இரண்டு நோபல பரிசினை வாங்கி

இருப்பார். இதிலுள்ள கூத்து என்னவென்றால் மனிதனைக் கொல்வதற்கான வெடிமருந்து செய்துகொண்டிருந்த கூர்டாய்ஸ், மனிதனின் உயிரைக் காப்பாற்றும் அருமருந்தான அயொடினைக் கண்டு பிடிக்க நேர்ந்தது ஒரு எதிர்பாராத விபத்துதான். பிரெஞ்சு இளைஞரான விஞ்ஞானி பெர்னார்டு கூர்டாயஸ் பாரிஸிலுள்ள தன் ஆய்வக்த்தில் பணி புரிந்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு புது வகையான தனிமம் தன் செயல்பாட்டில் குறுக்கிட்டதைப் பார்த்து அசந்து பிரமித்து போனார்.. அவரது குடும்ப பண்ணையினர் நெப்போலியனின் போருக்காக சால்ட் பீட்டர் என்னும் வேதிப்பொருளைத் தயாரித்தனர்.இது துப்பாக்கி மருந்துக்கானது. சால்ட் பீட்டர் என்பது பொட்டாசியம் நைட்டிரேட் (potassium nitrate)ஆகும். அப்போது மரச்சாம்பலையே சால்ட் பீட்டர் தயாரிப்புக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால் அது போர்க்காலமாகையால், மரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

எதிர்பாராத கண்டுபிடிப்பான அயொடின்..!

பிரான்சில் சால்ட் பீட்டர் தயாரிக்க, மரத்திற்கு மாற்று தேடினர். அப்போது கிடைத்ததுதான் பிரான்சின் வடக்குக் கடற்கரையில் ஏராளமாய் மண்டிக்கிடக்கும் கடல் பாசிகள். இந்த கடல்பாசியை எரித்து அந்த சாம்பலுடன், அடர்கந்தக அமிலத்தையும் சேர்த்தனர். அடர் கந்தக அமிலம், கடல்பாசி சாம்பல் துகளுடன் இணைந்த மாத்திரத்திலேயே, கூர்டாய்ஸ் ஓர் அற்புதமான அபார நிகழ்வைச் சந்தித்தார்..எதிர்பாராவிதமாக, கருநீலவண்ணத்தில் ஒரு புகை அதிலிருந்து எழுந்தது. அது செம்பு குடுவைகளின் ஓரத்தில் படிகமாகப் படிந்தது. அது மட்டுமல்ல. செம்பு பாத்திரத்தை அரிக்கவும் செய்தது. இதனைப் பார்த்து வியந்து போய், ஆச்சரியத்தில் பேசக்கூட மற்ந்துபோனார் கூர்டாய்ஸ். பின்னர் தான் கண்டுபிடித்த அதிசயப் பொருளை பாட்டிலில் அடைத்து,இதன் குணங்களை அறிய தனது நண்பர்களான நிக்கொலஸ் கிளமெண்ட்(F .Nicolas Clement (1779–1841) மற்றும் பெர்னார்டு டெசோர்மெஸ்ஸுக்கு (J. Benard Desormes(1777–1862)க்கும் அனுப்பினார். பின்னர் அதனை நிரூபணம் செய்ய ஜோசப் கே லூஸ்ஸாக் (Joseph Gay-Lussac) என்பவரின் தலைசிறந்த ஒரு வேதிநிறுவனத்திற்கும் இந்த புதிய பொருளை அனுப்பி வைததார். அதனையே, இயற்பியலாளார் ஆண்ட்ரே மேரி ஆம்பியருக்கும் (physicst Andre-Marie Ampere (1775–1836) அனுப்பினார். அனைவருமே . இந்த தனிமத்தின் பெயர் அயொடைடு/அயொடின் எனறு சொன்னார்கள். கூர்டாய்ஸ் கண்டுபிடித்த புது பொருளுக்கு கிரேக்க வழியிலேயே அயொடின் (அயோடின்) என்ற பெயரும் சூட்டப்பட்டது.கிளமெண்ட்டும், டெசோர்ஸஸும் கூர்டாய்ஸ்தான் அயொடினின் கண்டுபிடிப்பாளார் என 1813,நவம்பர் 29 அன்று கூர்டாய்ஸின் கண்டுபிடிப்பை உலகறிய அறிவித்தனர்.

அயொடினின் ஆபத்திலிருந்து தப்பித்த கூர்டாய்ஸ்.!

இளைஞரான கூர்டாய்ஸ் கொஞ்சம் ரொம்பத்தான் புதிய தனிமத்துடன் விளையாடிப்பார்த்தார். ஆனால் அவர் அதன் மூலம் அதிர்ச்சி அடைந்ததுதான் மிச்சம். இந்த அயொடினை அம்மோனியாவுடன் சேர்த்துப் பார்த்தார். விளைவு? ஒரு சாக்லெட் வண்ண திடப்பொருள் கிடைத்தது. அதன்பெயர்தான் நைட்டிரஜன்-டிரை –ஆக்சைடு என்ற வெடிமருந்து. கூர்டாய்ஸ் இப்படி அயொடினுடன் விளயாடிய போது அது பயங்க்ரமாய் அதி வேக சத்தத்துடன் வெடித்தது. அதிர்ஷ்ச வசமாய் குறைந்த காயங்களுடன் தப்பித்துவிட்டார் கூர்டாய்ஸ்.ஆனால் அவரின் சமகாலத்தவரான பியரி டூலாங்(Pierre Dulong) கொஞ்சம் அதிர்ஷடக்கட்டை என்றுதான் சொல்ல வேண்டும்.இந்த அயொடின், அம்மோனியா இணைப்பு விளையாட்டில் ஒரு கண்ணையும், கையின் ஒரு பகுதியையும் இழந்தவர். பயங்கரமான வெடிமருந்தின் நீண்ட பலியாளர்கள் பட்டியலின் முதல் போணி பியரி டூலாங்தான்..

மருத்துவ குணங்கள் மலிந்த அயொடின்..!

அயொடின் மோசமான நச்சு குணம் உடையதுதான். ஆனால் அதன் ஆல்கஹாலுடன் சேர்த்து டிங்க்சர் அயொடின் என்ற மஞ்சள்-பழுப்பு நிற திரவமான கிருமிநாசினி தயாரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இது பரவலாகப் பயன்படுத்தவும் படுகிறது.இன்றும் கூட, பெரும்பாலும் பொதுவான நீர் சுத்திகரிக்க அயொடின் அடிப்படையிலான மாத்திரைகளே பயன் படுகின்றன. அயொடின் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே, இது மிகவும் முன்னேறிய வேதி தொழில்நுட்பத்தில்பரவலாகப் பயன்படுகிறது.

தினமும், நமக்கு வேண்டிய அயொடின்:

 • ஆண்களுக்கு ............. 150.. பெணகளுக்கு................. 120 மைக்ரோ கிராம்
 • தாய்மையுற்ற பெண்கள்:... 150..மைக்ரோ கிராம்
 • பாலூட்டும் பெண்ட்களுக்கு.. 170 மைக்ரோ கிராம்
 • குழந்தைகளுக்கு.............. 70-150....... மைக்ரோ கிராம்

சின்ன குழ்ந்தைகளுக்கு 50-60 மைக்ரோ கிராம்

அள்வுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

  1. அயொடின் அளவு அதிகரித்தாலும் கூட முன்கழுத்து கழலை நோய் வரும்.
  2. அயொடின் பாதிப்பு உள்ளவர்கள் தினம் 300 மைக்ரோகிராம்அயொடின் உட்கொள்ள வேண்டும்.
  3. கிராம் கடல்உணவில் உள்ள் அயொடின் 60 மைக்ரோ கிராம்
  4. ஒரு தேக்கரண்டி அயொடின் கலந்த உப்பில் 150..மைக்ரோ கிராம் அயொடின் உள்ளது.
  5. 100கிராம் காய்கறி/மாமிசம்/முட்டையில் உள்ள் அயொடின் 25 மைக்ரோ கிராம்
  6. 100கிராம் பால்பொருள்/ரொட்டி/தானியத்தில் மைக்ரோ கிராம் அயொடின் உள்ளது

Table 1: Recommended Dietary Allowances (RDAs) for Iodine]

Age.....................................Male....................................Female...............................Pregnancy.........................Lactation

Birth to 6 months............110 mcg*..........................110 mcg*

7–12 months..................130 mcg*..........................130 mcg*

1–3 years......................90 mcg.............................90 mcg

4–8 years......................90 mcg.............................90 mcg

9–13 years....................120 mcg............................120 mcg

14–18 years..................150 mcg.............................150 mcg...................220 mcg.......................290 mcg

19+ years.....................150 mcg.............................150 mcg...................220 mcg......................290 mcg

Table 2: Selected Food Sources of Iodine

Food.................................................Approximate Micrograms (mcg) per serving........................Percent DV*

Seaweed, whole or sheet, 1 g.......16 to 2,984 ..................................................................11% to 1,989%

Cod, baked, 3 ounces..................99 .................................................................................66%

Yogurt, plain, low-fat, 1 cup............75 .................................................................................50%

Iodized salt, 1.5 g (approx. 1/4 teaspoon)..71...........................................................................47%

Milk, reduced fat, 1 cup..................56 ................................................................................37%

Fish sticks, 3 ounces......................54 .................................................................................36%

Bread, white, enriched, 2 slices.........45 .................................................................................30%

Fruit cocktail in heavy syrup, canned, 1/2 cup...42.......................................................................28%

Shrimp, 3 ounces.........................35 ...................................................................................23%

Ice cream, chocolate, 1/2 cup .........30 ...................................................................................20%

Macaroni, enriched, boiled, 1 cup......27...................................................................................18%

Egg, 1 large ..............................24 ...................................................................................16%

Tuna, canned in oil, drained, 3 ounces...17 ................................................................................11%

Corn, cream style, canned, 1/2 cup....14 ....................................................................................9%

Prunes, dried, 5 prunes...................13 ...................................................................................9%

Cheese, cheddar, 1 ounce................12 ...................................................................................8%

Raisin bran cereal, 1 cup..................11 ...................................................................................7%

Lima beans, mature, boiled, 1/2 cup.....8 ....................................................................................5%

Apple juice, 1 cup..........................7 ....................................................................................5%

Green peas, frozen, boiled, 1/2 cup....3 ...................................................................................2%

Banana, 1 medium........................3 .....................................................................................2%

அயொடின் பாதிப்பால்...!

உடலில் அயொடின் குறைபாடு இருந்தால், முன்கழுத்துக்கழலை (goiter)என்ற நோய் வரும், குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி இருக்காது. உலக நலன் கருதும் நிபுணர்கள், அயொடின் போதாமை என்பது தடுக்கக்கூடியதுதான். ஆனால், அயொடின் போதாமையால், உலகம் முழுவதும் சுமார் 1,500,000,000 மக்கள் மூளை பாதிப்பு அடையும் நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கின்றனர்.அதே போல உலகம் முழுவதும் 50,000,000 குழந்தைகள் அயொடின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கருவுற்ற பெண்களுக்கு அயொடின் போதவில்லை என்றால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி இருக்காது. கருச்சிதைவு ஏற்படும். மிகக் குறைவான அயொடின் பற்றாக்குறை கூட, குழந்தைகளின் அறிவுத்திறனைப் பாதிக்கும்; மூளை வளர்ச்சியையும், கற்றல் திறனையும் அழிக்கிறது.. இந்தியாவின் சுகாதாரத் துறை அமைச்சர் தரும் தகவ்ல படி, ஆண்டில், கோடிப்பேர் அயொடின் பற்றாக்குறையால் அவதிப் படப்போகின்றனர் என்று இரண்டு மாதம்(நவம்பர்) முன்பு தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சையின் கதையும், ..நாயகியும்..!

அறுவை சிகிச்சையின் கதையும், ..நாயகியும்..!

by Mohana Somasundram on Thursday, December 22, 2011 at 6:27pm

அறுவை சிகிச்சையின் கதையும், ..நாயகியும்..!

உனக்கும், எனக்கும், ஒரே வயது..!

நமது தாய்வீடான பூமி தோன்றி சுமார் 454 கோடி ஆண்டுகள் (4 .54 பில்லியன்) ஆகின்றன என அறிவியல் கிட்டததட்ட துல்லியமாய் கண்டுபிடித்து விட்டது.சந்திரனிலிருந்து எடுத்துவந்த கல்லிருந்தும்,பூமியில் இருக்கும கற்களின் வயதை அறியும் கதிர்வீச்சு சோதனை (radiometric age dating of meteorite material) மூலமும் இது அறியப்பட்டது. இதில் 1 % மாறுபாடு இருக்கலாம். அவ்வளவே..! மேற்கு ஆஸ்திரேலியாவின் ஜாக் மலையிலிருந்து கிடைத்த சிர்கான் படிகங்கள்தான் (Zircon crystals ) இதுவரை கிடைத்த படிகங்களிலேயே வயதானது. அதன் வயதுகுறைந்த பட்சம் 404 கோடி ஆண்டுகள் இருக்கலாம். சூரியனின் நிறை, மற்றும் பிரகாசம்,போன்றவற்றை மற்ற விண்மீன்களுடன் ஒப்பிடும்போது நமது சூரியனுக்கும், சூரிய குடும்பத்திற்கும் சுமார் 456 .7 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்பது தெரிய வருகிறது.. அதுமட்டுமல்ல இதன் மூலம் பூமியின் வயதும் 454 கோடி ஆண்டுகள் என்பதும , . பூமி சூரிய, சந்திரர்கள் சம வயதுக்காரர்கள் என்றும் கூட தெரிய வருகிறது.

உலகைப் புரட்டிய அறிவியல்..!

மனித இனம் உருவாவதற்கு முன் ஏராளமான மாற்றங்கள் பூமியிலும் உருவாகி இருக்கலாம்.அவையெல்லாம் வேதியல், இயற்பியல் மற்றும் உயிரியல் ரீதியான பரிணாம மாற்றங்களே..!ஆனால் மனித இனம் பரிணமித்த பின்தான பூமியின் முகவமைப்பே மிகவும் மாறியது. அதுவும் அறிவியல் இந்த மாற்றங்கல் மூலம் இந்தப் புவியைப் புரட்டிப் போட்டிருக்கிறது. விஞ்ஞானிகளின் பங்களிப்பும், ஆராய்ச்சியும் இன்றி அறிவியல் உலகம் ஓட்டப் பந்தயத்தில் சாம்பியனாகி இருக்க முடியாது.புவிக் கோளின் அறிவியல் பரிணாமம் மற்றும் தொழில் நுட்ப பரிணாமத்தில்ஆதிகாலம் தொட்டே காலம் காலமாக நிறைய மூளைகள் பங்களிப்பு செய்துள்ளன.

பதிவில்..ஆணும்..பெண்ணும் சமமா..?

தொழிற்புரட்சிக்குப் பின்புதான் அதி நவீன, அதிவேக அறிவியல் மாற்றங்கள் கடந்த ஒரு சில நூற்றாண்டுகளில்தான் ஏற்பட்டன. இந்த காலகட்டத்தில் ஏராளமான ஆண் அறிஞர்கள்தான் புகழ் பெற்றிருந்தனர்;அவர்களின் பெயர்களும் காலத்தால் பேசப்பட்டன. தொழிற்புரட்சியின் மாற்றங்களுக்கு பெண்களும் கூட முக்கியமான பங்களிப்பை செய்து தங்களின் இருப்பை நிலை நிறுத்தி இருக்கின்றனர். ஆதிகால பெண் விஞ்ஞானிகளில் மிகச் சிலரது பெயர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. பலரது பெயர்கள் வசதியாக மறுக்கப்பட்டு,மறக்கப்பட்டு , மறைந்தும் போய்விட்டன.இடைக்காலத்தில் ஆணுக்கு இணையாக போட்டி போட்டு வரமுடியாயாத சமூகச் சூழலும், நிலவி வந்தது. இன்று நவீன காலத்தில் புகழ்பெற்ற பெண் விஞ்ஞானிகள் பலர் உள்ளனர். இருப்பினும் கூட இதுவரை நோபல் பரிசு பெற்ற பெண் விஞ்ஞானிகள் மிகக் மிகக் குறைவே.

இறந்த உடலை அறுக்க உதவிய..கிலியானி..!

அலெஸ்ஸாண்டிரா கிலியானியும்,மோண்டினோ டி லுஸ்ஸூ

இடைக்காலத்தில் வாழ்ந்தவர்களில் முக்கியமானவர் அலெஸ்ஸாண்டிரா கிலியானி (Alessandra Giliani , born in 1307 and died on 26 March 1326) எனபவர். இவர் ஓர் இத்தாலிய உடலியலாளார் மற்றும் மனித உடல் அறுப்பவர். . அலெஸ்ஸாண்டிரா கிலியானி கி.பி 1307 ல் இந்த உலகைக் காண வந்தார். ஆனால் பூமியைத் தரிசித்த மாதம் /தேதி எதுவெனத் தெளிவாகத் தெரியவில்லை. 19 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்தார். தனது 19 வது வயதில் உலகுக்கு பறை சாற்றும் வகையில் மிகக் கொடூரமான களத்தில் இந்த உலகை விட்டு மறைந்தார். உலகுக்கும், தான் வாழ்ந்த சமூகத்துக்கும் ஏராளமான சேவை செய்த மனித நேயம் மிக்க மனிதம் இவர் . இவர் அன்றைய கால கட்டத்தில் உடலியல் பற்றி படித்து,இறந்த உடலை அறுத்து அதிலிருந்து இரத்தம் வடித்தார். அத்துடன் அந்த உடலில் உள்ள இரத்த குழாய்களில் வேறு வண்ணம் உள்ள திரவம் ஏற்றினார். எதற்குத் தெரியுமா? அப்போதுதான் இரத்தக் குழாய்கள் உடலின் எந்தெந்த இடத்திற்கு செல்கின்றன என்பதைத் தெளிவாக அறிய முடியும் என்பதனால்தான். உலகில் இப்படி முதன் முதலில் இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்தை வடித்துவிட்டு, இப்படி வேறு வண்ண திரவம் ஏற்றியவரும். அதனைப்பற்றி பதிவு உள்ளவரும். அலெஸ்ஸாண்டிராகிலியானிதான். இதனால் மருத்துவர்கள் எளிதாக உடற்கூறு பற்றி அறியமுடியும் படிக்கவும் முடியும். இவ்வாறு கிலியானி மருத்துவர்களுக்குஉறுதுணையாகவும், பக்க பலமாகவும் இருந்தவர் .

உயிரைப் பயணம் வைத்து உதவி..!

இறந்த உடலை வெட்டி தயார்ப்படுத்துவது என்பது அந்த கால கட்டத்தில் மிகவும் உயிரைப் பயணம் வைக்கும் செயல். இறந்த உடலை அறுப்பது என்பது தெய்வ குற்றம்/மத துவேஷம் என்று பார்க்கப் பட்டது. அது மட்டுமா? தெய்வ நிந்தனை செய்பவருக்குத் தண்டனை தூக்கு/கொலை தண்டனை பொது இடத்தில் நிறைவேற்றப்பட்டது. கடவுள் உருவாக்கிய உடலை அறுப்பதும, அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பதும் மதத் துரோகம்/கடவுள் மறுப்பு விஷயம் என்றும் போதிக்கபப்பட்டது . இப்படிப்பட்ட காலத்தில் இத்தாலியப் பெண்ணான அலெஸ்ஸாண்டிரா கிலியானி பொலோக்னா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரான மோண்டினோ டி லுஸ்ஸூக்கு உதவி செய்யும் உடலியலாளாராக், இறந்த உடலை அறுக்கும் உதவியாளராக இருந்தார் என்பதும், அதை பற்றிய பதிவும் வியப்பானதுதான்.இறந்த உடலிலிருந்து எளிதில் இரத்தம் வடிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். இரத்தம் வடிந்த குழாய்களுக்கு, உள்ளே போனால் உறைந்துவிடும் ஒரு புதிய வண்ணத்திரவத்தையும் கண்டுபிடித்து இரத்த குழாய்களுக்குள் செலுத்தினார். இதனால் மிகச் சிறிய இரத்தக் குழாய்களை எளிதில் கண்டுபிடித்துவிடமுடியும்.

கிலியானியின் சேவை:

அலெஸ்ஸாண்டிரா கிலியானி மிகக் குறைந்த காலமே வாழ்ந்தவர். மருத்துவர் மோண்டினோவின் உதவியாளர்களில் ஒருவரான ஓட்டோ ஆன்ஜெனியஸ் (Otto Angenius) என்பவர், கிலியானியானியின் சேவை பற்றி, குறிபிட்டு எழுதியுள்ளார்/ மிகவும் மரியாதைக்குரிய மனிதமாய் மக்களுக்கும் மருத்துவருக்கும் சேவை செய்த உயிராக மதிக்கப்படுகிறார். ஓட்டோ

கிலியானியின் காதலராகவும் இருக்கக் கூடும் என்று நம்பபடுகிறது. அவர்தான் ரோமில் உள்ள ஒரு தேவாலயத்தில் கிலியானியின் பணிகள் பற்றி விரிவாக எழுதி வெளியிட்டுள்ளார். ஆனால் 16ம் நூற்றாண்டின் வரலாற்றியலாளரான மைக்கேல் மெடிசி (Michele Medici) என்பவர் போலொக்னீஸின் உடற்கூறியல் பள்ளி பற்றி 1857 ல் எழுதி வைத்த குறிப்பில், கிலியானைப் பற்றியும், அவ்ரது சேவை மற்றும் திறமை பற்றியும் தெளிவாக எழுதி வைத்துள்ளார்.

பார்பார குயிக்;

கிலியானி பற்றி 18ம் நூற்றாண்டுக்கு முன் எந்தவித அந்தக்கால பதிவுகளின்படி எதுவௌம் நேரிடையாக கிடைக்கவில்லை. ஆனால் அவரைப்பற்றி பார்பாரா குயிக் எனபவர் எழுதியுள்ளார். அந்தக்கால நூலகர் மற்றும் ஒட்டோவின் எழுத்துக்களின் படி, கிலியானி பற்றிய யாவும் தேவாலய்த்தில் உள்ளன என்கின்றனர். குறிப்பில் கிலியானிமட்டுமல்ல அவரது குடும்பமே அழிக்கப்பட்டது என்றுதெரிகிறது.. கிலியானியின் அழிந்த் பொருட்கள் ஒரு தாழியில் தேவாலய சாரக்கட்டு இடத்தில் இருப்பதாகக் கூறுகின்றனர்..

அறிவியல்.புரட்சியின் காலக்கட்டம்..!

ஆண்ட்ரியாஸ் வேசலியஸ்உலகில் மருத்துவப் புரட்சி ஏற்பட்ட காலம் கி.பி 1400-1700 களே எனலாம்.1400 க்கு முற்பட்ட காலத்தில் அறிவியல் முன்னேற்றம் ஏதும் நிகழாததால், அது இருண்ட காலம் என்றே அழைக்கப்பட்டது.. பண்டைய கிரேக்க ரோமானியக் கருத்துகளிலிருந்து வேறுபட்டு புதிய கருத்துக்களை விதைத்த காலம் பதினாறாம் நூற்றாண்டுதான்.அப்போது பழங்கால பழக்கங்களிலிருந்து விடுபட்டு, தேவாலயங்களில் புதியமாற்றங்கள் உண்டாயின. அப்போது மருத்துவர் ஆண்ட்ரியாஸ் வேசலியஸ் (Andreas Vesalius (31 December 1514 – 15 October 1564) என்பவரும்,வில்லியம் ஹார்வேவில்லியம் ஹார்வே (William Harvey (1 April 1578 – 3 June 1657) ) என்பவரும் அன்றைய கால கட்ட மருத்துவத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை நடத்திக் காண்பித்தனர். அது போது நடந்த தொழில்நுட்ப கருத்துக்கள் சமுதாயத்தில் உயர்குடியில் வாழ்வோருக்குக் கூட போய்ச் சேர பல நூறு ஆண்டுகள் ஆயின என்றும் சொல்லப்படுகிறது. உயர்குடி மக்களுக்கே இந்த நிலை என்றால் சமூகத்தின் நிலை, மற்ற குடிமக்களின் நிலையை நாம்தான் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்கள் யாரும் அதன் பயனை, நலனை உணரவில்லை.இதனால் அப்போது இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸ் அருகில் பல படித்த மருத்துவர்கள் இருந்தும் கூட தனது 65 வயதில், 1685 ம் ஆண்டு மாரடைப்பில் மண்டையைப் போட வேண்டியதாயிற்று. புதிய் சிகிச்சை முறையைக் கையாளாத காரணத்தால்.

கொலைதண்டனை பெற்ற,நவீன உடலியலின் தந்தை..!

16 ம நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்ட்ரியாஸ் வேசலியஸ்,போலோக்னா (Bologna) நகரில் ஒரு மருத்துவர்,மட்டுமல்ல, தத்துவமேதை,உடலியலாளரும் கூட. உலகின் கருத்தைக் கவரும் புத்தகமான, மனித உடலின் அமைப்பு என்பது பற்றி ஏழு மருத்துவ புத்தகக்கள் எழுதியவர்.ஆண்ட்ரியாஸ் வேசலியஸ் எழுதிய புத்தகத்தின் அட்டையிலேயே அவர் பொது

இடத்தில் அனைவரும் பார்க்கும்படியாக உடலை அறுக்கும்படியான படம் போடப்பட்டுள்ளது. இவர்தான் உலகில் முதலில் மனித உடலை அறுத்துப் பார்த்தவர் என்றும், அது தொடர்பான படங்கள் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது, த்னது 23 வயதில் 1537 ல் மருத்துவர் பட்டம் பெற்றும் பல்கலைக் கழகத்தில் மருத்துவப் பேராசிரியராகப் பணி செய்தார். அதற்கு முன்பு புரூசெல் சென்று அங்கும் பணியாற்றினார். அவர் அங்கும் கூட தூக்குக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த குற்றவாளிகளை அபகரித்துக் கொண்டு வந்து அந்த உடலை அறுத்து மாணவர்களுக்குக் காண்பித்தாராம்.இதுதான் இவருக்கு வினையைத் தேடித் தந்தது. .

தப்பித்தார்.. வெசலியஸ்..!

வேசலியஸூக்கு முன் வாழ்ந்த காலன் சொன்ன சில கருத்துக்கள் தவறானது என்று விளக்கிக் கூறியுள்ளார். கடவுள் மறுப்புக்கொள்கைகளைப் பரப்பினார். பின் பொது இடத்தில் பிணத்தை அறுத்துக்காண்பித்ததை ஒட்டி சில முரணபாடுகள் உண்டாயின. காலனைக் குறை சொன்னது, கடவுள் மறுப்பு, பொது இடத்தில் பிணம் அறுத்தது,மேலும் கல்லறையிலிருந்து பிணங்கள் திருடி அறுத்துப் பார்ப்பதற்காக அவருக்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா? கொலை தண்டனை..! ஆனாலும் கூட வேசலியஸ் அரசு அதிகாரிகள் மூலம் சிபாரிசு செய்து, கொலைத்தண்டனைக்குப் பதிலாக வேசலியஸ் ஜெருசலம் சென்று வர ஆணையிட்டனர். ஜெரூசலம் சென்று திரும்பி வரும் வழியில் கடல் பயணத்தில் கப்பல் சேதமுற்று, கிரேக்கத்தீவில். வேசலியஸ் இறந்தார். அப்போது அவரின் வய்து 50. நவீன உடலியலின் தந்தை (Founder and father of modern anatomy) என்று அழைக்கப்படுவது ஆண்ட்ரியாஸ் வேசலியஸ்தான்.

I will pass over the other arts in silence and direct my words for a while to that which is responsible for the health of mankind; certainly of all the arts that human genius has discovered, this is by far the most useful, indispensible, difficult, and laborious.”

(Andreas Vesalius, De Humani Corporus Fabrica)

ஏசு பிறக்க 600 ஆண்டுக்கு முன்..பிணம் அறுத்த.. அல்மெயான்..!

மனித உடலையும் அதன உறுப்புகளையும் அவை செயல்படும் விதம்பற்றியும் அறிந்து கொள்ள உடலை அறுத்துப்பார்த்தே ஆக வேண்டும்.அப்படி எல்லாம் செய்யாமல் இருந்திருந்தால் இன்று நம்மில் நிறைய பேர் உயிருடன் இருந்திருக்க முடியாது..மருத்துவ உலகம் முன்னேறி இருக்க முடியாது. உடலின் கண்டுபிடிப்பு (Discovery of Human body) அறுத்துப் பார்த்தல் மூலமே நடந்தது.ஆனால் பழங்கால ரோமானிய,கிரேக்க மதத்திலும், பல நாடுகளிலும் இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை மனிதனை அறுப்பது என்ற வார்த்தையே சமூகக் குற்றமாகப் பார்க்கப்பட்டது.மதம் மற்றும் அனைத்து நாடுகளிலும் இறந்த உடலை வெட்டி உள் உறுப்புகளைப் பார்ப்பது தடை செய்யப்பட்டிருந்தது.ஆனாலும் கூட கி.மு. 6 ம் நூற்றாண்டிலேயே, கிரேக்க தத்துவவாதி..அல்மெயான் (Alcmaeon (535-? B.C.) என்பவர்தான் மனித உடலை முதன் முதல் அறுத்துப்பார்த்த முதல் மனிதர் என்றும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

2600 ஆண்டுகளுக்கு முன் இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்.

சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன் வட இந்தியாவில் கங்கைக்கரையின் வாரணாசியில் சுஷ்ருதா எனற அறுவை சிகிச்சை நிபுணர் வாழ்ந்த்தார்.இவ்ர் அவர் சிசேரியன், கண்பொறை, செயற்கை காலகள்,கால்,கை உடைதல்,சிறு நீரக பிரச்சினை, மூக்கின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் மூள அறுவை போன்ற அறுவை சிகிச்சைகளைச் செய்தவர் சுஷ்ருதா. மயக்க மருந்து பற்றி அப்போதே இந்தியாவில் அறிந்திருந்தனர். அவர் தன் வாழ்நாளில் சுமார் அறுவை சிகிச்சைகளைச் செய்தவர் சுஷ்ருதா.மேலும் அவரிடம் சுமார் 125 வகையான அறுவை சிகிச்சைக் கருவிகள் இருந்தன..சுஷ்ருதா சமிதா எனறு அறுவை சிகிச்சை புத்த்கத்தையும் எழுதி இருந்தார். இந்தியாவின் அறுவை சிகிச்சையின் பிதாமக்ன் சுஷ்ருதா தான்.

"Surgery is the first and the highest division of the healing art, pure in itself, perpetual in its applicability, a working product of heaven and sure of fame on earth" - Sushruta (400 B.C.)

அலெக்சாண்டிரியாவில் முதல் அனாடமி பள்ளி..!

“The first recorded dissection of the human body in the Western world took place in ancient Alexandria by Herophilus and Erasistratus. Though none of their writings have come down to us, other medical writers recorded what they had discovered.”

மூன்றாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இரண்டு பெரிய கிரேக்க பண்டிதர்கள் மற்றும் மருத்துவர்களான சால்டிடோனின் ஹிரோபிலஸ் மற்றும் அவரது இளவலான செரோஸைச் சேர்ந்த எராசிட்ரடஸ் இருவரும், பழங்காலத்தில் மனித பிணங்களை அறுத்து மருத்துவ பாடம் போதிப்பதில் முதலும் கடைசியுமான நிபுணர்களாக இருந்தனராம். அல்மெயானுக்குப் பின் கி. மு 4 ம் நூற்றாண்டில் வாழ்ந்த அலெக்சாண்டிரியாவின் சால்சிடான் நகரின் ஹீரோபிலஸ் (Herophilus of Chalcedon (335 B.C.-280 B.C) தான் உலகின் முதல் உடலியல் பள்ளி (School of Anatomy) நடத்தியவர். அவர்தான் அப்போதைய சிறந்த உடலியல் மருத்துவர் என்றும் போற்றப் படுகிறார். அலெக்சாண்டிரியா மருத்துவப் பள்ளியில் அவரது மாணவர்களுக்கு இறந்த மனித உடலை அறுத்துக் காண்பித்து மருத்துவ அறிவை அனுபவ பூர்வமாக பாடம் நடத்தினார். ஹீரோபிலஸ் உடலின் டியோடினம், கல்லீரல், கணையம், இரத்த ஓட்ட மண்டலம், கண்,மூளையின் திசு, இனப்பெருக்க உறுப்புகள் அனைத்தும் தெள்ளெனத் தெரிந்தவர் என்றும் பாராட்டப்படுகிறார்.முதன் முதலில் கட்டளை நரம்புகளுக்கும், உணர்ச்சி நரம்புகளுக்கும் உள்ள வேறுபாட்டை கண்டறிந்தவர் ஹீரோபிலஸ்தான். இவரிடம்தான் உலகின் முதல் பெண் மருத்துவர் என்று அழைக்கப்படும் அக்னோடைஸும் மருத்துவம் பயின்றார்.

குற்றவாளிகள்..உயிரோடு.. மருத்துவ உபகரணமாய்..!

ரோமானிய மருத்துவரும் தகவல்களைத் தொகுத்துத் தருபவருமாகிய ஆலூஸ் கார்னெலியஸ் செல்சஸ் (Aulus Cornelius Celsus A.D. 3-64) என்ற தகவல் தொகுப்பாளர் அலெக்சாண்டிரியாவில் முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் அலெக்சாண்டிரியா நகரில் குற்றவாளிகளின் உடம்பு,அரசன் தாலமி காலத்தில் (reigns of Ptolemy II and III (285-221 B.C. ) உயிரோடு வெட்டப்பட்டு, உடலின் உறுப்புகளைப் பற்றி அறியப்பட்டதாய் சொல்கிறார். அரசன் தாலமியே நேரில் இருந்து அறுக்கும் உடல்களை பார்த்தாராம். அந்த காலத்தில் உடலை வெட்டிப்பார்க்கும் பழக்கம் தடை செய்யப்பட்டிருந்தாலும் கூட , அது மன்னிக்க முடியாத குற்றம் என்று கருதப்பட்டாலும் கூட, ஆலூஸ் கார்னெலியஸ் செல்சஸூம் கூட மருத்துவப் படிப்புக்கு உடலை திறந்து பார்ப்பது அவசியம் என்று கூறியுள்ளார்.

மூட நம்பிக்கைகளில் மூழ்கிய உலகம்..!

மனித உடற்கூறு பற்றிய பதிவு சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே பாப்பிரஸ் மரப்பட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க ௦மருத்துவர் காலன் (Greek physician Galen A.D. 130-201) கி.பி.180 ல் உடற்கூறு தொடர்பாக நிறைய எழுதி வெளியிட்டிருக்கிறார். அவர் உடலை அறுத்துப்பார்த்துதான் உடற்கூறு பற்றிய இரண்டு ரகசியங்களைக் கண்டுபிடித்து வெளியிட்டார். மீண்டும் கி.பி. 1163 ல், ரோமானிய தேவாலயம், மனித உடலை அறுத்துப் படிக்கும் பழக்கத்தை தடை செய்திருந்தது.இந்த கால கட்டத்தில் பிறந்து, படித்து, வாழ்ந்து, மக்களுக்கு பணியாற்றி அதன் மூலம் உயிர்ப்பலியானவர்தான்.இத்தாலிய அறுவை சிகிச்சை நிபுணர் மோண்டினோ டி லுஸ்ஸி, (Italian surgeon, Mondino de Luzzi). அவர் 1316 ல் மனிதனின் உடலை அறுப்பது தொடர்பான முதல் தொகுதி(1316 – Anathomia corporis humani) வெளியிட்டார். இந்த புத்தகம்தான் மனித உடல்கூறு தொடர்பான் முதல் புத்தகம். அப்போது மனித உடலின் உறுப்புகள் அறுத்துப்பார்ப்பதை மதங்கள் மூடநம்பிக்கையால் தடை செய்திருந்தன. ஆனாலும் கூட மனித் உடலியல் மற்றும் அறிவியல் ஆர்வ மேலீட்டால், இந்த புத்தகத்தை தயாரித்து வெளியிட்டார். மோண்டினோ. ஆனால் அவரது புத்தகம், Anathomia corporis humani 1478 ல் அவர் இறந்து 100 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வெளியிடப்பட்டது என்றால் அதிலுள்ள தகவல்களை எண்ணிப் பாருங்கள்..உடலியல் புத்தகம் எழுதிய ஆண்ட்ரியாஸ் வேசலியஸ் புத்தகம் எழுதி வெளியிட்டதிற்காகவும். மனித உடலைத் திருடி அறுத்துப் பார்த்த்திற்காகவும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு,பின்னர் தப்பித்தார்.

ஓவியர்..லியானார்டோ..!

அதன்பின் லியானார்டோ டாவின்சி (Leonardo da Vinci 1452-1519), என்ற கணித மேதை,தத்துவமேதை,ஓவியர், வரைபடலாளர், பொறியியலாளர், உடற்கூறியலாளர் கி.பி. 1500 களில் மனித உடலின் தசை அமைப்புகளை படமாக தன் கையாலேயே வரைந்து புத்தகமாகத் தொகுத்துள்ளார். ஆனாலும் , அதற்கு. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே..முதலில் உடல் உறுப்புகள் பற்றி துல்லியமான படங்களை அந்தக் காலத்தில் வரைந்த மனிதர் ஆண்ட்ரியாஸ் வேசலியஸ்தான்.

கல்லறை..வியாபாரம்..!

கி.பி 1565 களில் நிலைமை மாறியது. கத்தோலிக்கத்திலிருந்து மறுமலர்ச்சி ஏற்பட்டு பிராட்டஸ்டண்டுகளை விடுவித்தனர். இங்கிலாந்து மனித உடல்களை அறுக்க பயன்படுத்தலாம் என்று அனுமதி வழங்கியது. ஆராய்ச்சி நீண்டது.ஆனால் தேவைக்கேற்ப உடல்கள்தான் கிடைக்கவில்லை. களில் இங்கிலாந்து குற்றவாளிகள் மற்றும் அனாதையான உடல்களை அறுத்துப் பார்த்துப் பயன்படுத்தியது.ஆனால் ஒரு காலகட்டத்தில், தூக்குப்போட்டு தொங்குவதை விட மனித உடலை அறுத்துப் பார்ப்பது மோசமானது என மக்கள் கருதினர். எனவே, மககளின் கோபம்/ஆக்ரோஷம் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு எதிராகத் திரும்பியது. கொதித்து எழும்பிய மக்கள் கும்பல், மருத்துவரிடமிருந்து கத்தி, கத்தரியைப் பிடுங்கி மனித உடல்களைக் காத்தது.இதனால் மருத்துவப் படிப்புக்கு இறந்த உடல் கிடைக்கவில்லை. எனவே கல்லறையிலிருந்து உடல திருடி விற்பது எனற புது வணிகம் புதுப்பொலிவுடன் உருவெடுத்து பரபரப்பானது. . புதிதாக அமரராகும் மனித உடல்களை கல்லறையிலிருந்து திருடும் கும்பலை அறுவை நடத்தும் மருத்துவர்கள் வாடகைக்கு அமர்த்தியும் இருந்தனர்.

களை கட்டிய பிண வியாபாரம்...!

நியூயார்க நகரில், குழந்தைகள் மருத்துவமனை சன்னல் வழியே.. மனித உடல்களை வெட்டிப்பார்க்கும் மருத்துவ மாணவர்களைப் பார்த்தது தொடர்பாக 1788ல் மூன்று நாட்கள் கலகம் வெடித்தது..கலகத்தின் மூலம் திகில் கதை போலவே கொஞ்சம் சுவாரசியமானதுதான்.இந்த குழந்தைகள் தங்களின் பெற்றோர்களிடம், அறுத்துக் கொண்டிருந்த இறந்த உடலைப் பார்த்ததைக் கூறினர். அப்படிக் கேட்ட பெற்றோர்களில் ஒருவர் மனைவியின் சவம் கல்லறையிலிருந்து காணாமல் போயிருந்தது அதன் பின்னரே தெரிய வந்தது. அது தொடர்பாய் வெடித்ததுதான் கலகம். அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே,நியூயார்க்கில், உடனடியாகக் கிடைக்கும் பிணத்தை மருத்துவர்கள் அறுவை சோதனைக்குப் பயன்படுத்தலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டது.அது போல ஒரு சட்டம் இங்கிலாந்தில் 1832 ல் உரிமை கோராத பிணங்களை அறுக்க எடுத்துக் கொள்ளலாம் என்று சட்டம் இயற்றினர். மீண்டும் 1829 ல் பிணத்தட்டுப்பாடு தலைதூக்கியது. அப்போது நடந்த கூத்து பிரசித்திப் பெற்றது. எடின்பரோவில் அரைகுறையாய் தூக்கில் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் குற்றவாளிகளை எல்லாம், உடனடியாக அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு விற்றனர்.அதன் பின் பல படி கள் தாண்டி,இருபதாம் நூற்றாண்டில்தான் மதத்தின் பிடியிலிருந்து மருத்துவம் வெளியேறி மக்களுக்கு சேவை ஆற்றிக்கொண்டிருக்கிறது.ஆனால் இன்று உடற்கூறியல் வெகுவாக முன்னேறி ட்.என்.ஏ தாண்டி நான்னோ தொழில்நுட்பம் வரை எல்லையை எட்டியுள்ளாது.

.

காலன்

H422/0135 Andreas Vesalius (1514-1564), Belgian anatomist, with anatomical equipment and books. Aged 24, Vesalius was made professor of anatomy and surgery at Padua University, Italy. He lectured in many universities, conducting anatomical demonstrations in person. In 1543, Vesalius published his lectures in a book, De Corporis Humani Fabrica (On the Structure of the Human Body), which set a completely new level of accuracy in anatomy. His book was controversial because it disagreed with the accepted medical authority of the time, the works of the Roman physician Galen. Vesalius' book was rich in detailed illustrations of the human body, and acquired a reputation for its great beauty. Engraving from the 1875 edition of Vies des Savants Illustres. SCIENCE PHOTO LIBRARY