Friday, August 30, 2013

குழந்தை .. உலகை சந்தித்த முதல் மூன்று நிமிடங்களில் ...

August 30, 
   பெண்ணெனும் பெருமை..

வணக்கம் சோதரிகளே.. ..யாராவது ஏன்  பெண்ணாகப் பிறந்தேன் என்று வருத்தப்பட்டு பாரம் சுமபப்வர் யாரவது இருக்கிறீர்களா? அப்படி ஏதும் தகுதிக் குறைவான எண்ணம் எப்போதுமே வேண்டாம். நீங்கள் இந்த புவியின் பாக்கியவான்கள்..என்ன புதிர் போடுகிறீர்கள் என்கிறீர்களா? ஆம்..புதிர்தான்..பெண்ணுக்கு மட்டுமே புரிந்த புதிர் இது.. அவள் மட்டுமே அறிந்த இன்ப வலி, அவள் மட்டுமே உணர்ந்த எல்லையற்ற  சந்தோஷம் இது..யாருக்கெல்லாம் அம்மாவாகும் பாக்கியம் கிட்டி இருக்கிறதோ.. அவர்கள் பூமியில் சொர்க்கத்தைப் பார்த்தவர்கள்..யாருக்கெல்லாம், இயற்கைப பேறுகால வலியுடன் குழந்தையைப் பெற்றார்களோ..அவர்கள் இந்த பிரபஞ்ச ரகசியத்தை அறிந்துசொர்க்கம் தாண்டி தரிசித்தவர்கள்..அப்பனே..

   பேறு காலப் பேறு ..

    குழந்தைப் பிறப்பு என்பது இந்த பிரபஞ்சத்தில் அற்புதமான, திரை நிகழ்வு போன்ற ஆச்சரியமான எண்ணி எண்ணி மாளாத வியப்பு கொண்ட விஷயம்..ஒரு பெண் தன உயிரை /தன குழைந்தையை ஈனும்போது, அவள் கிட்டத்தட்ட 22 எலும்புகளை உடைக்கும்போது ஏற்படும் ஒட்டுமொத்த வலியை உணருகிறாள என்று அறிவியல் சொல்கிறது.அத்தனை வலி யையும், மகவைப் பார்த்த சந்தோஷம் விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகிறதே நண்பா..இதனை என்றாவது ஆண்  நண்பர்கள் அனுபவிக்க முடியுமா? எண்ணிப்  பார்க்க முடியுமா? 


பூவுலகின் தரிசனம்..

     அது போகட்டும்.. அம்மாவின் இருட்டான கருவறையைவிட்டு வெளியேறி..இந்த புவியைத் தரிசித்த புத்தம் புதிய மலரின் விரிதலில் உருவாகும் மாற்றங்கள்..அப்பப்பா சொல்லி மாளாது. அத்தனை அற்புதங்கள் அதன் உடலில்,..கற்பனைக் கெட்டாத அதிசயங்கள் நிகழும் கணங்கள் அவை..அனைத்தும் வாழ்வதற்கான போராட்டமும், அதன்  புதிய சூழலுக்கான தற்காப்பு நிகழ்வுகளும், தகவமைப்பும் தான்.அனைத்தும் இயற்கையின் கொடைகள்தான்..பரிணாமத்தின் சங்கதி இது.  

  குழந்தையின்..முதல் குரல்..!
   

    புதிய உலகை சந்தித்த உங்களின் அற்புத உயிர் கொடுக்கும் முதல் குரல்/ஒலி /அழுகை/கத்தல் எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். அந்த "மா" என்ற பீரிட்டு எழும் அழுகை ஒலிதான் நண்பா  அதன் மிகு வலியும், வாழ் நாளும்தான். அந்த சத்தம்தான்  குழந்தையை இந்த உலகில் தக்க வைக்கிறது. குழந்தை பிறப்பை ஒட்டி நாம் சந்தோஷப்படுவதும்,கொண்டாடுவதும் அது பிறந்ததால் அ ல்ல,பிறந்த  குழந்தை வாய்விட்டு வீரிட்டு அழுவதால்தான்..

நீர் உலகும், நில உலகும்..!

    அதுவரை நீர்நிறைந்த உலகில், நீர்ச்சூழலில் அம்மையிடம் 
வசதி யாய் வாழ்ந்த கரு, புதிதாக காற்று நிறைந்த உலகை தரிசனம் செய்கிறது. முதல் காற்றை சுவாசிக்கும்  அனுபவம் நிறைய சங்கடம் தங்களை உருவாக்குகிறது. .மழலைக்கு..அதன் விளைவாக பல் உடலியல் மாற்றங்கள்..அப்பாப்பா சொல்லி மாளாது.அதுதான் என்னான்னு பாக்கலாமா? அப்புறம் மயக்கம் போட்டா நான் பொறுப்பு இல்லே..என்ன தெரியுதா?
  
  சின்ன உயிர் வாழ, சின்ன சின்ன மாற்றங்கள்..!
  

    இப்ப ஆரம்பிக்குது சின்ன  நடவடிக்கைகள்..அந்த சின்ன உயிரா, இத்தனை செயல்களைச்  செய்யுது.. ஆமாங்க, நம்ம கருவறையிலே ஓடித்திரிந்த இந்த சின்னவர்தான், இப்ப பூமியிலே கீழே விழுந்தவர்தான் இதனை மாற்றங்களை தன்னுள் நடத்துகிறார். இதோ அவரே பேசுகிறார் ..கேளுங்களேன்..


  தன்னந்தனியாய் தாக்குப் பிடிக்க..

 "நான் அம்மா கருவறையை விட்டு அவருடைய முயற்சியினாலும், என் முயற்சியினாலும், இந்த வெளிச்சம் நிறைந்த உலகைப் பார்க்க முதன் முதலில் வெளியே வருகிறேன்.. அம்மா,எனக்குப்  பயம்மா இருக்கே, எப்படி சமாளிக்கப் போகிறேன். அம்மா எப்படியும் எனக்கு உதவி செய்வாங்க..என்னை உருவாக்கி,நான் வயித்துக்குள்ளே இருந்து படுத்திய பாடுக்ளைஎல்லாம், வெளியே சொல்லாமல், என்னைத் தூக்கி வெளியேயும்  போடாமல், மனசுக்குள் வைத்து, எனது படுத்தல்களை அணு அணுவாய் 39 வாரங்கள் வரை சுமந்து மகிழ்ந்த என் அன்னையல்லவா அவர். அவர்தானே எனக்கு எல்லாமும். நான் வெளியே வந்தால் அவர் என்னைப் பார்த்துக் கொள்வார்..இருந்தாலும், என்னைப் பார்த்துக் கொள்ள நானும் கொஞ்சம் முயற்சி எடுத்துக் கொண்டு கற்றுக் கொள்ள வேண்டுமல்லவா? அதன் முதல் சுற்றுதான்.இது. .தனியாய் தன காலில் நிற்பதற்கான முயற்சிதான் என முதல் சுவாசம்.."


மக்களில் ஒருவன்..

"பெருத்த முயற்சியால் வந்தேனே.நான் வந்தேனே...வந்தே விட்டேன், இந்த உலகின் மக்களுடன் .ஐக்கியமாக."


அம்மா..அம்மா..!

  
  "அம்மா உடம்பிலிருந்து வெளியே  வந்ததும், புவியின் காற்று என் மூக்குக்குள் நுழைந்து , பின்னர் என் நுரையீரலுக்குள் மெல்ல மெல்ல எட்டிப் பார்க்கிறது. என்னால் அந்த வேதனையைத் தாங்க முடியவில்லையே அம்மா..என் அம்மாவே.. நான் இந்த  உலகில்உயிர் வாழ இது அத்தியாவசியம் என்கிறீர்களா என் அன்னையே.. சரி கற்றுக் கொள்கிறேன்.அனைத்தையும் உங்களின் அன்புடன்..". 


   எனது முதன் முதல் முயற்சி..

    "அம்மாவின் கருவறையில் இருந்த வரை  வரை என நுரையீரலுக்கு வேலையே இல்லை..சும்மா ஒரு 5% இரத்தம் எப்பவாவது வரும்.இதுவரை என் நுரையீரல்  புதிதாய் கடையில் வாங்கிய பலூன் போல சப்பிக் கிடந்தது.அம்மாவின் இருட்டு கருவறையில் நான் இருந்த போது, அவங்க சுத்தம் செஞ்ச ரத்தத்தை நேரடியா எனக்கு நஞ்சுக் கொ டி வழியா கொடுத்துடுவாங்க. என் சுத்த ரத்தம் நேரடியா இருதயத்துக்குப் போய்விட்டு, பின் எனது உடம்பு முழுவதும் வரும். என் கிட்ட சேர்ந்த அசுத்த ரத்தம், அம்மாவோட நஞ்சுக்கொடி வழிய அம்மா கிட்டே போகும், சுத்தப் படுத்த. எனக்கு ஜம்முனு தூங்கறத தவிர வேற வேலைய இல்லை. .நான் கஷ்டப் பட பொறுக்காத அன்னை மனம். அது.இப்ப நான் வெளியே வந்ததும் நானே சுவாசிக்க வேண்டி இருக்கிறது. அதற்கான முயற்சிகள்.தான் இவை.


   முதல் வலி...

     நுரையீரலுக்குள் நுழைந்த காற்று என்னை மூச்சு முட்டச் செய்கிறது. நுரையீரலின் சுவரை முட்டிய காற்று என்னைத் திணற வைக்கிறது. அதனால் தான் நான் "ம்..மா.மா " என வாய்விட்டு அலறுகிறேன்.. அந்த சத்தம்தான் என்னை இந்த உலகில் வாழ வைக்கும் முதல் குரல், முதல் உதவி, என் உயிர்ச் சக்கரத்தின் அச்சாணி அதுதான்.அதுதொடர்பாய்  ஏராளமான் உடலியல் மாற்றங்கள்.அதுவரை சுத்த ரத்தம் அம்மா மூலம். இப்ப நானே ரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கான பிரயத்தனம்தான் இந்த முயற்சிகள் அண்ணே   "  

உயிர் வாழ்தலின் முதல் பத்து நொடிகள்..

     "இன்னும் இருக்கிறதே...!பிறக்கும்போது என் நுரையீரலுக்குள் பனிக்குட நீர்(amniotic fluid ) இருக்கும். அம்மா இடத்தில் இருக்கும்போது என் நுரையீரலுக்கு வேலை இல்லை.இப்ப நான் அம்மா கிட்ட இருந்து வெளிவந்து, இந்த உலகத்தைப் பார்த்த 10 நொடிக்குள் என் நுரையீரலுக்குள் காத்து நுழைந்து நுரையீரல் செயல்பட்டாக வேண்டும்.  இப்ப என் நுரையீரலுக்குள காத்து நுழைந்ததும், நுரையீரல் சுவத்துக்குள் போய் காற்று முட்டும். அந்த இடம் பெரிதாகும். அதற்குத் தகுந்தாற்போல் எனது மைய நரம்பு மணடலம், உடனடியாக எதிர்வினை செய்யும். ஏனெனில் எனது உடல் வேறுபட்ட வெப்ப நிலையை சந்திப்பதால், நான் தடுமாறி விடுவேன் என   வெளிச் சூழலுக்கும், வெப்பத்துக்கும் தகுந்த மாதிரி செயல்படும்".

  முதல் சுவாச முத்தம்..!

     " நான் அம்மாவிடம் இருந்து வெளிவந்த உடன், அப்பத்தான் நான் முதல் சுவாசத்தை முத்தமிடுகிறேன்..எனக்கும் அம்மாவுக்கும் உள்ள தொப்புள்கொடி உறவான, நஞ்சுக்கொடியை நீங்கள் வெட்டு கிறீர்கள். அம்மா....மா..மா! ஐயோ . உன்னிடமிருந்து 
வெ ட்டப்படுகிறேனே .என்னால் தனித்து வாழ முடியுமா என் அம்மாவே...அம்மாவின் துணையின்றி நான் தனித்து இருக்கிறேன்.  எனது நுரையீரல் மற்றும், இரதத ஓட்ட 
மண்டலத்தில், என்னைக் கேட்காமலேயே, பரிணாம விதிப்படி, ஏராள ஏராளமான மாற்றங்கள்..என்னுள். அம்மாடியோவ்..உங்களால் கற்பனை கூட செய்ய முடியாத படி,குறைந்த மணித்துளிகளில் அளப்பரிய மாற்றங்கள் ..என்னுள்..இதெல்லாம் யார் நிகழத்துவது? கட்டளையிடுவது யார்? வேறு யார்..என்னுள் உறைந்து கிடந்தது, உள்ளே இருந்து இயக்குனராய் பணிபுரியும் என் பரம்பரையின்  மரபணுக்கள்தான்."

  முதல் பரிமாற்றம்...!


    "எனது நுரையீரல் காற்று நுழைவதால் விரிவடைகிறது. அதன் சுவர்களல் நுனியில் இருக்கும் காற்று சிற்றறைகள் காற்றால் . நிரப்பப் படுகின்றன. இதனால் அங்குள்ள காற்றின் நிமித்தம் இரத்தம் நுரையீரலை நோக்கி ஓடிவருகிறது. அங்கே நுரையீரல் சுவர்களிலுள்ள  சிற்றறைகளில் காற்றின் பரிமாற்றம் நடைபெறுகிறது.  நுரையீரல் மேல் ஓடிவரும் தந்துகி குழாய்களில் காற்றின் பரிமாற்றம் அதாவது, (கரியுமில  வாயு,வெளிஏற்றப்பட்டு  அதிலிருந்து ஆக்சிஜன் உள்ளிழுக்கபப்ட்டுஇரத்தத்திற்குள் உள்வாங்கப்படுகிறது.) இதுதானப்பா நீங்கள் சொல்லும் சுவாசம். எனக்கு . அப்பாடி,என்  அம்மாவே என் முதல் சுவாசம்தான் இடுந்தாலும் ரொம்ப மூச்ச்சு முட்டுதே அம்மா..எனக்கு வாழ்நாளில் ரொம்ப ரொம்ப கஷ்டமான அம்சம் இதுதானா?.இப்படி  ஒரு முறை மூச்சு விடறதே.   பெரும்பாடா இருக்கே....ஆனா இது நடக்காட்டி நான் உயிரோடு இருக்க முடியாதே.எனவே  இது என் வாழ்வின் முதல் விஷயமும், அத்தியாவசியமான் உயிர் வாழ்தல் விஷயமுமாகும்.."

   முதல் நூறும்...தொடரும் முப்பதும்..

 " என்னோட மூச்சு சுவாசம் துவக்கத்தில், நிமிடத்திற்கு  15-100 என்றுதான் இருக்கும். பின்னரே ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு அது சரி செய்யப்பட்டு, நிமிடத்திற்கு 30-50 என ஒழுங்காக சீராக இருக்கும். இனி என் நுரையீரல் பணி  சீராக்கப்பட்டு இயங்
கும் அண்ணே. எனவே, இதயத்துக்கு கீழே இருக்கும் டக்டஸ் 
வெனோசஸ் ( Ductus Venosus ) என்ற ரத்தக் குழாய்  .அடைபட்டு விடும்.  கல்லீரல் தமனி தனியாகச் செயல்படத் துவங்கும். "


உயிரின் திறவு கோல் ..இதய அறைகள்...

  "இது மட்டுமா இருக்குன்கிரீங்க. இன்னும் இருக்குதுண்ணே  ரொம்ப கதை..அதுதான் நானும், நீங்களும் நீண்ட  நாள் உயிர் வாழ்வதற்கான  திறவுகோல் அண்ணே. அந்த மாற்றங்கள் எல்லாம் நம்ம இதயத்திலேதான் நடக்குது. நான் அம்மாவோட கருவறைக்குள் இருந்தபோது,  இதயத்தின் மேல் அறைகளின்  சுவரில் இருந்த சிறப்பான வால்வு , வேறு சில இரத்த குழாய்களும் பொறந்ததும் காணாம போயிடுது. ஏன்னா இனி அவர்களுக்கு வேலை இல்லியே. அதான்.  அதுவும் நான் பூமியிலயே வந்து விழுந்த ஓரிரண்டு மணித்துளிகளில் புதிய மாற்றங்கள் இதயத்தில் நடக்குது. நீங்க தொப்புள்கொடியில ஒரு கிளிப் போட்டதும், அம்மா கிட்டே இருந்து வந்த இரத்தம் நின்னு போகுது. எனவே நுரையீரலுக்கு வரும் இரத்தத்திற்கு என சிறப்பு இரத்த குழாய்கள தேவையாய் இருக்குதே ". 

  நிறம் மாறும் நான்..நீங்கள் 

   " நான் பொறந்ததும், தொப்புள் கோடி வெட்டியதும்/கட்டியதும்,அந்த நொடியிலேயே, இதயத்தின் மேலறையில் உள்ள, போராமன் ஓவல் *Foramen  ovule ) எனற துளை அடை படுகிறது. அடுத்த் நொடியிலே யே, மேலறையில் :சுத்த ரத்தமும், அசுத்த ரத்தமும் இயதத்தில் தனித்தனியாக வந்து போக வழிவகை செய்யப்படுகிறது. வலது வெ ன்டிரிக்கிலிலிருந்து ரத்தம் சுத்தம் செய்யப்படுவதற்காக/காற்று பரிவர்த்தனைக்காக நுரையீரலுக்குச் செல்லுகிறது. மீதி ரத்தம், இடது வென்டிரிக்கி லிலிருந்து பெருந்தம்னிக்கு செல்கிறது,எ ன் உடம்பு முழுசுக்கும் ரத்தம் தரச் சொல்ல. டக்டஸ் ஆர்டிரியோசஸ்(Ductus  Arteriosus )  என்ற குழாயின் இணைப்பு காணாம போயிடும். நுரையீரலின் தந்துகிகள் உடனே உருவாயிடும்; செயல்படவும் செய்யும்.. நான் என் உடல் வயலேட்  வண்ணத்திலிருந்து  ரோஸ் நிறத்துக்கு மாறி டுவேனே.." 

   உயிரின்  சிக்கலான முதல் மூன்று நிமிடங்கள்

   நான் இந்த பூமியப்பார்த்த 3-4 நிமிடங்களில் இத்தனை சிக்கலான விஷயங்களும் நடந்து முடிஞ்சுடும் அண்ணே. அப்பத்தான் நான் உயிரோடு இருக்க முடியும். இது எனக்கு  மட்டுமில்லே அண்ணே..உங்களுக்கும் இதே தான் நடந்துச்சு. எல்லாருக்கும் இதே கதைதான். 

சின்ன மாற்றங்களுடன்....நான் தயார் இப்ப..

   இன்னும் கூட கொஞ்சம் சின்ன சின்ன மாற்றங்கள் என்னுள்ளே நடக்கின்றன. நான் அம்மாவின் கருவறைக்குள் இருந்த போ து என்னுடைய உடல் வெப்பம், பெரியவர்களைப் போல இரு மடங்கு இருக்கும். ஏன்னா நான்தண்ணிக்குள்ள இருக்கிறனா..அதான் வெப்ப  சீரமைப்புக்காகவே இது.  இப்ப வெளியே.வந்துட்டனா..அவ்வளவு வெப்பம் வேண்டாம். அதான் கொஞ்சம் கொஞ்சமா சூட்டை இழக்கிறேன். என் உடல் குளிர்கிறது. இது தாங்கமுடியாமல் எனக்கு நடுங்குகிறது. இதன் மூலம் என் உடல் சூட்டை உண்டுபண்ணுகிறது. என் உடலில் , அம்மாவின் கருவறைக்குள் இருந்த பொது இருந்த எனது பழுப்பு கொழுப்பு இப்ப எனக்குத் தேவை இல்லே. அதனை எரித்துதான் உடல் சூடு செய்கிறேன். இனி உங்க கூட இந்த உலகுக்குன் தகுந்தாற்போல ஓட்டத்த்க்கு தயாராயிட்டேன் அண்ணே.. புறப்பட்டுவோமா..நான் ரெடி..நீங்க ரெடியா?
  . 

Tuesday, August 27, 2013

2013, நவம்பர் வானில் ,மகிழ்விக்கப் போகும் வால்மீன் "ஐசோன் " க்கு ஒரு முகவுரை

2013, நவம்பர் வானில் ,மகிழ்விக்கப் போகும் வால்மீன் "ஐசோன் " க்கு ஒரு முகவுரை

August 28, 2013 at 12:43am
.

வால்மீனா ..ஆபத்தா?  

 

   பொதுவாகவானில் வலம் வரும் ஒரு வால்மீன்/வால்நட்சத்திரத்தின் வருகையை காலம் காலமாகவே  ஒரு கெட்டசகுனமாகவே  கருதி வரும் சமூகம் இது. பொதுவாக நம் எல்லோருக்கும் வால் நட்சத்திரம்/வால்மீன்வரப்போகுது என்றாலே, ஏதோ  கெட்டது  நடக்கப் போகுது ,உலகத்  தலைவர் யாரோ சாகப் போகிறார்கள் என்ற கருத்தே மக்கள் மத்தியில்பரவலாக விரவிக் கிடக்கிறது;விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வால்மீன் என்பது ரொம்பசாதுவானது.  ஆனால் பாவம் இந்த  இந்த வால் நட்சத்திரம் அப்படி எதுவும் எந்த கெட்ட  செயலையும் செய்வதில்லை. ஆனால் கெட்ட பேர் மட்டும் வாங்கிவிட்டது.

  வால்மீன்..வருகை..!

 பொதுவாக வால்மீன்என்பது சூரியனுக்கு அருகில் சுற்றி வரும் ஒரு பனிக்கட்டியால் ஆன ஒரு பொருள்.அவ்வளவே. அது சூரியனை  இஷ்டம் போலவே ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து சுற்றி விட்டுப்போகும். சில வால்மீன்கள் 20-200 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் சில வால்மீன்கள் 60,000  ஆண்டுகளுக்கு ஒரு முறையும்கூட வருவது உண்டு. சில வால்மீன்கள் தன வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் வந்துசூரியனை சுற்றி விட்டு ஓடியே போய்விடும். மீண்டும் வரவே வராது.இப்படி ஓர் ஆண்டில்சூரியனை ஆலவட்டம் போடும் வால்மீன்கள் ஏராளம் ஏராளம். அது நம்மை, இந்த உலகை எதுவும் செய்யாது, அது பாட்டுக்குதன போக்கில் சூரியனைசுற்ற வந்துவிட்டு ,இந்த பூமிக்கு தன இருப்பைத் தெரிவித்துக் கொள்கிறது. இது பற்றிநமக்கு எதுவும் தெரியாமல் நாம் இதைப்பற்றி கதை விடுகிறோம்.

  வால்மீன்..என்ன அது ?

  வால்மீன் என்பது தனியான ஒரு சிறு  உலகம்.அது முழுக்கமுழுக்க, தூசும், பனிக்கட்டியும் இணைந்த ஒரு அழுக்குப் பனிக்கட்டிதான்.காமெட்(comet ) என்ற வார்த்தைக்கு கிரேக்கத்தில் “முடி”(hair) என்றே பொருள். பழங்காலத்தில்வால்மீன்கள் சூரிய குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற உண்மை யாருக்கும் தெரியவேதெரியாது. சீனர்கள் கி.மு. 240களி ல் முதன் முதலில் பார்த்த ஹாலி வால்மீன் பற்றியும் பலருக்குத் தெரியாது.
 பழங்கால கருத்துகளும் உண்மையும்...

   நம் முன்னோர்கள், வால்மீனையும், அதன் வாலையும் பார்த்தும் கூட  வால்மீன்,ஒரு விண்மீன்தான் என்று நம்பினர். பல நூறு ஆண்டுகளாக வால்மீன் பூமியின்வளிமண்டலத்தில் பயணிக்கிறது என்றும் கூட நினைத்தனர். டேனிஷ் நாட்டு வானவியலாளர்டைகோ பிராகிதான்    முதன் முதலில்,வால்மீன்கள் என்பவை சந்திரனையும் தாண்டி வலம் வருகின்றன என்றஉண்மையை, கி.பி.1577 ல் பார்த்து அறிந்த பின்பே காண்பித்தார். கி.பி.1500-1600 களில்  வாழ்ந்த பெரும்பாலான வானவியலாளர்கள், வால்மீன்கள் என்பவை ஒரு முறை மட்டுமேவரும், மீண்டும் வராது என்றே நம்பினர். ஏனெனில், வால்மீன்கள் அப்படியே ஒருநேர்கோட்டில் வந்து சூரியனைச் சுற்றிவிட்டு, வான்வெளியில் நேர்கோட்டிலேயே சென்றுமறைந்து விடும் என்றம் நினைத்தனர்.

  நியூட்டனின் கணிப்பு..!
   
  நியூட்டன்

18ம் நூற்றாண்டின் மிகப் பெரியவிஞ்ஞானியான சர் ஐசக் நியூட்டன்தான், வால்மீன்கள் நீள்வட்டப் பாதையில்சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற உண்மையைக் கண்டுபிடித்தார். அது மட்டுமல்ல, அவர்தான், வால்மீன்களும்  கூட, கோள்கள் போலவே,  சூரிய குடும்பத்தின் உறுப்பினர்கள் என்றும், அத்துடன், அவையும் , கோள்கள் போலவே , மீண்டும் மீண்டும் சூரியனைச் சுற்றிவரும் என்ற மிகப் பெரிய உண்மையையும் கண்டறிந்தார்.

  சொன்னபடி கேளு..


   1700 களின் துவக்கத்தில் தான், விஞ்ஞானிகள், கணித விதிகளின்படி, வால்மீன்களின் சுற்றுப் பாதையைகணித்தனர். அப்போது இப்போது உள்ளது போல, கணினி மற்றும் கால்குலேட்டர்கள் இல்லைஎன்பதையும்,கைகளின் உதவியாலேயே கணிதம் போட்டனர் என்பதையும் நாம் கவனத்தில்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. மீண்டும் மீண்டும் வரக்கூடிய ஹாலிவால்மீனை, எட்மண்டு ஹாலி என்ற ஆங்கிலேய வானவியலாளர் கண்டுபிடித்ததன் விளைவாகஅவரின் பெயராலே அந்த வால்மீனுக்கு பெயர்  சூட்டப்பட்டு, ஹாலி வால்மீன் என்றும்அழைக்கபடுகிறது. ஆனால் அவரின் வாழ்நாளுக்கு முன்னால், அந்த ஹாலி வால்மீன், 1531, 1607 &1682 களில்  அந்த வால்மீன்வந்தது. அவர் அதனைப் பற்றி, ஹாலி மீண்டும் 1758 ல் வரும் என்றும் , அது ஒவ்வொரு 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை வானத்தில் வலம் வரும் என்றும் கணித்தார். ஆனால் அது வருமுன்பே எட்மண்டு ஹாலி, இந்த உலகை விட்டு மறைந்தார்.ஆனால் அவர் சொன்னபடியே..அது 1758ல் வானில் பிரகாசித்தது.

 சொல்லவா..பிறந்த இடம் சொல்லவா?

பொதுவாக வால்மீன்கள் வான்வெளியில், இரண்டு இடங்களிலிருந்து உருவாகின்றன.அவையே நம் சூரியமனடலக் கோள்களைத் தாண்டி உள்ள குயூப்பர் வளையம் (Kuiper Belt ) மற்றும்,சூரியமண்டல்த்தின் தொலை தூர  கடைக் கோடி..எல்லையில் உள்ள ஊர்ட்மேகங்கள் (Oort cloud ).ஒரு வால்மீன் என்பது  குயூப்பர் வளையம் (Kuiper Belt ) &  ஊர்ட் மேகத்தில் (Oort cloud ).பல கோடி ஆண்டுகள் தங்கி வாழ்ந்தபின்னரே, அங்கிருந்து  கோள்கள் நோக்கி வரும். அதுவும் அது,சூடான  சூரிய மண்டலத்தின் உள வட்டத்துக்குள்(Inner SolarSystem )வந்த பின்னரே, வால்மீனுக்கு வால் முளைக்கும்..அப்போதுதான்அது பிரகாசமாவும் தெரியும்.


 பொன்மேனி உருகுதே.!
 

பொதுவாக வால்மீன்கள், சூரிய மண்டலத்தின் வெப்பமிகுஉள்பகுதியில் வந்த பின்னே , சூரியனின் ஒளிமூலம் ஒளியினைப பெறுகின்றன. நம்மால் அதனைக்காண முடிகிறது. காரணம் என்ன தெரியுமா? அதன் பனிக்கட்டிப் பகுதிகள், பனி மனிதன் போல சூரிய ஒளியில்உருகி மினுக்குகின்றன.இந்த அற்புதமான காட்சியும், சுற்றும் தான் வால்மீன்களின் வாழ்வில்பெருமை மிகு கால கட்டமாகும். அப்போதுதானே, அதன் ஒளியால நம்மால் அதனைக் காணமுடிகிறது. அதன் பின் பல கோடிக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து, உருகி உருகி  மறையும்.

 சேட்டைக்கார குட்டியா..ஒளிவிளக்கா?

 நாம் என்ன நினைத்துக் , கொண்டிருக்கிறோம் என்றால், வால்மீனுக்கு எப்போதுமே வால்  இருக்கும்என்றுதான். அ துதான் கிடையாது. பின்ன என்ன விஷயம் என்கிறீர்களா? அப்பா, அம்மாவிடம் குட்டீஸ் ஓடிவரும்போதுசேட்டை பண்ணுவது போல, வால்மீன் சூரியனை நெருங்கி வரும்போதுதான் அதுக்கு வால்முளைக்கும்(சூரிய வெப்பத்தால்,அதன பனிக்கட்டி உருகி.). மேலும் வால்  எப்போதுமேசூரியனுக்கு எதிர் திசையில்தான் நீட்டிக் கொண்டிருக்கும். பொதுவாக வால்மீனுக்குஒரு தலைப்பகுதியும், வாலும்  உண்டு. ரொம்ப சேட்டைக்கார பிள்ளைகள் போல, இரண்டு வால்கள் உள்ள வால்மீன்களும்உண்டு.

   விண்கற்கள் பொழிவும்வால்மீனும்..!
  

வால்மீன்கள்பூமியின்  வளிமண்டலம் வழியே போகும்போது, அதிலிருந்து சில் தூசுத்துகள்களையும் ஆங்காங்கே விசிறி விட்டுக் கொண்டேசெல்லும். அவை நீண்ட காலம் அப்படியே விண்வெளியில் வளிமண்டலத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும். எனவே வான்வெளியில் அந்தபாதை, பூமியில் பாதையில் குறுக்கிடும்போது, அந்தப் பகுதியில் அவை ஒவ்வொரு ஆண்டும், எரிகற்களாக எரிந்து கொட்டும். அவையேவிண்கற்கள பொழிவு (Meteor showers )என்று அழைக்கப்படுகிறது.

  நான் ரொம்ப புதுசுங்க..!
 

 

  நாம் இப்ப நம்மஐசோன் கதைக்கு வருவோமா? மற்ற வால்மீன்கள் போலவேதான் ஐசோனும் . ஆனால இந்த ஐசோனின் வயது என்னதெரியுமா? இவர் சூரியனுக்கு முன்னே பிறந்தவராம். ஆம் ..இதன் வயது..சூரியனைவிட அதிகம்..அல்லது சூரிய வயது என்றும் வைத்துக் கொள்ளளலாம்.அதாவது 470 கோடிஆண்டுகள்..அம்மாடியோவ்..! ஆனால் அபப உருவான அந்த வால்மீனை  நாம,இப்பதான், முதல் முறையாகப் பார்க்கப் போகிறோம்.அதுவும் ரொம்ப புதுசுதான் (a fresh comet ) என்றும் ஊர்ட் மேகத்திலிருந்து உருவாகி வருகிறது எனவும் வானவியலாளர்களும் சொல்லுகின்றனர்.

நவமபரில் வானில் பிரகாசிக்கப் போகும்.பிரம்மாண்ட ஐசோ ன்.! 

 

  
 ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ திலக, ராஜ பாராக்கிரம,ராஜ ஒளிவீச நம் இந்த நூற்றாண்டின், மிகப் பெரிய அதிசய மான, அற்புதமான, நிலவை ஒளியையேவிழுங்கி ஏப்பம் விடும் தன்மையுள்ள ஒரு பெரிய ஒளி மிகுந்தவால்நட்சத்திரம் இந்த 2013 ம ஆண்டு நவம்பர்-டிசம்பரில்  வருகிறார், பராக், பராக் ..பராக்

   

புதுவரவான ஐசோ னின். பிரம்மாண்டம்.! 

 இப்ப இன்னும் மூணு மாசத்துலே வரப்போற வால்மீன் ஐசோ ன்.
ரொம்ப ரொம்ப பெரிசாம். வாலின்  நீளம், ஒரு சில மீட்டரிலிருந்து, பல கிலோ மீட்டர் நீளம் எவ்வளவு தெரியுமா?. 300,000 கி.மீ/186,400 மைல்கள்.வால்மீனின்  அகலம் 5  கி.மீ. அனைத்தும் பனிக்கட்டியால் ஆனவை. ஆனா,இது நவம்பர் 1 8 மநாள், சூரியனின் மிக அருகில்  1.16 மில்லியன்கி.மீ  தொலைவில் வந்துபகலவனின் ஒளியுடன் போட்டியிட முயல்கிறது.என்றால் .இதன் சேட்டையை எண்ணிப் பாருங்கள். ஆதிகாலத்தில் ஒவ்வொரு நாகரிகத்திலும், வால்மீன்கள் வந்து போன பதிவைகுறிப்பிட்டு வைத்துள்ளார்கள. ஏசு கிறிஸ்து பிறந்த போ து கூட ஒருவால்மீன் தோன்றியதாக தகவல் பதிவு செய்யப்பட்டது.
   நமக்கு மிக நெருக்கமான வால்மீன்..

   ஐசோ ன்  ஊர்ட் மேகத்திலிருந்து நேரிடையாக புறப்பட்டுரொம்ப உற்சாகமாக வரும் மிகப் புதிய வரவாம் மேலும் ஐசோன் வால்மீன், இதுவரை வந்தவால்மீன்களில் மிகப் பெரியதும், மிகவும் பிரகாசமானதும் கூட. இது இந்த நூற்றாண்டில்இதுவரை வந்த வால்மீன்களில், இதுதான்சூரியனுக்கு மிக அருகில், செவ்வாய்கோளிளிருந்து 0.0724 AU  என்ற வானவியல் அலகில்,10,830,000 கி.மீ  /6,730,000 மைல்கள்,தொலைவில், 2013,,அக்டோபர் மாதம் முதல் நாள் தெரியும். இந்த ஐசோன் வால்மீன் 2013, நவம்பர் 28 ம் நாள் , பூமிக்கு மிக அருகில் வருமாம். அதாவதுசூரியனின் மையப்புள்ளியிலிரு ந்து சுமார் 1,800,000 km; தொலைவில் ( 0.012 AU வானியல் அலகில் ) வலம் வருமாம். அதன் பின் 2013, டிசம்பர் 26 மநாள், பூமிக்கு  மிக அருகில், 0.429 AU என்ற வானியல் அலகில் , 64,200,000 கி.மீ, / 39,900,000 மைல்கள் தொலைவில் தெரியும்.  அதுவும் பூமி அதனுடைய சுற்று
வட்ட த்திற்கு மிக அருகில் 2014, ஜனவரி 12-14 நாட்களில்இருக்கும். 2014 ஜனவரியில் இதனை வானில் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்கின்றனர்.,அதாவது  ..இதனை தொலைநோக்கி/ இருகண் நோக்கி (Binocular )இன்றி வெறும் கண்ணால் பார்க்கலாமாம். உலகில் அனைத்து பகுதியினரும்பார்க்க கூடிய வால்மீன்..இதுதான்.
    நவம்பர்..மாதஹீரோ..

 நவம்பர் மாதம்வரப்போகிற ஹீரோ ஐசோன் வால்மீனை கடந்த ஆண்டு செப்டம்பர் 21ம் நாள்தான் ஓர் அமெச்சூர்வானவியலாளரான, வைட்டாலி  நெவ்ஸ்கி மற்றும் அர்த்யோன்நோவிசொநோக்  (Vitali Nevski andArtyom Novichonok ) கண்டுபிடித்தனர். அந்த வால்மீனைப் பார்க்க பயன்படுத்திய கருவியின்பெயரைக் கொண்டே அதற்கு ஐசோன்  ((ISON) )என்று பெயரிட்டுள்ளனர். the International Scientific OpticalNetwork (ISON) என்பதன் சுருககிய பெயர்தான் ஐசோன். இதனை ரஷ்யாவிற்கு அருகில் கிஸ்லோவோட்ச்க்(near Kislovodsk,Russia.)என்ற இடத்தில் கண்டறிந்தனர்.

   ..

ஐயாமாரே.அம்மாமாரே...பாருங்க பாருங்க எல்லோரும் பாருங்க..

   நவம்பர்நெருங்க நெருங்க ஐசோ ன் மிகப் பிரகாசமாய் தெரியும். எப்படி இருக்கும் தெரியுமா? முழு நிலவின் ஒளியையும், வெளிச்சத்தையும் கூட இந்த ஐசோனின்  ஒளி  விழுங்கி ஏப்பம் விட்டு விடும் என்றும் சொல்லப்படுகிறது. . இந்த நூற்றாண்டில் வரும் மிகாபிரகாசமான வால்மீன் ஐசோன்  ,மட்டுமே. மறந்துடாம எல்லாரும் இந்த வால்மீனைப் பாருங்கப்பா.. உங்க பிள்ளைகுட்டிகளுக்கும் காட்டுங்கள். அது வர்ற ஒரு பத்து நாள் மின்னாடி பாக்கி  விஷயம் பேசுவோம். ..

வால்மீனின் வால் இன்னும்  நீளும்...