Tuesday, July 20, 2010

நம் உடலை.. குத்தகை எடுத்த.. மூத்த குடிமகன்..!

மனித செல்லில் 90 % வெளி உயிரிகள்,,

மனிதர்களாகிய நாம்தான், பரிணாம வளர்ச்சியில், இன்று உயிரினங்களிலேயே உயர்ந்த அந்தஸ்தில்,உயிரின பிரமிடின், உச்சியில் இருக்கிறோம்.நாம்தான் உயர்ந்தவர்கள், உலகையே, ஏன், பிரபஞ்ச உருவாக்கத்தைக் கூட அறிந்தவர்கள் என நெஞ்சை நிமிர்த்தி கூறிக் கொண்டிருக்கிறோம் ஆனால் மனித உடலில் உள்ளும் புறமும் என சுமார், 100௦௦ ட்ரில்லியன்(10,000,000கோடி--நூறு லட்சம் கோடி ) நுண்ணுயிரிகள் வாழ்கின்றன- ஒன்றுக்குப் பின் 14
எரிமலையில் வாழும் பாக்டீரியா பூஜ்ஜியங்கள் போடவேண்டும, உடம்பில், பெரும்பாலான செல்கள் உங்களுடையதல்ல. அவை மனித செல்களும் அல்ல. . உங்கள் உடல் செல் அன்றி, 90௦% வெளி உயிரிகள் வசிக்கின்றன

நுண்ணுயிரிகள்.. எங்கெங்கும் ..!

நல்ல உடல் நலமுள்ள மனித உடலில் சுமார், 100 ட்ரில்லியன் நுண்ணுயிரிகள் வசிக்கின்றன. இவைகளில் பாக்டீரியா, பூஞ்சை, ஆர்கியே(Archaea ) (ஒரு செல் நுண்ணுயிரி) என பல வகை உண்டு. பெரும்பாலும் பாக்டீரியாக்களே அதிகம். உலகில் நிலம், நீர், காற்று,எல்லா இடங்களிலும், நுண்ணுயிரிகள் நிறைந்துள்ளன. இன்று கடலில், நுண்ணுயிரிகள் இல்லாவிட்டால் உலகம் வெப்பத்தால் , இப்போதுள்ளதைவிட இன்னும் அதிகமாக கொதித்துப் போயிருக்கும். நுண்ணுயிரிகள்தான் , சூரியனின் வெப்பத்தை உள்வாங்கிக் கொள்கின்றன. சில பாக்டீரியாக்கள், உயிர்கள் வாழமுடியாத எரிமலை வெப்பத்திலும், தொழிற்சாலை கழிவுகளான அமிலக் கிடங்குகளிலும், உப்புக் குவியலிலும் கூட சந்தோஷமாய் வாழ்ந்து செழிக்கின்றன. அதுபோலவே, நம் உடலும்

உங்கள் எடை.. ..மைனஸ்.. பாக்டீரியா..!

நம் உடல் நுண்ணுயிரிகளால் போர்த்தப்பட்டுள்ளது. இவை நாம் பிறந்த உடன் நம்மீது ஆக்கிரமிப்பு செய்து விடுகின்றன. இறக்கும் வரையும் நம் கூடவே வாழ்கின்றன. பெரும்பாலான பாக்டீரியாக்கள், நமக்கு எந்த தீங்கும் செய்வதில்லை. மேலும் சில பாக்டீரியா, நம்மைத்தாக்கும் கிருமியிடமிருந்தும் நம்மை காக்கின்றன. மேரிலாந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் , 2010 ,மே, முதல் வார கணக்கெடுப்பின் படி, நம் உடலில், 1- 2 .65 கிலோ எடையுள்ள நுண்ணுயிரிகள் வசிக்கின்றன பாக்டீரியாக்கள் இன்றி நம்மால் உணவை செரிமானம் செய்ய முடியாது.இவைதான், நமது தற்காப்புத் திறனை உண்டுபண்ணுபவையும் கூட

படு.. சமத்தான.. பாக்டீரியா..!.

ஆராய்ச்சியாளர்கள் முதன் முதலாக நம் உடம்பில்,மொத்தம் 27 இடங்களில், பாக்டீரியா குத்தகை எடுத்துள்ளதை வரைபடமாக்கியுள்ளனர். இந்த பாக்டீரியாக்கள் நம்மைவிட மிக மிக மூத்தவை.பூமித்தாயின், முதல் மகன். மூத்த குடிமகன் பாக்டீரியா தான். அவைகளின் வயது சுமார், 400 கோடி ஆண்டுகள் மட்டுமே..! . இதன் உருவ அளவு 0.3 -5. 0 மைக்ரோ மீட்டர்.(மீட்டரின் 1,000,000 த்தில் ஒரு பகுதி). ஆனால் இது படு கில்லாடியப்பா..! இது தான் வாழவேண்டிய இடத்தை, மிகவும் கவனமாக, சரியாக தேர்ந்தெடுத்து வசிக்கிறது. , நாக்கில் வாழும் பாக்டீரியாவை, எடுத்து நெற்றியில் விட்டுப் பார்த்தால், அது என்ன செய்தது தெரியுமா? அதற்கு .அந்த இடம் பிடிக்கவில்லை, எனவே, வளரவில்லை. ஆனால் அந்த பாக்டீரியாவை நம் அக்குளில் விட்டால் அது ஜாம் ஜாம் என்று வளருகிறது. எப்படி இருக்கு கதை..!இந்த ஆராய்ச்சியின் மூலம், ஏன் தோல் தொற்றுவியாதிகள், ஒரு சில இடங்களிலே மட்டும் காணப்படுகின்றன என்ற உண்மையும் தெரிந்து விட்டது.

தலைப்பேனின்.. வயது.. 10 ,000..!.

ஆராய்ச்சியாளர்கள், நம் உடலில், 22 பேரினத்தைச் சேர்ந்த நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. என கண்டறிந்தனர். ஆனால் அவைகளில் 4 பாக்டீரியா மட்டுமே அதிக இடத்தை ஆக்கிரமிப்பு செய்கின்றன. இதிலும், ஒரு சுவையான, ஆனால் அதிசயமான தகவல், என்னவெனில், குடலில்,அக்குளில் , கால் இடுக்குகளில் இருப்பதைவிட, அதிக எண்ணிக்கையில் பாக்டீரியாக்கள் , முழங்கால் மடிப்பில் குடிகொண்டுள்ளனவாம். . இந்த பாக்டீரிய கூட்டு குடியிருப்பில் உள்ள மாறுதலே, நமக்கு ஏற்படும் வயிற்று சம்பந்தமான உபாதைகள், ஈறு தொடர்பான நோய்கள் மற்றும் உடல் பருமனும் கூட இதனால்தானாம். என்னடா இ. து காலம் ரொம்பவே கெட்டுப் போச்சு என்கிறீர்களா .!வயிற்றில் 500-1000 இனங்கள் வசிக்கின்றன. தோலில் 500 வகை பாக்டீரியா உள்ளன. நம் தலைப் பேனுக்கு வயது 10, 000ஆண்டுகள்.

பெரியம்மை வைரசின்.. சாமர்த்தியம்.. !.
ஒரு தடவை நமக்கு பெரியம்மை வந்துவிட்டால், அந்த வைரஸ் நிரந்தரமாக நம் நரம்புகள், தண்டுவடத்தில், பேசாமல், மெளனமாக தங்கி விடுமாம். எப்போதாவது, நமக்கு மன அழுத்தம், முதுமை, பலவீனம் ஏற்பட்டால், அவை நைசாக, நரம்புகள் வழியே ஊடாடிச் சென்று, உடலுக்கு வலி, தோல் பிரச்சினைகளை உண்டாக்குமாம்.எப்படி இருக்குங்க.?. ரொம்ப சமத்து இது..!நம்மை விட சிறிய, கீழ் நிலையில் உள்ள பாக்டீரியாவின் கதையும், செயல்பாடும் எப்படி?. உலகில், அனைத்து உயிரினங்களும், வாழ்தலுக்கான போராட்டத்தில், நிறைய யுக்திகளைக் கையாண்டு, வெற்றிபெறவே முயலுகின்றன . நாம் தோற்று விடுவோமோ என கிஞ்சித்தும் சிந்திப்பதில்லை... மனிதனைத தவிர.!.

Monday, July 19, 2010

நீங்கள் ஒரு நொடியில் எவ்வளவு வேகம் நடப்பீர்கள்

நண்பா, வணக்கம். நீங்கள் ஒரு நொடியில் எவ்வளவு வேகம் நடப்பீர்கள்? இதென்ன கூத்து. அபத்தமான வினா என்கிறீர்களா ?
ஒரு நொடியிலா என்கிறீர்களா? ஆம் ஒரு நொடியில்தான். தங்களுக்கு ஒரு வியப்பான , நம்ப முடியாத தகவல் சொல்லலாமா? பூமி எவ்வளவு வேகமாக சுற்றுகிறது ? தன் அச்சில் நொடிக்கு 0.5 கி. மீ வேகத்திலும், சூரியனை,நொடிக்கு 30 கி.மீ வேகத்திலும் சுற்றுகிறது. சூரியன் சுற்றுமா? இதென்ன கேள்வி? பூமிதானே சுற்றுகிறது. சூரியன் சுற்றாதப்பா என்கிறீர்களா.. அதுதான் இல்லை. சூரியனும் சுற்றுகிறதே? சூரியன் தன் தாயகமான, பால் வெளி மண்டலத்தை நொடிக்கு,250 கி. மீ வேகத்தில் சுற்றுகிறது. சூரியன் ஒரு முறை பால் வெளி மண்டலத்தை சுற்றி முடிக்க , சுமார் 22.5 கோடி ஆண்டுகள், ஆகின்றன. மனித இனம் உருவான பின்பு, இன்னும் ஒரு முறை கூட அந்த சுற்று முடியவில்லை. பால் வெளி மண்டலம் அந்தரத்தில், அதாவது விண்வெளியில், சாசர் தட்டு போல, நொடிக்கு 250 கி. மீ வேகத்தில் நகர்ந்து போய்க் கொண்டே இருக்கிறது.அதோடு இதனுடன் பக்கத்தில் இருக்கும், உள்ளூர் சின்ன சின்ன, தொகுதி மண்டலங்கள்,(Local groups) இதனுடன் சேர்ந்து நொடிக்கு சுமார் 40 ௦ கி. மீ வேகத்தில் நகருகின்றன . எனவே நண்பர்களே, நீங்கள் ஒவ்வொருவரும், வீட்டிலே அசையாமல் படுத்து இருந்தாலும் கூட, நொடிக்கு சுமார் 530 கி. மீ (30+250+250) வேகத்துக்கு மேல் ஆடாமல் அசையாமல் பால் வெளி மண்டலம் என்னும் ரங்கராட்டினத்தில் அலாக்காக சுற்று கிறீர்கள் நண்பரே..! என்ன நம்ப முடிகிறதா,,!

மணங்களின். ராணி.. ஏலம்..

ஏல டீ..வேண்டுமா?
ஏலக்காய் டீ!..மாலை வேளை.. லேசான மழை தூறிக் கொண்டு இருக்கிறது. குளிர் தென்றல் நம் உடலைத் தீண்ட தீண்ட. மனம் சந்தோஷத்தில் குதியாட்டம் போடுகிறது. என்ன சூட ஒரு டீ இருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருக்குமே. ! அக்கா சூப்பரா ஒரு ஏலக்கா டீ போடேன்.! இந்த குளிருக்கு இதமா இருக்கும். இதெல்லாம் நெசந்தான். ஏலக்காய் டீ நன்றாகவே இருக்கும். ! ஏலக்காயின் மகிமை அப்படி!.ஏலக்காய் மணம் நம்மை கிறங்க அடிக்கும் நண்பா! ரெண்டு ஏலக்காய் விதையை வாயில் போட்டு சுவைத்து இருக்கிறீர்களா..? அனுபவித்து பாருங்கள் நண்பரே..!
மணங்களின் .. ராணி..! ஏல விதைக்குஅதன்சொக்கவைக்கும் மணத்தை முன்னிட்டு, அதற்கு, " சொர்க்கத்தின் தானியங்கள்" என்ற புனை பெயர் ஒன்றும் உண்டு. அதற்குரொம்ப பொருத்தமான பெயர்தான்அது.ஏலம் வாசனைகளின் ராணி எனவும் மதிப்புடன் அழைக்கப்படுகிறது. அதன் வாசனையும் சுவையுமே அலாதியானது. அதனை மிஞ்ச,வேறு மணமே இல்லை உலகில்!. அதனால்தான் அனைத்து இனிப்பு வகைகளிலும் ஏலத்தின் வாசனையே தூக்கலாக உள்ளது. பொதுவாக, ஏலம் இல்லாத இனிப்பு வகையே இல்லை எனலாம். . உலகிலேயே விலை உயர்ந்த வாசனைப் பொருள்களில் குங்குமப்பூவிற்கு அடுத்தபடியாக கருதப் படுவது ஏலக்காய்தான்.
கடல் .. கடந்த.. ஏலம்..!
ஏலத்தின் தாயகம், தென்னிந்தியாவின், மேற்குத்தொடர்ச்சி மலையின் வளம் நிறைந்த கேரளம்தான். இதைதவிர, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இது காணப்படுகிறது. ஏலம் முதலில் காட்டு செடியாகவே இருந்தது. ஏலத்தின் வரலாறு என்பது மனித இனத்தின் ஆதி கால வரலாறுடன் தொடர்புடையது.ஏலத்தின் தாயகம் கேரளத்தின் மலைப்பாங்கான பூமிதான் என்று சொல்லப் பட்டாலும் கூட, சுமார், 5 ,000 ஆண்டுகளுக்கு முன்பே இதனை, பெர்சியா, மெசபடோமியா, சீன போன்ற நாடுகளில், இதன் மருத்துவ குணத்துக்காகவும் , சமையலிலும், அதைவிட முக்கியமாக, கடவுள் தொடர்பான சடங்குகளிலும் ஏலத்தைப் பயன்படுத்தினர். கி.மு, 721 ல் பாபிலோனிய அரசனின் தோட்டத்தில், ஏலம் வளர்க்கப் பட்டதாம்.மேலும் கி.பி 176 -180 ல் பேரரசர் அலெக்சாண்டரின் வரிப் பட்டியலில், வாசனைப் பொருளான ஏலத்தின் பெயரும் காணப் பட்டதாம். , .
வேதத்திலும்..கிரேக்கத்திலு
ம்.. ஏலம்.!.
ஆதிகால வேத புத்தகத்திலும் ஏலத்தை பற்றி எழுதி வைத்துள்ளனர் முதலாம் , இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சரகர் மற்றும் சுஸ்ருதா என்ற இந்திய மருத்துவர்கள், பல நோய்களை குணப்படுத்த ஏலக்காயை பயன்படுத்தியாதாக குறிப்பிட்டு உள்ளனர். ..கிரேக்க மருத்துவத்தில், கி.மு 5 ம் நூற்றாண்டில், ஏலம் பற்றிய தகவல்கள் காணப் படுகின்றன. அரிஸ்டாட்டிலுக்குப் பின் வாழ்ந்த தியோபிரஸ்டேட்ஸ் என்ற கிரேக்க மருத்துவ அறிஞன் கி.மு 4 ம் நூற்றாண்டில் ஏலம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.அது மட்டுமல்ல. அதே கால கட்டத்தில், இந்திய ஆயுர்வேத மருத்துவத்திலும், கிரேக்க, ரோமானிய நிபுணர்களும், ஏலக்காய் இந்தியாவிலிருந்து வந்தது என்றும் குறிப்பிட்டு அதன் மருத்துவ குணங்களையும் சொல்லி இருக்கின்றனர். அவர்கள் ஏலத்தை வாயில் போட்டு மென்று அதன் மணத்தையும், சுவையையும் அனுபவித்தனராம்.
ஏலத்தின்.. மணத்தில்..சொக்கிய,, உலகப் பேரழகி..!
அலேக்சாண்டரின் போர்வீரகளே, கி.மு 325 ல் இந்தியாவிலிருந்து செல்லும்போது, அப்படியே ஏலக்காயையும்,ஐரோப்பாவுக்கு
கொண்டு சென்ற பெருமையைப் பெறுகின்றனர். கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஏலத்தை மருந்தாக மட்டுமின்றி, வாசனைப் பொருளாகவும் பயன்படுத்தினர். ஒரு சுவையான,கிரேக்க சாம்ராஜ்யத்தின் தகவல். உலகப் பேரழகி கிளியோபாட்ராவுக்கு ஏலத்தின் மணம் ரொம்ப இஷடமான ஒன்றாம். , மார்க் ஆண்டனியின் வருகைக்காக, தனது அரண்மனையை, உண்மையிலேயே, நெஞ்சை சொக்க வைக்கும் ஏலத்தின்புகை மணத்தில் மூழ்க வைப்பாராம்.
பைபிளிலும் ... சொர்க்கத்தின்.. மகனுக்கும்.. ஏலம்...!.
இங்கிலாந்து நாட்டினருக்கு நார்வேனியர் மூலம்தான், கி.பி. 11 ம் நூற்றாண்டில்தான் ஏலம் அறிமுகம். இருப்பினும், ஐரோப்பாவுக்கு,கி.பி 17 ம் நூற்றாண்டு வரை, டச்சு , போர்த்துகீஸ் மற்றும் ஆங்கிலேயர்களின் கடல் வாணிபம் மூலம்தான், ஏலம் இறக்குமதி செய்யப் பட்டது. கிறித்துவ புனித நூலான பைபிளின் புதிய ஏற்பாட்டில், இதனை குற்றமற்ற என்ற பொருள் கொண்ட கிரேக்க வார்த்தையான, "அமோமன்" என்று குறிப்பிடப் பட்டுள்ளது. கி.பி 1,000 ஆண்டுகளில் சீன அரசின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள், தங்களின் பேரரசரிடம் நிற்கும் முன், வாயில் ஏலத்தின் விதையை போட்டுமெல்ல வேண்டுமாம். ஏனெனில், சொர்க்கத்தின் மகன்களின் முன்னே மணம் பரப்பும் வாசனை காற்றை அவர்கள் விட வேண்டுமாம். இது எப்படி இருக்கு,? ஒண்ணுமில்லேப்பா.! அதிகாரியின், வாய் நாறாமல் இருப்பதற்குத்தான் இந்த படாடோபமான ஏற்பாடெல்லாம்..!வாய் நாறினால் பின் எப்படி பேச...! அதான் இது.
நாங்க..இஞ்சி..குடும்பம்தாங
்க..!
ஏலக்காய் இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. இது வருடம் முழுவதும் காய்க்ககூடியது. வேர்ப்பகுதியில்தான் இதன் பூவும், காயும் காணப்படும். பொதுவாக இது வெப்ப நாடுகளின் நறுமணப் பொருளாக இருந்தாலும், இதற்கு, ஏராளமான மழையும், 22 டிகிரி வெப்பமும் தேவை. அடர்வான மரங்களின் நிழலிலேய இதனை வளர்க்க முடியும்.ஏல செடி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 8 , 000-15 , 000 மீ உயரத்திலேயே ஈரப்பாங்கான பகுதிகளில் வளரும் பயிரிட்டு 4 ஆண்டுகள் ஆன செடிதான் காய்க்கும்.சுமார் 20 காய்கள் வந்த பின் இதனைப் பறித்து சூரிய வெப்பத்தில் உலர வைப்பர்.காய்கள் அழகான இளம்பச்சை நிறத்தில் இருக்கும். நன்கு முதிர்ந்த காயில் 10 -20 விதைகள். காணப்படும்.இவை கருப்பாகவும் பிசுக்குத் தன்மையுடனும் இருக்கும். நல்ல தரமான விதைகள் நல்ல கருப்பாக இருக்கும். இன்று ஏலம் இந்தியா தவிர, இலங்கை, தாய்லாந்து, மத்திய அமெரிககா,தமிழ் நாடு மற்றும் கர்நாடகத்திலும் பயிரிடப் படுகிறது. ஆனாலும்கூட, இந்திய ஏலம்தான் இதன் ,மணம், தரம், அளவு, எண்ணெய் மற்றும் நிறத்துக்காக உலக சந்தையில் பெயர் பெற்றுள்ளது. மேலும் உலகின் 90 % ஏலம் இந்தியாவிலிருந்தே ஏற்றுமதியாகிறது. அந்நிய செலாவணியைத் தரும் மிக முக்கியமான் பொருள்
அரேபியரின்.. உபசரிப்பு.. ஏலத்தின்,, மதிப்பு...!
ஏலக்காய். கிழக்கிந்தியர்கள், ஸ்காண்டிநேவியர்கள் , அரேபியர்கள், மற்றும் மத்திய ஆப்பிரிக்கர்கள் தான் ஏலக்காயை அடிக்கடி தங்களின் உணவில் பயன்படுத்து கின்றனர். அரேபியர்களின் காபியில் ஏலத்தின் மணம் கட்டாயம் அருமையாய் இருக்கும். அவர்களின் காபியில் ஏலப் பொடியோ முழு விதையோ நிச்சயமாய் இருக்கும். , ஏனெனில், அவர்கள், விருந்தினரின் முன், ஏலவிதையை, காபி கொடுக்கு முன் காண்பிப்பதை பாரம்பரிய வழக்கமாகவும், அவர்களுக்கு தரும் உயர்ந்த பட்ச மரியாதை என்றும் கருதுகின்றனர்.அரேபியர்கள் மாமிசத்திலும் , அரிசி சோற்றிலும் ஏலம் போடுவார். இன்றும் கூட சில முகமதியர்கள் வீட்டில் சாதம் சமைக்கும் பொது ஏல அரிசியும் கலந்து போடுவார்கள். இந்திய உணவில் ஏலம் கலப்பது சாதாரணமான ஒன்று. புலவு, மசாலா, ஆட்டுக் கறி பாயசம், அல்வா, குலாப் ஜாமூன் மற்றும் பிற இனிப்பில் ஏலத்தின் வாசனை தூள் கிளப்பும்
மருத்துவ ..குணம் கொண்ட.. ஏலக்காய்...!
ஏலம் பல வகைகளில் தனிச் சிறப்பு வாய்ந்தது. இதில் அற்புதமான உணவு மதிப்பு கொண்டது. இதில் மிகக் குறைந்த கொழுப்பும், அதிக புரதமும், முக்கிய வைட்டமின்களாகிய A ,B& C உள்ளன. 10% ஆவியாகக்கூடிய எண்ணெய் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளான, அரேபியா,துருக்கி போன்றவைதான் உலகின் அதிகமான ஏலம் உட்கொள்பவர்கள். வடஇந்திய கிராமிய பாடல்களிலும் கூட, வெற்றிலை பாக்கில் ஏலம் கலப்பது பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. ஏலம், குடல், சிறுநீர், நரம்பு மற்றும் இனப்பெருக்க உறுப்பு தொடர்பான நோய்களை நிவாரணம் செய்யுமாம்,
!தங்கத்தில்.. குளித்த.. ஏலக்காய்...!.
கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலும், தைத்திரிய சம்ஹிதாவிலும் திருவிழா காலத்திலும், சடங்குகளிலும் ஏலம் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. அதைவிட ஒரு சுவாரசியமான தகவல். இந்தியர்கள், தங்களின் விருந்தினர்களுக்கு மிகுந்த மரியாதை செய்வதற்காக, ஏலக்காயை தங்கத்தில் முக்கி எடுத்து அதனை, இனிப்பின் மீது வைத்து பரிமாறுவார்களாம். 1801 ல் இந்தியாவிலிருந்து, கிழக்கிந்திய கம்பெனியால் , இங்கிலாந்துக்கு எடுத்து செல்லப் பட்ட தங்கத தகடு போர்த்திக் கொண்ட ஏலக்காய்கள் இவை. இவற்றை இந்தியா அருங்காட்சியம் என்ற பெயரில் இந்தியா இயற்கைப் பொருள்களை இங்கிலாந்தில் . வைத்திருந்தனர். . 1879 , ல் அங்கிருந்த அருங்காட்சியகம் மூடப்பட்டதால், அதனை லண்டன் அருங்காட்சியகத்துக்கும், ராயல் தாவர தோட்டத்திற்கும் மாற்றப்பட்டது. பின்னர், இவை தென் ஆசியா கடந்து, சீனா தாண்டி உலகம்
முழுமைக்கும் விரவிக் கிடக்கிறது. எம் சொத்து கொள்ளை கொண்டு போகவோ என்று நாம் அலறவேண்டிய்துதான். வேறென்ன செய்ய?

ஏலச் செடியின் பூவும் காயும்
அடித் தண்டில் பூவும், காய்களும்.
பழங்கால புத்தகத்தில் ஏலம் பற்றிய சமையல் குறிப்பு
தங்கத்தில் குளித்த இந்திய ஏலக்காய்
கொத்து கொத்தாய் ஏலக்காய்

மணங்களின். ராணி.. ஏலம்..

ஏல டீ..வேண்டுமா?
ஏலக்காய் டீ!..மாலை வேளை.. லேசான மழை தூறிக் கொண்டு இருக்கிறது. குளிர் தென்றல் நம் உடலைத் தீண்ட தீண்ட. மனம் சந்தோஷத்தில் குதியாட்டம் போடுகிறது. என்ன சூட ஒரு டீ இருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருக்குமே. ! அக்கா சூப்பரா ஒரு ஏலக்கா டீ போடேன்.! இந்த குளிருக்கு இதமா இருக்கும். இதெல்லாம் நெசந்தான். ஏலக்காய் டீ நன்றாகவே இருக்கும். ! ஏலக்காயின் மகிமை அப்படி!.ஏலக்காய் மணம் நம்மை கிறங்க அடிக்கும் நண்பா! ரெண்டு ஏலக்காய் விதையை வாயில் போட்டு சுவைத்து இருக்கிறீர்களா..? அனுபவித்து பாருங்கள் நண்பரே..!
மணங்களின் .. ராணி..! ஏல விதைக்குஅதன்சொக்கவைக்கும் மணத்தை முன்னிட்டு, அதற்கு, " சொர்க்கத்தின் தானியங்கள்" என்ற புனை பெயர் ஒன்றும் உண்டு. அதற்குரொம்ப பொருத்தமான பெயர்தான்அது.ஏலம் வாசனைகளின் ராணி எனவும் மதிப்புடன் அழைக்கப்படுகிறது. அதன் வாசனையும் சுவையுமே அலாதியானது. அதனை மிஞ்ச,வேறு மணமே இல்லை உலகில்!. அதனால்தான் அனைத்து இனிப்பு வகைகளிலும் ஏலத்தின் வாசனையே தூக்கலாக உள்ளது. பொதுவாக, ஏலம் இல்லாத இனிப்பு வகையே இல்லை எனலாம். . உலகிலேயே விலை உயர்ந்த வாசனைப் பொருள்களில் குங்குமப்பூவிற்கு அடுத்தபடியாக கருதப் படுவது ஏலக்காய்தான்.
கடல் .. கடந்த.. ஏலம்..!
ஏலத்தின் தாயகம், தென்னிந்தியாவின், மேற்குத்தொடர்ச்சி மலையின் வளம் நிறைந்த கேரளம்தான். இதைதவிர, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இது காணப்படுகிறது. ஏலம் முதலில் காட்டு செடியாகவே இருந்தது. ஏலத்தின் வரலாறு என்பது மனித இனத்தின் ஆதி கால வரலாறுடன் தொடர்புடையது.ஏலத்தின் தாயகம் கேரளத்தின் மலைப்பாங்கான பூமிதான் என்று சொல்லப் பட்டாலும் கூட, சுமார், 5 ,000 ஆண்டுகளுக்கு முன்பே இதனை, பெர்சியா, மெசபடோமியா, சீன போன்ற நாடுகளில், இதன் மருத்துவ குணத்துக்காகவும் , சமையலிலும், அதைவிட முக்கியமாக, கடவுள் தொடர்பான சடங்குகளிலும் ஏலத்தைப் பயன்படுத்தினர். கி.மு, 721 ல் பாபிலோனிய அரசனின் தோட்டத்தில், ஏலம் வளர்க்கப் பட்டதாம்.மேலும் கி.பி 176 -180 ல் பேரரசர் அலெக்சாண்டரின் வரிப் பட்டியலில், வாசனைப் பொருளான ஏலத்தின் பெயரும் காணப் பட்டதாம். , .
வேதத்திலும்..கிரேக்கத்திலும்.. ஏலம்.!.
ஆதிகால வேத புத்தகத்திலும் ஏலத்தை பற்றி எழுதி வைத்துள்ளனர் முதலாம் , இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சரகர் மற்றும் சுஸ்ருதா என்ற இந்திய மருத்துவர்கள், பல நோய்களை குணப்படுத்த ஏலக்காயை பயன்படுத்தியாதாக குறிப்பிட்டு உள்ளனர். ..கிரேக்க மருத்துவத்தில், கி.மு 5 ம் நூற்றாண்டில், ஏலம் பற்றிய தகவல்கள் காணப் படுகின்றன. அரிஸ்டாட்டிலுக்குப் பின் வாழ்ந்த தியோபிரஸ்டேட்ஸ் என்ற கிரேக்க மருத்துவ அறிஞன் கி.மு 4 ம் நூற்றாண்டில் ஏலம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.அது மட்டுமல்ல. அதே கால கட்டத்தில், இந்திய ஆயுர்வேத மருத்துவத்திலும், கிரேக்க, ரோமானிய நிபுணர்களும், ஏலக்காய் இந்தியாவிலிருந்து வந்தது என்றும் குறிப்பிட்டு அதன் மருத்துவ குணங்களையும் சொல்லி இருக்கின்றனர். அவர்கள் ஏலத்தை வாயில் போட்டு மென்று அதன் மணத்தையும், சுவையையும் அனுபவித்தனராம்.
ஏலத்தின்.. மணத்தில்..சொக்கிய,, உலகப் பேரழகி..!
அலேக்சாண்டரின் போர்வீரகளே, கி.மு 325 ல் இந்தியாவிலிருந்து செல்லும்போது, அப்படியே ஏலக்காயையும்,ஐரோப்பாவுக்கு கொண்டு சென்ற பெருமையைப் பெறுகின்றனர். கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஏலத்தை மருந்தாக மட்டுமின்றி, வாசனைப் பொருளாகவும் பயன்படுத்தினர். ஒரு சுவையான,கிரேக்க சாம்ராஜ்யத்தின் தகவல். உலகப் பேரழகி கிளியோபாட்ராவுக்கு ஏலத்தின் மணம் ரொம்ப இஷடமான ஒன்றாம். , மார்க் ஆண்டனியின் வருகைக்காக, தனது அரண்மனையை, உண்மையிலேயே, நெஞ்சை சொக்க வைக்கும் ஏலத்தின்புகை மணத்தில் மூழ்க வைப்பாராம்.
பைபிளிலும் ... சொர்க்கத்தின்.. மகனுக்கும்.. ஏலம்...!.
இங்கிலாந்து நாட்டினருக்கு நார்வேனியர் மூலம்தான், கி.பி. 11 ம் நூற்றாண்டில்தான் ஏலம் அறிமுகம். இருப்பினும், ஐரோப்பாவுக்கு,கி.பி 17 ம் நூற்றாண்டு வரை, டச்சு , போர்த்துகீஸ் மற்றும் ஆங்கிலேயர்களின் கடல் வாணிபம் மூலம்தான், ஏலம் இறக்குமதி செய்யப் பட்டது. கிறித்துவ புனித நூலான பைபிளின் புதிய ஏற்பாட்டில், இதனை குற்றமற்ற என்ற பொருள் கொண்ட கிரேக்க வார்த்தையான, "அமோமன்" என்று குறிப்பிடப் பட்டுள்ளது. கி.பி 1,000 ஆண்டுகளில் சீன அரசின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள், தங்களின் பேரரசரிடம் நிற்கும் முன், வாயில் ஏலத்தின் விதையை போட்டுமெல்ல வேண்டுமாம். ஏனெனில், சொர்க்கத்தின் மகன்களின் முன்னே மணம் பரப்பும் வாசனை காற்றை அவர்கள் விட வேண்டுமாம். இது எப்படி இருக்கு,? ஒண்ணுமில்லேப்பா.! அதிகாரியின், வாய் நாறாமல் இருப்பதற்குத்தான் இந்த படாடோபமான ஏற்பாடெல்லாம்..!வாய் நாறினால் பின் எப்படி பேச...! அதான் இது.
நாங்க..இஞ்சி..குடும்பம்தாங்க..!
ஏலக்காய் இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. இது வருடம் முழுவதும் காய்க்ககூடியது. வேர்ப்பகுதியில்தான் இதன் பூவும், காயும் காணப்படும். பொதுவாக இது வெப்ப நாடுகளின் நறுமணப் பொருளாக இருந்தாலும், இதற்கு, ஏராளமான மழையும், 22 டிகிரி வெப்பமும் தேவை. அடர்வான மரங்களின் நிழலிலேய இதனை வளர்க்க முடியும்.ஏல செடி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 8 , 000-15 , 000 மீ உயரத்திலேயே ஈரப்பாங்கான பகுதிகளில் வளரும் பயிரிட்டு 4 ஆண்டுகள் ஆன செடிதான் காய்க்கும்.சுமார் 20 காய்கள் வந்த பின் இதனைப் பறித்து சூரிய வெப்பத்தில் உலர வைப்பர்.காய்கள் அழகான இளம்பச்சை நிறத்தில் இருக்கும். நன்கு முதிர்ந்த காயில் 10 -20 விதைகள். காணப்படும்.இவை கருப்பாகவும் பிசுக்குத் தன்மையுடனும் இருக்கும். நல்ல தரமான விதைகள் நல்ல கருப்பாக இருக்கும். இன்று ஏலம் இந்தியா தவிர, இலங்கை, தாய்லாந்து, மத்திய அமெரிககா,தமிழ் நாடு மற்றும் கர்நாடகத்திலும் பயிரிடப் படுகிறது. ஆனாலும்கூட, இந்திய ஏலம்தான் இதன் ,மணம், தரம், அளவு, எண்ணெய் மற்றும் நிறத்துக்காக உலக சந்தையில் பெயர் பெற்றுள்ளது. மேலும் உலகின் 90 % ஏலம் இந்தியாவிலிருந்தே ஏற்றுமதியாகிறது. அந்நிய செலாவணியைத் தரும் மிக முக்கியமான் பொருள்
அரேபியரின்.. உபசரிப்பு.. ஏலத்தின்,, மதிப்பு...!
ஏலக்காய். கிழக்கிந்தியர்கள், ஸ்காண்டிநேவியர்கள் , அரேபியர்கள், மற்றும் மத்திய ஆப்பிரிக்கர்கள் தான் ஏலக்காயை அடிக்கடி தங்களின் உணவில் பயன்படுத்து கின்றனர். அரேபியர்களின் காபியில் ஏலத்தின் மணம் கட்டாயம் அருமையாய் இருக்கும். அவர்களின் காபியில் ஏலப் பொடியோ முழு விதையோ நிச்சயமாய் இருக்கும். , ஏனெனில், அவர்கள், விருந்தினரின் முன், ஏலவிதையை, காபி கொடுக்கு முன் காண்பிப்பதை பாரம்பரிய வழக்கமாகவும், அவர்களுக்கு தரும் உயர்ந்த பட்ச மரியாதை என்றும் கருதுகின்றனர்.அரேபியர்கள் மாமிசத்திலும் , அரிசி சோற்றிலும் ஏலம் போடுவார். இன்றும் கூட சில முகமதியர்கள் வீட்டில் சாதம் சமைக்கும் பொது ஏல அரிசியும் கலந்து போடுவார்கள். இந்திய உணவில் ஏலம் கலப்பது சாதாரணமான ஒன்று. புலவு, மசாலா, ஆட்டுக் கறி பாயசம், அல்வா, குலாப் ஜாமூன் மற்றும் பிற இனிப்பில் ஏலத்தின் வாசனை தூள் கிளப்பும்
மருத்துவ ..குணம் கொண்ட.. ஏலக்காய்...!
ஏலம் பல வகைகளில் தனிச் சிறப்பு வாய்ந்தது. இதில் அற்புதமான உணவு மதிப்பு கொண்டது. இதில் மிகக் குறைந்த கொழுப்பும், அதிக புரதமும், முக்கிய வைட்டமின்களாகிய A ,B& C உள்ளன. 10% ஆவியாகக்கூடிய எண்ணெய் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளான, அரேபியா,துருக்கி போன்றவைதான் உலகின் அதிகமான ஏலம் உட்கொள்பவர்கள். வடஇந்திய கிராமிய பாடல்களிலும் கூட, வெற்றிலை பாக்கில் ஏலம் கலப்பது பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. ஏலம், குடல், சிறுநீர், நரம்பு மற்றும் இனப்பெருக்க உறுப்பு தொடர்பான நோய்களை நிவாரணம் செய்யுமாம்,
!தங்கத்தில்.. குளித்த.. ஏலக்காய்...!.
கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலும், தைத்திரிய சம்ஹிதாவிலும் திருவிழா காலத்திலும், சடங்குகளிலும் ஏலம் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. அதைவிட ஒரு சுவாரசியமான தகவல். இந்தியர்கள், தங்களின் விருந்தினர்களுக்கு மிகுந்த மரியாதை செய்வதற்காக, ஏலக்காயை தங்கத்தில் முக்கி எடுத்து அதனை, இனிப்பின் மீது வைத்து பரிமாறுவார்களாம். 1801 ல் இந்தியாவிலிருந்து, கிழக்கிந்திய கம்பெனியால் , இங்கிலாந்துக்கு எடுத்து செல்லப் பட்ட தங்கத தகடு போர்த்திக் கொண்ட ஏலக்காய்கள் இவை. இவற்றை இந்தியா அருங்காட்சியம் என்ற பெயரில் இந்தியா இயற்கைப் பொருள்களை இங்கிலாந்தில் . வைத்திருந்தனர். . 1879 , ல் அங்கிருந்த அருங்காட்சியகம் மூடப்பட்டதால், அதனை லண்டன் அருங்காட்சியகத்துக்கும், ராயல் தாவர தோட்டத்திற்கும் மாற்றப்பட்டது. பின்னர், இவை தென் ஆசியா கடந்து, சீனா தாண்டி உலகம்
முழுமைக்கும் விரவிக் கிடக்கிறது. எம் சொத்து கொள்ளை கொண்டு போகவோ என்று நாம் அலறவேண்டிய்துதான். வேறென்ன செய்ய?

ஏலச் செடியின் பூவும் காயும்
அடித் தண்டில் பூவும், காய்களும்.
பழங்கால புத்தகத்தில் ஏலம் பற்றிய சமையல் குறிப்பு
தங்கத்தில் குளித்த இந்திய ஏலக்காய்
கொத்து கொத்தாய் ஏலக்காய்

முதல் இந்திய வீரப் பெண்மணி, வேலு நாச்சியார்.

.. நமது இந்திய நாடு, ஒருகாலத்தில், ஆங்கிலேயர்களிடம் , சுமார் 300 ஆண்டுகள் சிறைப்பட்டு கிடந்தது. நம் நாட்டை அவர்களின் பிடியிலிருந்து மீட்டு எடுக்க, இந்தியா முழுவதிலும் இருந்து நம் முன்னோகள் நீண்ட நெடிய போராட்டங்கள் நடத்தி இருக்கின்றனர். அவர்களின் போராட்டம், அன்றைய வாழ்நிலை, அவர்களின் மனநிலை , அவர்கள் மீது நடத்தப் பட்ட ஒடுக்குமுறை பற்றி நமக்கு எழுதப்பட்ட வரலாறு மூலமே அறிகிறோம்.அவற்றைப் பற்றிய முழுமையான சரித்திரம் நமக்கு கிடைக்க வில்லை.என்றே நாம் கொள்ள வேண்டும். ஆனால் அந்த வரலாறு, போராட்ட உணர்வுள்ள இந்தியரால் எழுதப் பட்டதா,?அல்லது, அன்று ஆங்கிலேயருக்கு, கால் பிடித்த மக்களே இதனை எழுதினார்களா? நமக்கு இது பற்றியை சரியான தகவல் இல்லை.

நமது முதல் சுதந்திரப் போரை சிப்பாய் கலகம் என்றே. 1970 கள் வரை நமது பள்ளி பாட புத்தகங்கள் சித்தரித்தன. நாமும் அப்படியே எண்ண/நினைக்க பழகி விட்டோம். நம் மக்களுக்குத்தான் எந்த தகவலும், வெள்ளை காகிதத்தில், கருப்பு எழுத்தில் வந்துவிட்டாலே உண்மை என்று நம்பும் மனநிலையில் உள்ளோமே. ! அதனை கேள்வி கேட்டு உண்மை நிலை அறியும் பக்குவம் கூட நம்மிடம் இல்லை என்பது வேதனையான உண்மையும் கூட. அந்த நிலைதான் நீண்ட கால இந்திய கல்வி நிலையாக இருந்தது.பின்னரே, அது முதல் சுதந்திரப் போர் என்று எழுதும் சொரணை வந்தது.

இன்று எழுதப்பட்டுள்ள சரித்திரத்தில், சுதந்திரத்தில் ஈடுபட்ட அனைவரின் பெயர்களுமா பதிவு செய்யப்பட்டுள்ளன . இல்லையே.. ஏராளமான பெயர்கள் விடுபட்டு இருக்கலாம். எழுதுபவர் அவரவர் விருப்பு வெறுப்புக்கு ஏற்பதத்தானே எழுதுவார்கள்,அதன்படியேதான் இதுவும் இருக்கும். நம் இந்திய வரலாற்று சரித்திரத்தில் , சுதந்திரத்துக்காக போரிட்ட தமிழக வீரர்களின் பெயர்கள் மிகக் குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன. மறக்கப் பட்ட , மறைக்கப்பட்ட பெயர்கள், ஏராளமே. அதிலும் பெண்களின் பெயர்கள் என்றால்,பொறாமையாலும் கூட சில சமயம் பதிவிலிருந்து விடுபட்டுப் போகிறது. வீரபாண்டிய கட்ட பொம்மனைத் தெரிந்த அளவு, எத்தனை பேருக்கு மருது சகோதரர்களைத் தெரியும். ஒருக்கால் 60௦ களில் வந்த சிவகங்கை சீமை படம் பார்த்திருந்தால் சிலருக்கு, அந்த காலத்து ஆசாமிகளுக்கு, மருது சகோதரர்கள் ஞாபகம் வரும். அவ்வளவே. அதிலும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால் நம்ம சிவாஜியின் முகம்தான் தமிழக மக்களுக்கு, நினைவில் நிற்கிறது. நிஜ வீரபாண்டியனை , நம் யாருக்கும் தெரியாது.

எல்லோருக்கும் விடுதலைக்காக போரிட்டு வீரமரணம் அடைந்த வடநாட்டு ஜான்சிராணியை தெரியும். ஆனால் அவருக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே,அந்நியருடன் போரிட்ட வேலுநாச்சியார் பற்றி மிக குறைவான தமிழக மக்களுக்கே தெரியும்.இவர் சிவகங்கையை ஆட்சி புரிந்தவர். தனது துணைவரான, முத்து வடுகத்தேவரை விட, மதி நுட்பமும், ஆளுகைத்திறனும், போர்த்திறனும் பெற்றவர்.உங்களுக்குத் தெரியுமா.? திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகம் இவரின் பெயராலேயே , வேலுநாச்சியார் வளாகம் என்று அழைக்கப் படுகிறது.

சிவகங்கை மாவட்டம், தமிழ் நாட்டில் தென்பகுதியில் உள்ளது. இதன் மக்கள்தொகை. 40,129 .இதில் ஆண்,பெண் விகிதம்,49 :51 ,இது இந்திய விகிதத்தைவிட, பெண்கள் அதிகம்.அதே போல இது தமிழகத்தில் பொருளாதாரத்தில், தொழில் வளர்ச்சியில், வளத்தில்,நீர்வளத்தில் பின்தங்கிய மாவட்டமாக இருந்தாலும், கல்வி அறிவு அதிகம். இந்திய சராசரியை விட அதிகம். இந்தியாவின் கல்வியறிவு, 59.5%. சிவகங்கையில் கல்வியறிவு, 72 .18 %.அதில் ஆண்கள்,83 .14 %, பெண்கள், 61 .74 %. 1992 களில் இங்கு அறிவொளி இயக்கம் நடந்தது, அப்போதுஆட்சியர் திருமிகு, குத்சியா காந்தி இருந்தார் . அவருடைய ஒத்துழைப்பாலும் , தமிழ் நாடு அறிவியல் இயக்க தொண்டர்களாலும் , அவருடன் ஈடுபட்டு உழைத்து, கல்வியை மேம்படுத்திய, தொண்டர்கள், கருத்தாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களையே இந்த பெருமை சேரும். நானும் இங்கே கருத்தாளராக பணி புரிந்தேன். குத்சியா காந்தி என்னை, இங்கு மாவட்ட ஒருங்கிணைப் பாளராக இருக்க அழைத்தார்.என்னால் பழனியை விட்டு வரமுடியாததால்,அவ்வப்போது வந்து செயல்பட்டேன்.தமிழகம் முழுவதும், தமிழ் நாடு அறிவியல் இயக்க நண்பர்கள், அறிவொளி இயக்கத்தில் இருந்தோம். எங்கள் அனைவரின் வாழ்விலும், மறக்க முடியாத , இனிய, சந்தோஷமாய் கஷ்டப்பட்ட , மக்களோடு மக்களாய் வாழ்ந்த, பழகிய, பாடிய, நடித்த,உண்ட, உறங்கிய, தினங்கள் அவை. பின் நான் திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப் பாளராக பணி புரிந்தேன்.

ராஜா முத்து வடுக நாதர்,சிவகங்கை மண்ணின் இரண்டாவது ராஜா.. ,நாச்சிமுத்து என்ற, ரகுநாத சேதுபதி மற்றும் , சக்கந்திமுத்தாத்தாள் நாச்சியாரின் மகள் வேலு நாச்சியார். , வேலு நாச்சியார், ராஜா முத்து வடுக நாதரின் மனைவியாக, 1746 ல் அவரின் கரம் பிடித்தார். பின் சிவகங்கையின் ராணி,யானார். , இவர்தான் ராஜா முத்துவடுகநாதனுக்கு, நண்பர், மதி மந்திரி, தத்துவ ஆசான், அரசை வழி நடத்த உதவும் ராஜ தந்திரி மற்றும் குருவாகவும் , இருந்தார். வேலு நாச்சியார், மிகச் சிறந்த போர்ப் பயிற்சி பெற்றவர். அது மட்டுமல்ல 7 மொழிகள் கற்றறிந்தவர். காளையார் கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த ராஜா முத்து வடுகனாதரை, 1772 , ஜூன்25 ம் நாள்,கள்ளத்தனமாக சுட வந்தனர். ஆனால் அவர், வெள்ளையருடன் வீரம் செறிந்த போர் செய்து, 100௦௦ வீரர்களுடன் வீர மரணம் அடைந்தார். வேலு நாச்சியாரின், வீரத்தனமான போர்ச் செயல்கள், வரலாற்று ஆசிரியர்களால் பேசப் படுகின்றன.பாராட்டபடுகின்றன. .

வேலு நாச்சியார், கணவர் இறந்த பின், படை பலத்தை அதிகரிக்கவும், வெள்ளையரிடமிருந்து தப்பிக்கவும்,முடிவு செய்தார். அதற்காக, அவரும், அவரது செ ல்ல மகள் வெள்ளை நாச்சியார் , மந்திரி தாண்டவராயப் பிள்ளை, வெள்ளை மருது மற்றும் சின்ன மருதுடன், மைசூர் மன்னர் திப்பு சுல்தானை, திண்டுக்கல்லில் சந்தித்தார். அவரது உதவிடன், விருப்பாட்சியில்,இரண்டு ஆண்டுகள், தங்கி, தன ஆட்களுடன்,படை திரட்டி தன நாட்டை மீட்டு எடுக்க ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார்.இடையில் தாண்டவராயப்பிள்ளை மரணமடைந்தார். பின் நாடு நோக்கி தானே, படைத்தளபதியாய் இருந்து படை நடத்தி சென்றார். வரும் வழியில் வெள்ளைப் படை மதுரை கோச்சடையில் வேலு நாச்சியாரை எதிர்த்தது. அங்கே, ஆற்காடு நவாபின் உதவியுடன், வெள்ளைப் பறங்கியர் படையை ஓட ஓட விரட்டி அடித்தார். ராணி வேலு நாச்சியார் முப்படைகள் வைத்திருந்தார் . அதில் ஒன்றான திருப்பத்தூர் படைக்கு நல்லி அம்பலத்தையும், காளையார் கோவில் படைக்கு மருது சகோதரர்களை பொறுப்பாக நியமித்தார் . சிவகங்கை படைக்கு தானே தலைமை ஏற்றுநடத்தி சென்றார். வேலு நாச்சியார், தனது தோழி குயிலியின் துணையுடன், அந்நியக் கம்பெனியின் வெள்ளை படைகளின் வெடிமருந்து கிடங்குகளை அழித்தும், வெறித்தனமாகவும், வீர சாகசமாகவும், போரிட்டு அவர்களை வெற்றி கொண்டார். தனது கணவனுக்காகவும் , தன மக்களுக்காகவும் போட்ட சபதத்தை,l நிறைவேற்றி ,வெற்றி பெற்றார். பின்னர், சின்ன மருதை அமைச்சராகவும், பெரிய வெள்ளை மருதை தளபதியாகவும் கொண்டு , 1780 ல் சிவகங்கையின் ராணி ஆனார். பின் கொஞ்ச காலம் கழித்து மருது சகோதரர்களிடம், ஆட்சி பொறுப்பை கொடுத்தார். பின் நோயுற்றார். அதற்கு பின் இயற்கை எய்தினார். எந்த ஆண்டு என சரியாகத் தெரிய வில்லை.1790 ஆக இருக்கலாம் என்று கருதப் படுகிறது..

வெள்ளையர்களை விரட்ட வீரவாள் ஏந்தி போரிட்ட முதல் இந்திய பெண்மணி வேலு நாச்சியார்தான். ஜான்சிராணி லட்சுமிபாய் இவருக்குப் பின் 100௦௦ ஆண்டுகள் கழித்தே களத்ததுக்கு வந்தவர். வேலு நாச்சியார் விருப்பாட்சி காடுகளில் தங்கியே தன படை வீரகளுக்கு பயிற்சி அளித்தார். இவர், சிவகங்கையிலிருந்து, சுரங்கப்

பாதை வழியாகவே ,விருப்பாட்சி வந்ததாக சொல்லப் படுகிறது..இங்குவிருப்பாட்சியில் தங்கி சுதந்திரத்திற்காக போரிட்ட வேலு நாச்சியாரை . மரியாதை செய்வதற்காகவே, திண்டுக்கல் மாவாட்ட ஆட்சியர் வழக்கத்திற்கு, அவரின் பெயர் சூட்டப் பட்டுள்ளதுஇவரது பெயர் கோதை அழகி வேலு நாச்சியார் என்றும் சொல்லப் படுகிறதே..மேலும், வேலு நாச்சியாரின் தாய் நாட்டுப் பற்றை கௌரவப் படுத்த இந்திய அஞ்சல் துறை, இவரின் நினைவாக, 2008 டிசம்பர் 31 ம் நாள் ஒரு அஞ்சல் தலை, வேலு நாச்சியாரின் உருவப் படத்துடன் வெளியிட்டு , இந்திய நாட்டின் நன்றிககடனை, அந்த வீரப் பெண்மணிக்கு ஈந்தனர். இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக போரிட்டதில் தமிழக வீரர்களும், பெண்களும் கூட சளைத்தவர்கள் அல்ல என்ற நிரூபணத்தின் சாட்சியம் இதோ.. !.