Friday, May 18, 2012

பெட்ராண்ட் ஆர்தர் வில்லியம் ரஸ்ஸல் Bertrand Arthur William Russell, 3rd Earl Russell, OM, FRS[1] (18 May 1872 – 2 February 1970


பெட்ராண்ட் ஆர்தர் வில்லியம் ரஸ்ஸல் Bertrand Arthur William Russell, 3rd Earl Russell, OM, FRS[1] (18 May 1872 – 2 February 1970

by Mohana Somasundram on Friday, May 18, 2012 at 11:53pm 
பெட்ராண்ட்  ஆர்தர் வில்லியம் ரஸ்ஸல் என்ற முன்றாவது ஏர்ல் ரஸ்ஸல் என்ற தத்துவஞானி, உலக முற்போக்காளர் பிறந்த தினம் இன்று. பெட்ராண்ட்  ரஸ்ஸல் சுதந்திர முற்போக்கு கருத்து கொண்ட பிரிட்டிஷ் உயர்குடும்பத்தில், வேல்சுக்கு அருகிலுள்ள ரேவேன்ஸ்க்ரோப்ட் (Ravenscroft) என்ற இடத்தில் , 1872 , மே 18 ம் நாள்(18 May 1872 – 2 February 1970) பிறந்தார். அவரது தாத்தாவிண் பெயர் ஜான் ரஸ்ஸல். அவர்தாள் முதல் ரஸ்ஸல் என்றும் சொல்லப்படுகிறார். அவர் குடும்பம் விக்டோரியா மகாராணிக்கு,1840 -1860 களில்  முதன் மந்திரியாகப் பணி புரிந்திருந்தனர். ரஸ்ஸலின் தந்தை பெயரும் ஜான் ரஸ்ஸலதான். பெட் ராண்ட் ரஸ்ஸல் மிகச் சிறந்த தத்துவஞானி, யாரும் பேசி மீள முடியாத தர்க்கவியலாளர், பெரிய கணிதவியலாளர், போற்றுதலுக்குரிய வரலாற்றாளர், அதைவிட, அவர் ஒரு சமூக சீர்த்திருத்த வாதியும், சமூக விமர்சகரும் ஆவார். ரஸ்ஸல் பல இடங்களில்,பல சந்தர்ப்பங்களில், தான் ஒரு முற்போக்கு சிந்தனையாளர், சமூகவியலாளர், மக்கள் சிந்தனையாளர், பொருள் ஈட்டுவதற்கு எதிராவர் என்றெல்லாம் போற்றப் பப்டுகிறார். ரஸ்ஸல்
கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர். அவர் கிறித்துவக் குடும்பத்தில் பிறந்தாலும், நான்
 கிறித்தவனல்ல      என்றே  வெளிப்படையாகக் கூறித் திரிந்திருக்கிறார். பிரிடிஷ்காரர்களின் கருத்துக் கொள்கைக்கு எதிராக புரட்சி நடத்தியர் ரஸ்ஸல்.   20 ம் நூற்றாண்டின் சிறந்த புத்தகம் என்று கூறப்படும், அனலிடிவல் தத்துவம் என்ற நூலை, ,ரஸ்ஸல் , கெட்டியாப் ப்ரேஜே (Gottlob Frege)மற்றும் நண்பன் லுட்விக்விட் ஜென்ச்டேன் (Ludwig Wittgenstein,)போன்றோர் இணைந்தது எழுதினர். லுட்விக் ௨௦ ம் நூற்றாண்டின் சிறந்த முதன்மை தர்க்கவாதிகளுள் ஒருவர். ரஸ்ஸல், ஒயிட்ஹெட் என்பருடன் இணையாசிரியராக இணைந்து, கணிதத்தின் அடிப்படை மற்றும் தர்க்க முரண்களைப் பேசும் முதன்மை புத்த்கம் (Principia Mathematica) எழுதினார்.  ரஸ்ஸலின் ஆன் டினோட்டிங் ("On Denoting")  என்ற கட்டுரை எழுதினார். பின்  தத்துவங்களின்  பாரடைம் ("paradigm of philosophy."[) வாய்பாடு எனப்படும் கடுமையான சிக்கல் நிறைந்த கட்டுரையை எழுதினார். ரஸ்ஸலின் கட்டுரைகள், பணிகள் அனைத்தும் தர்க்கம்,கணிதம், செட் தியரி (set theory), மொழியியல் , கணினியியல் மற்றும் தத்துவம் என்று பன்முகத்தன்மை வாய்ந்தவை. தத்துவ மொழியில் தலை சிறந்த மேதை ரஸ்ஸல். அதிலும் முக்கியமாக அறிவாதார முறை இயலிலும்(epistemology), மேலும் பொருண்மை சாரா இயற்பிளிலும் விற்பன்னர். 
ரஸ்ஸல் பலரும் அறிந்த போருக்கு எதிராக கொள்கை உடைய ஆர்வலர். அவர் சுதந்திர வர்த்தகம், அரசுக்கு எதிரான கொள்கை உடையவர். இதற்காக ரஸ்ஸல் முதல் உலகப் போரின்போது சிறை சென்றவர். பின் யாருக்கும் பயப்படாமல், சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர், பின் ஸ்டானினின் தலிடரியக் கொள்கைகளையும் தீவிரமாக விமரிசித்தார். அமெரிக்கா அதிகார வெறியுடன்,அநியாயமாய் வியட்நாம் மேல் தொடுத்த போரை எதிர்த்தார். பின் அணுஆயுதக் கோள்களுக்கு எதிராக வெளிப்படையாக எதிர்ப் பிரச்சாரம் செய்தவர். திறமையான மொழிப் பேச்சாளர். மதத்தைத் தாக்கிப் பேசுவதில் அவருக்கு ஈடுபாடு அதிகம். இவர் காரல் மார்க்ஸ், சிக்மண்ட் பிராய்ட் மற்றும் பிரடெரிக் நியட்ச்சிஹி ( Friedrich Nietzsche)வுக்கு இணையாகப் பேசப்படுகிறார்.கடவுள் மறுப்புக் கொள்கையை தீவிராமாகப் பிரச்சாரம் செய்தவர். இத்தனை முரண்பாடுகளை அந்த காலக் கட்டத்தில் வாழ்ந்த மதவாதிகள், கடவுள் கொள்கையாளர்கள், ஆத்திகவாதிகள்,அனைவரிடமும் தன்னிடமுள்ள சரியாக சாதனங்களை, கருத்துக் கருவிகளைக் கொண்டே மோதினார்.
இருப்பினும் அவரது திறமை,சமயோசித அறிவு,தர்க்கவியல் மற்றும் கணித தத்துவம் இவற்றை எல்லாம் யாராலும் வெல்ல முடியவில்லை  கிறிஸ்தவத்திற்கு அறிவுலகம் விடுத்த சவால்கள்”என்ற தலைப்பில் ரஸ்ஸல் ஏராளமான கருத்துக்களை , சிந்தனைகளை மக்களிடம் விதைத்திருக்கிறார். நான் ஏன் கிரித்துவநல்ல என்ற புத்தகத்தையும் அப்போதே எழுத்தினாலும் கூட, அவரின் திறமையும் கருத்துச் செறிவும், சிந்தனையாற்றலும்      அவருக்கு  . இலக்கியத்தில் நோபல் பரிசு பெற வழி கோலின. ஆம், ௧௯௫௦ ம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு பெற்றவர் பெற்றன்ட் ரஸ்ஸல்.
outline of Philosophy என்ற நூலில் ரஸ்ஸல் எழுதியதை தங்களுக்கு நினைவு கூறுகிறேன். 
"Philosophy arises from an unusually obstinate attempt to arrive at realknowledge. Where passed for knowledge in ordinary life suffers from three defects: it is cocksure, vague and self-contradictory. The first step towards philosophy consists in becoming aware of these defects, not in order to rest content with lazy sceptisim, but in order to substitute an amended kind of knowledge which shall be tentative, precise and self-consistent. There is of course another quality which we wish our knowledge to posses namely comprehensiveness; we wish the area of our knowledge to be wide as possible ".
ரஸ்ஸலிடம் ஏராளமான மனிதத் தன்மை இருந்தது. சுதந்திர சிந்தனையை எப்போதும் கையில் வைத்திருந்தவர் ரஸ்ஸல். 
ரஸ்ஸல் தன் சுயசரிதையை மூன்று பாகமாக ௧௯௬௭, ௬௮ & ௬௯ களில் வெளியிட்டார். பின்னர் 1969 ல் நவம்பர் ௩ ம் நாள்  டைம் பத்திரிக்கைக்கு . செக்கோஸ்லோவாக்கிய மீது நடத்தபடும் செயல்கலஊக்காக இது ரொம்பவும் அநியாயம் என்று எழுதினார். அந்த ஆண்டே ரஸ்ஸல் ஐ.நா சபையில் நிர்வாகிள் யூ தான்ட்டக்கு சர்வதேச போரின் குற்றங்கள் தொடர்பாக ஒரு கமிஷன் அவற்றை ஆராய வேண்டும் என்றும், அதி நடைபெற்ற போரில்  தெற்கு வியட்நாமுக்கு எதிராக அமெரிக்க தொடுத்த  மனித உரிமை மீறலும், இணக்கொலைகளையும், சித்திரவதைகளையும் எதிர்த்து குரல் கொடுத்தார்.  
1955 ல் ரஸ்ஸலும்,ஐன்ஸ்டீனும் இணைந்து  ஒரு கூட்டறிக்கையைத் (The 1955 Russell–Einstein Manifesto )   தயாரித்தனர். 1970 ல் அவரின் கடைசி அரசியல் அறிக்கை அவர் இறந்த மறுநாள் பிரவரி 3 ம் நாள் கெய்ரோவில் வாசிக்கப்பட்டது. அவர் எழுதி வைத்த உயிலின்படி, அவர் இறந்த பின் எந்தவித மதச் சடங்கும் பின்பற்றப்படவில்லை. அவரின் சாம்பல் மலை மேலிருந்து  தூவப்பட்டது. 
அவரின் பொன் மொழிகள்:
 • Mathematics, rightly viewed, possesses not only truth, but supreme beauty — a beauty cold and austere, like that of sculpture, without appeal to any part of our weaker nature, without the gorgeous trappings of painting or music, yet sublimely pure, and capable of a stern perfection such as only the greatest art can show. 
 • A stupid man's report of what a clever man says can never be accurate, because he unconsciously translates what he hears into something he can understand .Bertrand Russell
 • Civilized life has altogether grown too tame, and, if it is to be stable, it must provide a harmless outlets for the impulses which our remote ancestors satisfied in hunting.
 Do not fear to be eccentric in opinion, for every opinion now accepted was once eccentric.
 • Government can easily exist without laws, but law cannot exist without government.
 • If a man is offered a fact which goes against his instincts, he will scrutinize it closely, and unless the evidence is overwhelming, he will refuse to believe it. If, on the other hand, he is offered something which affords a reason for acting in accordance to his instincts, he will accept it even on the slightest evidence. The origin of myths is explained in this way.
 • The main things which seem to me important on their own account, and not merely as means to other things, are knowledge, art, instinctive happiness, and relations of friendship or affection.
 • The greatest challenge to any thinker is stating the problem in a way that will allow a solution.
 • So far as I can remember, there is not one word in the Gospels in praise of intelligence.
 • Science may set limits to knowledge, but should not set limits to imagination.
 • Awareness of universals is called conceiving, and a universal of which we are aware is called a concept.
 • Conventional people are roused to fury by departure from convention, largely because they regard such departure as a criticism of themselves.சரித்திரமான உலக நாயகன் சாப்ளின்..பிறந்த தினம்..ஏப்ரல்..16..!


சரித்திரமான உலக நாயகன் சாப்ளின்..பிறந்த தினம்..ஏப்ரல்..16..!

by Mohana Somasundram on Monday, April 16, 2012 at 11:58pm ·
சரித்திரமான உலக நாயகன் சாப்ளின்..பிறந்த தினம்..ஏப்ரல்..16..!


மௌனப்படத்தின் உலக நாயகன் சார்லி சாப்ளின்தான் . சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற ப்ன்முகத்தன்மை உள்ளவர் சாப்ளின். உலகம் முழுவதும் அறிந்த மிகவும் பிரபலமான ஒரு நகைச் சுவை நடிகர் சார்லி சாப்ளின். அதுமட்டுமல்ல, உலக்மக்களின் விருப்பமான மிகப் பெரிய நடிகர் சாப்ளின். இன்று சாப்ளினின் 123வது பிறந்த தினம். இவரின் திரைப்படத்தைப் பார்க்கும் விபரம் அறியாக் குழந்தைகள் கூட சிரித்து குதூகலிக்கும்.அத்தனை நகைச் சுவை உணர்வுடன், கோமாளியாக திரையில் வந்து ,உடல் மொழியுடன், மக்களுடன் உறவாடிய திறமைசாலி சாப்ளின். இவரது காலத்தில் பேசாத மவுனப் படங்களே பிரபலமக இருந்தன.
   முதல் உலகப் போருக்கு முன், உலகை கலக்கிய திரைப்பட நடிகர்களில் ஒருவர் சாப்ளின். ஹாலிவுட் திரைப்படங்களில் கலக்கிய நகைச்சுவை நடிகர் சாப்ளின் மட்டுமே. மௌனப்படத்தின் முக்கிய அடையாளமும், கதாநாயகனும், லிட்டில் ட்ராம்ப் என்று அனைவராலும் அழைக்கப்படும் சாப்ளின், அதனையே தனது நிரந்தர அடையாளம் ஆக்கினார். பல்விளாக்கி போன்ற மீசையும், கோமாளித்தொப்பியும், ஒரு வளைந்த மூங்கில் குச்சியும், வளைந்த கோணங்கித்தனமான நடையும் கொண்ட உருவத்தை யாராலும் மறக்க முடியாது. இதுவே சாப்ளினின் நிரந்தர அடையாளம் ஆனது.அவரது அடையாளங்களான் தொப்பி, குச்சி போன்றவை, அவரது இறப்புக்குப் பின்(டிசம்பர்,11, 1987க்குப் பின்). ஏலத்திற்கு வந்தது. அதன் தொகை எவ்வளவு தெரியுமா? 82,500 பவுண்டுகள். அது 151 டாலருக்குச் சமம்.( $151,246).
    இருபதாம் நூற்றாண்டில் மக்களிடையே மிக்ப்பெரிய பாதிப்பு ஏற்படுத்திய ஒரே நடிகர் சாப்ளின் மட்டுமே, அவரது படங்கள் மூலமாக, அவரது எழுத்துக்கள் வழியே. அவரின் இயக்கத்தின் மூலம், சிலசமயம் இம்மூன்றிலும் ஒரு சமயத்தில் என அனைவரையும் மாற்றியவர் சாப்ளின்.அவர் எதற்கும் பயந்தவர் அல்ல. 1922ல் வெளியான படத்தின் மூலம்தான் சார்லி, அனைவராலும் சாப்ளின் என்று அழைக்கப்ப்டுகிறார்.

தனது 8 வது வயதிலேயே, திரைப்பட வாழ்க்கையைத் துவங்கியவ்ர் சாப்ளின். உலக் நடிகர்களிலேயே மிக முக்கியமானவர் சார்லி சாப்ளின் . இவர் ஒரு சமூக சிந்தனையாளார் . சாப்ளினும், சமூக சிந்தனையாளார் மேக் ஈஸ்ட்மெனும்.சுமார் 85 படங்களில் சாப்ளின் நடித்துள்ளார்.
மகாத்மா காந்தியுடன் சாப்ளின்
சார்லி சாப்ளினின் இயற்பெயர்,சர் சார்லஸ் ஸ்பென்சர் சார்லி சாப்ளின் ( Sir Charles Spencer "Charlie" Chaplin ) என்பதாகும்.சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் பிறப்பதற்கு 4 நாட்கள் முன்னர்தான், 1889 , ,ஏப்ரல் 16 ம் நாள் லண்டனின் ஏழை மாகாணமான வால்வொர்த்தின், கிழக்குத் தெருவில் சாப்ளின் பிறந்தார்.இவரின் வாழ்க்கை காமிராவுக்கு முன்னால் மட்டுமல்ல பின்னாலும் கூட சுவை நிறைந்ததாகve இருந்தது. சாப்ளினின் தந்தை சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் (Charles Spencer Chaplin ) ஒரு பாடகர். தாய் ஹன்னாவும் ஒரு மேடை நடிகையும் பாடகரும் கூட. தாய் தந்தையிடமிருந்து சங்கீதம் கற்றுக் கொண்டார் சாப்ளின். ஆனால் சாப்ளினின் தாய் அவர்களின் வாழ்வாதாரத்துக்காக மிகவும் கஷ்டப் பட்டவர். சாப்ளினின் தாய் ஒரு முறை மேடையில் பாடிக்கொண்டிருக்கும்போது, குரல் வளம் திடீரென உடைந்து சிக்கலானது. அந்த நேரத்தில் 5 வயதான சாப்ளின் தன் குரலினிமையால் மிகவும் புகழ்பெற்ற ராகத்தைப் பாடி அரங்கத்தை அமைதிப்ப்டுத்தினார். ஆனாலும் கூட சாப்ளினின் முன்னேற்றத்திற்கும், ஆர்வத்துக்கும், வாழ் நிலைக்கும் ஆதாரமாக முக்கிய பங்கு வகித்தவர் தாய் ஹென்னாதான். சாப்ளினின் தாயை சாப்ளினை அவரது வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாக சாப்ளினை உருவாக்கியவர். சாப்ளினின் வெற்றிப் பின்னணியின் மந்திரம் அவரது தாய் ஹென்னாதான். .
சாப்ளினின் தாய், தந்தை இருவரும் இவரின் இள வயதிலேயே பிரிந்துவிட்டனர். சாப்ளிளினுஅவரது மூத்த சகோதரனும் இணைந்து தையல் தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார். ஆனால் அவருக்கு மனநோய் வந்து , சாப்ளினின் 8 வது வயதில் ஹென்னா ஒரு ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டார். சாப்ளின் மற்றும் சகோதரன் சிட்னியும், ஒரு குழந்தை காப்பகத்தில் வளர்ந்தனர். பின்னர் சாப்ளின் தன் குடிகாரத் தந்தையுடனும், அவரது மனைவியுடனும் வாழ்ந்தார்.
சாப்ளின் சிலை
சாப்ளின் 1910 ல்
சாப்ளின் தனது 9 வது வயதிலேயே, அன்றைய நகைச்சுவை நடிகர்களான லாரல் ஹார்டியுடன் மேடையில் தோன்றினர்.சாப்ளினுக்கு 12 வயது ஆகும்போது அவரின் தந்தை இறந்தார். சாப்ளினின் 14 வது வயதில், வாழ்க்கையில் நல்ல துவக்கத்தில் அடி எடுத்து வைத்தார். ஷெர்லாக் ஹோம் என்ற நாடகத்தில் நடித்து பெயரும், பணமும் சம்பாதித்தார். 1912 ல் அமெரிக்க வந்த சாப்ளின் அங்கேயே தங்கி நடிக்கத் துவங்கினார்.அவரின் முதல் படம் 1914 ல் வெளியான கீஸ்டோன் பட ஸ்டூடியோவுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்ததும், அந்த துவக்கம் அவரது வாழ்க்கையில் முக்கிய மைல் கல்லாகவும், திரைப்படத்துறையின் வரலாற்றில் தடம் பதிப்பதாகவும் அமைந்தது. அடுத்த இரண்டு மாதங்களில் Making a Living, Kid Auto Races, Mabel's Strange Predicament, Between Showers, A Film Johnnie, Tango Tangles, His Favourite Pastime, Cruel, Cruel Love என்ற ஏராளமான படங்களில் நடத்தார்.  
      சின்ன நடிகராகவாழ்க்கையைத் துவங்கிய சாப்ளின், மிகவும் பிரபலமான டிராம்ப் (The Tramp ) என்ற பாத்திரத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரகாசிக்கத் துவங்கினார்.உலக நடிகராக வெளிப்பட்டு வெடித்தார்...! அந்தப் பாத்திரத்தின் உடையே சாப்ளினின் உடையாக, குறியீடாக ,அடையாளமாக உலகம் முழுவதும் பிரபல மானது.
சாப்ளின் என்றால், டிராம்ப் உடையும், குல்லாவும், கைத்தடியும், தொள தொள பேண்ட்டும், லூசான ஷூவும் என்றானது. சாப்ளின் மக்களின் மனதில் அந்த உடையுடன்தான், உலவினார்
1925 ம் ஆண்டு ஜூலை 6 ம் நாள், Time என்ற புகழ் பெற்ற ஆங்கிலப் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் முதன் முதல் வெளியிடப்பட்ட நடிகர் சாப்ளின் மட்டும்தான்.
சாப்ளினின் முதல் காதல் ஹெட்டி கெல்லியுடன் (Hetty Kelly )ஏற்பட்டது.பின் தனது 19 வது வயதில் திருமணமும் செய்தார் .பிறகுமில்ரெட் ஹாரிஸ் (Mildred haaris ) என்பரை விரும்பி,மணமுடித்தார்.
சாப்ளினின் மனைவி ஹாரிஸ்
தன் 29 வது வயதில் , 1918 , அக்டோபர் 23 ம் நாள் திருமணமும் செய்து கொண்டார்.அப்போது ஹாரிசுக்கு வயது 16 மட்டுமே..!பின் 35 வயதில்,16 வயது லிடா கிரேயையும், ( Lita Grey), 47 வயதில் 25 வயது பாலெட் கொட்டார்டையும் ( Paulette Goddard),54 வயதில், 17 வயது ஓன்னா நெயிலையும் ( Oona O'Neill (Oona Chaplin)) தொடர்ந்து மாறி, மாறி மணம் முடித்தவர் சாப்ளின்.
சாப்ளின் தனது 25 வது வயதில் 'Twenty Minutes of Love.' என்ற படத்தை இயக்கினார். பின் ஒரு ஸ்டூடியோ வைத்தார்.

1921 ல் வெளியான படம், The Kid (1921) உலகம் முழுவதும் பேசப்பட்டது
.the kid படத்தில்
சர்வாதிகாரி ஹிட்லராக

.
1940 ல் சாப்ளினின் முதல் பேசும்படம் The Great Dictator (1940), வெளிவந்தது. அதில் நாசிசத்தை எதிர்த்து பிரச்சாரம் இருந்தது. ஹிட்லரைப்போல நடித்தார்.சாப்ளினை கம்யூனிஸ்ட்டின் ஆதரவாளஎர் என சந்தேகித்தனர். எனவே ஹாலிவுட்டில் , அவரின் புகழ் குறைந்தது. ஹிட்லராக
இவரின் படம் ஜெர்மனியில் தடை செய்யப் பட்டாலும், ஹிட்லர் அந்த The Great Dictator படத்தை இரு முறை பார்த்தார் . லைம் லைட் (LIME LIGHT ) என்ற படத்திற்கு, 1952 ல் ஆஸ்கார் விருது கிடைத்தது. ஹிட்லர் சாப்ளினை ரொம்பவும் நிந்தித்டாலும், ஹிட்லர்.சாப்ளினின் புகழை நன்கு உணர்ந்தவர். அதனால் அவர் சாப்ளினின் மீசையுடன் மக்களை வசீகரித்தார்.

சாப்ளின் ஒருபாடலாசியரும் கூட. கிட்டத்தட்ட 500 பாடல்களை சாப்ளின் எழுதினார். அவரின் உடல்நலம் 1960 லிருந்து குறையத் துவங்கியது. ஏராளமான பரிசுகள் பெற்றுள்ளார்..சாப்ளின் ஒருபோதும் அமெரிக்கப் பிரஜை ஆகவில்லை.என்வே அவர் 1953 ல் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அந்த காலத்தில் அவர் ஸ்விட்சர்லாந்தில் வாழ்ந்தார்.
சாப்ளினின் கல்லறை , சுவிட்சர்லாந்தில்
    1964 ல் தனது சுயசரிதையை எழுதி வெளியிட்டார். தனது படம் மற்றும் பாடல்களுக்காக ஏராளமான பரிசுகள் பெற்றுள்ளார் சாப்ளின். அவர் கடைசியாக1976 ல் பார்த்த படம் ராக்கி (Rocky).1977 ல் கிறிஸ்துமஸ் தினத்தன்று உயிர் நீத்தார். இறந்த பின்னும் புகழ் பெற்றவர் சாப்ளின். அவரின் இறுதி மூச்சு உறக்கத்திலியே 1977, டிசம்பர் 25 ல் 88 வயதில் நின்று போனது.ஆமாம். சாப்ளின் 1978 ல் இறந்த பின் இரண்டு மாதத்திற்கு மேல் அவரின் உடல் காணாமல் போனது. பின்னர் உடலைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் சிமென்ட் கல்லறையில் புதைத்தனர் .
இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி, 1975 மார்ச் 4 ம் நாள், சாப்ளினின் 86 வது பிறந்த தினத்துக்கு முன்னதாக நைட் என்னும் விருது கொடுத்தார். சாப்ளினுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உக்ரேனியன் வானவியலாளர் ஒருவர் சாப்ளினின் பெயரை ஒரு விண்கல்லுக்கு வைத்துள்ளார். இது செவ்வாய், வியாழன் கோள்ல்களுக்கு இடையில் இருக்கும் விண்கற்கள் வளையத்தில்(asteroid belt) இருக்கிறது. சான் ஃபெர்னாண்டோ பள்ளத்தாக்கில் உள்ள என்சினோ என்ற இடத்தில் சாப்ளின் நினைவாக சாப்ளின் அவென்யூ என்ற புகழ் பெற்ற தெரு ஒன்று இருக்கிறது.

Chaplin in 1920 Birth nameCharles Spencer Chaplin Born16 April 1889
Walworth, London,
United Kingdom Died 25 December 1977 (aged 88)
Vevey, Vaud,
Switzerland MediumFilm, music, mimicry NationalityBritish Years active1895–1976[1] GenresSlapstick, mime, visual comedy InfluencedMilton Berle
Rowan Atkinson
Johnny Depp Spouse Mildred Harris (m. 1918–1921) 1 child
Lita Grey (m. 1924–1927) 2 children
Paulette Goddard (m. 1936–1942)
Oona O'Neill (m. 1943–1977) 8 children

. .


Tuesday, May 15, 2012

உலகின் புதிரான முதல் கொலையும்.. மிகப் பழமையான மனித இரத்தமும். (5300 ஆண்டுகள்.)


உலகின் புதிரான முதல் கொலையும்.. மிகப் பழமையான மனித இரத்தமும். (5300 ஆண்டுகள்.)

by Mohana Somasundram on Tuesday, May 15, 2012 at 11:38pm ·
    அற்புதமான அறிவியல்..!
ஓட்சி கிடைத்த பள்ளத்தாக்கு
இத்தாலிய அருங்காட்சியகத்தில், பனியறையில்
© Wellcome Image Awards
அறிவியல் உலகில்,   அதிரடித் திருப்பு  முனையாக, உலகத்தைத் திருப்பிபோட்ட, பிரமிக்கச் செய்த ஒரு தகவல்  இப்போது   கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது . அது  என்ன   என்று  தெரிந்தால்  நீங்களெல்லாம்  ஆச்சரியத்தில்  மயக்கம்  போட்டு விடுவீர்கள் . உடலிலிருந்து  இரத்தம்  வெளியேறிய, கண நேரத்தில், காற்று அதன் மேல் பட்டவுடன்,இரத்தம் இறுகிக் கெட்டியாகி,  கட்டியாகிவிடும். இதுதான் இரத்தத்தின் இயல்புத் தன்மை.இரகசியமும் கூட.  சிவப்பணுக்களின் ஆயுள் என்பது சுமார்  120 நாட்கள் மட்டுமே. அதற்குள் அவை தன் உருவிழந்து மறைந்து விடும். ஆனால் சுமார் 5,300 ஆண்டுகளுக்கு முன் இறந்த மனிதன் ஒருவனின் உடலிலிருந்து இரத்தம் எடுக்கப்பட்டு, அன்றைய மனித இரத்த செல்களின் தன்மையும் கண்டறியப்பட்டுள்ளது இப்போது .  அறிவியலின் வீச்சை, அதன் அசாத்தியத் திறமையை ,மனித இனத்தை வழி நடத்திச் செல்லும் முன்னேற்றத்தை என்னவென்று சொல்வது? எப்படிப் புகழ?
உலகின் மிகப் பழமையான இரத்தம்.. 5300 ஆண்டுகள் ..!
     
ஓட்சி  என்ற பனி  மனிதனை 1991 ல், இரண்டு மலையேறிகள் ,  ஆஸ்திரிய இத்தாலிய எல்லையில் அமைந்துள்ள  ஆல்பைன் பனியாற்றிலிருந்து கண்டெடுத்தனர்.  தற்போதைய அறிவியல் தகவல் படி, உலகில் அதிக வயதுள்ள நன்றாக இயற்கையான முறையில் பதப்படுத்தப்பட்டுள்ள மனித மம்மி இது மட்டுமே. இதில் பல ஆராய்ச்சிகள் செய்து, இந்த கற்கால மனிதன் ஒரு காயத்தினால் உடனே இறந்திருக்கிறான். அது மட்டுமல்ல, அவனின் இறுதி நிகழ்வு வலியின்றி மௌனமாய் வந்து முடிந்திருக்கிறது என்றும் கண்டறிந்துள்ளனர். இதனைக் கண்டு பிடித்து 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட, இதனைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் முடிந்தபாடில்லை. வளர்ந்து கொண்டே இருக்கும் தொடர்கதைதான். இந்த பனி மனிதனைக் கண்டு பிடிக்கும்போது, அதில் இரத்தம் எதுவும் கண்டுபிடிக்கப்ப்படவில்லை. ஆனால்அப்போது நடத்திய ஆய்வுகள், பனி மனிதன், மிகக் கொடூரமான தாக்குதலுக்குப் பின்னர் மிக வன்மையாகத்   தாக்கப்பட்டு, கொடூரமான  முறையில்  இறந்திருக்கிறான் என்பதே . ஆஸ்திரியாவிலுள்ள  ஆறாவது உயரமான மலை இது. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3 ,210 மீ(10 ,500 அடி ). ஆனால் இதில்  ஜோசப் ராபைனேர் மற்றும் தொயோடோர்   காசெரெர்(Josef Raffeiner and Theodor Kaserer.) இருவரும்,அந்த  மலை மீது ஏறுகின்றனர்.   இதன் மலைச் சரிவில்தான் ஹெல்முட் சைமன் மற்றும் எரிக்கா சைமன் (Helmut Simon and Erika Simon)இருவரும், 1991 ம் ஆண்டு அங்குள்ள பனியாற்றில்  ஒரு மனிதனைக் கண்டுபிடிக்கின்றனர். 
ஓட்சி பனி மனிதன்.. பெயர் சூட்டல்..!

 ஓட்சி என்ற இடத்திலிருந்து அந்த மனிதனைக் கண்டுபிடிக்கப்பட்டதாலும், அவன் பணியில் உறைந்து பதப்படுத்தப் பட்டிருந்ததாலும் "ஓட்சி பனி மனிதன்" என்று செல்லமாய் அழைக்கின்றனர்.     ஆனால் அவன் தாமிர காலத்திற்கு முற்பட்ட ஐரோப்பிய மனிதன் என்றும்  கருதப்படுகிறது. இப்போது அந்தப் பனிமனிதனும், அவனது சொத்துக்களான உடை மற்றும் பொருள்களும்,  இத்தாலியின் தெற்கு டைரோளில் உள்ள, போல்சானோவின்அருங்காட்சியத்தில் (South Tyrol Museum of Archaeology in Bolzano, South Tyrol, Italy.) வைக்கப்பட்டுள்ளது.   20ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்த ஒரு மம்மியிலிருந்து இப்போது இரத்தம் எடுக்கப்பட்டு அதிலுள்ள சிவப்பணுவின் செல் பிரித்தெடுக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளது என்ற தகவல்தான் மிகவும் வியப்பளிக்கும் செய்தி. இந்தப் பனிமனிதன் காயத்திலிருந்து எடுத்த இரத்தம்தான்,.நாம் இதுவரை அறிந்தவற்றில் மிக மிகப் பழமையான இரத்த செல். 
      பனி மனிதன் கிடைத்த காலத்திலிருந்து, கொஞ்சம், கொஞ்சமாக, அவனைப்பற்றி நிறைய  அறிவியல் கருத்தோட்டங்கள் நம்மிடையே உலவி வருகின்றன. ஏனெனில் அவன் உடம்பில் இரண்டு காயங்கள் காணப்படுகின்றன. . அதில் ஒன்று  கூர்மையான ஆயுதம் தாக்கிய தடயம் உள்ளது. 

   இனறைய அறிவியல் ஆராய்ச்சியில்   ஓட்சி ..! 
உலகில் இதுவரை அதிகமாக ஆராயப்பட்ட ஒரு மம்மி உண்டென்றால் அது ஓட்சிதான்.ஒட்சியின் பின்னணியைப் பார்ப்போமா? பனியாற்றில் காயம்பட்டு, இரத்தம் உறைந்த நிலையில் கிடந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்துள்ளனர். அவன் நெடுந்தொலைவு நடந்து வந்து நிலை தடுமாறி விழுந்து இறந்திருக்கிறான். அவன்  பனியாற்றில் உறைந்து போய் கிடந்ததால் பனிமனிதன் என்றே அழைக்க ப்படுகிறான். அவன் பைநேல்ச்பிட்ஸ் மற்றும் சிமிளைன் மலைகளுக்கிடையே (Fineilspitze அண்ட் Similaun)  உள்ள, ஹாச்லாப்ஜூ (Hauslabjoch ) என்னும் இடத்தில் ஓட்சி பள்ளத்தாக்கில் கிடந்திருக்கிறான்  இந்தப் பனி மனிதன். இந்தப் பகுதியில் ஓட்சி பள்ளத்தாக்கின் ஓரங்களை அலங்கரிக்க அடுக்கி வைத்தது போல வரிசையான ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள் காணப்படுகின்றன. அங்கே  ஓட்சி ஆல்ப்ஸ் பள்ளத்தாக்கில் இன்(Inn River) நதியில், பனிப்பாளங்களுக்கிடையே சொருகிக்  கிடந்திருக்கிறான் இந்த மனிதன். இப்பகுதி ஆஸ்த்திரிய , இத்தாலிய எல்லையில் உள்ளது என்பதால்,  இது இரு நாடுகளுக்கும் சொந்தமானது. .  இதுவரை கிடைத்த ஐரோப்பிய மம்மிகளிலேயே இதுதான் நன்கு இயற்கையில் பதப்படுத்தப்பட்ட மனித மம்மியாகும், இந்த பனி மனிதன் சுமார் 
5 ,300 ஆண்டுகளுக்கு முன்னர்  வாழ்ந்திருக்கிறான். 
ஓட்சி  பற்றிய புதிய உண்மைகள்..!

ராயல் சொசைடி இண்டர்பேசில்(Royal Society Interfece) என்ற அறிவியல் பத்திரிகையில்  2012 , மே முதல் நாள்   ஓட்சி பற்றிய புதிய கண்டுபிடிப்புத் தகவல் வந்துள்ளது.அதுதான் ஒட்சியின் இறப்பு பற்றிய தெளிவான கதையை விலாவாரியாக  நம் முன்னே விரித்து வைக்கிறது  .    இந்தப் பனி மனிதன் மிக மிக நன்றாகப் பதப்படுத்தப்பட்டு இருக்கிறான் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். அவனது வயது 46 இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது . அவன் நல்ல ஆரோக்கியமான உடல் நிலையில் இருந்திருக்கிறான்; அவன் இறப்பதற்கு முன் தானிய ரொட்டியையும், சிவப்பு மானின் இறைச்சியையும் உண்டிருக்கிறான். அவன் ஏன் இறந்தான் என்பதன் காரணமும் கூட கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.ஒரு அம்பு அவனது தோளில் இறங்கி, அங்குள்ள தமனியை ஊடுருவிச் சென்றதன் விளைவால் இறப்பு நிகழ்ந்திருக்கிறது. ஆனால் இதுவரை யாரும் இறந்த ஆதிகால  மனிதனின் இரத்த செல்களைப் பார்த்ததே இல்லை.
  ஆல்பர்ட் ஜின்க் & குழுவும் கண்டறிந்த ஓட்சியின் இரத்தம்..!
   
போஜென்/போயசனோவின் ஐரோப்பிய அகாடமியின்  மனிதவியல் துறை தலைவரும், இத்தாலிய மனிதவியலாளரும், ஆய்வாளருமான ஆல்பர்ட் ஜின்க் (Albert Zink,)தான்ஓட்சி பற்றிய உண்மைகளைக் கண்டறிந்தவர். அவர்  நழுவும் நிலையிலுள்ள இரத்த செல்கள் (elusive cells) பற்றி ஆய்வு செய்து அதிசயங்களைப் பகிர்ந்தவர்.  அவரின் கூற்றாவது: உண்மையிலேயே எங்களுக்கு இது ரொம்ப ரொம்ப ஆச்சரியமாய்ப் போய்விட்டது. ஏனெனில் நாங்கள் அங்கே முழுமையான சிவப்பணுவைப் பார்ப்போம் என்று கற்பனையிலும் கருதவில்லை. நாங்கள் நிஜமாகவே, அங்கே ஏதாவது சுருங்கிய அல்லது சிதைந்த ஓரிரு சிவப்பணுக்கள் இருக்கும் என்றுதான் நம்பி இருந்தோம். ஆனால் அங்கே, நவீன கால மாதிரி  /சாம்பிள் போல அதே பரிமாணத்துடன், சிவப்பணுக்கள் முழுமையாகக் கிடைத்தன( doughnut-shaped red blood cells in a sample of tissue taken from around the deadly arrow wound in Oetzi's back. ). எங்கள் கண்களை எங்களால் நம்பவே   முடியவில்லை ," என்று சொல்கிறார்.
   உன் இரத்தமா இது ?  
இரத்த சோதனை
ஆல்பர்ட் ஜின்க்கும் அவரது குழுவினரும் ஒட்சியின் தோள் காயத்திலிருந்து திசு மாதிரிகளை எடுத்தனர். அது போலவே, அவனின் வலது கைக்காயத்திலிருந்தும்  திசு மாதிரிகள்  எடுத்தனர். வெறும் சாதாரண உருப்பெருக்கி கொண்டு பார்த்தபோதே, அவை வட்ட வடிவ சிவப்பணுக்கள் போலவே  காணப்பட்டன.ஜின்க் இது கட்டாயமாய்  இறந்த மனிதனின் சிவப்பணுக்கள்தான் என்று உறுதியாய் நம்பினார். மேலும் இது தொடர்பான நவீன தொழில்நுட்ப அளவிலான ஆராய்ச்சிகள் செய்யவும் விரும்பினர். அந்த ஆராய்ச்சிகளும் அப்போது தேவைப்பட்டன . 
   உன் கண் உன்னை ஏமாற்றினால் ..!
ஓட்சியின் இரத்த செல் 
ஆராய்ச்சியாளர்கள் அணு அழுத்த உருப்பெருக்கி (an atomic force microscope) என்ற நவீன சாதனம் மூலம் இரத்த  திசுக்களைப்   பார்த்தனர். அது ஒரு பொருளைப் பார்ப்பதைவிட, அதனை ("feeling" )உணரவே செய்யும் தன்மை கொண்ட கருவி அது. எனவே  அதன் நுணுக்கமான ஆய்வை நம்மால், நமது வெறும் கண்ணால்  பார்க்கவே முடியாது.இந்தக்  கருவி உள்ளே நுழைந்து ஊடுருவித் தேடிப்  பார்ப்பது  , ஓர் ஒலித்தட்டின் மேல் ஓர் ஊசி ஓடுவதைப் போலிருக்கும். அந்த சாதனம் ஒரு பொருளின் உருவரை பரப்புகளில் மேலும், கீழும் குதித்து ஊடுருவும். அதிலிருக்கும் லேசர் ஒரு நொடியின் பல துணுக்குக்களையும்    கூட விடாமல், அதன் ஒவ்வொரு சிறிய நகர்வையும்  அளக்கும். இதன் மூலம் அந்தப் பொருளின் முப்பரிமாண அளவுகளை அப்படியே அச்செடுத்துவிடும். இந்த நடைமுறைகளில் புதிரான ஓட்சியின் உடல் பொருட்களிலிருந்து ஆச்சரியப்படத்தக்க படங்கள் கிடைத்தன . அதுதான் வட்ட வடிவமான உருவங்கள் உண்மையிலேயே சிவப்பணுக்கள்தான்.. என்ன நம்ப முடிகிறதா நண்பா..!
    ஓட்சியின் சிவப்பணுக்களும், இனறைய சிவப்பணுவும்..!
    
ஓட்சியின்  உடலிலிருந்து எடுக்கப்பட்ட  சிவப்பணுக்கள் இப்போதுள்ள நமது சிவப்பணுக்களின் அளவையும்  உருவையும்   பெற்றுள்ளன  . சின்ன   மாவு  உருண்டையை  பரோட்டாவுக்கு  அமுக்கி  வைப்பது  போன்ற  தோற்றத்துடன்  இருக்கின்றன . அதன் பரிமாணமும்  கூட, இன்றுள்ள  செல்களின்  அளவே . அவை நிச்சயமாய் சிவப்பணுக்களே .. ஆனால் 5,300 ஆண்டுகளுக்கு  முன்பு  பதப்படுத்தப்பட்டவை என்கிறார் ஜின்க். ஓட்சி 5 ,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து கொண்டு, இபெக்ஸ் மற்றும் மானின் இறைச்சியை உண்டு, ஆல்ப்ஸ் மலைகளில் ஏறி இறங்கித்  திரிந்திருக்கிறான் . 1991  ல் அவனைக் கண்டுபிடித்தபோது, அவனது இரத்தக் குழாய்களில் இரத்தம் இல்லை. வெறுமனே இருந்தன. ஓட்சி இறந்து வெகு காலமாகி விட்டபடியால், அவன் உடம்பிலிருந்த இரத்தம் தோள்  காயத்தின்  வழியே முழுதும் வடிந்திருக்கலாம்; அல்லது அவனது இரத்தம் கால ஓட்டத்தில் உருமாறி அழிந்து போயிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதினர். இருப்பினும் அம்பு சொருகி காயம் பட்ட தோள்   பகுதி, மற்றும் வலக்கையின் காயம் என இரண்டு இடங்களையும், விஞ்ஞானிகள் பெரிது பண்ணிப் பார்த்தனர். இரத்தக் கட்டு /இரத்தத் திசு எதுவும் அப்போது தென்படவில்லை. இருப்பினும் வன்முறையாய் அம்புத் தாக்குதல் மற்றும் மற்ற காயங்களால் இறப்பைத் தழுவிய அந்த மனிதனின் காயத்தை வேறு செயல்கள் மூலம் ஆராய்ந்தனர். இரத்தக் குழாய்களைத் திறந்தபோதும் கூட ஒரு துளி இரத்தத் துனுக்கு  கூட இல்லை, இரத்தம் பதப்படுத்தப் படவில்லை/பாதுகாக்கப்படவில்லை  என்றே எண்ணினார். இருப்பினும், நானோ கருவி (Nano  probe) கொண்டு தேடியபோதுதான் அம்பு தைத்த இடம் மற்றும் வலது கையின் வெட்டில் முழுமையான சிவப்பணுவின் பரிமாணம் கிடைத்தது.  நானோ கருவியின் ஒவ்வொரு நிமிட தேடலும் பதிவு செயப்பட்டது. அதன் ஸ்கேன் படிவம், பனி மனிதனின் இரத்த சிவப்பணு , தற்போதைய நவீன மனிதனுடையதைப் போலவே இருந்ததும் ஆச்சரியத்துடன் கண்டறியப்பட்டது . 
கொலையுண்ட பனி மனிதன்..!

 பனிமனிதனின் இறப்பு என்பது ஏதோ இயற்கையில் நிகழ்ந்தது  அல்ல. அவன் கொலை செய்யப் பட்டிருக்க  வேண்டும் என விஞ்ஞானிகள் கருது கின்றனர்.அவர்கள் சொல்லும் கதையை, அல்ல அல்ல நிஜத்தைக் கேட்போமா? இத்தாலி நகரில் அப்போது வசந்தம்  விடை  பெறக் காத்திருந்தது ; லேசாக கோடை  எட்டிப்  பார்த்தது . சாதாரண உயரம்  கொண்ட  ஹாப் கொம்பு (Hophorn) மரங்கள்  தன்  கொத்து  கொத்தான  மஞ்சள்  மலர்களை விரித்து உலகுக்குக்  காண்பித்தன. அந்த  செங்குத்தான பள்ளத்தாக்கு முழுவதும், மஞ்சள் மலர்களால் மூடப்பட்டிருந்தன. இங்கேதான் இத்தாலிய ஆல்ப்ஸ் மலைகளின் ஊடேதான் இந்த ஓட்சி பள்ளத்தாக்கு இருந்தது. அந்த காடுகளில், அதனை நன்கு அறிந்திருந்த, எப்போதும் அதன் வழியே நடந்து பழப்பட்ட அவன், வேகமாக ஓடினான் தனது வலது கையில் இருக்கும் காயத்தைப் பார்த்துக் கொண்டும், அதன் வலியையும் பொறுத்துக் கொண்டும். போகும்போது ஆங்காங்கே நின்று ஏதாவது சத்தம் வருகிறதா என்றும் கவனித்துக் கொண்டே சென்றான்.  அவனை யாரோ பின் தொடருகிறார்கள் என்றும் நினைத்தான்.அவன் செங்குத்தான உயரத்துக்கு ஏறியதும், கொம்பு  மரத்தின்   சுகந்தமான மஞ்சள்    மலர்கள் பூத்து , காண முடியாத மெல்லிய மழையாய்ப்  பொழிந்தது ; நீர்  உப்பானது ; அவன் கொஞ்சம்  ஓய்வெடுக்க   நின்றபோது , அப்படியே கொஞ்சம் உணவையும் போட்டு விழுங்கினான். இவையெல்லாம் 5,300 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவைதான். ஆனால் அந்த மனிதன், நாம் இப்போது பனிமனிதன் என்று பாசத்துடன் அழைக்கும், புதிய கற்கால வேட்டைக்காரன், அவன் பழமை வாய்ந்த உடலின் உள்ளே, மேலே குறிப்பிட்ட அனைத்தின் துகள்களும் உள்ளன நண்பா. நான் எதுவும் கதை விடவில்லை, சரடு கொடுக்கவில்லை. அனைத்தும் உண்மை, உண்மையே.. அறிவியல் உண்மை.. கண்டுபிடிப்புகளின் உண்மையே...அது மட்டுமல்ல, அவன் அங்கு கானகத்தின் ஊடே சென்று, மலையடிவாரத்தின் அருகில் சென்றான்.அங்கேதான் அவனது விதியும் முடிந்தது எனபதும்,  அவன் சென்ற காலத்தின் துல்லியமான கணிப்பு கூட கண்டறியப்பட்டுள்ளது. 
 அறியப்படும் ஓட்சியின் உண்மைகள்..!
பனி மனிதனின் கருவிகள்
  பனிமனிதனின் உடலை வைத்தே அவனது வாழ்க்கை முறைகளைக் கட்டிக்  கணித்துள்ளனர் விஞ்ஞானிகள். அவனுடன் இருந்த மதிப்பு மிக்க தாமிர பட்டை கொண்ட கோடரி இருந்ததை வைத்து, அவன் uyarntha சமூக  அந்தஸ்துள்ளவனாக இருந்திருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர். அவன் தன் பயணத்தின் போது மூன்று அடுக்குகள் கொண்ட உடைகளைப் போட்டிருந்தான்;எனவே அப்போது மிகுந்த குளிர்  இருந்திருப்பது தெரிகிறது.அவனது கால் shooஷோக்கள் அழுத்தமாக, கடினமாக இருந்தன. அதன்அடிப்பகுதி கரடியின் தோலினால் ஆனது; அவன் கூர்மையான பழக்கப்பட்ட கல் கத்தியை  வைத்திருந்தான். அது மட்டுமா நண்பர்களே.. அவனுக்கு நெருப்பை உண்டாக்கத் த் எரிந்திருந்தது  . அதற்காக  அவன் நெருப்பு  உண்டாக்கும்  கருவிகள்  கொண்ட ஒரு பையும்  வைத்திருந்தான். மேப்பிள் இலைகளால் சுற்றப்பட்ட சாம்பலையும் பிரீச்பட்டையில் வைத்திருந்தான். அவன் முழுமையான கவசம் போன்ற உடை அணிந்திருக்க வேண்டும் என்றே நம்பினர். அவன் உடலில் தைத்த அம்பு அவ்வளவாய்  கூர்மை இல்லை. அவன் அப்போதுதான் அவனிடமிருந்த போர்க்கருவிகளைஎல்லாம் எரித்து விட்டு, புதிதாக அவைகளை புதிப்பிக்க தயாராக இருந்தான். இந்த சமயத்தில் தான் அவனை ஒரு பசுமரத்தின் கூர்மையான பெரிய தண்டு அம்பு கொண்டு பலமாய்த் தாக்கி உள்ளனர். அதனால் பெரிய காயம் ஏற்பட்டு அதில் இரத்தம் வழிந்து, வடிந்து, மயக்கம் போட்டு பின்னர் இறந்திருக்கிறான். 
பனி மனிதன் பற்றி விஞ்ஞானிகள் பலப் பல வழிகளில் அக்குவேறு ஆணிவேராக ஆராய்ந்தனர். இவன் ஆட்டிடையன், தெய்வத்திற்குப் பலி கொடுக்கப்பட்டவன், 
  இரத்த பைபிரின் சொல்லும் உண்மைக் கதை..!

ஓட்சியின் இரத்த  செல்களுடன், அதன் அருகிலேயே பைபிரினும் (Fibrin) காணப்பட்டது.எந்த இடத்தில் அம்பு குத்தி உள்ளே இறங்கியதோ அந்த அம்பு முனை பட்ட இடத்தில்தான் பைபிரின் இருந்தது.  பைபிரின் என்பது இரத்தம் உறைவதற்கான புரதம். இந்த பைபிரின் துணுக்கு , நமக்கு ஓர் அருமையான உண்மையை நம் முன்னே பிட்டு வைக்கிறது.அதுதான் அவன் காயம் பட்டவுடனேயே இறக்கவில்லை என்பதே. ஏனெனில் பைபிரின் புதிதாக ஏற்பட்ட கயாத்தில்தான் உருவாகும்  , பின்னர் சிதைந்துவிடும். அதன் பின் ஆராய்ச்சியாளர்கள் அந்த இரத்த செல்களில், கடந்த காலங்களில் மூலக்கூறு அமைப்பில் என்னென்ன  மாற்றங்கள் நடந்துள்ளன என்றும், அதிலுள்ள நீர் இழப்பு மற்றும் வயது  மூலம் தெளிவாக அறியலாம் என்று தெரிவிக்கின்றனர். இம்முறை மூலம் எதிர்காலத்தில் தடயவியல் துறைக்கு உதவி செய்யும். இதற்காக  ஆய்வாளர்கள் ராமன் Spectroscopy (Raman spectroscopy) யைப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் அந்த செல்லில் உள்ள ஹீமோகுளோபின்  புரதம், அது எவ்வளவு ஆக்சிஜனைச் சுமந்து செல்கிறது என்றும் கண்டறியலாம். 
ஓட்சியின் இறப்பு இதய இயக்கமின்மையா ல் . ! 
 பனியாற்றில் குப்புறக் கவிழ்ந்து கிடந்து
மற்ற ஆய்வாளர்கள்  பழங்கால கற்கால கருவிகளில்  இரத்தம் அறிய ஆராய முயற்சி செய்யும்போது, இந்த பனிமனிதனின் இரத்த சான்று நேரிடையாக நின்று மனிதவியல் துறைக்கு பெரிதும் உதவு கிறது.அவன் அம்பால் குத்துப் பட்டும் கூட பல மணி நேரம், அல்லது சில் நாட்கள்  இறக்காமல் இருந்திருக்கிறான். அவன் தோள்பட்டையில் உள்ள இரத்த தமனி அறுபட்டு, அதிகமாக இரத்தம் வடிந்து, இதயம் இயங்க மருந்து மரணித்திருக்கலாம் என்றும் சொல்கின்றனர் ஆயவாளர்கள். .  
 பனி மனிதன் உலா வந்த இடம்..! 
� AP
பதப்படுத்தப்பட்ட அந்த பனி மனிதனின் உடல் இப்போது, இத்தாலியின் தென் தைரோளில் போல்ஸ்சானோ    என்ற இடத்தில் அருங்காட்சியகத்தில்,பத்திரமாகப் பனிப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது.  அவனது முதுகில் அம்பின் தலை குத்திக் கிடக்கிறது.அது 6 .5 செ.மீ ஆழமான காயத்தை  உண்டு பண்ணியுள்ளது. அவன் அந்த இடத்தைச் சுற்றி சுமார் 65 கி.மீ சுற்றளவில் மட்டுமே சுற்றி வந்திருக்கிறான். 

ஓட்சி பல்வேறு காரணங்களால் முன்னிறுத்தப்படுகிறான்  . 
 1. ஓட்சிதான் இதுவரை கிடைத்த மம்மிகளில் இயற்கையாகப் பதப்படுத்தப்பட்டு  மிகவும் பழமையானது; வயதானது.
 2. இந்தப் பனி மனிதனின் உடைமைகள் மற்றும் துணிகளின் தன்மை மூலம், அன்றைய புதிய கற்கால மனிதன் ஐரோப்பாவில் என்ன மாதிரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தான் என்பதை கணிக்க உதவுகிறது. , . 
 3. அவன் மிகவும் பிரபலமான நமது நாகரிகத்தின் பகுதியாக   இருந்தான். அந்த ஊரில் பனிமனிதனின் சாவிக்கொத்து, முதுகு தேக்கம், மற்றும் கணினி எலி போன்றவை பனிமனித பெயரிலேயே விற்கப்படுகின்றன  என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்  
 4. ஓட்சியின் பெயரில் ஒரு பானம் கூட irukkiathu . 
 5. அந்தக்காலத்திய மனிதர்களை விட, நல்ல உடல் நிலை திடகாத்திரத்துடன் இருந்தது என்பதே. 
 6. அவனை முழுதும் ஆராய்ந்த விஞ்ஞானிகள் அவன் 5 aடி , 2   அங்குலம் இருந்தான் என்று கணிக்கின்றனர். 
 7. ஓட்சியின் உயரம் 5 அடி & 2 அங்குலம், இவன் இறந்த பிறகு, உடலின் உயரம் சில  அங்குலங்கள் குறைந்திருக்கலாம். 
 8. இறப்பு நிகழும்போது அவனது எடை, 110 பவுண்டுகள். 
 9. ஆனால் இப்போதுள்ள மம்மியின் எடை வெறும் 29 பவுண்டுகள் மட்டுமே. 
 10. பனி மனிதன் இறக்கும்போது அவனுக்கு  வயது 45 . பொதுவாக அந்தக் காலத்தில் இந்த வயது வரை வாழ்ந்ததில்லை. 
 • .பனி மனிதனுக்கு ஏராளமான பிரச்சினைகள் இருந்ததாகவும் அறியப்படுகிறது. அவனது பெருங்குடலில், கொக்கிப் புழுவில்ன் முட்டைகள் இருந்தன. அதாவது அவனுக்கு வயிற்று பிரச்சினைகள் இருந்தன. அதனால் அவனுக்கு வயிற்றுப்போக்கும் இருந்திருக்கிறது.
 • அவனுக்கு  ஆர்த்திரிடிஸ் என்னும் கீல் வாதம் இருந்திருக்கிறது. 
 • அவனது உடைகளில் இரண்டு பூச்சி இருந்தது. 
 • அவனது இடது இடுப்பு எலும்பு அவனது வயதான தன்மையையும், அங்கே ஏற்பட்ட சின்ன எலும்பு முறிவையும் காட்டுகிறது. 
 • அவனது விலா மற்றும் மூக்கு எலும்புகள் உடைந்துள்ளன 
 • அவன் இறப்பதற்கு முன், கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்தான் என்பதை அவனது கை நகங்கள் காண்பிக்கின்றன. 
 • அவனது நுரையீரல் புகையினைச் சுவாசித்ததால் நிறம் மாறி இருந்தன. 
 • அவனின் இரைப்பையில் பார்லி, மாமிசம், மற்றும் தானியங்கள் இருந்தன. இவைதான் ஓட்சி உண்ட இவனது கடைசி உணவு என்பதைக் காட்டுகிறது. 
 • அவன் வயிற்றில் மஞ்சள் மகரந்தம் காணப்பட்டது. அவன்ஓடையிலிருந்து  நீர் குடிக்கும்போது விழுந்திருக்கலாம். 
 • இந்த மகரந்தமே, பனி மனிதனின் இறப்பு நிகழ்ந்தது வசந்த்தத்தின் பிற்பகுதி/கோடையின் துவக்கம்  என்று சொல்லுகிறது. 
 • இந்த மகரந்தம்தான், இவன் நடுத்தர மலைகளிலுள்ள ஊசியிலைக் காடுக்களுக்கிடையே வாழ்ந்துள்ளான் என்று படம் போடுகிறது. 
 • அவனது டி என் ஏ எடுக்கப்பட்டு இவன் தனியா இனத்த்ழி சேர்ந்தவன் என்று தெரிகிறது. 
 • அவன் கையிலிருந்த அம்பில் இருக்கும் இரத்தம் வேறு ஒருவரது. 
 • அவன் போட்டிருக்கும் ஆட்டுத் தோல்கோட்டில் இருக்கும் இரத்தக் கறை, அவன் ரொம்பத் தொலைவிலிருந்து ஒரு நண்பனை சுமந்து வந்திருக் கிறான்என்பது தெரிகிறது. 
 • அவனுக்கு பல் வியாதி எதுவும் இல்லை.
 • அவனுக்கு ஞானப்பல் அப்போது முளைக்கவில்லை. 
 • .அவன் உடம்பில் 12 வது விலா எலும்பைக் காணோம்.
 • அவனது தோல் முழுவதும் பனியில் கிடந்தது உரிந்து விட்டது. தலை முழுவதும் அடர்த்தியாகவே முடி இருந்திருக்கிறது. அதுவும் முழுமையாக உரிந்துவிட்டது.
கையில் பச்சை குத்திய தடம்
 • அவனது வலது கால்,கை மற்றும் முதுகெலும்பு போன்ற இடங்களில் பச்சை குத்தியது போன்ற தழும்புகள் உள்ளன். இவை அவன் கீல் வாத நோயிலிருந்து விடுபட எடுத்துக் கொண்ட துவக்க சிகிச்சை என்றே  கணிக்கப்படுகிறது.
 • அவனது இடுப்பு எலும்பிலிருந்து திசுக்களை எடுத்து DNA வை அறிந்து, அவனது முழு ஜீனோம் (Genome)வரையப்பட்டுவிட்டது.  பனி மனிதனின்  DNA அமைப்பு , அவனது சில குணாதியங்களை நமக்கு எடுத்து இயம்புகிறது. 
 • அவை: 
 1. பனி மனிதனுக்கு பழுப்பு வண்ணக் கங்கள் ( brown eyes  ) இருந்தன.
 2. அவனது இரத்தம் ஓ ("O" group)பிரிவைச் சேர்ந்தது. 
 3. அதுவும் rh+ (Rhesus positive )வகை இரத்தம்தான். 
 4. அவனுக்கு பால் சர்க்கரை சேராது. 
 5. இனறைய கோர்சிகன்கள் அல்லது சார்டினியான்கள் போன்றவர்களின் இனத்தைச் சேர்ந்தவன் இவன்..இவர்கள்தான் பனி மனிதன் உடம்பு கிடைத்த இடத்தின் அருகில் ஆல்ப்ஸ் மலையில் வாழ்பவர்கள்.
 6. இதுவும் கூட விடுவிக்கப்பட்ட ஆதிகால மனிதனின் மரணப்புதிர்தான்..!
 7. இதுதான் உலகின் முதல் கொலையும்.. முதல் மனித இரத்தமும்..

பதப்படுத்திய ப்னி மனிதனை உருவகம் செய்து போட்ட படம்.

Monday, May 14, 2012

ஜான் சார்லஸ் பீல்ட்ஸ் (John Charles Fields-May 14, 1863 - August 9, 1932)


ஜான் சார்லஸ் பீல்ட்ஸ் (John Charles Fields-May 14, 1863 - August 9, 1932)

by Mohana Somasundram on Monday, May 14, 2012 at 12:15pm
நண்பர்களே  , கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் பிறந்து 125 ஆண்டுகள் ஆகின்றன. எனவே இந்த  ஆண்டு  கணித ஆண்டாக இந்திய அரசால் அறிவிக்கப் பட்டிருக்கிறது. அடுத்த 2013 ம் ஆண்டு உலக கணித ஆண்டாக அறிவிக்கப்பட உள்ளது. எனவே, நமக்கு கணிதம் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்,கணிதத்துடன் வாழ்ந்து கொண்டு, உறவாடிக்கொண்டு, விளையாடிக்கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் வாங்கும் சம்பளம், கடைகளில் வாங்கும் பொருளுக்கான கொடுக்கல் வாங்கல், ஷெர் மார்க்கெட் எல்லாம் கணிதம்தான் நண்பா. கணிதம் தவிர்த்து நாம் வாழவே முடியாது. உலகில் உள்ள கணித மேதைகள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வேமே..
ஜான் சார்லஸ் பீல்ட்ஸ் கனடா நாட்டுக்காரர்; ஆனால் இவர் ஸ்காட்டிஷ்- ஐரிஷ் கலப்பு உருவாக்கம். ஒரு கணிதவிற்பன்னர். அதனால் கணக்கு கொண்டு வந்து விற்பார் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.. இவரை சுருக்கமாக ஜே.சி. பீல்ட்ஸ் என்றே அனைவரும் அழைக்கின்றனர். இந்த  மேதை. கனடாவின் ஆண்டேரியோவில், ஹாமில்டன்(Hamilton, Ontario, Canada ) நகரில்  1863  ல்  மே மாதம்  14 ம் நாள்  (May 14, 1863 - August 9, 1932) .  பிறந்தார்.  இவரது அப்பா பெயரும் ஜான் சார்லஸ் பீல்ட்ஸ் தான். தந்தை அந்த ஊரில் ஒரு தோல் பதப்படுத்தி பொருட்கள் செய்யும் சின்ன கடை ஒன்று வைத்திருந்தார். பீல்ட்சின் அன்னைஹாரியட் பௌஸ் பீல்ட்ஸ்(Harriet Bowes Fields), அவரது திருமணத்துக்கு முன்பு  ஒரு பள்ளி ஆசிரியர். பீல்ட்ஸ் அவரது துவக்க பல்கலைக் கழக கல்வி வரை ஹாமில்டனிலேயே படித்தார். பீல்ட்சின் முன்னேற்றத்திற்கு அவரது பள்ளியும், போதித்த ஆசிரியர்களுமே காரணம். பீல்ட்ஸ் கல்லூரி & பல்கலையில்  தங்கப் பதக்கம் பெற்றவர். 1887 ல் ஹாப்கின்ஸ் பல்கலையில் படித்த பின், பென்சில்வேனியா,மேட்வில் நகரிலுள்ள அல்லேகேனி கல்லூரியில் (Allegheny College in Meadville, Pennsylvania) கணிதப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். 1902 ல் பணியை விட்டு விட்டு , ஐரோப்பிய கணித மையமான ஜெர்மனியின், பாரிஸ் & கோட்டின்ஜென்னில்(Paris and Göttingen (Germany)) படித்தார் .  டொராண்டோ  பலகலையில் ஆராய்ச்சி பேராசிரியராக 1923 ல் பொறுப்பேற்றார். 
    1914 க்கு முன்பு வரை கணிதவியலாளர்கள்,சர்வதேச அளவிலும் கூட கணிதம்தான் அனைத்து அறிவியல் விஷயங்களிலும் உயர்ந்தது, அது அரசியலுக்கு அப்பாற்பட்டது; அதனை அரசியல் எதுவும் செய்யாது, செய்யமுடியாது என்று கருத்தோட்டத்தில் இருந்தனர். அனைத்தும்     முதல் உலகப் போர் வந்ததும் தவிடு பொடியாகிவிட்டது. 1918 , நவம்பர் மாதத்துக்கு முன்,  பிரிட்டன் ,பிரான்ஸ், இத்தாலி, செர்பியா, பெல்ஜியம் மற்றும் அமெரிக்காவிலுள்ள அறிவியலாளர்கள் லண்டனில் கூடி போர் முடிந்த  பின் அறிவியல் தொடர்புகளை  வைத்துக்  கொள்ளலாம்  என்று விவாதித்தனர். 
     பீல்ட்ஸ் கணிதத்தில் புதிய தலைப்புகளில் அல்ஜீப்ராவின் பயன்பாடுகள் பற்றி நிறைய பேப்பர்கள் வெளியிட்டார். அவை உலகுக்கு பயன் உள்ளவையாக இருந்தன .அவரது ஆராய்ச்சிகளும் சமன்பாடுகளும், எளிமையாகவும், அற்புதமாகவும் இருந்தன.   
 1924 , டொராண்டோவில் நடந்த சர்வதேச கணித மாநாட்டில் பொறுப்பேற்று நடத்தினார். அதில்தான் சர்வதேச அளவில், கணிதத்தில் சிறந்தவர்களுக்கு ஒரு பதக்கம் தருவது என்றும் பேசப்பட்டது. பின் 1932 ல் ஜூரிச்சில்  நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு பதக்கம்  தருவதிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்தார். அந்த பதக்கம் தருவதை உலகின் அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டன. ஆனால் அவரது உடல்நிலை 1932 , மே மாதம் மோசமாகியது.
பின்னர் பீல்ட்ஸ் 1932 , ஆகஸ்ட்டில் மறைந்த பின்,1936 லிருந்து  கணிதத்திற்கான சர்வதேச பதக்கம், அவரது பெயராலேயே, "பீல்ட்ஸ் பதக்கம்" என்று கணிதத்தில் சிறந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. முதல் பதக்கம், ஆஸ்லோ மாநாட்டில் 1936 ல் வழங்கப்பட்டது.இந்த பதக்கம், ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒரு முறை, கணிதத்தில் சிறந்த, 40 வயதுக்கு உட்பட்ட கணிதத்தில் சிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. 1936 க்குப்   பின்னர் இரண்டாம் உலகப்போர் நடக்கும்போது இது வழங்கப்படவில்லை.
பின் 1950 லிருந்து தொடர்ந்து இன்று வரை நான்காண்டுகளுக்கு ஒரு முறை என பீல்ட்ஸ் பதக்கம்" வழங்கப்படுகிறது.இது நோபல் பரிசுக்கு இணையானது.பீல்ட்ஸ் பதக்கம்"   கணித நோபல் பரிசு என்றே போற்றப்படுகிறது.
Wednesday, May 9, 2012

கிளாசிக் மேட்னி..(மட்டன்/சிக்கன் ) வறுவல்:

கிளாசிக் மேட்னி..(மட்டன்/சிக்கன் ) வறுவல்:

by Mohana Somasundram on Wednesday, July 6, 2011 at 4:16pm ·
கிளாசிக் மேட்னி..(மட்டன்/சிக்கன் ) வறுவல்:
தேவையானவை:
 1. ஆட்டுக் கறி .......................1 /2 கிலோ
 2. வெங்காயம்.....................150 கிராம்
 3. இஞ்சி.................................1 இன்ச் நீளம்
 4. பூண்டு................................50 கிராம்
 5. முந்திரி...............................20
 6. மிளகு................................1 /4 தேக்கரண்டி
 7. சீரகம்.................................. 1தேக்கரண்டி
 8. சோம்பு..............................1 /4 தேக்கரண்டி
 9. ஜாதிக்காய் (தேவையானால் )......1 சிட்டிகை
 10. மிளகுப்பொடி.........................2 தேக்கரண்டி
 11. சீரகப்பொடி...............................1 தேக்கரண்டி
 12. மல்லிப் பொடி...........................1 தேக்கரண்டி
 13. மஞ்சள் பொடி...........................கொஞ்சம்
 14. தயிர்...........................................2 தேக்கரண்டி
 15. எலுமிச்சை.................................1 மூடி
 16. தேங்காய்/எந்த எண்ணெய் ....4 தேக்கரண்டி
 17. உப்பு..............................................தேவையான அளவு
 18. கறிவேப்பிலை + மல்லிதழை....கொஞ்சம்
செய்முறை:
 • ஆட்டுக்கறியை நன்கு கழுவிக்கொள்ளவும் .
 • பூண்டையும், வெங்காயத்தையும் உரித்துக் கொள்ளவும்.
 • இஞ்சி,+10 பூண்டை நன்கு அரைக்கவும்.
 • 10 வெங்காயம்+ 1 /2தேக்கரண்டி சீரகம் +ஜாதிக்காயை நன்கு அரைக்கவும்.
 • அடுப்பில் கடாயை வைத்து 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
 • எண்ணெய் காய்ந்ததும், அதில் மிளகு, சீரகம் + சோம்பு போட்டு பொரிக்கவும்.
 • இவை சிவந்ததும், முந்திரி, மீதமுள்ள பூண்டு, வெங்காயம் முழுதாகப் போட்டு வதக்கவும்.
 • வெங்காயம் வதங்கிய பிறகு, தீயைக் குறைக்கவும். வெங்காயத்துடன், மிளகுப் பொடி , சீரகப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள்பொடி போட்டு இவற்றை நன்றாக, ஒன்றாகப் பிரட்டவும்.
 • ஒரு பெரிய பாத்திரத்தில் கழுவிய கறியைப் போடவும். அதனுடன், அரைத்த இஞ்சி, பூண்டு, வெங்காயம், வதக்கிய வெங்காயம், பூண்டு, வறுத்த மிளகு,சீரகம்,சோம்பு,முந்திரி, மிளகுப்பொடி, சீரகப்பொடி,மல்லிப் பொடி , தயிர்,எலுமிச்சை சாறு,2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் + உப்பு போட்டு நீர் ஊற்றாமல் நன்கு பிசையவும்.
 • இதனை அப்படியே குளிர் பதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும்/வெளியிலும் வைக்கலாம்.
 • அடுப்பில் தவா/கடாயை வைத்து அதில் இதனை எடுத்து அப்படியே போட்டு, தீயை சிறுத்து வைத்து வதக்கவும்.
 • எண்ணெய் விட வேண்டியதில்லை.
 • இதனை குக்கரில் வைக்க வேண்டாம். அரை மணி நேரத்துக்குள் கறி வெந்துவிடும்.
இந்த கிளாசிக் மேட்னி மட்டன் வறுவல் சும்மா கலக்கலா இருக்கும்...! குக்கரில் வைக்காததால் இதன் சுவை கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். இதனை இட்லி, சப்பாத்தி, சாம்பார்சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், புதினா சாதம்,புளிசாதம், குஸ்கா,பிரியாணி எதனுடன் சேர்த்து சாப்பிட்டாலும் செமையான மேட்சிங் தான்..! என்ன செய்து பார்க்கலாமா ..?
· · · Share · Delete

  • Gowthaman Chinnachamy ஒருமணி நேரம் முன்னாடி சொல்லிருந்தா நல்லா இருந்து இருக்கும்

  • Mohana Somasundram வணக்கம் கௌதம்.பல பணிகள்.. மறந்துவிட்டேன். நான் சாப்பிடப் போகும்போதுதான் கூப்பிட்டேன். நீ வேண்டுமானால் இரவு வந்து சாப்பிடலாம். அண்ணியிடம் சொல்லி விட்டுப் போகிறேன். இன்று காலை கூரியர்காரன் கடிதம் (பய்ணச்சீட்டு உள்ளது) வரவே இல்லை என்று சொல்லி, ம்னவழுத்தம் ஏற்படச் செய்துவிட்டான்.

  • Gowthaman Chinnachamy பரவாஇல்லை மேடம் சனிக்கிழமை பார்த்துக்கொள்ளலாம்

  • Swaroop Tagore gr8 recipe thanx a lot!

  • Suresh Balaji super madam ....Thanks