Friday, May 7, 2010


பல்துறை வித்தகர்... லியோனார்டோ டாவின்சி..!! ( ஏப்பிரல் 12 , 1452 ..மே 20 , 1529 )
பேரா. சோ. மோகனா

நம் எல்லோருக்கும் உலகின் மர்மப் புன்னகை அழகி , மோனோ லிசா வைத் தெரியும். அவளை உருவாக்கிய ,உலகின் அற்புதமான கலைஞன்தான் லியோனார்டோ டா வின்சி. இயற்கை அவனுக்கு ஏராளமான திறமைகளை வாரி வழங்கி இருக்கிறது. திறமைகள் தத்து எடுத்த

Tuesday, May 4, 2010

.உலக அழகி...கிளியோபாட்ரா..!

உலக அழகி என்று சொல்லப்படும் கிளியோபட்ரா, உண்மையில் அழகியல்ல.அவரே சொன்னது.எகிப்திய பாரோஹ் வம்சத்தின்.கடைசி அரசி.கி.மு. 69 -30ல் வாழ்ந்தவர். மிகவும் புத்திசாலி, ராஜ தந்திரி என்றும் பாராட்டப்படுகிறார். தன தம்பியை கி.மு 51ல் திருமணம் செய்து கொண்டார். கிளியின் வயது, 18 , தம்பிக்கு.9 .கிளிக்கு 9 மொழிகள் தெரியும். அவளது காதலன் மார்க் ஆண்டனியை வரவேற்க , கப்பலில் சென்ற பொது, அவளின் கப்பலே தெரியாதபடி, அதன் மேல் வாசனை திரவிய புகை, மேகம் போல் சூழப்பட்டு இருந்ததாம்.அவளையும் பார்க்க முடியாதபடி.!. அவளைப் பார்க்க முடியாததால் , ஆண்டனி தற்கொலை செய்து கொண்டான். அதைக்கேட்ட கிளியும், தன் மேல் கண்ணாடி விரியன் பாம்பை விட்டு , பாம்பு கொத்தியதால் இறந்தாள் கிளி, .எப்போதும் தன்னை வாசனை திரவியத்தால் முழ்கடித்து கமகம என்றே இருப்பாளாம்.அவளின் காதலர்களை கவர ஒபியம் கலந்த வாசனைப் பொருட்களையே பயன்படுத்து வாளாம். கிளி பயன்படுத்திய அதே சென்ட்டைமிகவும் முயற்சி செய்து ,அதே மூலப் பொருள்களைக் கொண்டு, ஜியுசெப்பி டோனாடோ மற்றும் ஜியுலியோ அரிப்பா இருவரும் இணைந்து, அதேவாசனையை கொண்டுவந்து விட்டனர்.எப்படி
இருக்கு நம் விஞ்ஞானிகளின் திறமை..!!
.

Monday, May 3, 2010

ஆல்ப்ஸ் ..மலையின் ..ஓரத்தில்..!!அழகிய ..ரைன் நதி.. இன்நதி ..ஓரத்தில்..!!

இஞ்சி மம்மி...!
நண்பா , நீங்கள் பார்க்கும் படம், ஆப்பிரிக்காவின், எகிப்திய Ginger, the world's oldest mummyபாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட இயற்கை மம்மி. மம்மி என்ற சொல் அரேபிய மொழியிலிருந்து வந்ததாம்..இதுதான் மிக வயதான மம்மியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதன் வயது சுமார் 5 ,400௦௦. கருவின் நிலையில், கவிழ்ந்து காணப்படும் இதன் பெயர், இஞ்சி மம்மி. நிறத்தை வைத்தும, முடி சிவப்பாக இருப்பதாலும் இப்படி பெயரிடப்பட்டது. இது எகிப்திய கெபெளின் பாலைவனத்தில் , இயற்கையாக மணலில் சூரிய வெப்பத்தில் கருவாடு ஆக்கப்பட்ட மம்மி. நம்ம ஊர்லே கடற்கரையிலே கருவாடு காயப்போட்டு இருப்பாங்களே .. அதுபோல்தான் இதுவும். வெயிலில் உடலின் 75 % நீர் ஆவியாகி போனபின்பு பாக்டீரியா அதன் உடலை சிதைக்க முடியாது. மம்மியின் அருகில் கிடக்கும் மண் பானைகள் ,இறந்த மனிதன் அவனின் சொர்க்க/பாதாள வாழ்க்கை வாழ உணவு, பொருள்கள் மற்றும் நீர் அவனுடன், அவனை புதைத்தவர்கள் வைத்துள்ளனர். கல்லறையின் மேல் ஏராளமான கற்கள் அடுக்கப்பட்டு இருந்தன.. என்ன ஓநாய்கள் உடலை கூறு போடாமல் இருக்கவே..!
இப்போது இது லண்டனிலுள்ள அருங்காட்சியத்தில்.. அறை எண் 64ல் ..!..
ஓட்சி...பனிமனிதன்...!

The Ice Man pictured on a sheet covered stainless steel autopsy table.Artist rendition of Ötzi right shoe. Made of Bear skin and waterproof, quite sophisticated for 53 hundred years ago.Pictured is a knife made from stone and a woven sheath. Hard to tell if the handle of the knife is wooded cloth covered stone.ஒட்சி போட்டிருந்த பொருட்கள் இவை..!
நம்ம கால காலேஜ்மேட் போல, அந்தக் கால மம்மிமேட்டும் இருந்திருக்கே..! அதாங்க இஞ்சி மம்மி போல,சம காலத்தில் , ஐரோப்பாவில் ஆல்ப்ஸ் மலை பள்ளத்தாக்கில் , ஆஸ்த்திரிய ,இத்தாலிய எல்லையிலும் இதே போல ஒரு மம்மி..!இதன் எடை 50 கிலோ. உயரம் 5 ' 5 ''.இந்த மம்மியை மத சடங்குக்காக பலி கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அங்கே சூரியனால் பாடம் செய்யப்பட கருவாடு. இங்கே பனிக்கட்டியால் பாடம்செய்யப்பட்டது, . இதன் பெயர் ஓட்சி பனிமனிதன். வயது. 5 ,300 .இது இன் நதி ஓரத்தில் ." இஞ்சி" ரைன் நதி ஓரம்... வயிற்றிலுள்ள குடலில் சாட்டைப்புழு உள்ளதாம் ..!. உடலில் புல்லினால் ஆனா லூசாக உள்ள உடை உள்ளது. கோட், பெல்ட்தோலாலான தொப்பி ,ஒரு ஜோடி ஷுக்கள் இருந்தன. ஷுக்கள் நீர் புகாவண்ணம் , பனிக்கட்டியில் நடக்க ஏதுவாக இருக்கிறது . எவ்வளவு ஆச்சரியமான விஷயம்.. !! அதுவும் 5 ,300௦௦ ஆண்டுகளுக்கு முன்...!