Monday, July 19, 2010

நீங்கள் ஒரு நொடியில் எவ்வளவு வேகம் நடப்பீர்கள்


நண்பா, வணக்கம். நீங்கள் ஒரு நொடியில் எவ்வளவு வேகம் நடப்பீர்கள்? இதென்ன கூத்து. அபத்தமான வினா என்கிறீர்களா ?
ஒரு நொடியிலா என்கிறீர்களா? ஆம் ஒரு நொடியில்தான். தங்களுக்கு ஒரு வியப்பான , நம்ப முடியாத தகவல் சொல்லலாமா? பூமி எவ்வளவு வேகமாக சுற்றுகிறது ? தன் அச்சில் நொடிக்கு 0.5 கி. மீ வேகத்திலும், சூரியனை,நொடிக்கு 30 கி.மீ வேகத்திலும் சுற்றுகிறது. சூரியன் சுற்றுமா? இதென்ன கேள்வி? பூமிதானே சுற்றுகிறது. சூரியன் சுற்றாதப்பா என்கிறீர்களா.. அதுதான் இல்லை. சூரியனும் சுற்றுகிறதே? சூரியன் தன் தாயகமான, பால் வெளி மண்டலத்தை நொடிக்கு,250 கி. மீ வேகத்தில் சுற்றுகிறது. சூரியன் ஒரு முறை பால் வெளி மண்டலத்தை சுற்றி முடிக்க , சுமார் 22.5 கோடி ஆண்டுகள், ஆகின்றன. மனித இனம் உருவான பின்பு, இன்னும் ஒரு முறை கூட அந்த சுற்று முடியவில்லை. பால் வெளி மண்டலம் அந்தரத்தில், அதாவது விண்வெளியில், சாசர் தட்டு போல, நொடிக்கு 250 கி. மீ வேகத்தில் நகர்ந்து போய்க் கொண்டே இருக்கிறது.அதோடு இதனுடன் பக்கத்தில் இருக்கும், உள்ளூர் சின்ன சின்ன, தொகுதி மண்டலங்கள்,(Local groups) இதனுடன் சேர்ந்து நொடிக்கு சுமார் 40 ௦ கி. மீ வேகத்தில் நகருகின்றன . எனவே நண்பர்களே, நீங்கள் ஒவ்வொருவரும், வீட்டிலே அசையாமல் படுத்து இருந்தாலும் கூட, நொடிக்கு சுமார் 530 கி. மீ (30+250+250) வேகத்துக்கு மேல் ஆடாமல் அசையாமல் பால் வெளி மண்டலம் என்னும் ரங்கராட்டினத்தில் அலாக்காக சுற்று கிறீர்கள் நண்பரே..! என்ன நம்ப முடிகிறதா,,!

No comments:

Post a Comment