Tuesday, July 20, 2010

நம் உடலை.. குத்தகை எடுத்த.. மூத்த குடிமகன்..!



மனித செல்லில் 90 % வெளி உயிரிகள்,,

மனிதர்களாகிய நாம்தான், பரிணாம வளர்ச்சியில், இன்று உயிரினங்களிலேயே உயர்ந்த அந்தஸ்தில்,உயிரின பிரமிடின், உச்சியில் இருக்கிறோம்.நாம்தான் உயர்ந்தவர்கள், உலகையே, ஏன், பிரபஞ்ச உருவாக்கத்தைக் கூட அறிந்தவர்கள் என நெஞ்சை நிமிர்த்தி கூறிக் கொண்டிருக்கிறோம் ஆனால் மனித உடலில் உள்ளும் புறமும் என சுமார், 100௦௦ ட்ரில்லியன்(10,000,000கோடி--நூறு லட்சம் கோடி ) நுண்ணுயிரிகள் வாழ்கின்றன- ஒன்றுக்குப் பின் 14
எரிமலையில் வாழும் பாக்டீரியா பூஜ்ஜியங்கள் போடவேண்டும, உடம்பில், பெரும்பாலான செல்கள் உங்களுடையதல்ல. அவை மனித செல்களும் அல்ல. . உங்கள் உடல் செல் அன்றி, 90௦% வெளி உயிரிகள் வசிக்கின்றன

நுண்ணுயிரிகள்.. எங்கெங்கும் ..!


நல்ல உடல் நலமுள்ள மனித உடலில் சுமார், 100 ட்ரில்லியன் நுண்ணுயிரிகள் வசிக்கின்றன. இவைகளில் பாக்டீரியா, பூஞ்சை, ஆர்கியே(Archaea ) (ஒரு செல் நுண்ணுயிரி) என பல வகை உண்டு. பெரும்பாலும் பாக்டீரியாக்களே அதிகம். உலகில் நிலம், நீர், காற்று,எல்லா இடங்களிலும், நுண்ணுயிரிகள் நிறைந்துள்ளன. இன்று கடலில், நுண்ணுயிரிகள் இல்லாவிட்டால் உலகம் வெப்பத்தால் , இப்போதுள்ளதைவிட இன்னும் அதிகமாக கொதித்துப் போயிருக்கும். நுண்ணுயிரிகள்தான் , சூரியனின் வெப்பத்தை உள்வாங்கிக் கொள்கின்றன. சில பாக்டீரியாக்கள், உயிர்கள் வாழமுடியாத எரிமலை வெப்பத்திலும், தொழிற்சாலை கழிவுகளான அமிலக் கிடங்குகளிலும், உப்புக் குவியலிலும் கூட சந்தோஷமாய் வாழ்ந்து செழிக்கின்றன. அதுபோலவே, நம் உடலும்

உங்கள் எடை.. ..மைனஸ்.. பாக்டீரியா..!

நம் உடல் நுண்ணுயிரிகளால் போர்த்தப்பட்டுள்ளது. இவை நாம் பிறந்த உடன் நம்மீது ஆக்கிரமிப்பு செய்து விடுகின்றன. இறக்கும் வரையும் நம் கூடவே வாழ்கின்றன. பெரும்பாலான பாக்டீரியாக்கள், நமக்கு எந்த தீங்கும் செய்வதில்லை. மேலும் சில பாக்டீரியா, நம்மைத்தாக்கும் கிருமியிடமிருந்தும் நம்மை காக்கின்றன. மேரிலாந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் , 2010 ,மே, முதல் வார கணக்கெடுப்பின் படி, நம் உடலில், 1- 2 .65 கிலோ எடையுள்ள நுண்ணுயிரிகள் வசிக்கின்றன பாக்டீரியாக்கள் இன்றி நம்மால் உணவை செரிமானம் செய்ய முடியாது.இவைதான், நமது தற்காப்புத் திறனை உண்டுபண்ணுபவையும் கூட

படு.. சமத்தான.. பாக்டீரியா..!.


ஆராய்ச்சியாளர்கள் முதன் முதலாக நம் உடம்பில்,மொத்தம் 27 இடங்களில், பாக்டீரியா குத்தகை எடுத்துள்ளதை வரைபடமாக்கியுள்ளனர். இந்த பாக்டீரியாக்கள் நம்மைவிட மிக மிக மூத்தவை.பூமித்தாயின், முதல் மகன். மூத்த குடிமகன் பாக்டீரியா தான். அவைகளின் வயது சுமார், 400 கோடி ஆண்டுகள் மட்டுமே..! . இதன் உருவ அளவு 0.3 -5. 0 மைக்ரோ மீட்டர்.(மீட்டரின் 1,000,000 த்தில் ஒரு பகுதி). ஆனால் இது படு கில்லாடியப்பா..! இது தான் வாழவேண்டிய இடத்தை, மிகவும் கவனமாக, சரியாக தேர்ந்தெடுத்து வசிக்கிறது. , நாக்கில் வாழும் பாக்டீரியாவை, எடுத்து நெற்றியில் விட்டுப் பார்த்தால், அது என்ன செய்தது தெரியுமா? அதற்கு .அந்த இடம் பிடிக்கவில்லை, எனவே, வளரவில்லை. ஆனால் அந்த பாக்டீரியாவை நம் அக்குளில் விட்டால் அது ஜாம் ஜாம் என்று வளருகிறது. எப்படி இருக்கு கதை..!இந்த ஆராய்ச்சியின் மூலம், ஏன் தோல் தொற்றுவியாதிகள், ஒரு சில இடங்களிலே மட்டும் காணப்படுகின்றன என்ற உண்மையும் தெரிந்து விட்டது.

தலைப்பேனின்.. வயது.. 10 ,000..!.


ஆராய்ச்சியாளர்கள், நம் உடலில், 22 பேரினத்தைச் சேர்ந்த நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. என கண்டறிந்தனர். ஆனால் அவைகளில் 4 பாக்டீரியா மட்டுமே அதிக இடத்தை ஆக்கிரமிப்பு செய்கின்றன. இதிலும், ஒரு சுவையான, ஆனால் அதிசயமான தகவல், என்னவெனில், குடலில்,அக்குளில் , கால் இடுக்குகளில் இருப்பதைவிட, அதிக எண்ணிக்கையில் பாக்டீரியாக்கள் , முழங்கால் மடிப்பில் குடிகொண்டுள்ளனவாம். . இந்த பாக்டீரிய கூட்டு குடியிருப்பில் உள்ள மாறுதலே, நமக்கு ஏற்படும் வயிற்று சம்பந்தமான உபாதைகள், ஈறு தொடர்பான நோய்கள் மற்றும் உடல் பருமனும் கூட இதனால்தானாம். என்னடா இ. து காலம் ரொம்பவே கெட்டுப் போச்சு என்கிறீர்களா .!வயிற்றில் 500-1000 இனங்கள் வசிக்கின்றன. தோலில் 500 வகை பாக்டீரியா உள்ளன. நம் தலைப் பேனுக்கு வயது 10, 000ஆண்டுகள்.

பெரியம்மை வைரசின்.. சாமர்த்தியம்.. !.
ஒரு தடவை நமக்கு பெரியம்மை வந்துவிட்டால், அந்த வைரஸ் நிரந்தரமாக நம் நரம்புகள், தண்டுவடத்தில், பேசாமல், மெளனமாக தங்கி விடுமாம். எப்போதாவது, நமக்கு மன அழுத்தம், முதுமை, பலவீனம் ஏற்பட்டால், அவை நைசாக, நரம்புகள் வழியே ஊடாடிச் சென்று, உடலுக்கு வலி, தோல் பிரச்சினைகளை உண்டாக்குமாம்.எப்படி இருக்குங்க.?. ரொம்ப சமத்து இது..!நம்மை விட சிறிய, கீழ் நிலையில் உள்ள பாக்டீரியாவின் கதையும், செயல்பாடும் எப்படி?. உலகில், அனைத்து உயிரினங்களும், வாழ்தலுக்கான போராட்டத்தில், நிறைய யுக்திகளைக் கையாண்டு, வெற்றிபெறவே முயலுகின்றன . நாம் தோற்று விடுவோமோ என கிஞ்சித்தும் சிந்திப்பதில்லை... மனிதனைத தவிர.!.


No comments:

Post a Comment