இஞ்சி மம்மி...!
நண்பா , நீங்கள் பார்க்கும் படம், ஆப்பிரிக்காவின், எகிப்திய பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட இயற்கை மம்மி. மம்மி என்ற சொல் அரேபிய மொழியிலிருந்து வந்ததாம்..இதுதான் மிக வயதான மம்மியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதன் வயது சுமார் 5 ,400௦௦. கருவின் நிலையில், கவிழ்ந்து காணப்படும் இதன் பெயர், இஞ்சி மம்மி. நிறத்தை வைத்தும, முடி சிவப்பாக இருப்பதாலும் இப்படி பெயரிடப்பட்டது. இது எகிப்திய கெபெளின் பாலைவனத்தில் , இயற்கையாக மணலில் சூரிய வெப்பத்தில் கருவாடு ஆக்கப்பட்ட மம்மி. நம்ம ஊர்லே கடற்கரையிலே கருவாடு காயப்போட்டு இருப்பாங்களே .. அதுபோல்தான் இதுவும். வெயிலில் உடலின் 75 % நீர் ஆவியாகி போனபின்பு பாக்டீரியா அதன் உடலை சிதைக்க முடியாது. மம்மியின் அருகில் கிடக்கும் மண் பானைகள் ,இறந்த மனிதன் அவனின் சொர்க்க/பாதாள வாழ்க்கை வாழ உணவு, பொருள்கள் மற்றும் நீர் அவனுடன், அவனை புதைத்தவர்கள் வைத்துள்ளனர். கல்லறையின் மேல் ஏராளமான கற்கள் அடுக்கப்பட்டு இருந்தன.. என்ன ஓநாய்கள் உடலை கூறு போடாமல் இருக்கவே..!
இப்போது இது லண்டனிலுள்ள அருங்காட்சியத்தில்.. அறை எண் 64ல் ..!..
ஓட்சி...பனிமனிதன்...!
ஒட்சி போட்டிருந்த பொருட்கள் இவை..!
நம்ம கால காலேஜ்மேட் போல, அந்தக் கால மம்மிமேட்டும் இருந்திருக்கே..! அதாங்க இஞ்சி மம்மி போல,சம காலத்தில் , ஐரோப்பாவில் ஆல்ப்ஸ் மலை பள்ளத்தாக்கில் , ஆஸ்த்திரிய ,இத்தாலிய எல்லையிலும் இதே போல ஒரு மம்மி..!இதன் எடை 50 கிலோ. உயரம் 5 ' 5 ''.இந்த மம்மியை மத சடங்குக்காக பலி கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அங்கே சூரியனால் பாடம் செய்யப்பட கருவாடு. இங்கே பனிக்கட்டியால் பாடம்செய்யப்பட்டது, . இதன் பெயர் ஓட்சி பனிமனிதன். வயது. 5 ,300 .இது இன் நதி ஓரத்தில் ." இஞ்சி" ரைன் நதி ஓரம்... வயிற்றிலுள்ள குடலில் சாட்டைப்புழு உள்ளதாம் ..!. உடலில் புல்லினால் ஆனா லூசாக உள்ள உடை உள்ளது. கோட், பெல்ட்தோலாலான தொப்பி ,ஒரு ஜோடி ஷுக்கள் இருந்தன. ஷுக்கள் நீர் புகாவண்ணம் , பனிக்கட்டியில் நடக்க ஏதுவாக இருக்கிறது . எவ்வளவு ஆச்சரியமான விஷயம்.. !! அதுவும் 5 ,300௦௦ ஆண்டுகளுக்கு முன்...!
No comments:
Post a Comment