உனக்கும் எனக்கும்
ஒருவர்தான் மூதாய்..!
உயிர்க்கும் கருவறையும்
மரித்தபின் மண்ணும்
அனைவருக்கும் ஒன்றுதான்..!
தோலுக்குக் கீழே
தசையும் குருதியும்
எலும்பும் நரம்பும்
அனைவருக்கும் ஒன்றுதான்..!
அன்பும் ஆசையும்
அடித்தபின் வலியும்
அனைவருக்கும் ஒன்றுதான்..!
சுவாசிக்கும் காற்றும்
செவியின் ஒலியும்
நாவின் சுவையும்
நமக்கெல்லாம் ஒன்றுதான்..!
இதயம் நின்றபின்
இறப்பும் ஒன்றுதான்..!
.........ஆனால்..
குடிக்க கிளாசும்
குடிதண்ணி கிணறும்
வேறு..வேறாமே..
வர்ணத்தின் நிர்ணயம்..!!
நண்பா நீ இந்த கவிதையில் ஒரு வார்த்தை மட்டும் மாற்று
ReplyDeleteகுடிக்க கிளாசும்
குடிதண்ணி கிணறும்
வேறு..வேறாமே..
இதில் குடிக்க குவளையும் என்று இருந்தால் நன்றாக இருக்கும் இதை மோகனா அம்மாவிடமும் சொன்னேன்