Thursday, February 23, 2012

ஆதிகால..ஆடம்பர வாழ்வியலை..வெளிச்சம் போடும்.. புதைவிடங்கள்..

ஆதிகால..ஆடம்பர வாழ்வியலை..வெளிச்சம் போடும்.. புதைவிடங்கள்..

by Mohana Somasundram on Thursday, July 21, 2011 at 3:12pm ·

சுன்கிரில் எடுக்கப்பட்ட கூட்டுப் புதைவிடம்

நம் முன்னோடிகள் ..!

நமக்கெல்லாம் மனித இனம், குரங்கு போன்ற ஒரு இனத்திலிருந்துதான் பிரிந்தது என்பது நன்றாகவே தெரியும். இந்த மனிதஇனம் தோன்றுவதற்கு ஆதார சுருதியான குரங்கினம் சுமார் 6 .5 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருந்தது.மனித இனத்தின் முதல் முன்னோடிகளான டிரையோபிதிகஸ் ( Dryopithecus) 3 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தன . .ஆனால் இன்றைய நவீன மனிதன் தோன்றி சுமார் 2,00,000 ஆண்டுகள் ஆகின்றன. மனிதன்தான், தான் மரித்துப் போனதும்,அதிலிருந்து வரும்துர்நாற்றத்தைப் போக்க , அந்த உடலை பல வகைகளில் அடக்கம் செய்தான். சில சமயம் புதைத்தான்; சிலர் கடலில் வீசி எறிந்தனர்.சிலர் மலை உச்சிக்கு எடுத்துக் சென்று அதனை கண்ட துண்டமாக வெட்டி, அங்கிருந்து வீசி ஆகாய சங்கமம் நிகழ்த்தினர். இவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள் எனும் நம்பிக்கையுடன். பின்னரே மறுவாழ்வு உண்டு என்ற எண்ணம் கிரேக்கர்களிடம் உருவாகி இருந்தது.

கி.மு. 42,000 த்தில் புதைக்கப் பட்ட தாயும் சேயும்

புதைப்பதற்கு அகரம் போட்ட ..மனிதன் . !

நவீன மனிதனுக்கு முன் வாழ்ந்த நியாண்டர்தால் மனிதன்தான்,முதன் முதலில் இறந்த உடலைப் புதைத்து,புதையலுக்கு முன்னுரையும், அரிச்சுவடியும் எழுதியவன். இவர்களின் புதைவிடங்கள் ஈராக், இத்தாலி போன்ற இடங்களில் காணப்படுகின்றன.அவற்றின் வயது 1,30,000 இருக்கலாம்.ஆனால் ஸ்பெயினிலுள்ள அட்ட புயர்க்கா மலையில் (Atapuerca Mountains ) உள்ள குகையில், 32 மனிதர்களின் எலும்புகள் காணப்படுகின்றன. இவை சுமார் 30,00,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. . இருந்தாலும் கூட அந்தக் காலத்தில் கூட்டு புதைத்தல் அரிதானதே. இஸ்ரேலின் கியூபெச்க் ( Qafzeh hominids or Qafzeh-Skhul early modern humans ) என்ற இடத்திலுள்ள குகையில் கிடைத்த எலும்புகளைக் கொண்டு தாய் குழந்தை இருவரையும் சேர்த்து புதைத்துள்ளனர் என்பது தெரிகிறது .இதன் வயது 1 .30 ,000 .இவற்றின் எலும்புகள் பழுப்பு/சிவந்த வண்ணத்தில் உள்ளன.

பிரிட்டனின்.. ஆதி புதையல்..!

பனிஊழிக் காலம்தான், நவீன மனிதனை உலகுக்குக் காட்டிய காலகட்டமாகும். நவீன

மனித இனம் பழைய கற்காலத்தை ஒட்டி, பல பழக்க வழக்கங்களை கைக்கொண்டது .சுமார் 42 , 000, ஆண்டுகளுக்கு முன் சடங்குகள் உள்ள புதைவிடம் உருவாகப்பட்டது. ஆஸ்திரேலியாவிலுள்ள மூங்காஏரியில் உள்ள மனிதனின் அமைவிடம், மத/சமயச் சடங்குகளுடன் இணைந்தது. பிரிட்டனின் ஆதி புதையல் என்பது சுமார் 29,000 ஆண்டுகளு முற்பட்டது. இதனை சிவந்த பெண் என்று அழைக்க பப்ட்டது. ஸ்பெயினின் வடபகுதியில் 27 மனித எலும்புகள்,மற்றும் ஒரு கல் கோடரி உள்ள ஒரு புதைவிடம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

சுன்கிர் எலும்பும், உருவாக்கம் செய்த உடையும்

பழைய கற்கால மனிதன்.. வாழிடம்..!

சுன்கிர் புதைவிடங்கள்

(Sungir) என்ற இடத்தில் கிடைத்துள்ள கல்லறை/புதைவிடம் ஆகும்.கடை பழையகர்காலத்தின் தடயங்களாய் சுன்கிர் என்ற இடத்தின் 12 க்கும் குறைவான ஆதிகால் புதைக்கும் இடங்கள் உள்ளன. அந்தக்கால ரஷ்யாவுக்கு அருகில்தான் இந்த சுன்கிர் (Sungir) எனற மனிதர்களின் வாழிடம் இருந்தது. இதனை முதன் முதலில் ரஷ்யாவின் தொல்லியல் துறை நிபுணர் ஓ.என். பாடெர்(O.N .Bader)தான் 1956 ம் ஆண்டு கிழக்கு ஐரோப்பா பகுதியில் கண்டுபிடித்தார். இங்கிருந்துதான் முதன்முதல் வடகிழக்கே திரும்பி படுத்திருக்ககூடிய ஒரு முழுமையான கல்லறையை 1964 ல் தோண்டி எடுத்தனர். இது பழைய கற்காலத்தின் கடைசி காலத்தைச் சேர்ந்தது.இதன் வயது சுமார் 28 000, -30,000 ஆண்டுகள் என ரேடியோ கதிர்வீச்சு முறையில் கண்டறிந்துள்ளனர். மேலும் அவர்கள் பூமியின் உயர்நிலப் பகுதிகளில் வாழ்ந்தனர். அந்தக் கால பூமியின் நிலைகளை ஆயும்போது, அப்போது கடுமையான குளிரும், வறண்ட குளிர் காற்றும்,செங்குத்தான காடுகளும், சரிவான நிலவமைப்பும் இருந்ததாய் தெரிகிறது.அப்போதைய பழைய கற்காலத்தின் வயது 26,00,000 -30,000 வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது,பழைய கற்காலத்தை முதல்,இடை,கடை கற்காலம் என்று பிரிக்கின்றனர் .இங்கு பெரும்பாலும் பழைய கற்கால மக்கள் வசித்த, வாழ்ந்த அடையாளங்கள் காணப் படுகின்றன..

பனி ஊழிக்கால,,சுன்கிர் மனிதன்..!

தனிப் புதைவிடம்

மாஸ்கோவிலிருந்து சுமார் 192 கி.மீ தொலைவில் விளாதிமிர் என்ற நகரம் இருந்தது. அதன் சுற்றுப் புறங்களில் மனிதர்களின் வாழிடம் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. அந்த வாழிடங்களில் ஒன்றுதான சுன்கிர் அங்கே கிளியஸ்மா ஆற்றின் இடது பக்க் கரையில்,1957-1964 வரை சுமார் 1 .500 ச.மீ அகழ்வாராய்ச்சி செய்து பார்த்தனர். அப்பகுதியில் ப்ழையகற்காலத்தின் இடைப்பட்ட காலத்தில், நாகரிகம் மற்றும் கலாச்சர வளர்ச்சி ஏற்பட்ட தடயங்கள் கிடைத்துள்ளன. சுன்கிர் என்ற இடத்தில் எடுக்கப்பட்ட மனித எலும்புகள், மதச் சடங்குகள்/சமய பரிவர்த்தனைகள் செய்யும் இடம்தான் அது என்பதற்கான மிக அற்புதமான தடயமாய் மிளிர்கிறது. இப்பகுதிதான் ஐரோப்பாவின் மிகப் பழமையான மனிதகுலச் சான்று.இவர்கள் கடை ஊழிக்காலம்/ உறை பனிகாலத்தில் (Glacial period ) வாழ்ந்தனர் என்பதும் தெரிய வருகிறது.

புதைவிடப் பொருட்களும்.. வாழ் நிலையும்..!

பழைய கற்காலத்தின் கடைப் பகுதியில், சுன்கிரின் கருவிகள்

நரிப் பல் கோர்த்த பாசி மாலை

கம்பளி தந்த குச்சிகள்

சுன்கிர் வாழிடம்,உறை பனி மற்றும் பனிப்பாளங்களின் கீழே. ஆயிரக்கணக்கான மீட்டர் ஆழத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டவை ஆகும். சுன்கிர் என்ற இடத்தில், அந்தப் புதைவிடங்களில் வீடுகளின் கட்டுமானப் பொருட்கள், சேமிப்புப் பொருட்கள்/குழிகள் , உற்பத்தி சாதனங்கள்/கருவிகள், அவர்கள் வேட்டையாடும் ஈட்டிகள், நீண்ட தந்தங்கள், விலங்குகளின் உருவங்கள்,கம்பளி யானையின் தந்தங்களிலிருந்து உருவாக்கப்பட்ட பாசிகள் பொதிக்கப்பட்ட/

தைய்க்கப்பட்ட ஆடைகள், போன்றவை இருந்தன.பாசிகள் இருந்த நிலை மூலம் அவர்களின் ஆடைகள் எப்படி வெட்டப்பட்டு,புனையப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாக காட்டின. புதைவிடங்களில் கிடைத்த எலும்புகளின் மேல் இருந்த தந்தங்களிலான பாசிகள், கங்கணங்கள், தொங்கட்டான்கள், பதக்கங்கள், டாலர்கள் போன்ற பொருட்களை கம்பளி யானையின் தந்தங்களிலிருந்து செய்திருந்தனர். இந்த ஆதிகால மனிதர்கள், சந்திரன் மூலம் காலத்தைக் கணக்கிடும் காலண்டர் முறையை அறிந்திருந்தனாறாம். சுன்கிர் என்ற இடத்திலிருந்து எடுத்த மனித எலும்புகளை 2004 ல், அருங்காட்சியகத்தின் மூலம் மரபணு சோதனைக்கு உட்படுத்தினர். இதில் முதல் இரண்டு எலும்புகளும் ஆண்களுக்கு உரித்தானவை. மூன்றாவதில் உள்ள எலும்பு சின்னப் பெண்ணினுடையது எனத் தெரிவிக்கப்பட்டது.

சுன்கிர்... எலும்புகளின்.. தன்மைகள்..!

சுன்கிர் பெண்ணின் தலை

சுன்கிரில், சிதைந்துபோன 5 வாழிடங்களையும்,அதன் 5 எலும்புகளையும் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் ஒன்று 60 வயதான முதிர்ந்த மனிதன், 13 வயது பாலகன், 7 -9 வயது பெண் குழந்தை, பாலினம் தெரியாத ஒரு உடல், தலையற்ற ஒரு முண்டத்தின் எலும்பு மற்றும் ஒரு பெண்ணின் தலைஎலும்பு முதலியவை கிடைத்துள்ளன. கிடைத்துள்ள சான்றுகளைப் பார்க்கும்போது, அந்த இடங்கள் பெரியோர்களின் புதைவிடம் எனபது தெளிவாய் தெரிகிறது. இரண்டு பருவ வயது ஆண்களின் உடல்கள் மற்றும் வயது முதிர்ந்த ஆண் என்ற மூவரும் ஆழம் குறைவான பள்ளங்களில் மூன்று மீட்டர் இடைவெளியில் புதைக்கப் பட்டிருந்தன. அவை தரைக்கு கீழே..மண்ணுடன் பனி கலந்த இடத்தில் கிடைத்தன. இந்த மூன்று

எலும்புகளில் ஒருவர் , கைகளை இடுப்புப் பின் பக்கம் கட்டியபடி குப்புற கிடந்தனர். நான்காவது பெண்ணின் எலும்பு தனியாக, குறைவான பதப்படுத்தளுடன், ஒரு கல் மேடைக்கு அருகில் மண்டையோடு சிவப்பு மண் பூச்சுடன், ஆணின் எலும்புக்கு அருகிலேயே, உறவினர் என்று கருதும் வண்ணம் காணப்பட்டது. தலையற்ற முண்டமும் சரியாக பதப்படுத்தப் படவில்லை. எனவே, அதன் எலும்புகள் முழுமையாய் கிடைக்கவில்லை. ஒன்றாய் புதைக்கப் பட்ட தம்பதியர்இரண்டு பருவ வயதினரும், தலைகள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு,இடையில் வட்டமான ஒரு பொருளுடன், புதைக்கப் பட்டிருந்தன. அவை தம்பதியர்.

ஆடம்பர...வாழ்வியல் நிறைந்த .. மனிதர்கள்..!

சேர்ந்தாற்போல மூன்று எலும்புகள் கிடைத்த இடத்தில், அவை மிக மிக ஆடம்பரமாய் அலங்கரித்திருந்தனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த எலும்புகளில் ஆயிரக்கணக்கான தந்தத்தால் செய்யப்பட்ட பாசிகள் கோர்க்கப்பட்ட பட்டைகள் உடலின் குறுக்கும் நெடுக்காக காணப்பட்டன. ஒருக்கால் அவை அவர்களின் உடைகளின் மேல் போடப்பட்டதே கூட இருக்கலாம். சுன்கிரில் கிடைத்த எலும்புகளில் கட்டாயம் மூன்று நிச்சயமாய் ஒரே சமூக கட்டமைப்பை சேர்ந்தவராக இருந்தவராக இரக்க வேண்டும் என்பதும் தெரிய வருகிறது. அங்கு கிடைத்த எலும்புகளில் உடல் அலங்காரம் மற்றும் கல்லறை படையல்களில் பெருத்த மாறுபாடு உள்ளது. அந்த ௬௦ வயது மனிதனின் எலும்பில் 2936 மணிகளும், பலவகைப் பட்டைகளில் குறுக்கும் நெடுக்காக,தலைத் தொப்பி, முன்பகுதி , கை,கால்கள், இடுப்பு என பல இடங்களில் கட்டப்பட்டுள்ளன. தலையில் நரிப் பற்கள் பல பதித்த ஆபரணப் பட்டை கட்டப்பட்டுள்ளது. தலையும் தலையும் ஒட்டி படுக்க வைக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ள எலும்புகள் கணவன் மனைவியாய் இருக்க வேண்டும்.௧௩ வயது பையன் 4,900 பாசிகள், நரிப் பல் மற்றும் தொப்பி இத்யாதி களுடன் இருந்தான். இவன் நரியின் சிங்கப் பற்கள் 250 பதித்த இடுப்பு பட்டை கட்டியிருந்தான். நெஞ்சில் கம்பளி யானையின் தந்தத்தால் செய்த டாலர் கம்பளி யானை உருவில் இருந்தது.9வயது எலும்பு சிறுமியுடையது. அதில் 5 ,200 பாசிகள் இருந்தன. ஆனால் நரிப் பல் கிடையாது; கழுத்தணியும் கிடையாது. .

சுன்கிர் புதைவிடங்கள் ஆய்வு

தந்தப் பாசிகளும், குளிருக்கு அடக்கமான தோலுடையும்..!

மனிதனின் முன்கையில் காணப்படும் அலங்கார பாசிகள் கம்பளி யானையின் தந்தைகள் மூலம் செய்யப்பட்டவை. சிலவற்றில் கருப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளன. . நீள வாக்கில் வெட்டப்பட்டு, துண்டுகளின் முனையில் துளையிடப்பட்டு, அவற்றை ஒன்றாக கோர்த்து கழுத்தில் அணிகலனாக கட்டியுள்ளனர். ஆணின் கழுத்தில் சின்ன பதக்கம்/தொங்கல் காணப்படுகிறது. அதில் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணங்கள் பூசப்பட்டுள்ளன. கிடைத்த எலும்புகளை ஆய்ந்ததில் அம்மனிதர்கள் எப்படி உடை உடுத்தி இருந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் தோல் ஆடையை குளிருக்காக அணிந்தனர். அதில் தந்த பாசிகளைக் கொண்டு அலங்கரித்திருந்தனர்.கால்களிலும் தோல் உறைதான். அனைத்தும் தந்தப் பாசி அலங்காரம்தான். இவை அவர்கள் செல்வச் செழிப்புடன் இருந்தனர் என்பதற்கான தடயங்கள் இவை .கம்பளி யானையின் தந்தங்களால் வசிப்பிடமும் அமைத்துக் கொண்டனர்.பாசிமணிகளைச் செய்து துணியில் தைத்தல்ஆனால், ஒரு பாசி செய்யவே பல நூறு மணிகள் ஆகலாம். ஏனெனில் அப்போது அவைகளை உருவாக எந்த வித கருவியும் இல்லை ..! இன்றைய நவீன அறிவயல் ஆய்வு மூலம், கிடைத்துள்ள எலும்புகளிலிருந்து, அவற்றின் முகம், உடை எப்படி இருக்கும் என்பதை கண்டறிந்து கணினி மூலம் அனைவரும் காணும் வண்ணம் தந்துள்ளனர். இந்தனை கண்டுபிடிப்புகளும், அவன் வாழ்ந்த காலத்தின் உடையை, உரைவிடத்தன்மையை,வருடங்களை, வாழ்வியலை கண்டுபிடித்தது அறிவியலே..!அறிவியலில் ஆற்றல், தன்மை ,எழுச்சி, மற்றும் வீச்சு அளப்பரியது.

ஒன்றாய் புதைக்கப் பட்ட தம்பதியர்

சுன்கிரின் எலும்புகள், அணிகலன்கள், உடை

சுன்கிர் புதைவிடம்

எலும்பிலிருந்து உருவகிக்கப் பட்ட ஆண் உருவம்

சுன்கிர் ஆண்

சுன்கிர், வேட்டையாடி

சுன்கிர் மக்கள் வாழ்ந்த கம்பலி யானை தந்தத்திலான வீடுகள்

No comments:

Post a Comment