Thursday, February 23, 2012

அக்டோபர்..15 ,உலக வெள்ளைக் குச்சி (பாதுகாப்பு) தினம்..! world whitecane (safety) day/ lions world sight day

அக்டோபர்..15 ,உலக வெள்ளைக் குச்சி (பாதுகாப்பு) தினம்..! world white cane (safety) day/ lions world sight day

by Mohana Somasundram on Sunday, October 16, 2011 at 3:33am ·

அக்டோபர்..15 ,உலக வெள்ளைக் குச்சி (பாதுகாப்பு) தினம்..! world white cane (safety) day/ lions world sight day

Increasing Awareness of the "Symbol of Independence"

வெள்ளைக் குச்சி..!

அக்டோபர் 15 , உலக வெள்ளைக் குச்சி தினம், 1964 லிருந்து ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. நம்மில் நிறைய பேருக்கு வெள்ளை குச்சி என்றாலே புரியாது, இதில் வெள்ளை குச்சி தினம் என்றால்... தலையும் புரியாது, வாலும் புரியாது . என்னப்பா உளறிக்கொண்டு இருக்கிறீர்கள் என்போம். . நாம் அத்துணை மேதாவிகள்.! நண்பா, பார்வைத்திறன அற்றவர்கள், தாங்கள் நடந்தது செல்வதற்குப் பயன்படுத்தும் வெள்ளைக் குச்சியைத்தான் அதன் முக்கியத்தைக் குறிப்பிடுவதற்கான , தினம் இதுவாம். நான் கூட நிறைய தடவை இதன் பயன் பற்றி முழுதும் அறியாமல் மனதுக்குள் நினைத்திருக்கிறேன்; வியந்திருக்கிறேன். எப்படி, இந்த பார்வைத் திறன் அற்ற சகோதரர்கள், இவ்வளவு துணிச்சலாய், மக்கள் நெருக்கம் மிகுந்த வீதியி்ல் பேருந்து செல்லும் தடத்தில் தைரியமாய் நடந்தது செல்கிறார்கள்.. ஏதாவது.. ஏற்பட்டால் என்ன செய்வது, என பைத்தியக்கரத்தனமாய் வியந்திருக்கிறேன்,அந்த குச்சியின் மகிமை அறியாமல்..!.இப்போதுதான் அந்த வெள்ளைக் குச்சியின் முழு பயனையும் அறிந்து கொள்கிறேன். பார்வைத்திறன் அற்றவர்கள் பயன்படுத்தும் வெள்ளைக் குச்சி அவர்களை ஒரு சுதந்திர மனிதராய் உலவ உதவுகிறது என்பதை இந்த நிமிடத்தில் தான் உணருகிறேன். .

தனி மனிதராய்.. இயங்க.. வெள்ளைக் குச்சி..!

பார்வை திறனற்றவர்கள் பயன்படுத்தும் வெள்ளைக்குச்சி முதல் உலகப் போரிலிருந்து பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது.இந்த தினம் பார்வை திறனற்றவர்கள் பயன்படுத்தும் நீண்ட குச்சியின் முக்கியத்துக்காகவும், அது எப்படி அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உண்டாக்கி தருகிறது என்பதையும் பார்வைஉள்ள மனிதர்களுக்கு உணர்த்தும் நாள்.அது மட்டுமல்லவெள்ளைக் குச்சி பார்வைதிறனற்றவர்களை அவர்கள் யாரையும் சார்ந்திராமல், சுதந்திர மனிதராய் மாற்றிய ஒரு பெருமை மிக்க சாதனம்.

வெள்ளைக் குச்சி என்றால் என்ன?

வெள்ளைக் குச்சி என்பது, பார்வைத் திறன் அற்ற மனிதர்களால் பயன்படுத்தப் படுவதாகும். அந்த குச்சியானது, அவர்கள் யாருடைய துணையுமின்றி நடந்து, எளிதாய் இயங்கவும், மற்றவர்களை இவர்களை யார் என்று கருத்துரைத்துக் காட்டவும் பயன்படும் அற்புத சாதனம். இப்போது நவீனப் படுத்தப்பட்டுள்ள அனைத்து வெள்ளைக் குச்சிகளும் அனைத்து முக்கியாமான/அடிப்படைப் பண்புகளை பூர்த்தி செயவதாக இல்லை. ஆனால் முக்கியமாக இந்த சாதனத்தில் குறைந்த பட்சம் 5 வகைக் குச்சிகள் உண்டு. ஒன்றுக்கும் அடுத்ததிற்கும் மெலிதான வேறுபாடு உண்டு .இவை செயலாற்றும் விதத்தில். ஒவ்வொன்றும் அந்த தேவைகளை ஆற்றும்படி உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள பார்வைத் திறன் அற்றோர் பயன்படுத்தும் குச்சி அடிப்பகுதியில் சிவப்பு பட்டையுடன்உருவாக்கப் பட்டுள்ளது. ஆயுதத்திறன் ..ஒரு சிறு வெள்ளைக் குச்சியில்..!

ஒரு பார்வைத்திறன் அற்றவரை அழைத்து நீங்கள்,அவரிடம் அவரின் கையில் வெள்ளைக் குச்சியைக் கொடுத்து நடக்கச் செய்து, அந்த கருவி கையில் இருந்தபோது,ம் இல்லாதபோதும்,உள்ள வித்தியாசத்தை சொல்லச் சொன்னால், அவர்கள் அதன் அத்தியாவசியத்தேவையை நன்கு உணர்த்து பேசுவார்கள். அது அவர்களுக்கு மிக மிகத் தேவையுள்ள மிகவும் மதிப்பு பெற்ற அற்புதமான உலகை அவர்களுக்கு மட்டும்,காட்டுகிறது. தங்களின் பாதுகாப்பை, உத்திரவாதம் செய்யும் ஓர் மந்திரக்கோல் என்றும் கூட கூறுவார்கள். அப்படி அருமையாய் உருவாக்கப் பட்டிருக்கும் ஒரு சாதனம். அது. இந்த வெள்ளைக் குச்சியானது, அவர்களுக்கு கட்டாயத் தேவையானது. அவர்களை யாருடைய உதவியும் இன்றி தானாக இயங்கச் செய்யும் சிறந்த ஆயுதம். சுதந்திர மனிதனாய்க் காட்டும் அற்புத சாதனம்.

எந்த பொருள்.. வெள்ளாக் குச்சியாய்..!

வெள்ளைக் குச்சி கண்ணாடி இழைகளால்/கார்பன் இழை/உலோகத்தால் உருவாக்கப் பட்டது. இந்த குச்சியை ஒரு கரத்தால் கையாள முடியும். இந்த குச்சியை பார்வைத் திரனர்றவள் கையை வீசி ஆட்டி நடக்கும்போது அந்த வெள்ளைக் குச்சியானது தனி ஊசல் போல் இருபக்கமும் அலைபாயும். இதன் மூலம், அந்த சகோதர்கள், சாலையில் எளிதாக யாருடைய உதவியும் இன்றி நடக்க முடிகிறது. அவர்களின் தடத்தை அறிய, , அதில் உள்ள பொருள்களை அறிய, மேடு பள்ளம் கண்டறிய, மாடிப் படிகள் மற்றும் கதவுகளையெல்லாம் அந்த குச்சி அவர்களின் ஆருயிர் நண்பனாய் அவர்களுக்கு வழி காட்டுகிறது. இந்த வெள்ளைக் குச்சி பார்வைத்திறன் அற்ற ஒருவரின் கரத்தில் அஷ்டாவதானியாக செயல்படும். உதாரணமாக, அந்தக் குச்சி, ஒருவருக்கு திறமையை அளிக்கிறது. பிரச்சினைகளுக்கு தீர்வும், ஆளுமைத்தன்மையையும் உருவாக்கித் தருகிறது. வெள்ளைக்குச்சி பார்வையற்றவர்களின் சுதந்திரம் மற்றும் பெருமை/பெருமிதம் அதுவே. அதே சமயத்தில் வெள்ளைக்குச்சியை ஒருவர் கையில் வைத்திருந்தால் அவர் பார்வைத் திறன் அற்றவர் என்று நாம் எளிதாக அடையாளம் காண முடியும்.

குச்சியின் பிறப்பு..!

இதனைக் உருவாக்கியவர் ரிச்சர்டு ஹோவர் (Dr Richard Hoover) என்பவர்தான். இதனால் பாரம்பரியமாக இது ஹோவரின் குச்சி என்றே அழைக்கப் படுகிறது. ஆனால் இது பல நூற்றாண்டுகளாகவே பயன்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கிறது.

ஜேம்ஸ் பிக்ஸ் என்ற நிழற்படக்காரர் 1921 ல் , ஒரு விபத்துக்குப் பின் பார்வை இழந்துவிட்டார். அதன் பின் அவர்க்கு கூட்டத்தில் நடப்பதும், விட்டைச் சுற்றி வருவதும் மிகுந்த சிரமமாகிறது.அதனால் அவர் பயன்படுத்திய நடை குச்சிக்கு வண்ணம் தீட்டி வைத்திருந்தார் எளிதில் அடையாளம் கொள்ளும்ப்படியில் ..!

உலகம் முழுவதும்..வெள்ளைக் குச்சி..!

பிரான்சில், 1932 ல் குல்லி ஹேர்பேமொன்ட் ( France, Guilly d'Herbemont )தேசிய வெள்ளைக் குச்சி இயக்கம் என்ற ஒன்றினைத் துவங்கி, பார்வைத் திறனற்ற மக்களுக்கெல்லாம் வெள்ளைக் குச்சி அளித்தார். . பின்னர் 1931 , பிப்ரவரி 7 ல், இவரே, பிரான்சு அரசின் அமைச்சர்கள் முன்னிலையில் அடையாளமாக, இரண்டு வெள்ளைக் குச்சிகளை பார்வைத் திறனற்ற மனிதர்களுக்குக் கொடுத்தார். அதன் பின், முதல் உலகப் போரில் பார்வையைப் பறிகொடுத்தவர்களுக்கும், பார்வை திறனற்ற குடிமக்களுக்கும் என 5 000, வெள்ளைக் குச்சிகள வழங்கினார். பிறகு அமெரிக்கர்களும் அரிமா சங்கத்தின் மூலம் இதனை ஒரு இயக்கமாகச் செய்தனர்.அதற்குப் பின்தான் 1964 ல் இதனை உலக வெள்ளைக் குச்சி தினம் அக்டோபர் 15 ம் நாள் கொண்டாட முடிவு செய்யப் பட்டது.இந்த குச்சியே ஐரோப்பாவில் அடியில் இரண்டு சிவப்பு பட்டை இருந்தால் அது கேட்கும் திறனற்ற வர்களையும் இணைத்துக் குறிக்கும் என்று சொல்லப்படுகிறது.

பார்வைத்திறனற்றோர்.. வாக்களிக்க.. வாக்குச்சீட்டு..

இப்போது2008 லிருந்து மோனிக் டெ வில்ட் ( Monique de Wilt,) உருவாக்கிய GPS உள்ள global navigation satellite system உள்ள வெள்ளைக் குச்சிகள்..பார்வைத்திறனற்றவர்களுக்கு பயன்படுத்தப் படுகிறது..இந்தியாவில் பார்வைத்திறனற்றோர்களை மதித்து முதன் முறையாக அவர்களுக்கும் வாக்களிக்க வசதி செய்யப் பட்டுள்ளது. எப்படி என்கிறீர்க்ளா? வருகின்ற 2011, அக்டோபர் 18ம் நாள், கோவாவில் இடைத் தேர்தல், நடைபெற உள்ளது. இதில் பார்வைத் திறனற்றவர்களுக்கு பிரைலி வாக்குசீட்டுகள், வாக்களிக்கும் இடத்தில் வழங்கப்படஉள்ளன எனப்து பெருமையும், மகிழ்வையும், நெகிழ்வையும் அளிக்கும் செய்தியாகும்..!. இந்த முறையினை மற்ற மாநிலங்களும் பின்பற்றினால்.. நமக்கெல்லாம் சந்தோஷம் தானே..!

BPA observes White Cane Safety Day

No comments:

Post a Comment