Tuesday, February 12, 2013


அறிவியல் புனைகதைகளின் பிதாமகன்..வெர்ன் ஜுல்ஸ்


by Mohana Somasundram on Friday, February 8, 2013 at 1:29pm ·


வணக்கம் நண்பர்களே,. நமக்கு ஏன் தாத்தா பாட்டியைப் பிடிக்கும்? ரொம்ப விஷயங்களை, பெரிய பெரிய தகவல்கள், படிப்பு சொல்லித்தருவார்கள் என்றா? ஹூஹூம். அதுதான் இல்லை. வேறு எதற்கு? கொஞ்சம் செல்லமும் தந்து    , நிறைய கதையும் சொல்வார்கள். கதை சொல்பவர்களை குழந்தைகளுக்குப் பிடிக்கும். குழந்தைகளுக்கு மட்டுமா? இல்லை. இல்லை. கதை சொல்பவர்களை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனா நம்ம விஷயத்தில் மட்டும் கதை விடக் கூடாது. அது மட்டுமல்ல, எந்த ஆசிரியரை குழந்தைகளுக்குப் பிடிக்கும் .சந்தேகமே இல்லாமல்.. அனுசரணையாய் குழந்தைகளை நடத்துபவரும், நிறைய கதை சொல்லும் ஆசிரியரையும் தான். 
போன வாரம் தோழர் .ஒருவர்   வீட்டுக்கு போயிருந்தேன். அவர் பெண் கீர்த்தனாவிடம், எட்டாம்பு படிக்கிறார். அவரிடம், வாத்தியாரில் உனக்கு யாரைப் பிடிக்கும் என்றேன். அந்த பெண் குழந்தை, ஞானாம்பா டீச்சர்தான். ஏம்பா. அவங்கதான் நல்லா கதை சொல்லி பாடம் நடத்துவாக.பிரியமா இருப்பாக என்றது.கதை சொல்லிகளை நம் எல்லோருக்கும் பிடிக்கும். கதை விடுபவர்களைத்தான் யாருக்கும் பிடிக்காது. எனக்கு தெரிந்து தமிழகத்திலும், அறிவியல் இயக்கத்திலும் இரண்டு கதை சொல்லிகள் இருக்கிறார்கள். ஒருவர் மதுரைக்காரர்: ரத்தின விஜயன். இன்னொருவர்: விஷ்ணுபுரம் சரவணன். சென்னை வாசி. இவர்கள் இருவரும் குழந்தைகளை தங்களின் கதையால் கட்டிப் போடுபவர்கள்.குழந்தைகளுக்கு இந்த இரண்டு பேரையும் ரொம்பவே பிடிக்கும். 
    கதை என்று எளிதாக சொல்லிவிட்டோம். கதை என்றால் என்ன? இல்லாத ஒன்றை
ற்பனையாக, புனைவாக, இட்டுக் கட்டி சொல்ல வேண்டும். அதற்கு நிறைய புத்திசாலித்தனமும், ஏராளமான் கற்பனை வளமும் வேண்டும். நாட்டுப் புற கதைகள,சரித்திரக் கதைகள், புராணக் கதைகள் என கதைகளின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.ஆனால் அறிவியல் கதைகள், புனைகதைகள் எழுத நெறையா வே அறிவும், புத்திசாலித்தனமும், கூர்மையான எண்ணங்களும தேவை. இந்தியாவிலும் சரி, உலக நாடுகளிலும் சரி, குழந்தைகளுக்காகவும், பெரியவர்களுக்காகவும் உள்ள அறியவில் புனைகதை எழுத்தாளர்கள் குறைவே.அந்த அறிவியல் புனைகதை புனைவோர் பட்டியலில் முதலிடம் பெறுபவர்... வெர்ன், ஜுல்ஸ் என்ற பிரெஞ்சு எழுத்தாளர். இவரைப் பற்றி நாம் சொல்லி மாளாது. அவ்ளோ/... விஷயங்கள் உள்ளன. ஆனால் அறிவியல் புனைகதைகளின் பிதாமகன் யார் என்று கேட்டால், ஒட்டு மொத்த உலகத்தின் ஒற்றை விரல்களும்  இவரை நோக்கியே நீளும். அவ்வளவு பிரபலமானவர். அவ்வளவு எழுதி குவித்திருக்கிறார்; பயணக்கதை, நாவல், சிறுகதை, குட்டிக்கதைகள், பாளர் கதைகள், அறிவில் புனை கதைகள் என்று உலகை பிரமிக்க வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார் தந்து திறமையால்..!

ஆழ்கடலில் சாகசப் பயணம், பூமியும் மையத்துக்கு ஒரு பயணம்(1864), எண்பது நாட்களில் உலகப் பயணம் (1873)(1864), பூமியிலிருந்து நிலவை நோக்கி, ஆழ கடல் அடியில் இருபதாயிரம் அமைப்புகள்(1869),பாதாளத்திற்குள் ஒரு பயணம். போன்றவை உலகப் புகழ் பெற்றவை  அது மட்டுமா அவர்  விண்வெளி ஆகாயம் காற்று ஏராளமானபுத்தகங்கள் எழுதி குவித்து உள்ளார். ஆழ் கடலுக்குள் செல்லும்  நீர் மூழ்கி கப்பலையும் விண்வெளிக் கப்பல் பற்றியும் அவற்றைக்  கண்டு பிடிக்கு முன்பே அதனைப் பற்றி கற்பனையில் வடித்த எழுத்தாளர். இதனாலேயே வெர்ன், ஜுல்சை உலகம் முழுவதும் அறிவியல் புனைகதைகளின் முதல்வன், பிதாமகன், தந்தை என்று கொண்டாடுகிறது.

    வெர்ன், ஜுல்ஸ் அவரது கதைகள் மூலம், அதில் வரும இயந்திரங்கள், அவை  அமைப்பு செயல்படும் விதம் தொடர்பாய் நேரில் பார்ப்பது போல் அவ்வளவு அற்புதமாய் வரைந்தது போல, படம் போட்டுக்  காட்டுவது போல விளக்கம் தந்திருப்பார்.இன்னொரு அற்புதமான விஷயம் என்னவென்றால் நாம் இப்போதுதான் ஹைடிரஜனை ஆற்றலாகப் பயன் படுத்துவது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்   வெர்ன், ஜுல்ஸ்  அன்றே , சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பே இதனை அதாங்க ஹைடிரஜனை ஆற்றல்    பற்றி    இவரின் கற்பனைத்திறன், புனைவின் வளம் பற்றி நீங்கள் எல்லாம் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். வெர்ன், ஜுல்ஸ்  அவரது அறிவியல் புனைகதைகளில் ஸ்கை கிராப்பர்கள் நீர்மூழ்கி ஹெலிகாப்டர்,ஆகாய் விமானம் போன்றவற்றைப் பற்றி , இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் அத்துணை சாதனங்கள பற்றியும் அன்றே பயன்படுத்தி புனைவுகள் தந்துள்ள வெர்ன், ஜுல்ஸ்  அதி புத்திசாலி மகா திறமைசாலி அற்புதமான புனைவு எழுத்தாளர்.  அது மட்டுமல்ல.அன்றே நிலவை நோக்கி ஒரு பயணம் என்பது கொஞ்சம் அதீதமானதுதான் . வடதுருவம்மற்றும் தென் துருவம் நோக்கி அவரின் கற்பனைத் தேடல்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.சூடான பலூன்கள்  வான் வழிப் பயணம் என்றால் எப்படி எப்படி இப்படி இவரை யோசிக்க வைத்தது வியக்கிறோம்,வெர்ன், ஜுல்ஸின் மூளை செயல்பாட்டை எண்ணி  அவரது காலகாட்டத்தில் இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால், நிச்சயம் இவர் ஒரு விஞ்ஞானி ஆகியிருப்பார் அவ்வளவு  பரந்த கற்பனைத் திறனுடன் அவற்றை விளக்கும் திறனும் பெற்ற மாமேதை வெர்ன், ஜுல்ஸ் . எதிர்காலம் பற்றிய மிகவும் விரிந்த பார்வையும் கணிப்பும் கொண்டவர்.


     வெர்ன், ஜுல்ஸின்  எழுத்துக்களில்  சமுதாய நலனும் அறிவியல்இவரின் தந்தை பார்வையும் தெளிவாக இருந்தன.ஜுல்ஸ் வெர்ன்  (Jules Verne) 1828ம் ஆண்டு பிப்ரவரி  8ம் நாள், பிரான்ஸின் ,நான்டிஸ் என்ற துறைமுக நகரில் பிறந்தார். இவரின் தந்தை இவரது அன்னை   பியரி வெர்ன் (Pierre Verne). சிறந்த வழக்குரைஞர். இவரது அன்னை :சோபியா அலோடி (Sophie Allotte). கப்பல் தலைவர்களாகவும், கப்பல் தயாரிப்பாளர்களாகவும் விளங்கிய ஒரு குடும்பத்தில் பிறந்தவர்.  இந்த தம்பதியின் ஐந்து குழந்தைகளில் வெர்ன், ஜுல்ஸ் தான் மூத்தவர். சிறு வயதிலேயே புவியியல் தேடி படிப்பதிலும் இசையை நாடி படிப்பதிலும் நிகரற்ற வரை இருந்தார், மேலும் அயல் மொழிகளிலும் தன நிபுணத்துவத்தைக் காட்டினார் . தந்தையுடன் மாலை வேளைகளில் கப்பல் இருக்கும் இடம் நாடிச் சென்று அதில் பயணம் செய்தவர்கள் சொன்ன அனுபவங்களையும் ஆர்வத்துடன் கேட்டு அவற்றைப் பதிவு செய்வார் அவற்றை தன புனைகதைகளிலும் இணைத்துள்ளார் . தந்தையின் ஆசைப்படி சட்டம் படித்தாலும் தன்னை ஓர் எழுத்தாளனாக் உருவாக்கிக் கொண்டார்.இந்த விஷயம் தந்தைக்குத் தெரிந்ததும் அவர் தரும் பொருளாதார உதவியை நிறுத்திக் கொண்டார். வெர்ன், ஜுல்ஸ் தன காலிலேயே நிற்க வேண்டியதாயிற்று .

     வெர்ன், ஜுல்ஸ் ஹோநோரைன் டி வியனே மொரேல் (Honorine de Viane Morel) என்ற விதவையைச் சந்தித்து காதலித்து அவரையே 1857 ல்,ஜனவரி 10 ம் நாள் மணம் முடித்தார் . தன துணைவியின் உதவியாலேயே மீண்டும் தன எழுத்துப்  பணியைத் தொடர்ந்தார்.   பின்னர்  ஆகஸ்ட் 3ம் நாள்,   1861 ல் அவர்களுக்கு  ஓர்ஆண் மகவு பிறந்தது 
வெர்ன், ஜுல்ஸ் தன வாழ்நாளில் 65 புதினங்கள் 30 நாடகங்கள், ஏராளமான   சிறு கதைகள்,கட்டுரைகள் என எழுதிக் குவித்தார். 1905, மார்ச் 24 ம் நாள் , 77 வயதில் அவரின் வாழ்க்கை நிறைவுற்றது    

His first and better known works:
 • Backwards to Britain (Voyage en Angleterre et en Écosse, 1859) [9]
 • A Voyage in a Balloon (Un Voyage en ballon, August 1851 as published in Musée des familles)[10]
 • Five Weeks in a Balloon (Cinq semaines en ballon, 1863)[11]
 • Paris in the Twentieth Century (Paris au XXe siècle, 1863, not published until 1994)
 • A Journey to the Center of the Earth (Voyage au centre de la Terre, 1864)
 • From the Earth to the Moon (De la Terre à la Lune, 1865)
 • The Adventures of Captain Hatteras (Voyages et aventures du capitaine Hatteras, 1866)
 • In Search of the Castaways or Captain Grant's Children (Les Enfants du capitaine Grant, 1867–1868)
 • Twenty Thousand Leagues Under the Sea (Vingt mille lieues sous les mers, 1870)
 • Around the Moon (Autour de la Lune, a sequel to From the Earth to the Moon, 1870)
 • A Floating City (Une ville flottante, 1871)
 • Dr. Ox's Experiment (Une fantaisie du Docteur Ox, 1872)
 • The Adventures of Three Englishmen and Three Russians in South Africa (Aventures de trois Russes et de trois Anglais, 1872)
 • The Fur Country (Le Pays des fourrures, 1873)
 • Around the World in Eighty Days (Le Tour du monde en quatre-vingts jours, 1873)
 • The Survivors of the Chancellor (Le Chancellor, 1875)
 • The Mysterious Island (L'Île mystérieuse, 1875)
 • The Blockade Runners (Les Forceurs de blocus, 1876)
 • Michael Strogoff (Michel Strogoff, 1876)
 • Off on a Comet (Hector Servadac, 1877)
 • The Child of the Cavern, also known as Black DiamondsThe Underground City or The Black Indies (Les Indes noires, 1877)
 • Dick Sand, A Captain at Fifteen (Un capitaine de quinze ans, 1878)
 • The Begum's Fortune (Les Cinq cents millions de la Bégum, 1879)
 • The Steam House (La Maison à vapeur, 1879)
 • Tribulations of a Chinaman in China (Les Tribulations d'un Chinois en Chine), 1879
 • Eight Hundred Leagues on the Amazon (La Jangada, 1881)
 • The Green Ray (Le Rayon vert, 1882)
 • Kéraban the Inflexible (Kéraban-le-têtu, 1883)
 • Frritt-Flacc (1884)
 • The Vanished Diamond (L’Étoile du Sud, 1884)
 • The Archipelago on Fire (L’Archipel en feu, 1884)
 • Mathias Sandorf (1885)
 • Robur the Conqueror or The Clipper of the Clouds (Robur-le-Conquérant, 1886)
 • Ticket No. "9672" (Un billet de loterie, 1886 )
 • North Against South (Nord contre Sud, 1887)
 • The Flight to France (Le Chemin de France, 1887)
 • Family Without a Name (Famille sans nom, 1888)
 • Two Years' Vacation (Deux ans de vacances, 1888)
 • The Purchase of the North Pole (Sans dessus dessous, the second sequel to From the Earth to the Moon, 1889)
 • César Cascabel (1890)
 • Mistress Branican (1891)
 • The Carpathian Castle (Le Château des Carpathes, 1892)
 • Claudius Bombarnac (Claudius Bombarnac, 1893)
 • Foundling Mick (P’tit-Bonhomme, 1893)
 • Propeller Island (L’Île à hélice, 1895)
 • Facing the Flag (Face au drapeau, 1896)
 • Clovis Dardentor (1896)
 • The Sphinx of the Ice Fields or An Antarctic Mystery (Le Sphinx des glaces, a sequel to Edgar Allan Poe's The Narrative of Arthur Gordon Pym, 1897)
 • The Mighty Orinoco (Le Superbe Orénoque, 1897)
 • The Village in the Treetops (Le Village aérien, 1901)
 • The Kip Brothers (Les Frères Kip,1902)
 • Master of the World (Maître du monde, sequel to Robur the Conqueror, 1904)
 • Invasion of the Sea (L’Invasion de la mer, 1904)
 • A Drama in Livonia (Un drame en Livonie, 1904)
 • The Lighthouse at the End of the World (Le Phare du bout du monde, 1905)
 • The Golden Volcano (Le volcan d'or, 1906)
 • The Chase of the Golden Meteor (La Chasse au météore, 1908)
 • The Danube Pilot (Le Pilote du Danube, 1908)
 • The Survivors of the "Jonathan" (Les Naufragés du « Jonathan », 1909)
 •  
  • Fiction
   • A Winter Amid the Ice
   • Abandoned
   • All Around the Moon
   • An Antarctic Mystery
   • Around the World in Eighty Days
   • Dick Sand: A Captain at Fifteen
   • Eight Hundred Leagues on the Amazon
   • Facing the Flag
   • Five Weeks in a Balloon
   • From the Earth to the Moon
   • Godfrey Morgan
   • In Search of the Castaways
   • Journey to the Center of the Earth
   • Master of the World
   • Michael Strogoff
   • Off On A Comet
   • Robur the Conqueror
   • The Adventures of a Special Correspondent
   • The Blockade Runners
   • The Fur Country
   • The Moon-Voyage
   • The Mysterious Island
   • The Pearl of Lima
   • The Secret of the Island
   • The Survivors of the Chancellor
   • The Underground City
   • The Voyages and Adventures of Captain Hatteras
   • The Waif of the "Cynthia"
   • Ticket No. 9672
   • Topsy-Turvy
   • Twenty Thousand Leagues Under The Seas
  • Non-Fiction
   • Celebrated Travels and Travellers


1 comment:

 1. நன்றி அவரைப் பற்றிய செய்திக்கு.பல புத்தகங்களில் அவரை ஜூல்ஸ்வெர்ன் என்பதாகத்தான் குறிப்பிட்டுள்ளனர். "ஆழ கடல் அடியில் இருபதாயிரம் அமைப்புகள் (1869)",இதில் "அமைப்புகள்" என்று தமிழ்ப் படுத்தாமல் லீகுகள் என்றே குறிப்பிட்டிருக்கலாம். இங்கு லீகுகள் என்றால் அவரது கால நீட்டல் அளவை(unit)க் குறிக்கும் பெயர்ச்சொல்.

  ReplyDelete