Sunday, June 26, 2011

மாலைப் பொழுதின்...பொன் மாலையான.. தென்..அழகோவியம்.. திரிசங்கு..!

மாலைப் பொழுதின்...பொன் மாலையான.. தென்..அழகோவியம்.. திரிசங்கு..!

by Mohana Somasundram on Tuesday, June 21, 2011 at 12:37am

மாலையின் தென் வானில் ..ஒரு மாலை..!

நண்பர்களே வணக்கம். மாலை மயங்கி, சூரியன் தன் பணியை புவியின் மறுபக்கத்துக்கு துவங்கப் போனதும், கருப்பு வான் திரையில் வண்ணக் கோலங்களாய்,பல வண்ண வைரங்களாக விண்மீன்கள் அங்கங்கே எட்டிப்பார்க்கின்றன. 2011, ஜூன் மாதம் /இப்போது, தென் திசையைப் பாருங்கள். தெற்கு வானில் பொன் மாலையாய் மிதக்கும் இதனை நாம் பார்த்தவுடனேயே கண்டுகொள்ளலாம். எளிதில் அடையாளம் காணக் கூடிய, சிலுவைக் குறி போன்ற 4 பிரகாசமான விண்மீன்கள் இந்த தொகுதியில் காணப்படும்.அதன் ஒரு பக்க வரிசையிலேயே, 5வது இன்னொரு விண்மீனும் காணப்படும். இந்த விண்மீன் தொகுதியின் பெயரும் கூட, விண்மீன் படலம் காணப்படும் திசையையும், உருவத்தையும் சொல்லும் வகையில் தெற்கு சிலுவைதான். இதனை திரிசூலம் என்றும் சொல்வார்கள், ஆங்கிலத்தில் crux என்பார்கள். இந்த விண்மீன் படலம் தெற்கு துருவத்தை மட்டுமே சுற்றி, சுற்றி வந்து கொண்டிருக்கும். சர்வ தேச வானியலாளர்கள் குறிப்பிட்ட 88 விண்மீன் தொகுதிகளில், மிகவும் சிறிதான விண்மீன் மண்டலம் இதுவே.!இதனை இரவு 10 மணிவரை பார்த்து மகிழலாம்..

இதன் வழியேதான், நமது சூரிய குடும்பம் வசிக்கும்,பால் வழி மண்டலமும் செல்கிறது. இந்த விண்மீன் தொகுதி அப்படியே, பூமியின் தென் துருவத்தை வட்டமடித்தே சுற்றுகிறது. நீங்கள் அப்படியே அலுங்காமல் திரும்பி வடதிசையைப் பார்த்தீர்களானால், அங்கே வானில் உயரத்தில், சப்தரிஷி மண்டலம்,/பெருங்கரடிக் கூட்டம் (Great bear), உச்சி வானின் அருகே தொங்கிக் கொண்டிருக்கும். இதனை பெரிய கரண்டி (Big Dipper) என்றும் வேடிக்கையாக சொல்வதுண்டு.திரிசூலமும், சப்தரிஷிமண்டலமும் எதிரெதிர் துருவங்களில், துருவம் சுற்றும் விண்மீன்கள்.

மகிஷாசுரன்...பாதுகாப்பில்.. திரிசூலம்..!

திரிசூலம்/திரிசங்கு விண்மீன் தொகுதிக்குக் கீழே பளிச்சென்ற இரண்டு விண்மீன்கள் மஞ்சளும், வெள்ளைப் புள்ளியுமாய் தெரியும். இதில் நன்கு பளிச்சிட்டு மஞ்சளைப் பூசிக்கொண்டு காட்சி அளிப்ப்து . ஆல்பா செண்டாரி (Alpha centauri ) வொண்மீன். இதுதான் சூரியனுக்கு அடுத்த படியாக பூமிக்கு வெகு அருகில் உள்ள விண்மீன். இது சுமார் 2 ,25 ஆண்டு ஒளி ஆண்டுகள்(ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தூரம்..1 light year = 9.4605284 × 1015 meters /10 மில்லியன் மில்லியன் கி.மீ ) தொலைவில் காணப்படுகிறது. இதன் அருகில் உள்ள சின்ன வெண்மையான பளிச்.. தான் பீட்டா செண்டாரி( Beta Centauri). இந்த விண்மீன்கள் இரண்டையும் தென்பகுதி குறியீடுகள் (southern pointers) என்று குறிப்பிடுகின்றனர். இது மகிஷாசுரன்(Centaurus) என்ற விண்மீன் தொகுதியைச் சேர்ந்தது ஆகும். இந்த மகிஷாசுரனின் காலுக்கடியில்தான் தெற்குச் சிலுவை ஒளிந்து கொண்டு பத்திரமாய் கிடக்கிறது.

சிலுவையின் விண்மீன்கள்..!

தெற்குச் சிலுவை விண்மீன் தொகுதி பட்டம் போன்ற உருவுடன் இருக்கிறது. இதில் ௫ வது விண்மீனும் காணப்படுகிறது. இவைகளுள் முக்கியமான், அக்ருக்ஸ் (Acrux), மைமோசா (Mimosa),காக்ருக்ஸ் (Gacrux) மற்றும் டெல்டா குரூயிஸ் (Delta Cruis). இவை எல்லாம் பி(B) வகை விண்மீன்கள் ஆகும்.இவைகள் .சுமார், 10 -20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மகிஷாசுரனின் துணைத்தொகுதியில் இணைந்தன. தென் சிலுவையின் அடிப்பகுதியில் காணப்படும், அக்ரக்ஸ் (Acrux) ஓர் இரட்டை விண்மீன் ஆகும். இது வானில் காணப்படும் பிரகாசமாய் மின்னும் விண்மீன்களில் 13 வதுஇடத்தை வகிக்கிறது . இதன் வெப்ப நிலை.. 30 ,000 கெல்வின். அது மட்டுமா? நமது சூரியனை விட, சுமார், 25 ,000, மடங்கு பிரகாசமானது. இதிலுள்ள மிக மிக ஒளியுள்ள விண்மீனும் கூட, நம் ரவியைவிட, 16 ,000 மடங்கு ஒளியைக் கக்கும். இது நம் பூமியிலிருந்து, சுமார், 370 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. முதல் ஓரிரு ஓரிரு வாரங்களில் பிரகாசமாகி,நடு இரவில் மறைந்து விடுகிறது. இது ஓர் இரட்டை விண்மீன். அத்துடன்,இதனைச் சுற்றி, சுமார் 10 திறந்த விண்மீன் குஞ்சுகள் (Open Clusters ) கொட்டிக் கிடக்கின்றன.

அதனால் இதனை நகைப்பெட்டி(Jewel Box) என்றும் செல்லமாக அழைக்கின்றனர்.இங்கே, சுமார், 100 விண்மீன்கள் காணப்படுகின்றன.இவை சும்மார் 7 ,500 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இதன் பரப்பு சுமார்:20 சதுர ஒளியாண்டுகள். .இந்த தொகுதியின் இரண்டாம் நிலை பிரகாசபதி, பீட்டா குரூசிஸ். இதுவும் மிக வெப்பமான விண்மீன் தான். இது சுமார்,490 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலுள்ள தொட்டால் சுருங்கி மலர் என்ற பூவின் பெயரை இதற்கு சூட்டி இருகின்றனர்.

அசுர... விண்மீன்..!

தென்சிலுவையில் மஞ்சள் வண்ணத்தில் காணப்படும் விண்மீன் காக்ரக்ஸ் (gammaGacrux).இந்த விண்மீன் இதன்எரிபொருளை எல்லாம் எரித்து தீர்த்துவிட்டு, வேகமாக வீங்கிக் கொண்டிருக்கிறது வெடிக்க..! இப்போது இதன் பெயர் சிவப்பு/ஆரஞ்சு பூதம். அது மட்டுமல்ல இந்த விண்மீன் குளிர்ந்து கொண்டும் கூட இருக்கிறது. இதன் வெப்பம் இப்போது சுமார் 3 ,500 கெல்வின் தான் .இது நம் பூமியிலிருந்து சுமார் 220ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது. இதிலுள்ள டெல்டா குரூஸ் கொஞ்சம் பொலிவு (ஒளி )குறைவானது.. இது பூமியிலிருந்து சுமார் 570 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

கிரேக்கர்களின்.. விருப்பமான விண்மீன் தொகுதி..!

பெரும்பாலும் இந்த விண்மீன் தொகுதி பூமியின் வட கோடியில் வாழ்பவர்களுக்குத் தெரியாது. எனவே இது ஒரு நவீன விண்மீன் படலம். கிரேக்க மற்றும் ரோமானியர்கள் குறிப்பிடுவது. தென் பகுதி வழியே கடல் பயணம் செல்பவர்களுக்கு இது திசைகாட்டியாக இருந்திருக்கிறது. பழங்கால கிரேக்கர்கள் இதனை மகிஷாசுரன் தொகுதியின் ஒரு பகுதி என்றே நினைத்தனர். அதென்சிலிருந்து ஏதென்சிலிருந்து இதனை கி.மு1000 த்தில் கண்டுபிடித்தனர். பூமியின் சுற்றால் இது கி.பி 400 களில் தெரியவில்லை. பின்னர் இது கண்டுபிடிப்புகளின் காலத்தில் அய்ரோப்பியர்களால், கண்டறியப்பட்டது. பின் 1613 ல் , பெட்ராஸ் ப்லான்சியஸ்(Petrus Plancius ) என்பவரால் கண்டறியப்பட்டது. ஆஸ்திரேலிய அபார்ஜின்கள் இதனை மிர்ராபுக்கா(Mirrabooka) என்று அழைகின்றனர். இவர் இந்த சிலுவையை உருவாக்கிய பியாமி என்பவறால் உருவாக்கப் பட்டு, சாகா வரம் பெற்று வாழ் கின்றனர்.

கதை சொல்லும் சிலுவை..!

தென்சிலுவை தொடர்பாக ஒரு கதையும் உண்டு.அலகித்ஜா (Alakitja ) என்றபெரிய பாறை மீன் பால் வழி மண்டலம் என்ற ஆற்றில் வாழ்கிறது. இது அது விரும்பிய நீர்ச் சுழிக்கு செல்லும்போது, வான் மனிதர்களின் பார்வையிலிருந்து/கணனியிலிருந்து தப்பியே ஒதுங்கி ஒதுங்கி செல்கிறது...! அது ஏராளாமான வெள்ளை அல்லிப்பூக்களின் கூட்டத்தின் வழியேயும் நீந்திச் செல்கிறது. பூமியில் வாழும் மக்கள் எல்லோரும் இந்த மலர்க்கூட்டத்தை நன்கு காணமுடியும். அவைகளெல்லாம் விண்மீன்களே.இதற்கிடையில் இரு சகோதரர்கள் பூமியில் ஆறுகளையும், மலைகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். உழைப்பு மிகுதியால் அவர்களுக்கு பசி வந்து விட்டது. உணவு தேடுகின்றனர். அப்போது வானில் திரியும் அழகித்ஜா மீனைக் கண்டு, கொல்வதற்காக அதன் மேல் ஈட்டி வீசுகின்றனர். அந்த பெரிய மீனை இருவரும், பெரிய தீக் கொட்டகையில் சுட்டு உண்கின்றனர். அவைகளே இன்றும் வானில் இரண்டு நெருப்பு துண்டுகளாய் தெரியும் டெல்டா குரூயிஸ் மற்றும் காமா குரூயிஸ் விண்மீன்கள்.அதன் அருகில் பளிச்சிட்டே தெரியும் விண்மீன்கள் தான் ஆறு வெட்டிய சகோதரர்கள்.அலகித்ஜா அவற்றின் ஊடே கருப்பாக தெரிகிறார்..!

வசிஷ்டர் ..அருந்ததி... இந்தியக் கதை..!

வசிஷ்டர்

வஷிஷ்டர் கோவில்.. கௌகாத்தி.

இந்தியாவில் இந்த திரிசங்கு பற்றி வேறு வகையான கதை உண்டு. ரிஷிகளில் வசிஷ்டருக்கு ஒரு தனி இடம்., சிறப்பிடம் உண்டு. பிரம்மா படைப்புத் தொழிலைச் செய்தபோது பிரஜாபதிகள் என்ற ௧௦ பேரை முதலில் உருவாக்கினார்.அவர்கள் பல்லாயிரம் கோடி மக்களை உண்டாக்கி உலகை விரிவாக்கினார். அப்படிப்பட்ட பிரஜாபதிகளுள் ஒருவர்தான் வசிஷ்டர். அதனால் இவரை பிரம்மாவின் பிள்ளை என்கின்றனர். வசிஷ்ட மகரிஷியின் பத்தினி/மனைவியான அருந்ததி.. பதிவிரதை..! கணவரைப் போலவே மகா தபஸ்வி ..!வானில் இரு விண்மீன்களும் மிக அருகில் உள்ளளன.வானில் மிகச் சிறிய விண்மீனான அருந்ததியை திருமண நேரத்தில் மணமகன் மனைவிக்கு காட்டுவது என்பது மணப்பெண் அருந்ததியைபோல வாழவேண்டும், என்ற சடங்கே ..!

திரிசங்குவின்.. தீராத அவா..!

நாம் திரிசங்கு சொர்க்கம் என்ற சொல்லை நம் வாழ் நிலையில் பயன்படுத்துகிறோம்..! ஆனால் அதன் உண்மையான பொருள் பெரும்பாலோருக்குத் தெரிவதில்லை. மேலேயும் இன்றி, கீழேயும்

இ ன்றி, அந்தரத்தில் நிலையின்றி ஆடிக்கொண்டும் தொங்கி கொண்டு நிற்கும் நிலைக்கு திரிசங்கு என்று பெயர். அந்தரத்தில் ஆடி நிற்பதற்கும், திரிசங்கு சொர்க்கத்திற்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? அதுசம்பந்தமாக ஒரு புராணக் கதை உண்டு நண்பா ! திரிசங்கு எனற மன்னன் இஷ்வாகு குலத்தில் பிறந்தவன் ..! நீதி தவறாமல் ஆட்சி பரிபாலனை செய்தவன்.. அவனுக்கு ஒரு வினோதமான ஆசை உண்டானது. தன் வாழ்நாள் முடிந்ததும், தன் உடலோடு சொர்க்கம் செல்ல விரும்பினான். காட்டில் தவம் செய்யும் தன் குல குருவான வசிஷ்டரை அணுகி, தனது அவாவை வெளியிட்டான். வசிஷ்டர் சிரித்துக் கொண்டே, இது நடக்காத வீண் கனவே .பூலோகத்தில் பிறந்த நீ.இந்த பூத உடலோடு சொர்க்கம் செல்ல முடியாது என்றார்.

திரிசங்கு... சொர்க்கம் ..செல்லல்..!

விஸ்வாமித்திரர்

திரிசங்குக்கு எப்படியாவது இந்த உடலுடன் சொர்க்கம் செல்ல ஆசை ..! மனம் தளராமல் பல கணக்கான முனிவர்களைச் சந்தித்தார். ஆனால் ஒருவரும் சொர்க்கம் செல்ல வழி சொல்லவில்லை. புத்தி போதனை செய்து அனுப்பினர். முடிவாக திரிசங்கு விசுவாமித்திரரிடம் சென்று தன் ஆசையைக் கூறினார். .! இதற்கு முன் பல முனிவர்களை சந்தித்து கிடைத்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டான். . இறுதியில் விசுவாமித்திரரிடமும் தான் இந்த உடலோடு சொர்க்கம் போக வேண்டும் என்றான். . விசுவாமித்திரர் வசிஷ்டர் மீது பகை உணர்வு கொண்டவர். அவர், வசிஷ்டர்தான், தான் சபத் ரிஷி மண்டலத்தில் மற்ற ரிஷிகளுடன் வாழ்வதைக் கெடுத்தவர் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார். எனவே வசிஷ்டர் செய்ய முடியாததை தான் முடித்து, தன் தவ வலிமையைக் காட்ட விரும்பினார். திரிசங்குவை சொர்க்கம் அனுப்புவதாகவும் வாக்களித்தார். தனது முழு தவ பலத்தையும் இதற்கு அர்ப்பணித்து , ம்..ம்.. சொர்க்கம் செல் என திரிசங்குவை நோக்கி ஆணையிட்டார். அடுத்த நொடி திர்சங்கு வான் வீதியில் பயணித்து சொர்க்கம் நோக்கி சென்றான்,, மன மகிழ்வோடு..!

சொர்க்கம்..பக்கத்தில்.. திரிசங்கு..!

திரிசங்கு சொர்க்கத்தின் வாயிலை அடையும்போது, தேவலோக மன்னனான இந்திரன், மனித உடலுடன் திரிசங்கு வருவதைக் கண்டு கோபம் கொண்டார்.தனது வஜ்ராயுதத்தால், திரிசங்குவை அடித்து கீழே தள்ளினார். வலி தாங்காமல் கதறிக்கொண்டே திரிசங்கு தலை கீழாக வந்தான். அவன் வருவதைப் பார்த்த ரிஷி மகாராஜாவான விஸ்வாமித்திரருக்கு ஆத்திரம் தொண்டையை அடைத்தது. அதன் விளைவாக, கீழே படு வேகமாக இறங்கிக் கொண்டிருக்கும் திரிசன்குவைப் பார்த்து "நில் " என்றார்..திரிசங்கு அப்படியே அந்தரத்தில் நின்றுவிட்டான். உடனே விசுவாமித்திரர் தான் தவ வலிமையால் திரிசங்குக்கு ஒரு தனியான சொர்க்கத்தையே உருவாக்கித் தந்தார். இப்போதும் திரிசங்கு ராஜா அந்தரத்தில் அங்கேயே தொங்கிக் கொண்டிருப்பதாக கதைகள் இன்னும் கதைத்துக் கொண்டிருகின்றன. அந்த திரிசங்குதான், தெற்குத் திசையில் காணப்படும் திரிசங்கு விண்மீன் படலம் என்ற கதைதான்.. இது..!

தென் சிலுவையின்.. அங்கீகாரம்..!

பல தேசிய கொடிகல்

காலனி கால துவக்கத்தில் திரிசங்கு/தென் சிலுவை பல தென் நாடுகளுக்கு தேசிய அடையாளமாக இருந்தது.1901 லிருந்து தென் சிலுவை ஆஸ்திரேலிய தேசிய கொடியில் இடம் பிடித்தது. தென் சிலுவையின் பிரகாசமான விண்மீன்கள் ஆஸ்திரேலிய, பிரேசில், பபுவா நீயூ கினியா, சமோவா நாடுகளின் தேசிய கோடியில் இடம் பெற்றன. பிரேசிலின் கோட்டுகளில் கூட திரிசங்கு படம் காணப்படுகிறது. அதன் கால்பந்தாட்டக் குழுவின் லோகோவும் தென் சிலுவைதான்.

மாறும் விண்மீனின் வடிவம்..!

விண்மீன் கூட்டங்கள் யாவும் பல நூற்றாண்டுகளாக மாற்றமடையாமல் அதே தோற்றத்துடன் அமைந்துள்ளனஎன்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். . இவ்விண்மீன்கள் அசையாமல் அப்படியே இருப்பது போலவே தோன்றுகின்றன. ஆனால் விண்மீன் அதிவேகத்துடன் அசைந்து கொண்டிருக்கின்றன.அவற்றின் உருவமும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இப்போது நாம் பார்க்கும் திரிசங்கு/ தென் சிலுவை, மஹிஷாசுரன்/நர தூதகம், விருச்சிகம் அனைத்தும் ஒன்றாகவே சுமார் 10-20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தெரிந்தன. இந்த அமைப்புக்கு, விருச்சிக-நரதூதக கூட்டம்..என்று அழைக்கப் பட்டது. Scorpius-Centaurus Association (sometimes called Sco-Cen or Sco OB2)

1 comment: