Thursday, February 23, 2012

கம்யூனிஸ்ட் கட்சியின் 91 வது பிறந்த தினம்.. அக்டோபர்17, 2011

கம்யூனிஸ்ட் கட்சியின் 91 வது பிறந்த தினம்.. அக்டோபர்17, 2011

by Mohana Somasundram on Monday, October 17, 2011 at 6:10pm ·

1920 ல் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி

M.N. ராய்(M.N. Roy,

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகி இன்றுடன் 91 ஆண்டுகள் ஆகின்றன. தாஷ்கண்டில் இரண்டாவது கம்யூனிச அகிலம் முடிந்தபின்,1920 ல் அக்டோபர் 17 ம் நாள் தாஷ்கண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவாகியது.M.N. ராய்(M.N. Roy, தோழர் M.N. ராய்(M.N. Roy, )அவர்கள்தான் இதனை உருவாக்கியவர்..அப்போது கம்யூனிஸ்ட் கட்சி 7 பேர் கொண்ட கட்சியாக தாஷ்கண்டில் பிறப்பெடுத்தது. முகம்மது ஷெரிஃப் செயலராக தேர்ந்தெடுக்க்ப்பட்டார். அன்றைய கட்சி உறுப்பினர்கள்,ஈவினா டிரென்ட் ராய் (Evelyn Trent Roy )ராயின் துணைவியார்),அஃப்பானி முகர்ஜி, ( Abani Mukherji),அவரின் துணைவி ரோசா பிட்னி காஃப் Rosa Fitingof ),, முகமது அலி(Mohammad Ali (Ahmed Hasan),முகமது ஷாபிக் சித்திக்(Mohammad Shafiq Siddiqui ) மற்றும் M.P.B.T ஆச்சார்யா (M.P.B.T. Acharya)ஆகிய 7 பேரும்தான் கம்யூனிஸ்ட் இயக்கத்தை நிறுவியவர்கள்..அதன்பின்னர் இவர்கள்

இதனை இந்தியாவில் இயக்கமாக உருவாக்கத் திட்டமிட்டனர்.வங்கத்திலுள்ள அனுஷிலான் (Anushilan) & ஜுகந்தார்(Jugantar ) என்ற இரு நாளிதழ் குழுக்கள் அப்போது ஆர்வமாய் இருந்தனர். தோழர் ராய் அவர்களைத் தொடர்பு கொண்டு,இந்தியாவில் வங்கம், மும்பை, சென்னை, யுனைட்டட்பிராவின்ஸ் மற்றும் பஞ்சாபில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினர். சென்னையில் சிங்கார வேலு செட்டியாரும், மும்பையில் S.A.டாங்கேயும், Prof.முசாஃபர் அகமதுவங்கத்தில் முசாஃபர் அகமதுவும், யுனைட்டட்பிராவின்சில் சவுகத் உஸ்மானியும், பஞசாபில் குலாம் ஹூசேனும் பொறுப்பாளர்களாய் இருந்து இந்த இயக்கத்துக்கு வித்திட்டனர்.

1918-1930 களில் 12 நாடுகளில் அக்டோபர் புரட்சிக்குப் பின், 1918-1930 களில் இந்த்யா, சீனா,போன்ற

12 நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி பிறப்பெடுத்தது.

இந்திய தேசிய குழுவிலிருந்து 1964 ஏப்ரல் 11 ம் நாள், தோழர் டாங்கேயின் கொள்கையைக் கண்டித்து 32 மன்ற உறுப்பினர்கள் வெளியேறினர். அவர்கள்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர்கள்..அவர்களில் முக்கியமானவர் தோழர் பசவபொன்னையா.

19117 l

துவக்க கால மார்க்சிஸ்ட் தலைவர்கள்

1925,இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி

முதல் பொலிட் பீரோ உறுப்பனர்கள்.

2 comments:

  1. good collection of photos. MPT acharya photo is also available in google images.

    ReplyDelete
  2. ,
    அற்புதமான தகவல்
    ,

    ReplyDelete