Friday, August 30, 2013

குழந்தை .. உலகை சந்தித்த முதல் மூன்று நிமிடங்களில் ...

August 30, 
   பெண்ணெனும் பெருமை..

வணக்கம் சோதரிகளே.. ..யாராவது ஏன்  பெண்ணாகப் பிறந்தேன் என்று வருத்தப்பட்டு பாரம் சுமபப்வர் யாரவது இருக்கிறீர்களா? அப்படி ஏதும் தகுதிக் குறைவான எண்ணம் எப்போதுமே வேண்டாம். நீங்கள் இந்த புவியின் பாக்கியவான்கள்..என்ன புதிர் போடுகிறீர்கள் என்கிறீர்களா? ஆம்..புதிர்தான்..பெண்ணுக்கு மட்டுமே புரிந்த புதிர் இது.. அவள் மட்டுமே அறிந்த இன்ப வலி, அவள் மட்டுமே உணர்ந்த எல்லையற்ற  சந்தோஷம் இது..யாருக்கெல்லாம் அம்மாவாகும் பாக்கியம் கிட்டி இருக்கிறதோ.. அவர்கள் பூமியில் சொர்க்கத்தைப் பார்த்தவர்கள்..யாருக்கெல்லாம், இயற்கைப பேறுகால வலியுடன் குழந்தையைப் பெற்றார்களோ..அவர்கள் இந்த பிரபஞ்ச ரகசியத்தை அறிந்துசொர்க்கம் தாண்டி தரிசித்தவர்கள்..அப்பனே..

   பேறு காலப் பேறு ..

    குழந்தைப் பிறப்பு என்பது இந்த பிரபஞ்சத்தில் அற்புதமான, திரை நிகழ்வு போன்ற ஆச்சரியமான எண்ணி எண்ணி மாளாத வியப்பு கொண்ட விஷயம்..ஒரு பெண் தன உயிரை /தன குழைந்தையை ஈனும்போது, அவள் கிட்டத்தட்ட 22 எலும்புகளை உடைக்கும்போது ஏற்படும் ஒட்டுமொத்த வலியை உணருகிறாள என்று அறிவியல் சொல்கிறது.அத்தனை வலி யையும், மகவைப் பார்த்த சந்தோஷம் விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகிறதே நண்பா..இதனை என்றாவது ஆண்  நண்பர்கள் அனுபவிக்க முடியுமா? எண்ணிப்  பார்க்க முடியுமா? 


பூவுலகின் தரிசனம்..

     அது போகட்டும்.. அம்மாவின் இருட்டான கருவறையைவிட்டு வெளியேறி..இந்த புவியைத் தரிசித்த புத்தம் புதிய மலரின் விரிதலில் உருவாகும் மாற்றங்கள்..அப்பப்பா சொல்லி மாளாது. அத்தனை அற்புதங்கள் அதன் உடலில்,..கற்பனைக் கெட்டாத அதிசயங்கள் நிகழும் கணங்கள் அவை..அனைத்தும் வாழ்வதற்கான போராட்டமும், அதன்  புதிய சூழலுக்கான தற்காப்பு நிகழ்வுகளும், தகவமைப்பும் தான்.அனைத்தும் இயற்கையின் கொடைகள்தான்..பரிணாமத்தின் சங்கதி இது.  

  குழந்தையின்..முதல் குரல்..!
   

    புதிய உலகை சந்தித்த உங்களின் அற்புத உயிர் கொடுக்கும் முதல் குரல்/ஒலி /அழுகை/கத்தல் எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். அந்த "மா" என்ற பீரிட்டு எழும் அழுகை ஒலிதான் நண்பா  அதன் மிகு வலியும், வாழ் நாளும்தான். அந்த சத்தம்தான்  குழந்தையை இந்த உலகில் தக்க வைக்கிறது. குழந்தை பிறப்பை ஒட்டி நாம் சந்தோஷப்படுவதும்,கொண்டாடுவதும் அது பிறந்ததால் அ ல்ல,பிறந்த  குழந்தை வாய்விட்டு வீரிட்டு அழுவதால்தான்..

நீர் உலகும், நில உலகும்..!

    அதுவரை நீர்நிறைந்த உலகில், நீர்ச்சூழலில் அம்மையிடம் 
வசதி யாய் வாழ்ந்த கரு, புதிதாக காற்று நிறைந்த உலகை தரிசனம் செய்கிறது. முதல் காற்றை சுவாசிக்கும்  அனுபவம் நிறைய சங்கடம் தங்களை உருவாக்குகிறது. .மழலைக்கு..அதன் விளைவாக பல் உடலியல் மாற்றங்கள்..அப்பாப்பா சொல்லி மாளாது.அதுதான் என்னான்னு பாக்கலாமா? அப்புறம் மயக்கம் போட்டா நான் பொறுப்பு இல்லே..என்ன தெரியுதா?
  
  சின்ன உயிர் வாழ, சின்ன சின்ன மாற்றங்கள்..!
  

    இப்ப ஆரம்பிக்குது சின்ன  நடவடிக்கைகள்..அந்த சின்ன உயிரா, இத்தனை செயல்களைச்  செய்யுது.. ஆமாங்க, நம்ம கருவறையிலே ஓடித்திரிந்த இந்த சின்னவர்தான், இப்ப பூமியிலே கீழே விழுந்தவர்தான் இதனை மாற்றங்களை தன்னுள் நடத்துகிறார். இதோ அவரே பேசுகிறார் ..கேளுங்களேன்..


  தன்னந்தனியாய் தாக்குப் பிடிக்க..

 "நான் அம்மா கருவறையை விட்டு அவருடைய முயற்சியினாலும், என் முயற்சியினாலும், இந்த வெளிச்சம் நிறைந்த உலகைப் பார்க்க முதன் முதலில் வெளியே வருகிறேன்.. அம்மா,எனக்குப்  பயம்மா இருக்கே, எப்படி சமாளிக்கப் போகிறேன். அம்மா எப்படியும் எனக்கு உதவி செய்வாங்க..என்னை உருவாக்கி,நான் வயித்துக்குள்ளே இருந்து படுத்திய பாடுக்ளைஎல்லாம், வெளியே சொல்லாமல், என்னைத் தூக்கி வெளியேயும்  போடாமல், மனசுக்குள் வைத்து, எனது படுத்தல்களை அணு அணுவாய் 39 வாரங்கள் வரை சுமந்து மகிழ்ந்த என் அன்னையல்லவா அவர். அவர்தானே எனக்கு எல்லாமும். நான் வெளியே வந்தால் அவர் என்னைப் பார்த்துக் கொள்வார்..இருந்தாலும், என்னைப் பார்த்துக் கொள்ள நானும் கொஞ்சம் முயற்சி எடுத்துக் கொண்டு கற்றுக் கொள்ள வேண்டுமல்லவா? அதன் முதல் சுற்றுதான்.இது. .தனியாய் தன காலில் நிற்பதற்கான முயற்சிதான் என முதல் சுவாசம்.."


மக்களில் ஒருவன்..

"பெருத்த முயற்சியால் வந்தேனே.நான் வந்தேனே...வந்தே விட்டேன், இந்த உலகின் மக்களுடன் .ஐக்கியமாக."


அம்மா..அம்மா..!

  
  "அம்மா உடம்பிலிருந்து வெளியே  வந்ததும், புவியின் காற்று என் மூக்குக்குள் நுழைந்து , பின்னர் என் நுரையீரலுக்குள் மெல்ல மெல்ல எட்டிப் பார்க்கிறது. என்னால் அந்த வேதனையைத் தாங்க முடியவில்லையே அம்மா..என் அம்மாவே.. நான் இந்த  உலகில்உயிர் வாழ இது அத்தியாவசியம் என்கிறீர்களா என் அன்னையே.. சரி கற்றுக் கொள்கிறேன்.அனைத்தையும் உங்களின் அன்புடன்..". 


   எனது முதன் முதல் முயற்சி..

    "அம்மாவின் கருவறையில் இருந்த வரை  வரை என நுரையீரலுக்கு வேலையே இல்லை..சும்மா ஒரு 5% இரத்தம் எப்பவாவது வரும்.இதுவரை என் நுரையீரல்  புதிதாய் கடையில் வாங்கிய பலூன் போல சப்பிக் கிடந்தது.அம்மாவின் இருட்டு கருவறையில் நான் இருந்த போது, அவங்க சுத்தம் செஞ்ச ரத்தத்தை நேரடியா எனக்கு நஞ்சுக் கொ டி வழியா கொடுத்துடுவாங்க. என் சுத்த ரத்தம் நேரடியா இருதயத்துக்குப் போய்விட்டு, பின் எனது உடம்பு முழுவதும் வரும். என் கிட்ட சேர்ந்த அசுத்த ரத்தம், அம்மாவோட நஞ்சுக்கொடி வழிய அம்மா கிட்டே போகும், சுத்தப் படுத்த. எனக்கு ஜம்முனு தூங்கறத தவிர வேற வேலைய இல்லை. .நான் கஷ்டப் பட பொறுக்காத அன்னை மனம். அது.இப்ப நான் வெளியே வந்ததும் நானே சுவாசிக்க வேண்டி இருக்கிறது. அதற்கான முயற்சிகள்.தான் இவை.


   முதல் வலி...

     நுரையீரலுக்குள் நுழைந்த காற்று என்னை மூச்சு முட்டச் செய்கிறது. நுரையீரலின் சுவரை முட்டிய காற்று என்னைத் திணற வைக்கிறது. அதனால் தான் நான் "ம்..மா.மா " என வாய்விட்டு அலறுகிறேன்.. அந்த சத்தம்தான் என்னை இந்த உலகில் வாழ வைக்கும் முதல் குரல், முதல் உதவி, என் உயிர்ச் சக்கரத்தின் அச்சாணி அதுதான்.அதுதொடர்பாய்  ஏராளமான் உடலியல் மாற்றங்கள்.அதுவரை சுத்த ரத்தம் அம்மா மூலம். இப்ப நானே ரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கான பிரயத்தனம்தான் இந்த முயற்சிகள் அண்ணே   "  

உயிர் வாழ்தலின் முதல் பத்து நொடிகள்..

     "இன்னும் இருக்கிறதே...!பிறக்கும்போது என் நுரையீரலுக்குள் பனிக்குட நீர்(amniotic fluid ) இருக்கும். அம்மா இடத்தில் இருக்கும்போது என் நுரையீரலுக்கு வேலை இல்லை.இப்ப நான் அம்மா கிட்ட இருந்து வெளிவந்து, இந்த உலகத்தைப் பார்த்த 10 நொடிக்குள் என் நுரையீரலுக்குள் காத்து நுழைந்து நுரையீரல் செயல்பட்டாக வேண்டும்.  இப்ப என் நுரையீரலுக்குள காத்து நுழைந்ததும், நுரையீரல் சுவத்துக்குள் போய் காற்று முட்டும். அந்த இடம் பெரிதாகும். அதற்குத் தகுந்தாற்போல் எனது மைய நரம்பு மணடலம், உடனடியாக எதிர்வினை செய்யும். ஏனெனில் எனது உடல் வேறுபட்ட வெப்ப நிலையை சந்திப்பதால், நான் தடுமாறி விடுவேன் என   வெளிச் சூழலுக்கும், வெப்பத்துக்கும் தகுந்த மாதிரி செயல்படும்".

  முதல் சுவாச முத்தம்..!

     " நான் அம்மாவிடம் இருந்து வெளிவந்த உடன், அப்பத்தான் நான் முதல் சுவாசத்தை முத்தமிடுகிறேன்..எனக்கும் அம்மாவுக்கும் உள்ள தொப்புள்கொடி உறவான, நஞ்சுக்கொடியை நீங்கள் வெட்டு கிறீர்கள். அம்மா....மா..மா! ஐயோ . உன்னிடமிருந்து 
வெ ட்டப்படுகிறேனே .என்னால் தனித்து வாழ முடியுமா என் அம்மாவே...அம்மாவின் துணையின்றி நான் தனித்து இருக்கிறேன்.  எனது நுரையீரல் மற்றும், இரதத ஓட்ட 
மண்டலத்தில், என்னைக் கேட்காமலேயே, பரிணாம விதிப்படி, ஏராள ஏராளமான மாற்றங்கள்..என்னுள். அம்மாடியோவ்..உங்களால் கற்பனை கூட செய்ய முடியாத படி,குறைந்த மணித்துளிகளில் அளப்பரிய மாற்றங்கள் ..என்னுள்..இதெல்லாம் யார் நிகழத்துவது? கட்டளையிடுவது யார்? வேறு யார்..என்னுள் உறைந்து கிடந்தது, உள்ளே இருந்து இயக்குனராய் பணிபுரியும் என் பரம்பரையின்  மரபணுக்கள்தான்."

  முதல் பரிமாற்றம்...!


    "எனது நுரையீரல் காற்று நுழைவதால் விரிவடைகிறது. அதன் சுவர்களல் நுனியில் இருக்கும் காற்று சிற்றறைகள் காற்றால் . நிரப்பப் படுகின்றன. இதனால் அங்குள்ள காற்றின் நிமித்தம் இரத்தம் நுரையீரலை நோக்கி ஓடிவருகிறது. அங்கே நுரையீரல் சுவர்களிலுள்ள  சிற்றறைகளில் காற்றின் பரிமாற்றம் நடைபெறுகிறது.  நுரையீரல் மேல் ஓடிவரும் தந்துகி குழாய்களில் காற்றின் பரிமாற்றம் அதாவது, (கரியுமில  வாயு,வெளிஏற்றப்பட்டு  அதிலிருந்து ஆக்சிஜன் உள்ளிழுக்கபப்ட்டுஇரத்தத்திற்குள் உள்வாங்கப்படுகிறது.) இதுதானப்பா நீங்கள் சொல்லும் சுவாசம். எனக்கு . அப்பாடி,என்  அம்மாவே என் முதல் சுவாசம்தான் இடுந்தாலும் ரொம்ப மூச்ச்சு முட்டுதே அம்மா..எனக்கு வாழ்நாளில் ரொம்ப ரொம்ப கஷ்டமான அம்சம் இதுதானா?.இப்படி  ஒரு முறை மூச்சு விடறதே.   பெரும்பாடா இருக்கே....ஆனா இது நடக்காட்டி நான் உயிரோடு இருக்க முடியாதே.எனவே  இது என் வாழ்வின் முதல் விஷயமும், அத்தியாவசியமான் உயிர் வாழ்தல் விஷயமுமாகும்.."

   முதல் நூறும்...தொடரும் முப்பதும்..

 " என்னோட மூச்சு சுவாசம் துவக்கத்தில், நிமிடத்திற்கு  15-100 என்றுதான் இருக்கும். பின்னரே ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு அது சரி செய்யப்பட்டு, நிமிடத்திற்கு 30-50 என ஒழுங்காக சீராக இருக்கும். இனி என் நுரையீரல் பணி  சீராக்கப்பட்டு இயங்
கும் அண்ணே. எனவே, இதயத்துக்கு கீழே இருக்கும் டக்டஸ் 
வெனோசஸ் ( Ductus Venosus ) என்ற ரத்தக் குழாய்  .அடைபட்டு விடும்.  கல்லீரல் தமனி தனியாகச் செயல்படத் துவங்கும். "


உயிரின் திறவு கோல் ..இதய அறைகள்...

  "இது மட்டுமா இருக்குன்கிரீங்க. இன்னும் இருக்குதுண்ணே  ரொம்ப கதை..அதுதான் நானும், நீங்களும் நீண்ட  நாள் உயிர் வாழ்வதற்கான  திறவுகோல் அண்ணே. அந்த மாற்றங்கள் எல்லாம் நம்ம இதயத்திலேதான் நடக்குது. நான் அம்மாவோட கருவறைக்குள் இருந்தபோது,  இதயத்தின் மேல் அறைகளின்  சுவரில் இருந்த சிறப்பான வால்வு , வேறு சில இரத்த குழாய்களும் பொறந்ததும் காணாம போயிடுது. ஏன்னா இனி அவர்களுக்கு வேலை இல்லியே. அதான்.  அதுவும் நான் பூமியிலயே வந்து விழுந்த ஓரிரண்டு மணித்துளிகளில் புதிய மாற்றங்கள் இதயத்தில் நடக்குது. நீங்க தொப்புள்கொடியில ஒரு கிளிப் போட்டதும், அம்மா கிட்டே இருந்து வந்த இரத்தம் நின்னு போகுது. எனவே நுரையீரலுக்கு வரும் இரத்தத்திற்கு என சிறப்பு இரத்த குழாய்கள தேவையாய் இருக்குதே ". 

  நிறம் மாறும் நான்..நீங்கள் 

   " நான் பொறந்ததும், தொப்புள் கோடி வெட்டியதும்/கட்டியதும்,அந்த நொடியிலேயே, இதயத்தின் மேலறையில் உள்ள, போராமன் ஓவல் *Foramen  ovule ) எனற துளை அடை படுகிறது. அடுத்த் நொடியிலே யே, மேலறையில் :சுத்த ரத்தமும், அசுத்த ரத்தமும் இயதத்தில் தனித்தனியாக வந்து போக வழிவகை செய்யப்படுகிறது. வலது வெ ன்டிரிக்கிலிலிருந்து ரத்தம் சுத்தம் செய்யப்படுவதற்காக/காற்று பரிவர்த்தனைக்காக நுரையீரலுக்குச் செல்லுகிறது. மீதி ரத்தம், இடது வென்டிரிக்கி லிலிருந்து பெருந்தம்னிக்கு செல்கிறது,எ ன் உடம்பு முழுசுக்கும் ரத்தம் தரச் சொல்ல. டக்டஸ் ஆர்டிரியோசஸ்(Ductus  Arteriosus )  என்ற குழாயின் இணைப்பு காணாம போயிடும். நுரையீரலின் தந்துகிகள் உடனே உருவாயிடும்; செயல்படவும் செய்யும்.. நான் என் உடல் வயலேட்  வண்ணத்திலிருந்து  ரோஸ் நிறத்துக்கு மாறி டுவேனே.." 

   உயிரின்  சிக்கலான முதல் மூன்று நிமிடங்கள்

   நான் இந்த பூமியப்பார்த்த 3-4 நிமிடங்களில் இத்தனை சிக்கலான விஷயங்களும் நடந்து முடிஞ்சுடும் அண்ணே. அப்பத்தான் நான் உயிரோடு இருக்க முடியும். இது எனக்கு  மட்டுமில்லே அண்ணே..உங்களுக்கும் இதே தான் நடந்துச்சு. எல்லாருக்கும் இதே கதைதான். 

சின்ன மாற்றங்களுடன்....நான் தயார் இப்ப..

   இன்னும் கூட கொஞ்சம் சின்ன சின்ன மாற்றங்கள் என்னுள்ளே நடக்கின்றன. நான் அம்மாவின் கருவறைக்குள் இருந்த போ து என்னுடைய உடல் வெப்பம், பெரியவர்களைப் போல இரு மடங்கு இருக்கும். ஏன்னா நான்தண்ணிக்குள்ள இருக்கிறனா..அதான் வெப்ப  சீரமைப்புக்காகவே இது.  இப்ப வெளியே.வந்துட்டனா..அவ்வளவு வெப்பம் வேண்டாம். அதான் கொஞ்சம் கொஞ்சமா சூட்டை இழக்கிறேன். என் உடல் குளிர்கிறது. இது தாங்கமுடியாமல் எனக்கு நடுங்குகிறது. இதன் மூலம் என் உடல் சூட்டை உண்டுபண்ணுகிறது. என் உடலில் , அம்மாவின் கருவறைக்குள் இருந்த பொது இருந்த எனது பழுப்பு கொழுப்பு இப்ப எனக்குத் தேவை இல்லே. அதனை எரித்துதான் உடல் சூடு செய்கிறேன். இனி உங்க கூட இந்த உலகுக்குன் தகுந்தாற்போல ஓட்டத்த்க்கு தயாராயிட்டேன் அண்ணே.. புறப்பட்டுவோமா..நான் ரெடி..நீங்க ரெடியா?
  . 

Tuesday, February 12, 2013


அறிவியல் புனைகதைகளின் பிதாமகன்..வெர்ன் ஜுல்ஸ்


by Mohana Somasundram on Friday, February 8, 2013 at 1:29pm ·


வணக்கம் நண்பர்களே,. நமக்கு ஏன் தாத்தா பாட்டியைப் பிடிக்கும்? ரொம்ப விஷயங்களை, பெரிய பெரிய தகவல்கள், படிப்பு சொல்லித்தருவார்கள் என்றா? ஹூஹூம். அதுதான் இல்லை. வேறு எதற்கு? கொஞ்சம் செல்லமும் தந்து    , நிறைய கதையும் சொல்வார்கள். கதை சொல்பவர்களை குழந்தைகளுக்குப் பிடிக்கும். குழந்தைகளுக்கு மட்டுமா? இல்லை. இல்லை. கதை சொல்பவர்களை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனா நம்ம விஷயத்தில் மட்டும் கதை விடக் கூடாது. அது மட்டுமல்ல, எந்த ஆசிரியரை குழந்தைகளுக்குப் பிடிக்கும் .சந்தேகமே இல்லாமல்.. அனுசரணையாய் குழந்தைகளை நடத்துபவரும், நிறைய கதை சொல்லும் ஆசிரியரையும் தான். 
போன வாரம் தோழர் .ஒருவர்   வீட்டுக்கு போயிருந்தேன். அவர் பெண் கீர்த்தனாவிடம், எட்டாம்பு படிக்கிறார். அவரிடம், வாத்தியாரில் உனக்கு யாரைப் பிடிக்கும் என்றேன். அந்த பெண் குழந்தை, ஞானாம்பா டீச்சர்தான். ஏம்பா. அவங்கதான் நல்லா கதை சொல்லி பாடம் நடத்துவாக.பிரியமா இருப்பாக என்றது.



கதை சொல்லிகளை நம் எல்லோருக்கும் பிடிக்கும். கதை விடுபவர்களைத்தான் யாருக்கும் பிடிக்காது. எனக்கு தெரிந்து தமிழகத்திலும், அறிவியல் இயக்கத்திலும் இரண்டு கதை சொல்லிகள் இருக்கிறார்கள். ஒருவர் மதுரைக்காரர்: ரத்தின விஜயன். இன்னொருவர்: விஷ்ணுபுரம் சரவணன். சென்னை வாசி. இவர்கள் இருவரும் குழந்தைகளை தங்களின் கதையால் கட்டிப் போடுபவர்கள்.குழந்தைகளுக்கு இந்த இரண்டு பேரையும் ரொம்பவே பிடிக்கும். 




    கதை என்று எளிதாக சொல்லிவிட்டோம். கதை என்றால் என்ன? இல்லாத ஒன்றை
கற்பனையாக, புனைவாக, இட்டுக் கட்டி சொல்ல வேண்டும். அதற்கு நிறைய புத்திசாலித்தனமும், ஏராளமான் கற்பனை வளமும் வேண்டும். நாட்டுப் புற கதைகள,சரித்திரக் கதைகள், புராணக் கதைகள் என கதைகளின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.ஆனால் அறிவியல் கதைகள், புனைகதைகள் எழுத நெறையா வே அறிவும், புத்திசாலித்தனமும், கூர்மையான எண்ணங்களும தேவை. இந்தியாவிலும் சரி, உலக நாடுகளிலும் சரி, குழந்தைகளுக்காகவும், பெரியவர்களுக்காகவும் உள்ள அறியவில் புனைகதை எழுத்தாளர்கள் குறைவே.



அந்த அறிவியல் புனைகதை புனைவோர் பட்டியலில் முதலிடம் பெறுபவர்... வெர்ன், ஜுல்ஸ் என்ற பிரெஞ்சு எழுத்தாளர். இவரைப் பற்றி நாம் சொல்லி மாளாது. அவ்ளோ/... விஷயங்கள் உள்ளன. ஆனால் அறிவியல் புனைகதைகளின் பிதாமகன் யார் என்று கேட்டால், ஒட்டு மொத்த உலகத்தின் ஒற்றை விரல்களும்  இவரை நோக்கியே நீளும். அவ்வளவு பிரபலமானவர். அவ்வளவு எழுதி குவித்திருக்கிறார்; பயணக்கதை, நாவல், சிறுகதை, குட்டிக்கதைகள், பாளர் கதைகள், அறிவில் புனை கதைகள் என்று உலகை பிரமிக்க வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார் தந்து திறமையால்..!

ஆழ்கடலில் சாகசப் பயணம், பூமியும் மையத்துக்கு ஒரு பயணம்(1864), எண்பது நாட்களில் உலகப் பயணம் (1873)(1864), பூமியிலிருந்து நிலவை நோக்கி, ஆழ கடல் அடியில் இருபதாயிரம் அமைப்புகள்(1869),பாதாளத்திற்குள் ஒரு பயணம். போன்றவை உலகப் புகழ் பெற்றவை  அது மட்டுமா அவர்  விண்வெளி ஆகாயம் காற்று ஏராளமானபுத்தகங்கள் எழுதி குவித்து உள்ளார். ஆழ் கடலுக்குள் செல்லும்  நீர் மூழ்கி கப்பலையும் விண்வெளிக் கப்பல் பற்றியும் அவற்றைக்  கண்டு பிடிக்கு முன்பே அதனைப் பற்றி கற்பனையில் வடித்த எழுத்தாளர். இதனாலேயே வெர்ன், ஜுல்சை உலகம் முழுவதும் அறிவியல் புனைகதைகளின் முதல்வன், பிதாமகன், தந்தை என்று கொண்டாடுகிறது.

    வெர்ன், ஜுல்ஸ் அவரது கதைகள் மூலம், அதில் வரும இயந்திரங்கள், அவை  அமைப்பு செயல்படும் விதம் தொடர்பாய் நேரில் பார்ப்பது போல் அவ்வளவு அற்புதமாய் வரைந்தது போல, படம் போட்டுக்  காட்டுவது போல விளக்கம் தந்திருப்பார்.இன்னொரு அற்புதமான விஷயம் என்னவென்றால் நாம் இப்போதுதான் ஹைடிரஜனை ஆற்றலாகப் பயன் படுத்துவது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்   வெர்ன், ஜுல்ஸ்  அன்றே , சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பே இதனை அதாங்க ஹைடிரஜனை ஆற்றல்    பற்றி    இவரின் கற்பனைத்திறன், புனைவின் வளம் பற்றி நீங்கள் எல்லாம் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். வெர்ன், ஜுல்ஸ்  அவரது அறிவியல் புனைகதைகளில் ஸ்கை கிராப்பர்கள் நீர்மூழ்கி ஹெலிகாப்டர்,ஆகாய் விமானம் போன்றவற்றைப் பற்றி , இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் அத்துணை சாதனங்கள பற்றியும் அன்றே பயன்படுத்தி புனைவுகள் தந்துள்ள வெர்ன், ஜுல்ஸ்  அதி புத்திசாலி மகா திறமைசாலி அற்புதமான புனைவு எழுத்தாளர்.  அது மட்டுமல்ல.அன்றே நிலவை நோக்கி ஒரு பயணம் என்பது கொஞ்சம் அதீதமானதுதான் . வடதுருவம்மற்றும் தென் துருவம் நோக்கி அவரின் கற்பனைத் தேடல்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.சூடான பலூன்கள்  வான் வழிப் பயணம் என்றால் எப்படி எப்படி இப்படி இவரை யோசிக்க வைத்தது வியக்கிறோம்,வெர்ன், ஜுல்ஸின் மூளை செயல்பாட்டை எண்ணி  அவரது காலகாட்டத்தில் இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால், நிச்சயம் இவர் ஒரு விஞ்ஞானி ஆகியிருப்பார் அவ்வளவு  பரந்த கற்பனைத் திறனுடன் அவற்றை விளக்கும் திறனும் பெற்ற மாமேதை வெர்ன், ஜுல்ஸ் . எதிர்காலம் பற்றிய மிகவும் விரிந்த பார்வையும் கணிப்பும் கொண்டவர்.


     வெர்ன், ஜுல்ஸின்  எழுத்துக்களில்  சமுதாய நலனும் அறிவியல்இவரின் தந்தை பார்வையும் தெளிவாக இருந்தன.ஜுல்ஸ் வெர்ன்  (Jules Verne) 1828ம் ஆண்டு பிப்ரவரி  8ம் நாள், பிரான்ஸின் ,நான்டிஸ் என்ற துறைமுக நகரில் பிறந்தார். இவரின் தந்தை இவரது அன்னை   பியரி வெர்ன் (Pierre Verne). சிறந்த வழக்குரைஞர். இவரது அன்னை :சோபியா அலோடி (Sophie Allotte). கப்பல் தலைவர்களாகவும், கப்பல் தயாரிப்பாளர்களாகவும் விளங்கிய ஒரு குடும்பத்தில் பிறந்தவர்.  இந்த தம்பதியின் ஐந்து குழந்தைகளில் வெர்ன், ஜுல்ஸ் தான் மூத்தவர். சிறு வயதிலேயே புவியியல் தேடி படிப்பதிலும் இசையை நாடி படிப்பதிலும் நிகரற்ற வரை இருந்தார், மேலும் அயல் மொழிகளிலும் தன நிபுணத்துவத்தைக் காட்டினார் . தந்தையுடன் மாலை வேளைகளில் கப்பல் இருக்கும் இடம் நாடிச் சென்று அதில் பயணம் செய்தவர்கள் சொன்ன அனுபவங்களையும் ஆர்வத்துடன் கேட்டு அவற்றைப் பதிவு செய்வார் அவற்றை தன புனைகதைகளிலும் இணைத்துள்ளார் . தந்தையின் ஆசைப்படி சட்டம் படித்தாலும் தன்னை ஓர் எழுத்தாளனாக் உருவாக்கிக் கொண்டார்.இந்த விஷயம் தந்தைக்குத் தெரிந்ததும் அவர் தரும் பொருளாதார உதவியை நிறுத்திக் கொண்டார். வெர்ன், ஜுல்ஸ் தன காலிலேயே நிற்க வேண்டியதாயிற்று .

     வெர்ன், ஜுல்ஸ் ஹோநோரைன் டி வியனே மொரேல் (Honorine de Viane Morel) என்ற விதவையைச் சந்தித்து காதலித்து அவரையே 1857 ல்,ஜனவரி 10 ம் நாள் மணம் முடித்தார் . தன துணைவியின் உதவியாலேயே மீண்டும் தன எழுத்துப்  பணியைத் தொடர்ந்தார்.   பின்னர்  ஆகஸ்ட் 3ம் நாள்,   1861 ல் அவர்களுக்கு  ஓர்ஆண் மகவு பிறந்தது 
வெர்ன், ஜுல்ஸ் தன வாழ்நாளில் 65 புதினங்கள் 30 நாடகங்கள், ஏராளமான   சிறு கதைகள்,கட்டுரைகள் என எழுதிக் குவித்தார். 1905, மார்ச் 24 ம் நாள் , 77 வயதில் அவரின் வாழ்க்கை நிறைவுற்றது    

His first and better known works:
  • Backwards to Britain (Voyage en Angleterre et en Écosse, 1859) [9]
  • A Voyage in a Balloon (Un Voyage en ballon, August 1851 as published in Musée des familles)[10]
  • Five Weeks in a Balloon (Cinq semaines en ballon, 1863)[11]
  • Paris in the Twentieth Century (Paris au XXe siècle, 1863, not published until 1994)
  • A Journey to the Center of the Earth (Voyage au centre de la Terre, 1864)
  • From the Earth to the Moon (De la Terre à la Lune, 1865)
  • The Adventures of Captain Hatteras (Voyages et aventures du capitaine Hatteras, 1866)
  • In Search of the Castaways or Captain Grant's Children (Les Enfants du capitaine Grant, 1867–1868)
  • Twenty Thousand Leagues Under the Sea (Vingt mille lieues sous les mers, 1870)
  • Around the Moon (Autour de la Lune, a sequel to From the Earth to the Moon, 1870)
  • A Floating City (Une ville flottante, 1871)
  • Dr. Ox's Experiment (Une fantaisie du Docteur Ox, 1872)
  • The Adventures of Three Englishmen and Three Russians in South Africa (Aventures de trois Russes et de trois Anglais, 1872)
  • The Fur Country (Le Pays des fourrures, 1873)
  • Around the World in Eighty Days (Le Tour du monde en quatre-vingts jours, 1873)
  • The Survivors of the Chancellor (Le Chancellor, 1875)
  • The Mysterious Island (L'Île mystérieuse, 1875)
  • The Blockade Runners (Les Forceurs de blocus, 1876)
  • Michael Strogoff (Michel Strogoff, 1876)
  • Off on a Comet (Hector Servadac, 1877)
  • The Child of the Cavern, also known as Black Diamonds, The Underground City or The Black Indies (Les Indes noires, 1877)
  • Dick Sand, A Captain at Fifteen (Un capitaine de quinze ans, 1878)
  • The Begum's Fortune (Les Cinq cents millions de la Bégum, 1879)
  • The Steam House (La Maison à vapeur, 1879)
  • Tribulations of a Chinaman in China (Les Tribulations d'un Chinois en Chine), 1879
  • Eight Hundred Leagues on the Amazon (La Jangada, 1881)
  • The Green Ray (Le Rayon vert, 1882)
  • Kéraban the Inflexible (Kéraban-le-têtu, 1883)
  • Frritt-Flacc (1884)
  • The Vanished Diamond (L’Étoile du Sud, 1884)
  • The Archipelago on Fire (L’Archipel en feu, 1884)
  • Mathias Sandorf (1885)
  • Robur the Conqueror or The Clipper of the Clouds (Robur-le-Conquérant, 1886)
  • Ticket No. "9672" (Un billet de loterie, 1886 )
  • North Against South (Nord contre Sud, 1887)
  • The Flight to France (Le Chemin de France, 1887)
  • Family Without a Name (Famille sans nom, 1888)
  • Two Years' Vacation (Deux ans de vacances, 1888)
  • The Purchase of the North Pole (Sans dessus dessous, the second sequel to From the Earth to the Moon, 1889)
  • César Cascabel (1890)
  • Mistress Branican (1891)
  • The Carpathian Castle (Le Château des Carpathes, 1892)
  • Claudius Bombarnac (Claudius Bombarnac, 1893)
  • Foundling Mick (P’tit-Bonhomme, 1893)
  • Propeller Island (L’Île à hélice, 1895)
  • Facing the Flag (Face au drapeau, 1896)
  • Clovis Dardentor (1896)
  • The Sphinx of the Ice Fields or An Antarctic Mystery (Le Sphinx des glaces, a sequel to Edgar Allan Poe's The Narrative of Arthur Gordon Pym, 1897)
  • The Mighty Orinoco (Le Superbe Orénoque, 1897)
  • The Village in the Treetops (Le Village aérien, 1901)
  • The Kip Brothers (Les Frères Kip,1902)
  • Master of the World (Maître du monde, sequel to Robur the Conqueror, 1904)
  • Invasion of the Sea (L’Invasion de la mer, 1904)
  • A Drama in Livonia (Un drame en Livonie, 1904)
  • The Lighthouse at the End of the World (Le Phare du bout du monde, 1905)
  • The Golden Volcano (Le volcan d'or, 1906)
  • The Chase of the Golden Meteor (La Chasse au météore, 1908)
  • The Danube Pilot (Le Pilote du Danube, 1908)
  • The Survivors of the "Jonathan" (Les Naufragés du « Jonathan », 1909)
  •  
    • Fiction
      • A Winter Amid the Ice
      • Abandoned
      • All Around the Moon
      • An Antarctic Mystery
      • Around the World in Eighty Days
      • Dick Sand: A Captain at Fifteen
      • Eight Hundred Leagues on the Amazon
      • Facing the Flag
      • Five Weeks in a Balloon
      • From the Earth to the Moon
      • Godfrey Morgan
      • In Search of the Castaways
      • Journey to the Center of the Earth
      • Master of the World
      • Michael Strogoff
      • Off On A Comet
      • Robur the Conqueror
      • The Adventures of a Special Correspondent
      • The Blockade Runners
      • The Fur Country
      • The Moon-Voyage
      • The Mysterious Island
      • The Pearl of Lima
      • The Secret of the Island
      • The Survivors of the Chancellor
      • The Underground City
      • The Voyages and Adventures of Captain Hatteras
      • The Waif of the "Cynthia"
      • Ticket No. 9672
      • Topsy-Turvy
      • Twenty Thousand Leagues Under The Seas
    • Non-Fiction
      • Celebrated Travels and Travellers






Wednesday, October 10, 2012

இன்று அக்டோபர் 10, மரண தண்டனைக்கு எதிரான நாள்.


இன்று அக்டோபர் 10, மரண தண்டனைக்கு எதிரான நாள்.

by Mohana Somasundram on Wednesday, October 10, 2012 at 10:06pm ·
 நண்பர்களே, உலகில் பிறந்ததவ்ர் அனைவரும் இறப்பது உறுதி. ஆனால் என்றைக்கு என்பதுதான் யாருக்கும் தெரியாத கண்ணா மூச்சியாக நாம் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். இதில் யாரை யார் முந்துவார் என்பதும் தெரியாது. அது போல தவறு செய்யாத மனித ஜென்மம என்பதும உலகில் கிடையாது. ஆனால் சிலர் பெரிய குற்றம் செய்தால் அதனைத் தண்டிக்க சட்டம் வேறு இருக்கிறது. தவறுக்கு தகுந்தாற்போல தண்டனை. ஆனால் எந்த தவறாக இருந்தாலும் அதற்கு ஈடாக./பதிலாக உயிரை எடுப்பது என்ன நியாயம்?உயிரை எடுப்பது தண்டனை ஆகுமா? அவருக்கு உயிரே போய்விடுகிறது. அதன் பின் என்ன என்பது அவருக்குத தெரியாது. அப்புறம் எப்படிப்பா இதனை தண்டனை என்று சொல்வீர்கள்?.ஒருவர் இன்னொருவரை கொலை செய்துவிட்டாலும் கூட , அதற்காக அவர் உயிரை வாங்கிவிட்டால், போன உயிர் திரும்பி வந்துவிடுமா? எந்த குற்றமாக இருந்தால் என்ன ?எதற்கு ஓர் உயிரை எடுப்பது? அப்படி உயிரை வாங்குவதால் அவன் திருந்தி விடுவானா? கொலைக்கு கொலை தீர்வாகிவிடுமா? மரண தண்டனை எதற்கு?
  இந்தியாவிலும் இன்னும் மத்திய கிழக்கு நாடுகளில்தான் மரண தண்டனை இன்னும் உயிருடன் உலவிக்கொண்டு இருக்கிறது? மரண தனடனைக்கு ஒரு மரணம் வராதா? கட்டாயம் வரவேண்டும்.அல்லது அதனை வரவழைக்க வேண்டும் மனிதம் இருந்தால் மரண தண்டனை இருக்காது?இன்று அக்டோபர் 10, மரண தண்டனைக்கு எதிரான நாள். முதல் உலக மரண தண்டனை எதிர்ப்பு நாள் 2003 லிருந்து,ஒவ்வொரு அக்டோபர் 10ம நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை கையில் எடுத்தது, மரண தண்டனைக்கு எதிரான உலகின் அனைத்து மனித நேய சக்திகளும், கூடி முடிவு செய்தன.இதில் அரசு சாரா நிறுவனங்களும் சட்ட வல்லுநர்களின் அமைப்புகளும், அவர்களின் ஆலோசனை இயக்கங்களும், மனித உரிமை அமைப்புகளும், உலகம் முழுவதும் உள்ள உள்ளூர் அமைப்புகளும் என அனைத்தும் ஒன்று கூடி, மனிதனின் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல கட்டங்களில்,போராடி தொடர்ச்சியாக எதிர்வினை புரிந்து, மரண தண்டனைக்கு ஒட்டுமொத்தமாக சமாதி கட்டவேண்டும் என முடிவு செய்தனர். உலகம் முழுவதும் அனைத்து மக்களிடையேயும் கொஞ்சம் கூட பிசிறின்றி இதே கருத்துதான் உலவி வந்தது.
ஒருவன் எப்படிப்பட்ட இமாலய தவறு செய்திருந்தாலும், அதற்காக அவனது உயிரை பலி வாங்கி பழி எடுக்கக் கூடாது. ஒருவன் தான் சாகும் நாள் தெரிந்து அதனை நோக்கி, எதிர்பார்த்து ஒவ்வொரு கணமும் எண்ணிக் கொண்டிருப்பது எவ்வளவு கொடுமை?மரண தண்டனைக்கு எதிரான ஒரு கூட்டமைப்பு மாநாடு, 2001 ல் , ரோம் நகரிலுள்ள ஸ்ட்ராஸ்போர்க்கில் (Strasbourg) நடந்த போது, அதில் மேலே குறிப்பிட்ட அனைத்து அமைப்புகளும் கலந்து கொண்டு குரல் கொடுத்து, மரண தண்டனைக்கு சாவு மணி யடிக்க முடிவு செய்தனர். அதற்காக உலகம் முழுவதும் உள்ள மக்களை ஒருங்கிணைக்க பேசினர் பின்னர் இது 2003 லிருந்து அக்டோபர் 10 லிருந்து மரண தண்டனை எதிர்ப்பு தினம் நடைமுறை படுத்த முடிவு செய்யப்பட்டது. இதுவரை 141 நாடுகள் சட்டப்படி நிறுத்திவிட்டன. 97 நாடுகள் எந்த குற்றத்திற்கும் மரண தண்டனை தருவதில்லை என மரண தண்டனையி கைவிட்டுவிட்டன. 36 நாடுகளினல் மரண தண்டனைப் பழக்கமே இல்லை. 8 நாடுகள், சாதாரண குற்றத்திற்கு மரண தண்டனை கொடுப்பதை நிறுத்தி உள்ளன சர்வதேச அம்நீச்டி அமைப்புப்படி,2011 ல் 21 நாடுகள் ம மரண தண்டனையை நிறைவேற்றின. 10 ஆண்டுகளுக்கு முன் 31 நாடுகள் இதனை செய்தன. அல்பியாவில் அர்ஜென்டினா, அர்மேனியா, அர்ஜென்டினா, பூடான், புருந்தி, குக் தீவுகள், கேபான், கிரீஸ், லத்வியா மெக்சிகோ, பிலிப்பைன்ஸ்,ருவாண்டா, சமோ,செனகல், டோகோ, டர்க்கி, உச்பெகிச்தான் போன்ற நாடுகளில் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்துவிட்டனர். 


கீழே பேரறிவாளனின் வாக்கு மூலம்

;மரணதண்டனை வேண்டாம்கேட்பது உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதிஅ.ஞா. பேரறிவாளன்மரண தண்டனைச் சிறைவாசித.சி.எண். 13906நடுவண் சிறை, வேலூர் - 2முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்தார், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினி ஆகியோருக்கு 1999-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மரண தண்டனையை உச்சநீதிமன்றமும் 2000-ம் ஆண்டில் உறுதிசெய்தது. எனினும் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 

கைது செய்யப்பட்டதன் பின்னணி

1991ஆம் ஆண்டு சூன் மாதம் 11ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை, எழும்பூர், எண்.50. ஈவெ.கி.சம்பத் சாலை, பெரியார் திடல் என்ற முகவரியில் எனது பெற்றோர் என்னை விசாரணைக்கென சிபிஐ அதிகாரிகள், ஆய்வாளர்கள் கங்காதரன், இராமசாமி மற்றும் ஒருவரிடம் ஒப்படைத்தனர். அப்போது பெரியார் திடல் பிரமுகர்கள் பலர் இருந்தனர்.எனது இந்த முறையீடு வெற்றுப் புலம்பல்கள் அல்ல. ஒரு நிரபராதியான மனிதனின் உள்ளத்து உண்மைகள். இறுதியில் உண்மை வெல்லும் என்ற நம்பிக்கையிருக்கிறது என்றாலும், நான்கு சுவற்றுக்குள் நடந்தேறிய உண்மைகள் பலரால் அறியப்பட வேண்டும் என்று ஆவல் கொள்கிறேன். அதன் விளைவுதான் இந்த முறையீடு.சிலவேளை, எனது நீதிக்கான நெடும் போராட்டத்தில் இந்த மடல் வேறு பல மனித நேயங்கொண்ட இதயங்களையும் இணைக்கக்கூடும். அதை எதிர்பார்த்தே நான் ஆவலோடு இதை எழுதுகிறேன்.எனது வேண்டுதல் எல்லாம், திறந்த மனதுடன் அணுகுங்கள், சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே எம்மைப் பாருங்கள் என்பதுதான்.கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனது மகனின் நியாயத்திற்காகப் போராடும் ஒரு தாயின் அர்ப்பணிப்பை, உறுதியைப் பாருங்கள். அவரின் உழைப்பிற்காகவாவது உண்மை வெல்லத்தான் வேண்டும். உறுதுணை செய்யுங்கள்.

உண்மை என்னவெனில் எமது வழக்கைப் பொருத்தளவில் நீதிமன்றம் நீதி வழங்குதலில் சற்றுத் தடுமாற்றம் கண்டுவிட்டது என்பதை உறுதியோடு சொல்வேன். அதேவேளை, பொதுவில் நீதிமன்றம் கூறுவதையே உலகம் ஏற்கும், நம்பும் என்பதையும் அறிந்துள்ளேன்.

எந்த ஒரு மனிதனும் இந்த நாட்டின் வரலாற்றில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துவிட்ட பிறகும் நிரபராதி என நீதி கேட்டதாக உதாரணமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் நாம் கேட்கிறோம். அத்தனை மோசமாக நாம் அநீதிகளை சுமந்து நிற்கிறோம். சுமையை இறக்க வாருங்கள்.

வேதனைகள் எம்மோடு முடியட்டும். விடியப் போகும் காலைப் பொழுதிலாவது நீதி அனைவர்க்கும் சமமாக மாறட்டும். சட்டத்தின் மூலம் நிரபராதிகளைக் கொன்றொழிக்கும் கொடுமை சாகட்டும்.எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு

நீதி வெல்லட்டும்!

இப்படிக்குஅ.ஞா. பேரறிவாளன்

Friday, October 5, 2012

ஆயுத எழுத்து: பல்கலைக்கழக விருது பெறும் முதல் திருநங்கை - வாழ்த்துவோம்...!

ஆயுத எழுத்து: பல்கலைக்கழக விருது பெறும் முதல் திருநங்கை - வாழ்த்துவோம்...!
வணக்கம் தோழர். பிரியாவை வாழ்த்துவோம். உலகம் எப்படி இருக்கிறது? ஒரு பெண் பலகலை விருது பெரிய விஷயமாகத்தான் உள்ளது. இவர் கல்லூரி/பல்கலையில் பாலினம் என்ற இடத்தில் என்ன போட்டிருப்பார். அதற்கு எப்படி போராடி இருப்பார் என்று பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.ஒரு கல்லூரி ஆசிரியரான அதற்கான போராட்டட்த்தைஉணர முடிகிறது. மூன்றாம் பாலினமாக பிறந்தது அவர் தவறா? இந்த உலகத்தின் பார்வையை மிகவும் மாற்ற வேண்டியிருக்கிறது தோழர். பெரியார் விருதினைப் பெற உண்மைத் தகுதி இவருக்கே. லிவிங் ஸ்மைல் வித்யாவிடம் பேசினேன். ப்லகலையில் படிப்பது ஆராய்ச்சி செய்வதில் உள்ள் பிரச்சினைகளைச் சொன்னார். மூன்றாம் பாலினம் முறையாக கல்லூரியில் சேர்ந்து படிக்க, ந்ம்மைப் போன்றவர்கள்தான் முன் கை எடுத்து செயலாற்ற வேண்டும். பிரியாவை வாழ்த்துவோம்.அவருடன் இணைந்து செயல்படுவோம். உங்களுக்கு அவரைத் தெரிந்தால், என்னைத் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளச் சொல்லவும். 
நன்றி தோழர். என்றும் தோழமையுடன்,மோகனா.

Friday, August 24, 2012

வேறு கோள்களில் உங்களின் வயது?


வேறு கோள்களில் உங்களின் வயது?

by Mohana Somasundram on Sunday, February 12, 2012 at 5:02pm ·
ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம்? 
   அக்காமாருங்களே  , அண்ணாச்சிகளே, ஒக்காருங்க. ஒங்களுக்கு ஒரு கதை சொல்ல வந்திருக்கேன்.
அது என்னா கதை.. நாங்க என்னா பச்சப் புள்ளையா?
அண்ணே, கதை யாரு வேணா கேக்கலாம்.இப்ப நான் சொல்லப்போற கதையே வேற..!
அப்படி என்னா ஊருல ஒலகத்திலே இல்லாத கதை சொல்லப்போற..!
 ஊரு ஒலகத்திலே இல்லாத கதைதான்க்கா..அது சரி . ஒங்க ஊரல ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம்? 
இது என்னாப்பா கேள்வி.?இது தெரியாம மனுசரு உண்டா?
அதெல்லாம் சரி அண்ணாச்சி. பதிலைச் சொல்லுங்க?
 எங்க ஊருல  மட்டும் இல்லேப்பா,.. இந்த உலகத்துலே எந்த மூலைக்கு நீ போனாலும் ஒரு நாளைக்கு இருவத்தி நாலு மணி நேரம்தாம்பா..!
எப்பவும்தானா அண்ணாச்சி..! எல்லா உலகத்திலேயும், கோளிலேயுமா?
ஆமாப்பா.. எங்க தாத்தன் பூட்டன் காலத்திலேருந்து இதேதாம்பா கதை..! 
அண்ணாச்சி.. இப்ப நான் கதைய மாத்தி சொல்லப்போறேன்..! 
என்னடாது இது புதுக் கதை உடறே..!
 புதுக்கதை  இல்லக்கா, பழைய கதைதான், ஆனா பொதுவா யாருக்கும் தெரியாத கதை..!
அப்படியா சொல்லு சொல்லு.ஏதோ கொஞ்சம் நேரம் போவும்.!
 அக்கா, நல்லா கேட்டுக்குங்க உங்க புள்ளங்களுக்கும் போயி சொல்லுங்க.பழைய கதையோட . புதுக்கதையும் சொல்றேன்..! அதான் நடந்த கதை,நடக்கிற கதை, நடக்கப்போற கதை எல்லாம் சொல்லப்போறேன்..!
கதை கேளு, கதை கேளு, ஒரு நாளின் கதை கேளு..
  இப்ப நம்ம பூமியிலே ஒரு நாள் என்பது 24 மணி நேரம்தான். ஆனால் நம் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் ஒவ்வொன்றின் ஒரு நாள் நேரமும் வேறு வேறாக இருக்கிறது. 
அப்படியா சங்கதி..சரி அதையும் சொல்லு கண்ணு.? புதன் கிரகத்துலே ஒரு நாள் எத்தினி மணி நேரம்?
புதன் சூரியனுக்கு ரொம்ப பக்கத்திலே இருக்குது.. அதனால அதன் மேல் சூரியனின் ஈர்ப்பு சக்தி அதிகம் தெரியும். புதன் கோள் ஒருமுறை தன்னைத்தானே சுற்றி முடிக்க..நம்ம பூமி நேரப்படி175.94நாட்கள்  59 மணி நேரம் ஆகிறது. அதுதான் புதனின் ஒரு நாள் ஆகும். எந்த கோளாக இருந்தாலும் சரி தன் அச்சில் ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரமே, அந்த கோளின் ஒரு நாள் எனப்படுகிறது.
சரி..சரி கண்ணு இப்பத்தானே வெளக்கமா புரியுது.புதனோட நாள் சொல்லிட்டே. செவ்வாய், வியாழன், வெள்ளி,சனியோட ஒரு நாள் நேரம் என்னாப்பா?
சூரிய குடும்பத்திலே, ரெண்டாவதா சுற்றுகிற, நம் பூமிக்கு முன்னாடி இருக்குற வெள்ளி கோளின் ஒரு நாள் என்பது நமக்கு 243  நாட்கள் ஆகும்.
இது என்னடாது, ஒரு நாளைக்கு எத்தினி மணி நேரம்னு கேட்டா, நீ வருஷத்துக்கு சொல்றியேப்பா?
இல்லேண்ணே, நான் சொல்றது ஒரு நாள்தான். வெள்ளி கோளோட ஒரு வருஷமும், ஒரு நாளும் கிட்டததட்ட ஒண்ணு தான். வெள்ளி கோளில் ஒரு வருடம் என்பது, ஒரு முறை வெள்ளி சூரியனை சுற்ற எடுத்துக்கொள்ளும் காலம், 224.70 நாட்கள் . இதுதான் வெள்ளிக்கோளின் ஓர் ஆண்டு. ஆனால் அது தன் அச்சில் மிக மிக மெதுவாக சுற்றுவதால் தன் அச்சில் ஒரு முறை சுற்றி முடிக்கவே, கிட்டததட்ட ஒரு வருடத்தை நெருங்கி வந்துவிடுகிறது. நம்ம பூமியோட 243 நாள்தான் வெள்ளி கோளில் ஒரு நாள்.அது ஒரு தடவை தன்னோட அச்சிலே சுத்திமுடிக்க 243 நாள் ஆவுது. ஆனால் ஒருசூரிய உதயத்துக்கும் அடுத்த சூரிய உதயத்துக்கும் இடைப்பட்ட நாட்கள் 116.75 பூமி நாட்கள்.தெரியுதா அண்ணாச்சி.
என்னமோ போ, எங்களுக்கென்னா தெரியும், நீ படிச்சவன் சொல்றே. நாங்களும் நம்பிக்கிறோம். 
என்னண்னே இப்புடி சொல்லிட்டீங்க. நான் சொல்றது நெசம் ண்ணே    ..!
சரி, சரி மேல சொல்லுப்பா.. கேக்க சுவாரசியமாத்தான் இருக்கு.
அடுத்து நம்ம பூமியோட ஒரு நாள் எனபது சரியா துல்லியமா 24 மணி நேரம் இல்லே.  23 மணி  56 நிமிடம்  4.1 நொடிகள் தான். நம் பூமியின் துணைக்கோளான சந்திரனின் ஒரு நாள் என்பது நமக்கு 29.53  நாட்கள் .அதோட ஒரு வருடம் என்பது 
அப்ப நீ ஒரு மாசம்தான் சந்திரனோட ஒரு நாள்னு சொல்றியா?
ஆமாண்ணே..சந்திரன் ஒரு தடவை சுற்றி முடிக்க 29நாள்தான் ஆவுது. அப்படின்னா அதோட ஒரு வருடம் என்பது அதுக்கு 12 நாள்தான்..
ஹும்.. .. நமக்கெல்லாம் இது தெரியாம போச்சே..! நம்ம கணக்குக்கு ஒரு மாசம்னு சொல்றோம். 
அக்கா.. செவ்வாயின் ஒரு நாள் கிட்டததட்ட நாமள மாதிரிதான். 
24 மணி நேரமா?
ஆமா..செவ்வாயின் ஒரு நாள், 24 மணி  37  நிமிடம்  22.66 நொடிகள் தான். செவ்வாயோட சுற்று வேகமும், பூமியோட சுற்று வேகமும் சராசரியா ஒண்ணுதான்.
சரிப்பா, நமக்கு ரொம்ப தொலைவிலே இருக்குற வியாழன், சனிக் கதை என்னா?
வியாழன்தான் நம்ம சூரிய குடும்பத்திலே பெரிய அண்ணாச்சி.அதோ போல வெகு வேகமா  சுத்தறதும்  அதுதான். அதோட ஒரு நாள் என்பது நமக்கு 9 மணி 55 நிமிடம்  33 நொடிகள்.இதிலே இன்னொரு விஷயமும் சொல்றேன். இந்த வியாழன் நம்ம பூமியைவிட
 317 . 5 மடங்கு அதிக நிறை உள்ளது. பூமியில் மட்டும்தான் எடை என்று குறிப்பிடு கிறோம். எடை என்பது ஈர்ப்பு விவசைக்கு தகுந்தாற்போல மாறும். எனவேதான் பூமியைத்தவிர மற்ற கோள், சூரியனில் எல்லாம் நிறை என்றே சொல்லவேண்டும் 
.ஆனால் சூரிய குடும்பத்தில் அதிக வேகத்தில் தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் கோள் இது மட்டுமே.
அப்ப 10 மணி நேரம்தான் வியாழனோட ஒரு நாள்.
ஆமாண்ணே..சனிக்கோ ளின் ஒரு நாள்10 மணி 32 நிமிடம் 36 நொடிகள். 
 சுமார் 10 .5 மணி நேரம்.இல்லியா? 
ஆமாம். சனிக்கு அப்பாலே இருக்குற யுரேனஸ் கோளின் ஒரு நாள் என்பது 17  மணி 14  நிமிடம் 23 நொடிகள். சரியா சொன்ன நெப்டியூனின் ஒரு நாளுக்கும் கிட்டத்தட்ட அதே நேரம்தான் 16 மணி 6.6 நிமிடம் .
போதும்பா ஒரே குழப்பமா இருக்கு.. நீயே வந்து புள்ளங்களுக்கு சொல்லிக் கொடு. 
அண்ணாச்சி இதுக்கே அசந்துட்டா எப்படி..இன்னும் கதை இருக்கே..!
ம்..ம்.. சொல்லு . சொல்லு.
அண்ணே அதுக்கு முன்னே, இன்னொரு இண்டரஸ்ட்டான ஒரு விஷயம் சொல்றேன். 
என்னப்பா நெனச்சி நெனச்சி புதிர் போடறே 
வேறு கோள்களில் உங்களின் வயது?
ஆமாக்கா, புதிர்தான். ! ஆனா அது இந்த கோள்களின் ஒரு நாள் நேரத்தோடவும், ஒரு வருஷ காலத்தோடவும் சம்பந்தப்பட்டது. இப்ப உங்க மகனுக்கோ/மகளுக்கோ நேத்திக்குத்தான் பொறந்த நாளுன்னு வெச்சிக்குவோம்.
என்ன 11 .02 .2012  ஆ..? எனக்கு அவ்வளவு சின்ன புள்ளே இல்லியேப்பா?
அத விடுண்ணே..அந்த தேதியிலே பொறந்த உங்க புள்ளைக்கு இப்ப 22 வயசு..உங்கள பிள்ளையோட பிறந்த நாள் 11 .02 .1990 ன்னு வெச்சிக்கலாம். 
சரி அதுக்கென்ன இப்ப
இருக்குதே விஷயம் இருக்குதேண்ணே. அவங்களுக்கு நம்ம சூரிய குடும்பத்தோட வேற கோள்லே இருந்த எத்தினி வயசு ஆகும் தெரியுமா? 
அதையும் நீயே சொல்லு..
ம்..நல்ல கேட்டுக்குங்க .. இப்ப உங்க புள்ளைக்கு, இங்க 22 வயசுன்னா.. புதன் கோள்லே 91 .3 வருஷம் ஆகும். ஆனால் அடுத்த பொறந்த நாள், திங்கள் கிழமை,  செப்டம்பர்  9, 2012 தான் வரும். அதே போல்  வெள்ளியிலே, 35 .7 வயசு, அடுத்த் பொறந்த நாள் 2012 , ஏப்ரல் 5 , வியாழக்கிழமை வரும். ஆனால் பூமியிலே, அடுத்த பொறந்த நாள் 2013 , பிப்ரவரி 10 , ஞாயிறு அன்னிக்கு வரும். இந்த   ஆண்டு லீப் வருஷம்  . 
கேக்க நல்லாத்தான் இருக்கு, செவ்வாய்லே எத்தினி வயசு இருக்கும். 
செவ்வாயில் வயது 11 .6 . அடுத்த் பொறந்த நாள் தேதி..வியாழன்  செப்டம்பர் ,  6, 2012 . ஆனால் வியாழனில் உங்க பிள்ளை குழந்தைதான். வயது 1 .85 .அப்படின்னா குழந்தைதானே .அடுத்து வரும் பிறந்த தேதிசனிக்கிழமை, நவம்பர். 2, 2013 தான். 
நெசம்மாவே எங்களுக்கு கைக்குழந்த இருக்குற மாதிரி பண்ணிட்டே.
நான் செய்யலேன்னே.. நீங்க வேற உலகத்திலே இருந்தீங்கன்னா இப்படி இருக்கும்னு சொல்றேன். 
அப்பாலே இருக்குற சனிக்கெரகத்திலே என்னா வயசு. 
அண்ணே, புள்ளைக்கு ஒரு வயசு கூட ஆயிருக்காது? 
என்னாப்பா
ஆமாண்ணே, இப்ப நம்ம பூமியிலே பொறந்த புள்ளைக்கு 22 வயசுன்னா, அது சனிக்கோள் லே பொறந்திருந்தா, அதுக்கு  0.74 வருஷம் தான் ஆகி இருக்கும். அடுத்த , பொறந்த நாள் ஞாயிறு,ஜுலை 28, 2019 லே வரும்.
எல்லாம் ஒரே ஆச்சரியமா இருக்கேப்பா?
ஆமாக்கா. இன்னும் தொலைவிலே இருக்கிற யுரேனஸ் லே பூமியின் 22 வயது இளைஞருக்கு , வெறும் 0.26 வருடம்தான் ஆகும். அடுத்த் பிறந்த நாள்,2074 , பிப்ரவரி 15 ல், வியாழன்  அன்று நிகழும். அப்புறம்  இன்னொரு விஷயம் சொன்னா நீங்க நம்பவே மாட்டீங்க. 
அதையும் சொல்லு.. எத நம்ப, எத நம்ப வேண்டாம்னு தெரியலே.. எல்லாமே ஒரே ஆச்சரியமா இருக்கு?
அண்ணே, நமது எட்டாவது கோள் லே நம்ம புள்ளே ௨௨ வருஷத்துக்கு முன்னானி பொறந்து இருந்துச்சுன்னு வச்சிகிட்டா, இப்ப அதுக்கு வயசு 0.13 வருடம்தான். ஆனால் அடுத்த பொறந்த நாள் 2154ல் தான். இன்னும் 152 வருடம் கழிச்சுத்தான்.அந்த வருடம் நவம்பர் 28 ல், வியாழக்கிழமை  வரும்.  அப்புறமா, நம்ம சூரிய குடும்பத்தோட கோள் இல்லேன்னு வெலக்கி வச்சாங்களே, அந்த புளூட்டோவுலே புள்ள இருந்தா அதுக்கு, அங்க .00 88 புளூட்டோனியன் ஆண்டுகள் ஆகி இருக்கும். அடுத்த பிறந்த நாள் எப்ப வரும் தெரியுமா,நீங்க அதுவரை உயிரோட இருந்தா 2238 ம் ஆண்டு, செப்டம்பர் 19, புதன் கிழமை வரும்..
சரி கண்ணு நெறைய விஷயம் சொல்லிட்டே.. நாளைக்கு வந்து புள்ளைங்க கிட்டே இல்லே. 
ஆமாம் இதெல்லாம் எப்புடிப்பா.. 
மூலவர்களான, டைகோ பிராகியும், கெப்ளரும்  ..
 
அண்ணே, ஒவ்வொரு கோள் லேயும், ஓர் ஆண்டு என்பது அதனோட சுற்று வேகத்தையும், அது எத்தனை நாட்களில் நம்ம சூரியனை சுற்றி வருகிறது என்பதையும் பொறுத்தது. இதெல்லாம் நான் சொல்லலே. 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைகோ பிராகியும், அவரின் உதவியுடன், ஜொகான்னஸ் கெப்ளரும் (1571 -1630), கணித சூத்திரங்கள் மூலம் சரியாகக் கண்டறிந்தனர். இதெல்லாம் மிக மிக வியப்பான தகவல்கள்தானே.  
சரிப்பா. எவ்வளோ விஷயம் சொல்லி இருக்கிறே.. நல்லா இருப்பா. நாளைக்கு மறக்காம வாப்பா.
அண்ணே நான் நாளைக்கி வர்றேன். இந்த விஷயத்தோட, இனறைய நாளின்  கதையும் சொல்றேன்.