Wednesday, October 10, 2012

இன்று அக்டோபர் 10, மரண தண்டனைக்கு எதிரான நாள்.


இன்று அக்டோபர் 10, மரண தண்டனைக்கு எதிரான நாள்.

by Mohana Somasundram on Wednesday, October 10, 2012 at 10:06pm ·
 நண்பர்களே, உலகில் பிறந்ததவ்ர் அனைவரும் இறப்பது உறுதி. ஆனால் என்றைக்கு என்பதுதான் யாருக்கும் தெரியாத கண்ணா மூச்சியாக நாம் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். இதில் யாரை யார் முந்துவார் என்பதும் தெரியாது. அது போல தவறு செய்யாத மனித ஜென்மம என்பதும உலகில் கிடையாது. ஆனால் சிலர் பெரிய குற்றம் செய்தால் அதனைத் தண்டிக்க சட்டம் வேறு இருக்கிறது. தவறுக்கு தகுந்தாற்போல தண்டனை. ஆனால் எந்த தவறாக இருந்தாலும் அதற்கு ஈடாக./பதிலாக உயிரை எடுப்பது என்ன நியாயம்?உயிரை எடுப்பது தண்டனை ஆகுமா? அவருக்கு உயிரே போய்விடுகிறது. அதன் பின் என்ன என்பது அவருக்குத தெரியாது. அப்புறம் எப்படிப்பா இதனை தண்டனை என்று சொல்வீர்கள்?.ஒருவர் இன்னொருவரை கொலை செய்துவிட்டாலும் கூட , அதற்காக அவர் உயிரை வாங்கிவிட்டால், போன உயிர் திரும்பி வந்துவிடுமா? எந்த குற்றமாக இருந்தால் என்ன ?எதற்கு ஓர் உயிரை எடுப்பது? அப்படி உயிரை வாங்குவதால் அவன் திருந்தி விடுவானா? கொலைக்கு கொலை தீர்வாகிவிடுமா? மரண தண்டனை எதற்கு?
  இந்தியாவிலும் இன்னும் மத்திய கிழக்கு நாடுகளில்தான் மரண தண்டனை இன்னும் உயிருடன் உலவிக்கொண்டு இருக்கிறது? மரண தனடனைக்கு ஒரு மரணம் வராதா? கட்டாயம் வரவேண்டும்.அல்லது அதனை வரவழைக்க வேண்டும் மனிதம் இருந்தால் மரண தண்டனை இருக்காது?இன்று அக்டோபர் 10, மரண தண்டனைக்கு எதிரான நாள். முதல் உலக மரண தண்டனை எதிர்ப்பு நாள் 2003 லிருந்து,ஒவ்வொரு அக்டோபர் 10ம நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை கையில் எடுத்தது, மரண தண்டனைக்கு எதிரான உலகின் அனைத்து மனித நேய சக்திகளும், கூடி முடிவு செய்தன.இதில் அரசு சாரா நிறுவனங்களும் சட்ட வல்லுநர்களின் அமைப்புகளும், அவர்களின் ஆலோசனை இயக்கங்களும், மனித உரிமை அமைப்புகளும், உலகம் முழுவதும் உள்ள உள்ளூர் அமைப்புகளும் என அனைத்தும் ஒன்று கூடி, மனிதனின் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல கட்டங்களில்,போராடி தொடர்ச்சியாக எதிர்வினை புரிந்து, மரண தண்டனைக்கு ஒட்டுமொத்தமாக சமாதி கட்டவேண்டும் என முடிவு செய்தனர். உலகம் முழுவதும் அனைத்து மக்களிடையேயும் கொஞ்சம் கூட பிசிறின்றி இதே கருத்துதான் உலவி வந்தது.
ஒருவன் எப்படிப்பட்ட இமாலய தவறு செய்திருந்தாலும், அதற்காக அவனது உயிரை பலி வாங்கி பழி எடுக்கக் கூடாது. ஒருவன் தான் சாகும் நாள் தெரிந்து அதனை நோக்கி, எதிர்பார்த்து ஒவ்வொரு கணமும் எண்ணிக் கொண்டிருப்பது எவ்வளவு கொடுமை?மரண தண்டனைக்கு எதிரான ஒரு கூட்டமைப்பு மாநாடு, 2001 ல் , ரோம் நகரிலுள்ள ஸ்ட்ராஸ்போர்க்கில் (Strasbourg) நடந்த போது, அதில் மேலே குறிப்பிட்ட அனைத்து அமைப்புகளும் கலந்து கொண்டு குரல் கொடுத்து, மரண தண்டனைக்கு சாவு மணி யடிக்க முடிவு செய்தனர். அதற்காக உலகம் முழுவதும் உள்ள மக்களை ஒருங்கிணைக்க பேசினர் பின்னர் இது 2003 லிருந்து அக்டோபர் 10 லிருந்து மரண தண்டனை எதிர்ப்பு தினம் நடைமுறை படுத்த முடிவு செய்யப்பட்டது. இதுவரை 141 நாடுகள் சட்டப்படி நிறுத்திவிட்டன. 97 நாடுகள் எந்த குற்றத்திற்கும் மரண தண்டனை தருவதில்லை என மரண தண்டனையி கைவிட்டுவிட்டன. 36 நாடுகளினல் மரண தண்டனைப் பழக்கமே இல்லை. 8 நாடுகள், சாதாரண குற்றத்திற்கு மரண தண்டனை கொடுப்பதை நிறுத்தி உள்ளன சர்வதேச அம்நீச்டி அமைப்புப்படி,2011 ல் 21 நாடுகள் ம மரண தண்டனையை நிறைவேற்றின. 10 ஆண்டுகளுக்கு முன் 31 நாடுகள் இதனை செய்தன. அல்பியாவில் அர்ஜென்டினா, அர்மேனியா, அர்ஜென்டினா, பூடான், புருந்தி, குக் தீவுகள், கேபான், கிரீஸ், லத்வியா மெக்சிகோ, பிலிப்பைன்ஸ்,ருவாண்டா, சமோ,செனகல், டோகோ, டர்க்கி, உச்பெகிச்தான் போன்ற நாடுகளில் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்துவிட்டனர். 


கீழே பேரறிவாளனின் வாக்கு மூலம்

;மரணதண்டனை வேண்டாம்கேட்பது உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதிஅ.ஞா. பேரறிவாளன்மரண தண்டனைச் சிறைவாசித.சி.எண். 13906நடுவண் சிறை, வேலூர் - 2முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்தார், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினி ஆகியோருக்கு 1999-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மரண தண்டனையை உச்சநீதிமன்றமும் 2000-ம் ஆண்டில் உறுதிசெய்தது. எனினும் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 

கைது செய்யப்பட்டதன் பின்னணி

1991ஆம் ஆண்டு சூன் மாதம் 11ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை, எழும்பூர், எண்.50. ஈவெ.கி.சம்பத் சாலை, பெரியார் திடல் என்ற முகவரியில் எனது பெற்றோர் என்னை விசாரணைக்கென சிபிஐ அதிகாரிகள், ஆய்வாளர்கள் கங்காதரன், இராமசாமி மற்றும் ஒருவரிடம் ஒப்படைத்தனர். அப்போது பெரியார் திடல் பிரமுகர்கள் பலர் இருந்தனர்.எனது இந்த முறையீடு வெற்றுப் புலம்பல்கள் அல்ல. ஒரு நிரபராதியான மனிதனின் உள்ளத்து உண்மைகள். இறுதியில் உண்மை வெல்லும் என்ற நம்பிக்கையிருக்கிறது என்றாலும், நான்கு சுவற்றுக்குள் நடந்தேறிய உண்மைகள் பலரால் அறியப்பட வேண்டும் என்று ஆவல் கொள்கிறேன். அதன் விளைவுதான் இந்த முறையீடு.சிலவேளை, எனது நீதிக்கான நெடும் போராட்டத்தில் இந்த மடல் வேறு பல மனித நேயங்கொண்ட இதயங்களையும் இணைக்கக்கூடும். அதை எதிர்பார்த்தே நான் ஆவலோடு இதை எழுதுகிறேன்.எனது வேண்டுதல் எல்லாம், திறந்த மனதுடன் அணுகுங்கள், சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே எம்மைப் பாருங்கள் என்பதுதான்.கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனது மகனின் நியாயத்திற்காகப் போராடும் ஒரு தாயின் அர்ப்பணிப்பை, உறுதியைப் பாருங்கள். அவரின் உழைப்பிற்காகவாவது உண்மை வெல்லத்தான் வேண்டும். உறுதுணை செய்யுங்கள்.

உண்மை என்னவெனில் எமது வழக்கைப் பொருத்தளவில் நீதிமன்றம் நீதி வழங்குதலில் சற்றுத் தடுமாற்றம் கண்டுவிட்டது என்பதை உறுதியோடு சொல்வேன். அதேவேளை, பொதுவில் நீதிமன்றம் கூறுவதையே உலகம் ஏற்கும், நம்பும் என்பதையும் அறிந்துள்ளேன்.

எந்த ஒரு மனிதனும் இந்த நாட்டின் வரலாற்றில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துவிட்ட பிறகும் நிரபராதி என நீதி கேட்டதாக உதாரணமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் நாம் கேட்கிறோம். அத்தனை மோசமாக நாம் அநீதிகளை சுமந்து நிற்கிறோம். சுமையை இறக்க வாருங்கள்.

வேதனைகள் எம்மோடு முடியட்டும். விடியப் போகும் காலைப் பொழுதிலாவது நீதி அனைவர்க்கும் சமமாக மாறட்டும். சட்டத்தின் மூலம் நிரபராதிகளைக் கொன்றொழிக்கும் கொடுமை சாகட்டும்.எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு

நீதி வெல்லட்டும்!

இப்படிக்குஅ.ஞா. பேரறிவாளன்

No comments:

Post a Comment