அக்டோபர் 4 ..வேதியலாளர் கெனிச்சி ஃப்யூகி Kenichi Fukui).யின் பிறந்த தினம்
இன்று அக்டோபர் 4 ம் நாள், வேதியலுக்கான நோபல் பரிசினை, 1981 ம் ஆண்டு ரோயல்டு ஹாப்மேனுடன் (Roald Hoffmann) பகிர்ந்து கொண்ட கெனிச்சி ஃப்யூகி (Kenichi Fukui) (Fukui Ken'ichi, October 4, 1918 – January 9, 1998) பிறந்த தினம். கெனிச்சி ஒரு கோட்பாடியல் வேதியலாளர்(theoretical chemist). தனது வாழ்நாள் முழுவதும், வேதிவினைகளின் இயற்கைத்தன்மையை விளக்குவதற்காகவே செலவிட்டவர். மற்ற வேதியலாலர்களிடமிருந்து கெனிச்சியின் பணியும், ஆய்வும் மிகவும் வித்தியாசமாக இருந்தது. கெனிச்சி வேதிவினைகளின் தன்மையை அதன் கணித அமைக்குகள் மூலம் நிரூபித்தார். மேலும், அவரது பெரும்பாலான பங்களிப்புக்கள் இயற்பியலின் குவாண்டம் கொள்கைக்கும், அதன் கணித கொள்கைக்கும் இடையிலுள்ள தொலைவை/இடைவெளியை நிரப்பும் பாலமாகவே இருந்தன. அதிலும் முக்கியமாக அணுக்களும், மூலக்கூறுகளும் எப்படி இயங்குகின்றன என்பதை விளக்குவதாகவே இருந்தன. கெனிச்சி வேதிவினைகளை எளிதில் புரிந்து கொள்ளுமாறும், அதன் செயல்பாட்டை இயல்பு முறைப்படி முன்கூட்டியே கணிப்பதையும் எளிதாக்கினார். அதற்காகவே கெனிச்சிக்கு வேதியலின் நோபல் பரிசு அர்ப்பணிப்பு நிகழ்ந்தது.
கெனிச்சி ஃப்யூகி ஜப்பான் நாட்டிலுள்ள ஹோன்ஷூ (Honshu)தீவில் நாரா (Nara) என்ற இடத்தில் 1918 ம் ஆண்டு அக்டோபர் 4 ம் நாள் பிறந்தார். சியி மற்றும் ரியோகிச்சி( Chie and Ryokichi ) தம்பதியரின் முதல் மகவு கெனிச்சி ப்யூகி . அவரது தந்தை சியி ஒரு வியாபாரி மற்றும் தொழிலதிபர்; தனது மகனின் எதிர்காலத்தை மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டார். அவர்தான் மகன் கெனிச்சி ப்யூகியை வேதியல் படிக்கத் தூண்டினார். ஆனால் கெனிச்சி ப்யூகிக்கு வேதியலில் துளிக்கூட ஆர்வம் இல்லை. தந்தைக்காவே பின்னர் பலகளியில் வேதியல் படித்தார். ௧௯௪௧ ம் ஆண்டு பட்டம் பெற்ற கெனிச்சி ப்யூகி, அவரின் பெரும்பாலான் நாட்களை, இரண்டாம் உலகப் போரின் போது எரிபொருள் ஆய்வகத்திலேயே , செயற்கை எரிபொருள் உருவாக்குவதிலேயே செலவிட்டார். பின்னர் 1945 ல் க்யோடோ பல்கலையில்(Kyoto University ) பேராசியராக பணி செய்தார். ௧௯௪௮ ல் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளிடையே ஆன இணைப்பு எப்படி தொள தொளப்பாக எலெக்ட்ரான்களால் (molecules share loosely bonded electrons) uruvaakitrathu என்பதைக் கண்டுபிடித்த்ஹார் . அவைகளை முன்னோடி ஆபிட்டல்கள் /சுற்றிகள் (frontier orbitals - orbital is a mathematical function that describes the wave-like behavior of either one electron or a pair of electrons in an atom) என்றும் அழைத்தார். இதற்காகவே இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
கெனிச்சி ஃப்யூகி 1947 ல் டோமோ ஹோரி என்பவரை மனம் புரிந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் மகவும், ஒரு பெண் மகவும் இருந்தன. கெனிச்சி ஃப்யூகி தன் ஓய்வுநேரத்தில் நடைப்பயிற்சி,மீன் பிடித்தல் மற்றும் கோல்ப் விளையாடுதளில் செலவு செய்வார்.. கெனிச்சி ஃப்யூகி 1970 களில் அமெரிக்க தேசிய நிறுவனத்தின் அயல்நாட்டு மூத்த வெளிநாட்டு அறிஞராக நியமிக்கப்பட்டார். 1973 ல் ஐக்கிய அமெரிக்க நாட்டின் மிகச் சிறந்த விஞ்ஞானியாக் பங்கு பெற்றார். 1978 &1979 ல், ஜப்பானின் வேதியல் கழகத்தின் துணைத் தலைவராகவும், பின் 1983 to 1984 ல் தலைவராகவும் பணியாற்றினார். பின்னர் சர்வதேச குவாண்டம் மூலக்கூறு அறிவியல் கழகம் , ஐரோப்பிய கலை, அறிவியல் & மனிதவியல் கழகம் மற்றும் அமெரிக்க கலை &அறிவியல்கழகத்தின் உறுப்பினராகி( International Academy of Quantum Molecular Science and honorary member of the International Academy of Science.) பல்வேறு பெருமைகளைப் பெற்றார். அவரது கொள்கையும் & எண்ணமாவது:"Industry is more likely to put its research effort into its daily business. It is very difficult for it to become involved in pure chemistry. There is a need to encourage long-range research, even if we don't know its goal and if its application is unknown.".
நியூட்ரான் கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் சாட்விக்கின் பிறந்த தினம்..அக்டோபர் 20
உலகிலுள்ள எந்த பொருளாக இருந்தாலும் , அது ஓர் அடிப்படையாய் ஒரு சின்ன பொருளுடந்தான் உருவாகி இருக்கமுடியும் . அனைத்துப் பொருள்களின் அடிப்படை அலகு /கட்டமைப்பின் காரணி அணு என்பதை ஒரு நூற்றாண்டுக்கு முன்னர்தான் கண்டுபிடித்தர்னர் . அணுவினைக் கண்டுபிடித்த பின் , அதன் துல்லியமான எடையை நிர்ணயிக்க அதன் உட்பொருள்கள் உதவுகிறது என்று அறிந்தனர்.அவை புரோட்டான், எலெக்ட்ரான் மற்றும் போட்டான் என்று தெரியும்.இதில் புரோட்டான் தான் அணுவின் எண்னை நிர்ணயிக்கும் காரணியாகும். அதன் பின்னும் கூட, அணுவின் எடை நிரனயிப்பு எனது ஒரு சீ-சா புதிராகவே இருந்தது நியூட்ரான் கண்டுபிடிப்பு வரை. இந்தப் புதிருக்கு விடை கண்டு பிடித்துக் கொடுத்தவர் ஜேம்ஸ் சாட்விக்(Sir James Chadwick CH FRS (20 October 1891 – 24 July 1974) ) என்ற ஆங்கிலேய விஞ்ஞானியே..!.
ஜேம்ஸ் சாட்விக் இந்த நியூட்ரானை 1932 ல் கண்டுபிடித்தார்.அப்படி ஒரு பொருள் இருக்கலாம் என 1924 லிருந்தே சந்தேகித்தாலும், அதனை நிச்சயமாக அறியமுடிந்தது அதன் பின் ௮ ஆண்டுகளுக்குப் பிறகு 1932 ல். அதற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசினை 1935 ல் பெற்றார். ஜேம்ஸ் சாட்விக்கின் கண்டுபிடிப்பு உட்கரு இயற்பியலில் ஒரு மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தியது. அதன் கடினமான, ஊடுருவி வினவும் வினாவுக் கெல்லாம் பதிலையும் தந்தது.உட்கருவியலில் உட்கருவின் தன்மை மற்றும் அதன் ஆற்றலை அறியவும் வழி கோலியது. இந்தக் கண்டுபிடிப்பு அணுப் பிளவுக்கும்(nuclear fission) பெரிதும் உதவியது. இதன் பங்களிப்பால்தான்,யுரேனியம் 235 உடைக்கப்பட்டது இதன் ஆற்றலால்தான். அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, ஜப்பான் மீதும் வீசப்பட்டதை நாம் மறக்கமுடியுமா?
ஜேம்ஸ் சாட்விக், 1891 , அக்டோபர் 20 ம் நாள் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் பிறந்தார். ஜான் ஜோசப் (John Joseph ) & அன்னிமேரி வோவேல்ஸ் சாட்விக் (Anne Mary Knowles Chadwick.)தம்பதியரின் முதல் மகvuப் ஜேம்ஸ் சாட்விக்தான். மான்செச்டரிலும், கலிபோர்னியா பலகலையிலும் பயின்றார். ஜேம்சுக்கு பிடித்தமான பப்டம் கணிதம்தான். ஆனால் இயற்பியல் திட்டத்தில் இணைக்கப்பட்டார். இந்த தவறைத் திருத்திக்கொள்வதில் கூட கூச்ச சுபாவத்தினராய் இருந்தவர் ஜேம்ஸ். ௧௯௧௧, இயற்பியல் பட்டம்.பின் அணுவினை உடைக்க முடியாது என்று சொன்ன எர்னஸ்ட் ருதர்போர்டின் ஆய்வகத்திலேயே கல்வியைத் தொடர்ந்தார். 1913 ல் இயற்பியல் முதுகலைப் பட்டம் பெற்றார். அவருக்கு அவரின் திறமை பார்த்து ஒரு உதவித்தொகை வழ்னக்ப்பட்டது அதில்ய்ஹான் அவர் படிப்பையும் ஆராய்ச்சியையும் செய்தார். .
. ருதர்போர்ட் அணுவுக்கு ஒரு நேர் ஆற்றல் உள்ள பொருள் உண்டு அதுதான் உட்கருவின் புரோட்டன் என்றனர் . இயற்பியலாளர்கள், அதைத்தவிர வேறு அதிகப்படியான பொருள் உள்ளனவா என்றும் தேடிக் கொண்டிருந்தனர். அணுவுக்குள் மறைந்திருக்கும் ஆற்றலை, அதன் துளியூண்டு எடைக்கு காரணி நியூட்ரானக் கண்டுபிடித்தது ஜேம்ஸ். அணுவின் கட்டமைப்பு கண்டறிந்ததும் அழிவுக்கு மட்டுமல்ல ஆக்கத்துக்கும் அணுவினைப் பயன்படுத்துவது அறியப் பட்டது. அதுதான் அணு உலைகள் மூலம் உருவாக்கப்படும் மின் உற்பத்தி ..!
No comments:
Post a Comment