தந்தை பெரியாரின் 133 வது பிறந்த தினம்.. செப்டம்பர் ..17
by Mohana Somasundram on Saturday, September 17, 2011 at 5:36pm ·
வியாபாரி..பெரியார்
Photo 17>
பெரியார் சிறுவனாக குடும்பத்துடன்
பெரியாரின் தாய், தந்தை
தந்தை பெரியார் என நம்மால் அன்புடனும், மரியாதையுடனும் அழைக்கப்படும் பெரியாரின் இயற்பெயர் ஈரோடு வேங்கட இராமசாமி என்பதாகும். பெரியார் அன்றைய கோவை மாவட்டத்துடன் இணைந்த ஈரோடு நகரில் 1879 , செப்டம்பர் 17 ம் நாளில் பிறந்தார். இவரின் தந்தை வெங்கடப்ப நாயக்கர் ஒரு வியாபாரி. அன்னையின் பெயர் சின்னத் தாயம்மாள். 1929 ல், பெரியார் தனது சாதிப் பெயரான நாயக்கர் என்பதை நீக்குவதற்காக ஓர் அறிக்கை வெளியிட்டார் . பெரியார் பள்ளிப் படிப்பை 5 ஆண்டுகள் வரைதான் முடித்தார். அதன் பின் 12 வது வயதில் தந்தையுடன், வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது தந்தையின் பெருந்தன்மையான குணங்களைக் கண்டு வியந்தார். சாதி, சமூகம், மாதம் என்பதெல்லாம் , அடித்தட்டு மக்களை, ஏமாற்றும் முகமூடி என்பதை சிறுவயதிலேயே உணர்ந்து அவற்றை அகற்றவும், மூட நம்பிக்கைகளை மக்கம் மனதிலிருந்து உடைத்தெறியவும் சிறுவயதிலிருந்தே போராடியவர்.பெரியார் பிறந்த இல்லம்
செல்வ செழிப்பில் பெரியார்
சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்
இவர் வசதியான, உயர்சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம்கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக்கராணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையே, அந்த மூடநம்பிக்கைக்கு காரணமாக இருப்பது கடவுள் நம்பிக்கை, கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர நாத்திகராக இருந்தார்.இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமைவாயந்த திராவிடர்களை பார்ப்பனரால்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் பெரியார் எதிர்த்தார்.
அவர் தமிழ்ச் சமூகத்திற்காக செய்த புரட்சிகரமான செயல்கள் என்றால் , தமிழகத்தில் மண்டிகிடந்த சாதிய வேறுபாடுகளை குறிப்பிடத்தக்க வகையில்அகற்றினார். தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு பெரியார் குறிப்பிடத் தக்க பங்காற்றியுள்ளார். இவரின் சமுதாயப் பங்களிப்பை பாராட்டி யூனஸ்கோ (UNESCO) நிறுவனம் 1970, ஜூன் 27ல்,"புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது
. தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத்தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும்,பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது.இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதை கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பலத் தாக்கங்களை ஏற்படுத்தியவை.இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.இராமசாமி நாயக்கர், தந்தை பெரியார்என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார்.
"ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்"..periyaar .
93 வயதில் பெரியார்"உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் "..தந்தை பெரியார்.
"தமிழ் என்பதும்,தமிழர் கழகம் என்பதும் மொழிப் போராட்டத்துக்குத்தான் பயன்படுமே தவிர, இனப் போராட்டத்துக்கோ, கலாச்சார போராத்திற்கோ சிறிதும் பயன்படாது. "(விடுதலை 27 .01 .1950). எனவேதான் தமிழர் கழகம் என்பதிற்குப் பதிலாக திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டினார்.
அனைத்து திரவிட இயக்கங்களுக்கும் தந்தை பெரியார் ஆதர்ச சகிதியாக விளங்குகிறார். ஆனால் அவரது கொள்கைகளைக் முழுதும் கடைப் பிடிக்காமல், அவர் பெயரை ஊறுகாய் போல பயன்படுத்தி வருகின்றனர்.
பெரியார்+நாகம்மை
பெரியார்+ மணியம்மை
பெரியாரின் தந்தை அவருக்கு மணம் பேசும்போது பெரியாரின் வயது 19 . மணப்பெண் நாகம்மையின் வயது 13 . இது ஒன்றும் முழுமையாக பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் அல்ல. ராமசாமியும் நாகம்மையும் ஒருவரை ஒருவர் முன்பே விரும்பபினர். திருமணத்துக்குப் பின், நாகம்மை கணவருக்கு அவரின் அனைத்து செயல்களிலும் உறுதுணையாக இருந்தார். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. 5 மாதம் மட்டுமே உயிர் வாழ்ந்தது. ஆனால் நாகம்மை 1933 ல் இயற்கை எய்தினார். பெரியார் 1949 ல் மணியம்மை என்பவரை மணமுடித்தார். அவர் பெரியாரின் மறைவுக்குப் (1973 , டிசம்பர 24 )பின்னும் அந்த இயக்கத்தில் அவரின் கொள்கைகளை முன்னின்று நடத்தினார்.
முகம்மது அலி ஜின்னா,அம்பேத்கார் & பெரியார்
பெரியார் 1919 ல், இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். கேரளாவின் சின்ன நகரமான வைக்கம் (இன்றைய திருவனத்தபுரம் ) என்ற இடத்தில், தலித்களின் மீது ஆதிக்க சாதியனர் செய்த தீண்டாமைக்காகவும், கோவிலில் நுழைய அனுமதிமறுப்பிற்காகவும், 1924 ம் ஆண்டு, சத்யாகிரக இயக்கத்தை நடத்தினார். இதற்காக பெரியாரை வைக்கம் வீரர் என்றும் அழைக்கப்படுகிறார். ஆனால் 1925 ல், காங்கிரஸ் பிராமணர்களுக்கு மட்டுமே ஆதரவாக இருப்பதாக நினைத்தார். 1929 -1932 வரை மலேசியா, ஐரோப்பா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்குச் சென்று சுற்றிப்பார்த்தார். அனாடுகளின் பழக்க வழக்கங்கள் அவர் மனதைப் பாதித்தனர். அதனால் மிகவும் மனமாற்றம் அடைந்தார். பின்னர் 1939 , நீதிக் கட்சியைத் துவக்கினார். அதனையே பின்னாளில் 1944 ல் திராவிடக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்தார். பேரறிஞர் அண்ணாதுரைக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், 1949 ல் , அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். இவர்கள் தனி திராவிட நாடு கோரிக்கையும் முன் வைத்தனர். பின்னர் அது கைவிடப் பட்டது.
பெரியார் ரஷயாவில் துப்புரவு தொழிலாளர்களுடன் பெரியார் பகுத்தறிவுக் கொள்கைகளையும், சுயமரியாதை இயக்கத்தையும், பெண்களின் உரிமையும் மற்றும் சாதி ஒழிப்பையும் முன் நிறுத்தி பரப்பினார். பெரியார்தான் இவைகளின் ஆசான்; முன்னோடி.பெரியார் இல்லை என்றால் இப்படிப்பட்ட சாதி மறுப்பு& ஒழிப்பு இயக்கங்கள் இவ்வளவு விரைவில் நடந்திருக்காது . தமிழகத்தில் சாதி ஒழிப்பு என்ற புரட்சி விதையைத் தூவியவர் பெரியார்தான். இன்றைய தமிழ் எழுத்துக்களில் உள்ள மாற்றமும் பெரியாரால் ஏற்பட்டதுதான். இல்லை என்றால், இந்த லை/ளை/னை / ணை போன்றவைகளின் உருவ அமைப்பு வேறு மாதிரி ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரே எழுத்தாக இருக்கும்.
கடவுள் மறுப்புக் கொள்கை உருவாக்கம்..!
காசியில்..பெரியார்
துறவி பெரியார்
காசி விஸ்வனாதராகிய சிவனைக் காண 1904 ல் காசிக்குச் சென்றார். காசி இந்துக்களின் புண்ணிய நகரம்/புனித நகரம் என்று சொல்லப்பட்டாலும், அங்கும் அநியாயங்களும், பிச்சை எடுப்பதும், நீதிக்குப் புறம்பான நிகழ்வுகளும், மனிதர்கள் குளிக்கும் இடத்திலேயே, பிணங்கள் மிதந்து செல்வதையும் பார்த்து மணம் நொந்து போனார். இந்துத்துதுவம் சொல்லி மனிதர்களை சுரண்டுகிறார்கள் என மணம் கொதித்து எழுந்தார். ஒருநாள் காசியில் நடந்த நிகழ்வுதான், பெரியாரின் கொள்கைகளையே 360 டிகிரியில் திருப்பி போடும் அளவுக்கு அவரைப் பாதித்தது. வழிபாடு நடக்கும் இடத்தில் ஒரு சத்திரத்தில் வந்திருந்தோருக்கு உணவு வழங்கப்பட்டது.ஆனால் பெரியார் அங்கு சென்றால் உணவு மறுக்கப்பட்டது, அவர் பிராமணர் இல்லை என்பதற்காக. அவருக்கோ.. ஏராளமான பசி. கையில் காசில்லை. அவர் பிராமணர் போல, பூணூல் பொட்டுக் கொண்டு, உன்வவு வாங்கப் போனார். ஆனால் அவரிடம் இருந்த முரட்டு மீசை அவர் பிராமணர் இல்லை என்பதை வெளிச்சம் பொட்டுக் காட்டியது.மீண்டும் உணவு மறுக்கப் பட்டது. அந்த கால வழக்கப்படி, பிராமணர்கள் மீசை வைத்துக்கொள்வது மறுக்கப் பட்ட காலம்.எனவே, பெரியார் பசியின் கொடுமை தாங்காமல், ரோடு ஓரத்தில் கிடந்த எச்சில் இலையில் மீதம் இருப்பதை எடுத்து உண்டார், இதில் கொடுமை என்னவென்றால் அந்த சத்திரத்தை க் கட்டிய சொந்தக்காரர் பிராமணர் அல்லாதவர் .
தந்தை பெரியாரின் இறுதி நிகழ்வு
காசிக்கு கடவுள் உண்டு என்ற கொள்கையுடன் காசிக்குக் சென்ற ராமசாமி . கடவுள் மறுப்புக் கொள்கையுடன் திரும்பினார்.
இந்தி எதிர்ப்பு போராட்டத் தையும் நடத்தினார். கலப்பு திருமணங்களையும், சுயமரியாதை திருமணங்களையும் நடத்தியவர்.
1973, டிசம்பர் 24 ல் தனது 93 வது வயதில் இயற்கை எய்தினார்.
சுயமரியாதை பெரியார்
வைக்க்டத்தில் பெரியார் சிலை
Thursday, February 23, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment