Monday, April 30, 2012

ஜியார்ஜ் வான் பியூர்பாக்(Georg von Peuerbach),ஆஸ்திரிய-ஜெர்மன் வானவியலாளர் &கணிதவியலாளர்.


ஜியார்ஜ் வான் பியூர்பாக்(Georg von Peuerbach),ஆஸ்திரிய-ஜெர்மன் வானவியலாளர் &கணிதவியலாளர்.

by Mohana Somasundram on Monday, April 30, 2012 at 3:54pm ·

Peuerbach_Georg_von
அன்பு நண்பர்களே, வணக்கம். ஜியார்ஜ் வான் பியூர்பாக்(Georg von Peuerbach) என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா  ? இதென்ன பல்லை உடைக்கும் பெயர் என்கிறீர்களா? இவர் ஒரு கணிதவியலாளர்,வானவியலாளர் மற்றும் கருவிகள் உருவாக்குபவர்(Austrianastronomer, mathematician and instrument maker.). ஜியார்ஜ் இன்றிலிருந்து சுமார் 590 ஆண்டுகளுக்கு முன் இந்த உலகினைக் காண வந்தார். ஜியார்ஜ் 1423 ல், ஏப்ரல்  30 ம் நாள் ,(born May 30, 1423 in Peuerbach near Linz – April 8, 1461 in Vienna)  ஆஸ்திரியாவின் லின்ஸ் (Linz) நகருக்கு அருகிலுள்ள  பியூர்பாக் என்ற நகரில் பிறந்தார். இவரது குடும்பப் பெயர் தெரியவில்லை. அதனால் இவரது பெயருடன் இவரது பிறந்த ஊரை இணைத்தே அழைக்கின்றனர்.பொதுவாக இவர்  பியூர்பாக் என்றே சொல்லப்படுகிறார். பிறந்து சரியாக 17 ஆண்டுகள் கழித்து , 1440 ல், வியன்னா  பல்கலையில், தத்துவத்திலும், கலையிலும் முதுகலை பட்டம் பெற்றார். இவரது கணித ஆசான் ஜோகன் வான் க்முண்டேன்(Johann von Gmunden) ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பின்னர் ஜியவான்னி பியான்சினியும், ரோம் நகர பாதிரியும் இந்த இளைஞனை பெற்றார  பல்கலையில் (University of Ferrara) வானவியல் போதிக்க வலியுறுத்தினர். ஜியார்ஜ் பிலோக்னா மற்றும் படுவா வில் தனக்கு வந்த பேராசிரியர் பணியை மறுத்தார்.  பின் மீண்டும் வியன்னா சென்று, 1450  வரை கல்வி போதித்தார். அத்துடன் தத்துவம் மற்றும் இலக்கியமும் கற்றுத் தந்தார். பின்னர்  1453-54 வரை ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி  சென்று வானவியல் உரைகள் நிகழ்த்தினார் . 1454 ல், ஹங்கேரி நாட்டின் மன்னர் லாடிஸ்லாஸ்( King Ladislas of Hungary) தந்த வானவியலாளர் பதவியை ஏற்றுக்கொண்டார். ஜொஹான்ஸ் முல்லர் இவரது மாணவராவார்.ஜியார்ஜ் உலகின் மேற்குப் பகுதியின்  கணிதம் மற்றும் வான் நோக்கும் வானவியலின் தந்தை என்று போற்றப்படுகிறார். 
Johannes_Regiomontanus
  பியூர்பாக், இப்போது ஹாலி வால்மீன் என்று அழைக்கப்படும் விண்மீனை, ௧௪௫௬ ல் வானில் கண்டார்; அதன வரவை பதிவும் செய்தார். ஆனால் அது 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் என்பதை அறியவில்லை. அதன் பின்னர் அவரும் அவரது மாணவரான ரேஜியோமொண்டனசும் சேர்ந்து வினாவுக்கு அருகில், 1457 ம் ஆண்டு, செப்டம்பர் 3 ம் நாள் வருகை புரிந்த சந்திர கிரகணத்தைப் பார்த்ததுடன்,அதன் நிலைகளைப் பதிவும் செய்துள்ளார். அவரது துவக்க கால வானவியல் பணிகள் கிரகணங்கள் பற்றிய கணக்கீடுகளும், கணிதக் குறிப்புகளும் நிறைந்த அட்டவனைகளாக, கிரகணங்களின் அட்டவணைகள்(Tabulae ecclipsium) என்று எழுதி வைத்துள்ளார். பின்னர்  பியூர்பாக் இன்னும் அதிக வானவியல் அட்டவணைகளையும், விண்மீன் கோளம்( large star globe  ) வானவியல் கருவிகளையும் தயாரித்தார். வானத்தை அளக்க
Jacobstaff
ஜகோப்ஸ்  ஸ்டாப் (Jacob's staff)என்ற ஒரு அளவுமானியையும் கண்டுபிடித்தார். பூமியின் நடுப்பகுதியை அறிந்தார்(he established the prime meridian for the Earth.). 
Jacobstaff
     ஜியார்ஜ் வான் பியூர்பாக் தாலமியின் புத்தகங்களான அல்மாகேஸ்ட் (Almagest )மற்றும் அல்ஹசன்(Alhazen') ல் பணிபுரிந்தார். தாலமியின் புத்தகங்களைப் படித்து அதிலுள்ள சைனை(Sines), அராபிய கணிதத்திலிருந்து மாற்றினார்.சிங்களின்  தொகுப்பை  (omputation of sines and chords in Tractatus super propositiones Ptolemaei de sinubus et chordis) புத்தகமாக வெளியிட்டார்.  ஒவ்வொரு நிமிடத்தின் வளைவும், 600, 000அலகுகள் உடைய ஆரம் என்றும் கணக்கிட்டார். இதுதான் உலகின் முதல் தசம எண் கணித மாற்று. தனது எளிமையான கருவிகள் மூலம் இதனை நிரூபித்தார். சாதாரண அளக்கும் கருவி கொண்டு விண்மீன்களின் கோணங்களை அறிந்தார். ரோம் சென்று, கிரேக்கத்திலுள்ள தாலமியின் sooriya maiyakkolkai பற்றிய பணிகளை தன் மாணவர் முல்லr  மற்றும் 
ரேஜியோமொண்டனஸ் உதவியுடன் துவங்கினார். ஆனால் வாழ்வின் இறுதியை எட்டிவிட்டதால், மாணவர்களே, அவரது பணியை அல்மஜெச்ட்டின் தொகுப்பு என்ற பெயருள்ள  இரண்டு தொகுப்பாக,(The two collaborated on Epitoma in Al-magestum Ptolemaei (A Summary of Ptolemy’s “Almagest”),) 1496 ல் முடித்தன்ர். இருப்பிnu  ம் மையக்கொள்கைகள் உள்ள அரிஸ்டாட்டில் மற்றும் எயூடோசசின் (Eudoxus  )கொள்கைகளை மறுத்தார். இதில் வெற்றியும் பெற்றார். நிக்கலஸ் கோபர்நிகஸ் (Nicolaus Copernicus )என்ற புகழ் பெற்ற விஞ்ஞானி வரும் வரை ஜியார்ஜின் கொள்கைகளே வலம் வந்தன. 
astro lobe Attributed to Georg Peuerbach (d. 1461)
 பியூர்பாக் ஏராளமான அறிவியல் கருவிகளைக் கண்டுபிடித்தார்.வாரடினத்தில் உள்ள வான் நோக்கத்தில்  பியூர்பாக் பணிபுரிந்தார்.  உதாரணமாக ரெகுலா(regula), என்ற வடிவியல் சதுரம் இவரது கண்டுபிடிப்பே. பியூர்பாக் கின் புத்தகமான அல்காரிதம்,(Algorismus), என்பது பகுபடா முழு எண்கள் மற்றும் பின்னங்களைக்   கொண்டு, செய்முறைக்  கணக்குகளின் அடிப்படையிலான ஓர் அடிப்படை பாடப் புத்தகம் இது. பியூர்பாக்கின் ஆராய்ச்சியில் அமைந்த திரிகோணமிதி மாறும் சைன்களின் அட்டவனையை அவரது மாணவரான ரேஜியோமொண்டனஸ் தான் தொகுத்து  வெளியிட்டார்.    கோள்களைப் பற்றிய புதிய கொள்கைகள்    என்ற புத்தகத்தின் ஆசிரியரும் பியூர்பாக் தான். பியூர்பாக்க்கின் இறப்புக்குப் பிறகே, ரேஜியோமொண்டனஸ் எபிடோம் (epitome) என்ற தொகுப்பையும் 1474 ல் வெளியிட்டார்.  இதுவே நீண்ட காலம் வரை வானவியலின் குறிப்பேடு என்று போற்றப்பட்டது. இவரது கண்டுபிடிப்பு களுக்கும், ஜியார்ஜூக்கும் பெருமை சேர்க்கும் விதமாக, நிலவின் பள்ளம் ஒன்றுக்கு இவரது பெயரான  பியூர்பாக் சூட்டப்பட்டுள்ளது
purbach_regio_mosiac_2006_04_20
(The crater Purbach on the Moon is named after him). 


first folding sundial with inbuilt compass in 1451. This also took magnetic declination– the difference between geographical north and magnetic north - into account,

No comments:

Post a Comment