Tuesday, August 27, 2013

2013, நவம்பர் வானில் ,மகிழ்விக்கப் போகும் வால்மீன் "ஐசோன் " க்கு ஒரு முகவுரை

2013, நவம்பர் வானில் ,மகிழ்விக்கப் போகும் வால்மீன் "ஐசோன் " க்கு ஒரு முகவுரை

August 28, 2013 at 12:43am
.

வால்மீனா ..ஆபத்தா?  

 

   பொதுவாகவானில் வலம் வரும் ஒரு வால்மீன்/வால்நட்சத்திரத்தின் வருகையை காலம் காலமாகவே  ஒரு கெட்டசகுனமாகவே  கருதி வரும் சமூகம் இது. பொதுவாக நம் எல்லோருக்கும் வால் நட்சத்திரம்/வால்மீன்வரப்போகுது என்றாலே, ஏதோ  கெட்டது  நடக்கப் போகுது ,உலகத்  தலைவர் யாரோ சாகப் போகிறார்கள் என்ற கருத்தே மக்கள் மத்தியில்பரவலாக விரவிக் கிடக்கிறது;விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வால்மீன் என்பது ரொம்பசாதுவானது.  ஆனால் பாவம் இந்த  இந்த வால் நட்சத்திரம் அப்படி எதுவும் எந்த கெட்ட  செயலையும் செய்வதில்லை. ஆனால் கெட்ட பேர் மட்டும் வாங்கிவிட்டது.

  வால்மீன்..வருகை..!

 பொதுவாக வால்மீன்என்பது சூரியனுக்கு அருகில் சுற்றி வரும் ஒரு பனிக்கட்டியால் ஆன ஒரு பொருள்.அவ்வளவே. அது சூரியனை  இஷ்டம் போலவே ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து சுற்றி விட்டுப்போகும். சில வால்மீன்கள் 20-200 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் சில வால்மீன்கள் 60,000  ஆண்டுகளுக்கு ஒரு முறையும்கூட வருவது உண்டு. சில வால்மீன்கள் தன வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் வந்துசூரியனை சுற்றி விட்டு ஓடியே போய்விடும். மீண்டும் வரவே வராது.இப்படி ஓர் ஆண்டில்சூரியனை ஆலவட்டம் போடும் வால்மீன்கள் ஏராளம் ஏராளம். அது நம்மை, இந்த உலகை எதுவும் செய்யாது, அது பாட்டுக்குதன போக்கில் சூரியனைசுற்ற வந்துவிட்டு ,இந்த பூமிக்கு தன இருப்பைத் தெரிவித்துக் கொள்கிறது. இது பற்றிநமக்கு எதுவும் தெரியாமல் நாம் இதைப்பற்றி கதை விடுகிறோம்.

  வால்மீன்..என்ன அது ?

  வால்மீன் என்பது தனியான ஒரு சிறு  உலகம்.அது முழுக்கமுழுக்க, தூசும், பனிக்கட்டியும் இணைந்த ஒரு அழுக்குப் பனிக்கட்டிதான்.காமெட்(comet ) என்ற வார்த்தைக்கு கிரேக்கத்தில் “முடி”(hair) என்றே பொருள். பழங்காலத்தில்வால்மீன்கள் சூரிய குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற உண்மை யாருக்கும் தெரியவேதெரியாது. சீனர்கள் கி.மு. 240களி ல் முதன் முதலில் பார்த்த ஹாலி வால்மீன் பற்றியும் பலருக்குத் தெரியாது.
 பழங்கால கருத்துகளும் உண்மையும்...

   நம் முன்னோர்கள், வால்மீனையும், அதன் வாலையும் பார்த்தும் கூட  வால்மீன்,ஒரு விண்மீன்தான் என்று நம்பினர். பல நூறு ஆண்டுகளாக வால்மீன் பூமியின்வளிமண்டலத்தில் பயணிக்கிறது என்றும் கூட நினைத்தனர். டேனிஷ் நாட்டு வானவியலாளர்டைகோ பிராகிதான்    முதன் முதலில்,வால்மீன்கள் என்பவை சந்திரனையும் தாண்டி வலம் வருகின்றன என்றஉண்மையை, கி.பி.1577 ல் பார்த்து அறிந்த பின்பே காண்பித்தார். கி.பி.1500-1600 களில்  வாழ்ந்த பெரும்பாலான வானவியலாளர்கள், வால்மீன்கள் என்பவை ஒரு முறை மட்டுமேவரும், மீண்டும் வராது என்றே நம்பினர். ஏனெனில், வால்மீன்கள் அப்படியே ஒருநேர்கோட்டில் வந்து சூரியனைச் சுற்றிவிட்டு, வான்வெளியில் நேர்கோட்டிலேயே சென்றுமறைந்து விடும் என்றம் நினைத்தனர்.

  நியூட்டனின் கணிப்பு..!
   
  நியூட்டன்

18ம் நூற்றாண்டின் மிகப் பெரியவிஞ்ஞானியான சர் ஐசக் நியூட்டன்தான், வால்மீன்கள் நீள்வட்டப் பாதையில்சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற உண்மையைக் கண்டுபிடித்தார். அது மட்டுமல்ல, அவர்தான், வால்மீன்களும்  கூட, கோள்கள் போலவே,  சூரிய குடும்பத்தின் உறுப்பினர்கள் என்றும், அத்துடன், அவையும் , கோள்கள் போலவே , மீண்டும் மீண்டும் சூரியனைச் சுற்றிவரும் என்ற மிகப் பெரிய உண்மையையும் கண்டறிந்தார்.

  சொன்னபடி கேளு..


   1700 களின் துவக்கத்தில் தான், விஞ்ஞானிகள், கணித விதிகளின்படி, வால்மீன்களின் சுற்றுப் பாதையைகணித்தனர். அப்போது இப்போது உள்ளது போல, கணினி மற்றும் கால்குலேட்டர்கள் இல்லைஎன்பதையும்,கைகளின் உதவியாலேயே கணிதம் போட்டனர் என்பதையும் நாம் கவனத்தில்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. மீண்டும் மீண்டும் வரக்கூடிய ஹாலிவால்மீனை, எட்மண்டு ஹாலி என்ற ஆங்கிலேய வானவியலாளர் கண்டுபிடித்ததன் விளைவாகஅவரின் பெயராலே அந்த வால்மீனுக்கு பெயர்  சூட்டப்பட்டு, ஹாலி வால்மீன் என்றும்அழைக்கபடுகிறது. ஆனால் அவரின் வாழ்நாளுக்கு முன்னால், அந்த ஹாலி வால்மீன், 1531, 1607 &1682 களில்  அந்த வால்மீன்வந்தது. அவர் அதனைப் பற்றி, ஹாலி மீண்டும் 1758 ல் வரும் என்றும் , அது ஒவ்வொரு 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை வானத்தில் வலம் வரும் என்றும் கணித்தார். ஆனால் அது வருமுன்பே எட்மண்டு ஹாலி, இந்த உலகை விட்டு மறைந்தார்.ஆனால் அவர் சொன்னபடியே..அது 1758ல் வானில் பிரகாசித்தது.

 சொல்லவா..பிறந்த இடம் சொல்லவா?

பொதுவாக வால்மீன்கள் வான்வெளியில், இரண்டு இடங்களிலிருந்து உருவாகின்றன.அவையே நம் சூரியமனடலக் கோள்களைத் தாண்டி உள்ள குயூப்பர் வளையம் (Kuiper Belt ) மற்றும்,சூரியமண்டல்த்தின் தொலை தூர  கடைக் கோடி..எல்லையில் உள்ள ஊர்ட்மேகங்கள் (Oort cloud ).ஒரு வால்மீன் என்பது  குயூப்பர் வளையம் (Kuiper Belt ) &  ஊர்ட் மேகத்தில் (Oort cloud ).பல கோடி ஆண்டுகள் தங்கி வாழ்ந்தபின்னரே, அங்கிருந்து  கோள்கள் நோக்கி வரும். அதுவும் அது,சூடான  சூரிய மண்டலத்தின் உள வட்டத்துக்குள்(Inner SolarSystem )வந்த பின்னரே, வால்மீனுக்கு வால் முளைக்கும்..அப்போதுதான்அது பிரகாசமாவும் தெரியும்.


 பொன்மேனி உருகுதே.!
 

பொதுவாக வால்மீன்கள், சூரிய மண்டலத்தின் வெப்பமிகுஉள்பகுதியில் வந்த பின்னே , சூரியனின் ஒளிமூலம் ஒளியினைப பெறுகின்றன. நம்மால் அதனைக்காண முடிகிறது. காரணம் என்ன தெரியுமா? அதன் பனிக்கட்டிப் பகுதிகள், பனி மனிதன் போல சூரிய ஒளியில்உருகி மினுக்குகின்றன.இந்த அற்புதமான காட்சியும், சுற்றும் தான் வால்மீன்களின் வாழ்வில்பெருமை மிகு கால கட்டமாகும். அப்போதுதானே, அதன் ஒளியால நம்மால் அதனைக் காணமுடிகிறது. அதன் பின் பல கோடிக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து, உருகி உருகி  மறையும்.

 சேட்டைக்கார குட்டியா..ஒளிவிளக்கா?

 நாம் என்ன நினைத்துக் , கொண்டிருக்கிறோம் என்றால், வால்மீனுக்கு எப்போதுமே வால்  இருக்கும்என்றுதான். அ துதான் கிடையாது. பின்ன என்ன விஷயம் என்கிறீர்களா? அப்பா, அம்மாவிடம் குட்டீஸ் ஓடிவரும்போதுசேட்டை பண்ணுவது போல, வால்மீன் சூரியனை நெருங்கி வரும்போதுதான் அதுக்கு வால்முளைக்கும்(சூரிய வெப்பத்தால்,அதன பனிக்கட்டி உருகி.). மேலும் வால்  எப்போதுமேசூரியனுக்கு எதிர் திசையில்தான் நீட்டிக் கொண்டிருக்கும். பொதுவாக வால்மீனுக்குஒரு தலைப்பகுதியும், வாலும்  உண்டு. ரொம்ப சேட்டைக்கார பிள்ளைகள் போல, இரண்டு வால்கள் உள்ள வால்மீன்களும்உண்டு.

   விண்கற்கள் பொழிவும்வால்மீனும்..!
  

வால்மீன்கள்பூமியின்  வளிமண்டலம் வழியே போகும்போது, அதிலிருந்து சில் தூசுத்துகள்களையும் ஆங்காங்கே விசிறி விட்டுக் கொண்டேசெல்லும். அவை நீண்ட காலம் அப்படியே விண்வெளியில் வளிமண்டலத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும். எனவே வான்வெளியில் அந்தபாதை, பூமியில் பாதையில் குறுக்கிடும்போது, அந்தப் பகுதியில் அவை ஒவ்வொரு ஆண்டும், எரிகற்களாக எரிந்து கொட்டும். அவையேவிண்கற்கள பொழிவு (Meteor showers )என்று அழைக்கப்படுகிறது.

  நான் ரொம்ப புதுசுங்க..!
 

 

  நாம் இப்ப நம்மஐசோன் கதைக்கு வருவோமா? மற்ற வால்மீன்கள் போலவேதான் ஐசோனும் . ஆனால இந்த ஐசோனின் வயது என்னதெரியுமா? இவர் சூரியனுக்கு முன்னே பிறந்தவராம். ஆம் ..இதன் வயது..சூரியனைவிட அதிகம்..அல்லது சூரிய வயது என்றும் வைத்துக் கொள்ளளலாம்.அதாவது 470 கோடிஆண்டுகள்..அம்மாடியோவ்..! ஆனால் அபப உருவான அந்த வால்மீனை  நாம,இப்பதான், முதல் முறையாகப் பார்க்கப் போகிறோம்.அதுவும் ரொம்ப புதுசுதான் (a fresh comet ) என்றும் ஊர்ட் மேகத்திலிருந்து உருவாகி வருகிறது எனவும் வானவியலாளர்களும் சொல்லுகின்றனர்.

நவமபரில் வானில் பிரகாசிக்கப் போகும்.பிரம்மாண்ட ஐசோ ன்.! 

 

  
 ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ திலக, ராஜ பாராக்கிரம,ராஜ ஒளிவீச நம் இந்த நூற்றாண்டின், மிகப் பெரிய அதிசய மான, அற்புதமான, நிலவை ஒளியையேவிழுங்கி ஏப்பம் விடும் தன்மையுள்ள ஒரு பெரிய ஒளி மிகுந்தவால்நட்சத்திரம் இந்த 2013 ம ஆண்டு நவம்பர்-டிசம்பரில்  வருகிறார், பராக், பராக் ..பராக்

   

புதுவரவான ஐசோ னின். பிரம்மாண்டம்.! 

 இப்ப இன்னும் மூணு மாசத்துலே வரப்போற வால்மீன் ஐசோ ன்.
ரொம்ப ரொம்ப பெரிசாம். வாலின்  நீளம், ஒரு சில மீட்டரிலிருந்து, பல கிலோ மீட்டர் நீளம் எவ்வளவு தெரியுமா?. 300,000 கி.மீ/186,400 மைல்கள்.வால்மீனின்  அகலம் 5  கி.மீ. அனைத்தும் பனிக்கட்டியால் ஆனவை. ஆனா,இது நவம்பர் 1 8 மநாள், சூரியனின் மிக அருகில்  1.16 மில்லியன்கி.மீ  தொலைவில் வந்துபகலவனின் ஒளியுடன் போட்டியிட முயல்கிறது.என்றால் .இதன் சேட்டையை எண்ணிப் பாருங்கள். ஆதிகாலத்தில் ஒவ்வொரு நாகரிகத்திலும், வால்மீன்கள் வந்து போன பதிவைகுறிப்பிட்டு வைத்துள்ளார்கள. ஏசு கிறிஸ்து பிறந்த போ து கூட ஒருவால்மீன் தோன்றியதாக தகவல் பதிவு செய்யப்பட்டது.
   நமக்கு மிக நெருக்கமான வால்மீன்..

   ஐசோ ன்  ஊர்ட் மேகத்திலிருந்து நேரிடையாக புறப்பட்டுரொம்ப உற்சாகமாக வரும் மிகப் புதிய வரவாம் மேலும் ஐசோன் வால்மீன், இதுவரை வந்தவால்மீன்களில் மிகப் பெரியதும், மிகவும் பிரகாசமானதும் கூட. இது இந்த நூற்றாண்டில்இதுவரை வந்த வால்மீன்களில், இதுதான்சூரியனுக்கு மிக அருகில், செவ்வாய்கோளிளிருந்து 0.0724 AU  என்ற வானவியல் அலகில்,10,830,000 கி.மீ  /6,730,000 மைல்கள்,தொலைவில், 2013,,அக்டோபர் மாதம் முதல் நாள் தெரியும். இந்த ஐசோன் வால்மீன் 2013, நவம்பர் 28 ம் நாள் , பூமிக்கு மிக அருகில் வருமாம். அதாவதுசூரியனின் மையப்புள்ளியிலிரு ந்து சுமார் 1,800,000 km; தொலைவில் ( 0.012 AU வானியல் அலகில் ) வலம் வருமாம். அதன் பின் 2013, டிசம்பர் 26 மநாள், பூமிக்கு  மிக அருகில், 0.429 AU என்ற வானியல் அலகில் , 64,200,000 கி.மீ, / 39,900,000 மைல்கள் தொலைவில் தெரியும்.  அதுவும் பூமி அதனுடைய சுற்று
வட்ட த்திற்கு மிக அருகில் 2014, ஜனவரி 12-14 நாட்களில்இருக்கும். 2014 ஜனவரியில் இதனை வானில் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்கின்றனர்.,அதாவது  ..இதனை தொலைநோக்கி/ இருகண் நோக்கி (Binocular )இன்றி வெறும் கண்ணால் பார்க்கலாமாம். உலகில் அனைத்து பகுதியினரும்பார்க்க கூடிய வால்மீன்..இதுதான்.
    நவம்பர்..மாதஹீரோ..

 நவம்பர் மாதம்வரப்போகிற ஹீரோ ஐசோன் வால்மீனை கடந்த ஆண்டு செப்டம்பர் 21ம் நாள்தான் ஓர் அமெச்சூர்வானவியலாளரான, வைட்டாலி  நெவ்ஸ்கி மற்றும் அர்த்யோன்நோவிசொநோக்  (Vitali Nevski andArtyom Novichonok ) கண்டுபிடித்தனர். அந்த வால்மீனைப் பார்க்க பயன்படுத்திய கருவியின்பெயரைக் கொண்டே அதற்கு ஐசோன்  ((ISON) )என்று பெயரிட்டுள்ளனர். the International Scientific OpticalNetwork (ISON) என்பதன் சுருககிய பெயர்தான் ஐசோன். இதனை ரஷ்யாவிற்கு அருகில் கிஸ்லோவோட்ச்க்(near Kislovodsk,Russia.)என்ற இடத்தில் கண்டறிந்தனர்.

   ..

ஐயாமாரே.அம்மாமாரே...பாருங்க பாருங்க எல்லோரும் பாருங்க..

   நவம்பர்நெருங்க நெருங்க ஐசோ ன் மிகப் பிரகாசமாய் தெரியும். எப்படி இருக்கும் தெரியுமா? முழு நிலவின் ஒளியையும், வெளிச்சத்தையும் கூட இந்த ஐசோனின்  ஒளி  விழுங்கி ஏப்பம் விட்டு விடும் என்றும் சொல்லப்படுகிறது. . இந்த நூற்றாண்டில் வரும் மிகாபிரகாசமான வால்மீன் ஐசோன்  ,மட்டுமே. மறந்துடாம எல்லாரும் இந்த வால்மீனைப் பாருங்கப்பா.. உங்க பிள்ளைகுட்டிகளுக்கும் காட்டுங்கள். அது வர்ற ஒரு பத்து நாள் மின்னாடி பாக்கி  விஷயம் பேசுவோம். ..

வால்மீனின் வால் இன்னும்  நீளும்...


1 comment: