காய்கறி பாஸ்த்தா:
by Mohana Somasundram on Saturday, November 12, 2011 at 3:54pm
காய்கறி பாஸ்த்தா:
தேவையானவை:
- மடிப்பு குழல் பாஸ்த்தா / முறுக்கு பாஸ்த்தா /நூடுல்ஸ் ...1 /4 கிலோ
- பெல்லாரி..........................1
- காரட்...................................3
- பீன்ஸ்..................................10
- உருளை...............................2
- பட்டாணி.............................50 கிராம்
- இஞ்சி....................................1 இன்ச் நீளம்
- பூண்டு...................................10
- கறிவேப்பிலை....................கொஞ்சம்
- எண்ணெய்.........................50 மில்லி
- தேவைப்பட்டால் நெய்.வெண்ணெய்...2 தேக்கரண்டி
- உப்பு .....................................கொஞ்சம்
செய்முறை:
- பெல்லாரியை நைசாக நறுக்கவும்.
- காரட், பீன்ஸ், மற்றும் உருளைக் கிழங்கை கழுவவும்.
- பின் அனைத்தையும், சுமார் 1 /2 இன்ச் நீளம் நறுக்கவும்.
- பட்டாணியை தோல் உரிக்கவும்/வேகவைத்து எடுக்கவும்.
- இஞ்சி பூண்டை தட்டி வைக்கவும்.
- குக்கரில் பாஸ்த்தா/நூடுல்ஸ் போட்டு அது முழுகும் வரை நீர் ஊற்றவும்.
- பின்னர் அதனை மூடி ஒரு சத்தம் வருவரை அடுப்பில் வைக்கவும்.
- பின் உடனேயே அதிலுள்ள ஆவியை வெளியேற்றவும்.
- வேறொரு குக்கரில் கொஞ்ச எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய வெங்காயம் + கொஞ்சம் உப்பு போட்டு வதக்கவும்.
- பின் அதில் தட்டிய இஞ்சி பூண்டைப் போடவும்.
- அதிலேயே அனைத்து காய்கறிகளையும் போட்டு வதக்கவும்.
- பின் அதில் 4 தேக்கரண்டி நீர் விட்டு குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
- இறக்கிய உடன், அதிலுள்ள ஆவியாய் வெளியேற்றி விடவும்.
- பிறகு இதனை வெந்த பாஸ்த்தா மேல் கொட்டவும்.
- அதிலேயே பாஸ்த்தா /நூடுல்ஸ் க்குள் ஒரு சுவை தரும் பொடி இருக்கும்.
- அதனையும் பாஸ்த்தா மேல் போட்டு, கறிவேப்பிலை நறுக்கிப் போட்டு,அடுப்பில் வைத்து, கொஞ்சம் நெய்/வெண்ணெய் விட்டு கிளறி விடவும்.
- 2 நிமிடத்தில் அடுப்பிலிருந்து பாத்திரம்/குக்கரை இறக்கவும்.
நண்பா இதனை சாப்பிட்டீர்களென்றால் சுவை தூள் டக்கராய் இருக்கும். நாக்கு மீண்டும் காய்கறி பாச்த்தாவைக் கேட்கும். இதன் துணைக்கு தக்காளி சாஸ் சூப்பராய் இருக்கும். சும்மாவும் சாப்பிடலாம். மடிப்புக் குழல் பாஸ்த்தா அப்படியே குடல் கறி போல இருக்கும். இன்று எங்கள் வீட்டில் பாஸ்த்தா + நூடுல்ஸ் கலந்து தயாரித்தோம்! சும்மா கலக்கலாய் இருந்தது. ..! ஒரு வெட்டு வெட்டிவிட்டோம் எல்லோரும். நீங்கள் வருகிறீர்களா..அல்லது இதனை செய்து பார்க்கிறீர்களா..! முயற்சி செய்யவும்..
No comments:
Post a Comment