Thursday, February 23, 2012

எரடோஸ்தனிஸ் ..உலகின் முதல் புவியியலாளர்...Eratosthanes.. first geographist

எரடோஸ்தனிஸ் ..உலகின் முதல் புவியியலாளர்...Eratosthanes.. first geographist

by Mohana Somasundram on Tuesday, October 25, 2011 at 1:28am ·

அன்பு நண்பர்களே.. தற்கால அறிவியலால் அதிகம் பேசபடாத விஞ்ஞானி எரடோஸ்தனிஸ் . ஆனால் அறிவியலின் ராணியான கணிதம் பற்றி அதிகம் பேசியவர், எழுதியவர்.கணிதம் மூலம் பல வானியல் தகவல், புவியியல் தகவல் சொன்னவர் எரடோஸ்தனிஸ். அவரைப் பற்றிய தகவல்களை இரண்டு பகுதிகளாகத் தந்துள்ளேன். படித்து விமரிசனம் செய்யவும்.

உலகின் பழங்கால அறிவியல் மையம்..!

பழங்கால கிரேக்கம் தான் இன்றைய எகிப்து .கிரேக்கம் நைல் நதியின் கொடை என வரலாற்றாளர்களால் வருணிக்கப்படுகிறது. அந்த எகிப்து ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உள்ளது. உலகில் மனித நாகரிகம் உருவாகி வளர்ந்த ஆற்றுச் சமவெளிகளில் ஒன்றுதான் இந்த நைல் நதியின் நாகரிக களமான எகிப்து. இங்கே சுமார் 7 ,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வரலாற்றுப் பதிவுகள் கிடைத்துள்ளன. கிரேக்கத்தின் பெரிய நகரும், எகிப்தின் இரண்டாவது பெரிய நகரும் அலேக்சாண்டிரியாதான். இதனை மகா அலெக்சாண்டர் என்ற பேரரசர் கி.மு. 337 ல் (2,400௦௦ ஆண்டுகளுக்கு முன்) நிறுவினார். மத்தியதரைக்கடல் ஓரத்தில் அழகாக அமர்ந்துள்ள அலெக்சாண்டிரியாவின் கடற்கரை 32 கி.மீ நீளமுள்ளது. அன்றைய உலகின் பெரிய நூலகமான அலெக்சாண்டிரியாவும், அலெக்சாண்டிரியா பல்கலைக்கழகமும் இங்குதான் இருந்தன.

அலெக்சாண்டிரியா.நூலகம்..!

அலெக்சாண்டிரியா நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான பாப்பிரஸ் சுருள்களும், ஆட்டுத் தோலில் எழுதப்பட்ட வரலாற்று ஆவணப் பதிவுகள் சுமார், 400,000-700,000 எழுத்துச் சுருள்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தில், மாணவர்கள் படிக்க, விவாதிக்க, எழுத, ஆராய்ச்சி செய்ய என சுமார் 5,000 அறைகள் இருந்தன.அந்தக்காலத்திலேயே இவ்வளோ..பெரிய நூலகமா ? இந்த நூலகத்தில் மூன்றாவது நூலகராகவும், நிர்வாக இயக்குனராகவும் இருந்தவர்தான் எரடோஸ் தனிஸ் என்ற கிரேக்க விஞ்ஞானி. இந்த அலெக்சாண்டிரியா நூலகம் பண்பாடு மற்றும் அறிவின் கிரீடம் ஆகத் திகழ்ந்தது. இங்கே அறிவு ஜீவிகள் சுமார் 700 ஆண்டுக்காலம் அதனை ஆட்சி புரிந்தனர். ஆனால் இந்த அலெக்சாண்டிரியா சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனது.

கிரேக்கத்தின் ,.விஞ்ஞானி . எரடோஸ் தனிஸ் ..!

பழங்காலத்தில் கிரேக்கம்தான் அறிவியல் உலகில் கொடி கட்டிப் பறந்தது. அங்குதான் உலகின் தலை சிறந்த தத்துவ ஞானிகளும், அறிஞர்களும் வாழ்ந்தனர். கணிதத்தின் விற்பன்னர்களே, வானவியல் மற்றும் புவியியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினர். கி.மு. 276 -194 களில் வாழ்ந்த, பிறந்த எரடோஸ்தனிஸ், சைராகுயூசின் (Syracuse) ஆர்கிமிடீசுக்கு நெருங்கிய நண்பர். ஆனால் எரடோஸ் வசித்தது அலெக்சாண்டிரியா நகரில்தான்.இவர் சைரீனில்(Cyrene) பிறந்தார். இப்போது வட ஆப்பிரிக்க லிபியாவில், உள்ள ஷஹட்( Shahhat) தான் அன்றைய சைரீன்.கிரேக்க அறிஞர் எரடோஸ் பல்துறை வித்தகர். இவரே.கிரேக்கத்தின் மிகப் பெரிய கணித மேதை,அற்புதமான கவிஞர்,சிறந்த விளையாட்டு வீரர்,முக்கியமான வரலாற்றியலாளர் மற்றும் புவியியல் கண்டுபிடிப்பாளரும் .கூட !

நூலகரும்.. வானவியலாளரும்.பல்துறை வித்தகரும் .!

எரடோஸ்தனிஸின் பன்முகத்தன்மையால் இவர், பஞ்சாவதானி (Pentathalus) என்று பாராட்டப்பட்டவர். இவரை தத்துவத்தில் இரண்டாவது பிளேட்டோஎன்றும், வானவியல் கணிப்பில் தாலஸூக்குப் பிறகு வந்த மிகச் சிறந்த வித்தகர் என்றும் பேசப்பட்டவர். இவருக்கு பீட்டா (Beta) என்ற பட்டப் பெயரும் உண்டு. புவியியல்(Geography) என்ற வார்த்தையை உருவாக்கியவர் இவரே. ஜியோகிரபி என்றால் பூமியைப் பற்றி எழுதப்பட்ட என்று பொருளாகும். உலகில் முதன் முதலில் பூமியின் விட்டத்தையும், சுற்றளவைவும் சரியாக அளந்தவர் எரடோஸ்தனிஸ்தான்.அது மட்டுமல்ல. பூமியின் அட்சரேகை, தீர்க்கரேகை என்ற முறையைக் கண்டுபிடித்தவரும் எரடோஸ்தனிஸ்தான்.புவியியலின் ஒழுங்குமுறை விதிகளை நிர்ணயித்தவரும் இவரே..! ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அலெக்சாண்டிரியா நூலகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.

சூரிய ஒளியும்..நிழலும்= பூமியின் சுற்றளவு..!

எரடோஸ்தனிஸ் கி.மு. 276 ம் ஆண்டு வட ஆப்பிரிக்காவின் சைரீன் எனற தற்போதைய லிபியாவில் பிறந்தார். எரடோஸ்தனிஸ் அலெக்சாண்டிரியாவில் இலக்கணமும், ஏதென்ஸில் தத்துவமும் பயின்றார்.கி.மு, 236ல் மூன்றாம் தாலமி எரடோஸ்தனிஸை அலெக்சாண்டிரியா நூலகத்தின் நூலகராக நியமித்தார். அங்கே இவர் கணித்தத்திலும், அறிவியலிலும் ஏராளமான முக்கியமான கண்டுபிடிப்புகளைத் தந்தார். சூரியனின் வெப்பமும், அதன் ஒளியால் ஏற்படும் விளைவுகளும் உண்டு என்பதை நாம் அறிவோம். ஒளியின் மூலம் நிழல் உண்டாவதும் நமக்குத் தெரியும். ஆனால் நிழல் வழியாக ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு நிகழ்த்தி உலகை அசர வைத்தது எரடோஸ்தனிஸ் மட்டுமே..! பூமியின் மேல்,சூரிய ஒளியால் உருவாகும் நிழலை வைத்து பூமியின் அனைத்து பரிமாணங்களையும் கண்டறிந்தார்.

முதல் புவியியலாளர்..!

வானியல் உற்று நோக்கல் போலவே, புவிக்கோளின் பல்வேறு தகவல்களைக் கணக்கிட்டு, அதன் மூலம் யூகித்து பல அறிவியல் விஷயங்களை அறிந்தது இவரது மகத்தான் சாதனையாகும்.பூமி தன் அச்சில் சாய்வாக சுற்றுகிறது என்ற உண்மையை முதலில் கண்டறிந்தவரும் எரடோஸ்தனிஸ்தான். அது மட்டுமல்ல, புவியின் சுற்றளவையும், சாய்மானத்தையும் துல்லியமாகச் சொன்னவரும் இவரே. அத்துடன் நம் புவிக்கோளில் நான்கு வருடத்திற்கு ஒரு முறை உருவாகும் லீப் தினத்தையும் கண்டறிந்தார். தன்க்குக் கிடைத்த தகவல்களிலிருந்து, உலகின் வரைபடத்தையும் உருவாக்கினார். இதெல்லாம் எரடோஸ்தனிஸின் தலையாய சாதனையாகும். அதனால்தான் இவரை உலகின் நில அள்வீட்டாளர்/கணக்காளார்/கணக்காயர் (Surveyor of the world) என்றும், புவியியல் தந்தை (Father of Geography) என்றும், அறிவியல் காலப்பட்டியலின் (Father of Scientific Chronology) என்றும் பெருமையுடன் வர்ணிக்கப்படுகிறார்.

ஏன் சில நாட்களில் நிழல் சாய்வாக..?

எரடோஸ்தனிஸ் சூரியக் கதிர்கள் விளைவால் ஒருபொருளின் நிழல் பூமி மேல் விழுவதை தன் வாழ்நாளில் தொடர்ந்து கவனித்தார். நாமெல்லாம் அப்படி கவனித்திருந்தால், நமக்கு போர் அடித்திருக்கும். சலித்திருப்போம். ஆனால் எரடோஸ்தனிஸூக்கு ஏற்பட்ட எண்ணமும், கற்பனையும் வேறாக இருக்கிறது. அவர் வருடத்தின் ஒரு சில நாட்களில்/ நாளில் சூரிய்க் கதிர் பகலில் உச்சி வேளையில், தலைக்கு மேலே இருப்பதையும், அதனால், ஒரு பொருளின் நிழல் அதன் அடிப்பகுதி/காலடியில் மட்டும் விழுவதையும் கவனித்தார். ஆனால் எல்லா நாட்களும் ஒரு பொருளின் நிழல் அவ்வாறு அதன் அடியில் மட்டுமே நேராக சரியாக விழுவதில்லை. அந்த நிழல் கொஞ்சம் வடக்கு/தெற்கே சாய்வாக் இருக்கிறது..காரணம் என்ன நண்பா? முதலில் நீங்கள் இதற்குப் ப்தில் தேடுங்கள்..i...இதோ எரடோஸ்தனிஸ் வருகிறார்., வருகிறார், வந்து கொண்டே இருக்கிறார்.இதற்கு விளக்கம் சொல்ல...

நிழல் சாய்மானமும் , பூமியின் சுற்றளவும்..!

நமது தாயகமான சூரியனின் கதிர்களால் ஏற்படும் நிழல் என்பது பூமியில் சுற்றுவதாலும்,அது தன் அச்சில் 23 .5 பாகை சாய்வாக உள்ளதாலும் உண்டாகிறது. ஆனால் நாம் யாரும் இதைப்பற்றிக் கவலைப் படுவதோ அதைபற்றி சிந்திப்பதோ இல்லை; மாறாக எரடோஸ்தனிஸ் தினம் இடம் மாறும் நிழலைப் பார்த்தது மட்டுமின்றி, அதற்கான காரணமும் தேட ஆரம்பித்தார். எரடோஸ்தனிஸ் சூரியக் கதிர்கள் ஒரு பொருளின் மேல் ஏற்படும் நிழல் தினமும் ஒரே இடத்தில் ஒரே சாய்மானத்தில் இருப்பதில்லை.அந்த நிழலின் சாய்மானத்தையும், தினமும் சூரிய உதயம் என்பது 6 மாதம் வடக்கிலிருந்து தெற்காகவும்,அடுத்த 6 மாதம் தெற்கிலிருந்து வடக்காகவும் நகர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை துல்லியமாக கவனித்தார் எரடோஸ் தனிஸ். அதன் விளைவாக உருவானதுதான் பூமியின் சுற்றளவு.. எவ்வளவு என்று வினாவும், அதற்கான விடை தேடுதலும். இதனை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத காரியம். அதுவும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே.. பூமியின் சுற்றளவை.. ஆதிகாலத்தில், எந்த அறிவியல் ஆதாரமும் தெளிவாக அறிய முடியாத 2,000 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் கண்டுபிடிக்கிறார் என்றால், அது எத்தனை வியப்புக்குரிய விஷயம்..! பூமியின் சுற்றளவைக் கண்டறிய, எரடோஸ்தனிஸ் எகிப்தைவிட்டுநகராமல், சூரியனால் ஒரு பொருள் மேல் ஏற்படும் நிழலின் சாய்மானம் வைத்தே,பூமியின் சுற்றளவை ஒருவர் கண்டறிகிறார் என்றால்.. அவர் படு கில்லாடிதானே..!

பூமியின் கோள வடிவமும்,, சுற்றளவும்..!

அன்று கோடைகாலத்தின் மிக நீண்ட பகல் தினம், (summer solstice ) . அப்போது சூரியன் வானில் தலைக்கு மேலே சரியாக பவனி வந்து, வெய்யிலை நம் மேல் கொட்டுகிறார். எரடோஸ்தனிஸ் கோடைகால நீண்டதினம் பற்றியும் அறிந்து வைத்திருக்கிறார். அன்றைய எகிப்தின் ஸ்வேனெட் (Swenet/ Syene,) நகரில், இன்று நாம் சொல்லும் கடக ரேகை என்பது அப்போது கிடையாது. ஏனெனில் அந்த அட்ச ரேகையை அன்று யாரும் வரையவில்லை. ஆனால் சூரியன் அப்போது கடக ரேகையின் மேல்இருந்தது. அதுவும் சரியாக சூரியன் தலைக்கு கொளுத்திக் கொண்டிருந்தது. அப்போது யாரவது குனிந்து ஒரு ஆழமான கிணற்றில் எட்டிப் பார்த்தால், அது அப்போது சூரியனின் பிரதிபலிப்பை மறைத்துவிடும், இந்த தகவலை யாரோ தெரிவித் திருந்தனர்.. ஆனால் அவரும்கூட் இந்த உண்மையை ஒரு சோதனை மூலம் நிரூபிக்க முயற்சி செய்தார். அவரது சொந்த ஊரான, சைநீனுக்குச் சென்றார். அலெக்சாண்டிரியாவில் சூரியனின் சாய்மானம் என்பது, அந்த வட்டத்தில் 50 ல் ஒரு பங்கு என தீர்மானித்தார். இது ஒரு வட்டத்தில் 7.12 பாகை என்பதை எரடோஸ் தெரிவித்தார். அதே சமயம், பூமி ஒரு கோளவடிவம் என்று கிரேக்கர்கள் புரிந்து கொண்டனர். அதே கருத்தைத்தான் எரடோஸ்தனிஸும் கொண்டிருந்தார். .

ஸ்டேடியன்/கி.மீ , கணக்கீடு..!

அலெக்சாண்டிரியா சைனுக்கு(Syene,) வடக்கே இருக்கிறது.எனவே, மெரிடியன் வளைவு(meridian arc) எனபது எவ்வளவு தூரம் எனபதை தூரத்துடன் இணைத்து கணக்கிட்டால், அந்த தூரம் என்பதுதான், புவியின் சுற்றளவு அறிய சரியான அளவுகோலாக அன்று எரஸ்டோஸ்தனிசுக்குப் பயன்பட்டது. ஏனெனில் சூரியனின் கதிர்கள் பூமி மீது இணை கோடுகளாகவே விழுகின்றன. அதன் சாய்மானம் அந்த இடத்தில், 50 ல் ஒரு பங்கு என்றும், அதுதான் ,,1/50=7.2/360 பாகை என்ற கணக்கை படு துல்லியமாகப் போட்டார். அலெக்சாண்டிரியாவுக்கும், சைனீனுக்கும் இடையில் உள்ள தொலைவு என்ன என்று தெரிந்தால் இதற்கு விடை கண்டுபிடித்து விடலாம்,

. வச்ச குறி.. தப்பாது..!

அலெக்சாண்டிரியாவுக்கும், சைனீனுக்கும் இடையில் உள்ள தொலைவு அறிய சைனீனிலிருந்து அலெக்சாண்டிரியாவுக்கு,சில வீரர்களை ஒட்டகத்தின் மீது ஏற்றி அனுப்பினார். இரு ஊர்களுக்கும் இடையிலுள்ள தூரத்தை அறிந்து கொள்ள அவர் எடுத்த ஒட்டக முயற்சிகள் மிகவும் சுவையானவை. அதனால்தான் அன்றைய எரடோஸ்தனிஸின் கணிப்பிலிருந்து பூமியின் சுற்றளவு கொஞ்சமும் தப்பவில்லை. அனறைய எகிப்திய அலகான ஸ்டேடியன் (stadion) என் ற அலகில்தான் பூமியின் சுற்றளவை கணக்கிட்டார். அந்த அலகுப்படி, எரடோஸ்தனிஸ் கணக்கிட்ட புவியின் சுற்றளவு..250,000 ஸ்டேடியா (46, 250 கி.மீ.). ஆனால் நிலநடுக்கோட்டில் பூமியின் சுற்றள்வு , 40,075 கி.மீ. ஆனால் ஸ்டேடியம் அலகில் உள்ள மாறுதலகளைக் கணக்கில் கொண்டு, எரடோஸ்தனிஸ் கூறிய அலகு,அன்றைக்கு அவர் கண்டுபிடித்த புவியின்சுற்றளவு 39, 690 கி.மீ.என்பதும் தெரிய வந்தது. அதாவது இன்றைய புவியின் சுற்றளவில் சுமார் 2 % மட்டும் வித்தியாசம் இருந்தது. இதனை , நாம் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை. .

புவி மீது சோதனைகள்..!

எரடோஸ்தனிஸ் பூமியின் சுற்றளவு கண்டுபிடிக்கும் சோதனையை, ஒரே ஒரு சோதனையுடன் நிறைவு பெற்று விடவில்லை. அவரே. வேறு வேறு இடங்களுக்கு ஒட்டகத்தின் மேல் ஆட்களை அமரவைத்து அனுப்பி, அவைகளுக்கு இடையே உள்ள தூரம், சூரியக்திரின் சாய்மானம் போன்றவற்றைக்கொண்டு அந்த பகுதிyiலும் புவியின் சுற்றளவு என்ன என்பது தெரிந்து கொண்டு, ஏற்கனவே கண்டுபிடித்திருந்த சுற்றளவுடன், மற்ற விடைகள் ஒத்துப் போனதால், முன்பு அலேக்சான்டிரிய-சைநினுக்கு இடையில் கண்டறிந்த பூமியின் சுற்றளவு சரியானதே என்ற முடிவுக்கு வந்தார். பூமியின் சுற்றளவை திரிகோணமிதி கணக்கியல் மூலமே கண்டறிந்தார். .பூமியின் விட்டத்தையும் கூட, சுற்றளவு மூலம் கணக்கிட்டுத் தெரிவித்தார்.

புவியியலின் முதல் பதிவும்..புத்தகமும்..!

அந்த கால கட்டத்தில் எரடோஸ்தனிஸ் எழுதிய புவிவியல் புத்தகம் 3 பெரிய தொகுதிகளாக வெளிவந்தன. . நீண்ட காலத்துக்கு அதுவே., புவியியலின் அசைக்க முடியாத ஆதாரமாக இருந்தது.. எரடோஸ்தனிஸின் கண்டுபிடிப்பான பூமி சுற்றளவின் அளவு அடுத்த 100 ஆண்டுகளுக்கு எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே ஒப்புக்கொள்ளப்பட்டு.பின்பற்ற்ப்பட்டது. . அதாவது அடுத்த நூறாண்டுக்காலமும் எந்தவித அறிவியல் கண்டுபிடிப்புகலும் பூமியின் சுற்றளவு பற்றி நடக்க வில்லை என்றே சொல்ல வேண்டும். அவருக்குப் பின் 150 ஆண்டுகள் கழித்து வந்த பாசிடோனியஸ் ( Posidonius) பூமியின் சுற்றளவை அளக்க எரடோஸ்தனிஸின் செய்முறையையே பயன்பட்டது.இரு வேறு இடங்களின் மூலம் சுற்றளவு கணக்கைக் கணக்கிட்டு, முன்பு கணக்கிட்ட 252,000 என்ற ஸ்டெடிய எண்ணிக்கையே வந்தது.

எரடோதனிஸின் மற்ற கண்டுபிடிப்புகள்..!

எரடோஸ்தனிஸ் பூமியின் சுற்றளவு, விட்டம் கண்டுபிடித்ததுடன் அவரது கண்டுபிடிப்பின் தாகம் தணிந்துவிடவில்லை. அவரது கண்டுபிடிப்புகள் வானவியலிலுக்கும் கூட பெருமை சேர்க்கிறது. பூமியிliruந்து சந்திரனும், சூரியனும் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன என்ற உண்மையைக் கண்டுபிடித்தவர் எரடோஸ்தனிஸ்தான். ஆனால் அவை பூமியின் சுற்றளவு போல் அவ்வளவு துல்லியமாக இல்லை.சூரியக் கதிரின் சாய்மானம், நிழலின் சாய்மானம் இவற்றை வைத்து பூமி சுழலும்போது 23.5 பாகை சாய்மானத்தில் சுழலுகிறது என்பதையும் கூட துல்லியமாகத் தீர்மானித்தார். மேலும் எரடோஸ்தனிஸ் அலெக்சாண்டிரியா நூலகத்தின் பொறுப்பாளாராகவும் இருந்தார். அதனாலும் மக்கள எரடோஸ்தனிஸ் சொல்வதை ரொம்பவும் நம்பினார்கள். எக்கச்சக்கமான எரடோஸ்தனிஸின் வேலைகள், கண்டுபிடிப்புகள்.அனைத்தும் அலெக்சாண்டிரியா நூலகம் அழிந்த போது அழிந்துவிட்டன . அவரைப் பற்றி மற்ற நூலாசிரியர்கள் எழுதிய தகவல்களை வைத்தே இவையனைத்தும் எழுதப்பட்டன.

ஹெர்மஸ் கவிதையும்..லீப் வருடமும்..! எரடோஸ்தனிஸ்தான் முதன் முதல் பூமியின் உருவத்தை உத்தேசமாகக் கணித்து, அதன் வரைபடத்தை வரைந்து தந்தார். அதன் காலக் கணிப்பையும் பரிணாமக் காலத்தையும் கணக்கிட்டவ்ர் இவர்தான்.எரடோஸ்தனிஸுக்கு சரித்திரத்தின் மீது மீளாக் காதல் உண்டு .அதனால்தான் அவற்றை அதனை சுவைபட எழுதினார். வானில் வலம் வரும் விண்மீன் படலங்களுக்கும் , கிரேக்க புராணங்களுடன் உறவு உண்டாக்கி,அவற்றிற்கிடையே உள்ள இணைப்பை அழகாக சித்தரித்தார்.எரடோஸ்தனிஸ் இரவு வானின் விண்மீனகளைப் பட்டியலிட்டார். அன்றைக்கு அவற்றின் எண்ணிக்கை 675 உள்ளது என்றும் தெரிவித்தார். எரடோஸ்தனிஸ் ஹெர்ம்ஸ் Hermes, Erigone, and Anterinys or Hesiod (apparently alternative titles).)என்ற அழகிய கவிதை ஒன்றை புனைந்தார். அதில் வானவியலின் அடித்தளம் பற்றி அழகாக, கோர்வையாக வடித்திருக்கிறார்.அத்துடன், ஒவ்வொரு 4 ஆண்டுக்கு ஒரு முறை, லீப் (Leap) வருடம் வருகிறது என்று பாட்டாக படித்தவரும் இவரே. அது மட்டுமின்றி அந்த சமயத்தில் நடைபெற்ற அரசியல் தகவல்களையும் , முக்கிய நிகழ்வுகளையும் குறிப்பிட்டுள்ளார்.அவரது கணித கண்டுபிடிப்புகள் மிகவும் அலாதியானது. எரடோஸ்தனிஸ் அது பற்றிக் கூற அடுத்து வருவார்.

ரடோஸ் தனிசும்.. டிராய் நகரும்..!

எரடோஸ்தனிஸ் பூமியின் சுற்றளவு, சாய்மானம் மட்டும் கண்டுபிடிக்கவில்லை. பூமியின் சரித்திரத்திலும் தணியாத ஆர்வம் கொண்டவர். ஆனால் துரதிருஷ்டவசமாக அவரின் எழுத்துக்கள் நேரிடையாக நமக்கு கிடைக்கவில்லை. விண்மீன் தொகுதிகள் பற்றிய கிரேக்க புராணங்களும், டிராய் நகரின் முற்றுகை பற்றிய தேதிகளுடன் கூடிய அவரது வரலாற்றுப் பதிவுகளும் ஏராளமாய் இருந்தன. ஆனால் அவை அழிக்கப்பட்டுவிட்டதால் அவரின் சம காலத்தவர்கள் அவரைப் பற்றி பதிவு செய்து வைத்ததிலிருந்தே பல தகவல்களை நாம் அறிய முடிகிறது.

அலெக்சாண்டிரியா நூலகம் & எரடோஸ்தனிஸின் எழுத்துக்கள்.அழிவு .!

எரடோஸ்தனிஸ் கணிதத்தில் விற்பன்னர். எரடோஸ்தனிஸ் தனது 30 ஆவது வயதில், மூன்றாம் தாலமியால் மீண்டும் அலெக்சாண்டிரியாவுக்கு அழைக்கப் பட்டார். அதுவும் தாலமியின் மகனுக்கு கல்வி புகட்ட.. வந்த எரடோஸ்தனிசை தாலமி III அலெக்சாண்டிரியா நூலகத்தின் முதன்மை நூலகராக நியமித்தார். அப்போது அலெக்சாண்டிரியா நூலகம் அழிக்கப்பட்ட போது, எரடோஸ்தனிஸின் எழுத்துக்களும் அழிக்கப்பட்டன. அந்த நூலகத்தில் எரடோஸ்தனிஸ் நிலவியலின் அறிவியல் முழுவதையும் பாப்பிரஸ் மற்றும் ஆட்டுத்தோலில் பதிவு செய்து வைத்திருந்தார். அங்கு ஆயிரக்கணக்கான பாப்பிரஸ் பட்டைச் சுருள்களும், ஆட்டுத்தோல் சுருள் பதிவுகளும் அப்படியே அழிக்கப்பட்டன.

எரடோஸ்தனிஸின் எண்ணியல்..!

அந்தக்காலத்தின் எண்ணியல் (Number Theory),வடிவியல் (Geometry) மற்றும் எண் கணிதம் (Arithmetic) ஆகியவற்றில் சிறந்து விளங்கினார் எரடோஸ்தனிஸ். இதில் முதன்மை எண்களைக் (Prime Numbers)கண்டுபிடிக்கும் முறையை அறிமுகப் படுத்தியவர் எரடோஸ்தனிஸ்தான்.அதனால்தான் அவைகளை நாம் எரடோஸ்தனிஸின் சல்லடை (“Sieve of Eratosthenes“)என்றே அழைக்கிறோம். இதுவும் கூட நிகோமாக்கஸ் (writings of Nicomachus.)என்ற அறிஞரின் எழுத்துக்கள் மூலமே தெரிய வந்துள்ளன. In mathematics, the sieve of Eratosthenes (Greek: κόσκινον Ἐρατοσθένους), one of a number of prime number sieves, is a simple, ancient algorithm for finding all prime numbers up to a specified integer. It is one of the most efficient ways to find all of the smaller primes (below 10 million or so). The algorithm is named after Eratosthenes, an ancient Greek mathematician; although none of Eratosthenes' works have survived, the sieve was described and attributed to Eratosthenes in the Introduction to Arithmetic by Nicomachus

எளிதான அல்காரிதம்.(simple algorithm).!

சல்லடை/சீவ் என்ற சதுர வடிவ கணித சூத்திரம்.படம் பார்க்க . இது ஒரு எளிதான அல்காரிதம்(simple algorithm) .இது முதன்மை எண்கள் ஒரு குறிப்பிட்ட எண்கள் வரை செயல்பட முடிகிறது. மேலும் ஒரு கோடி வரை துல்லியமாய் அறிய முடிகிறது(The Sieve is a simple algorithm which works to identify all of the prime numbers up to a certain integer and is very accurate up to about 10 மில்லியன்.Eratosthenes later erected a column at Alexandria with an epigram inscribed on it relating to his own mechanical solution to the cube problem.). இது 2 ,3 ,5 , 7 போன்றவற்றின் இரட்டிப்பு பதின்மரை(Multiples) விட்டுவிட்டு செயல்படுகிறது. மீதமுள்ள எண்கள் முதன்மை எண்களாகும். இந்த எண் சல்லடை/சீவ் 18 ம் நூற்றாண்டின் லியோன்ஹார்ட் யூலர் (Leonhard Euler) வந்து தன் கருத்துக்களை சொல்லும் வரை நீடித்தது.அதுவே கணிதத் துறையை ஆட்சியும் செய்தது..

Sieve of Eratosthenes ..!

In arithmetic Eratosthenes invented a method called the “Sieve” (κόσκινον) for finding prime numbers (Nicomachus, Introduction arithmetica, I, 13, 2–4). According to this, one writes down consecutively the odd numbers, starting with 3 and continuing as long as desired; then, counting from 3, one passes over two numbers and strikes out the third (a multiple of 3 and hence not prime) and continues to do this until the end—thus 3 5 7 9 11 13 15 17 19 21 23 25 27 29 31 33 35, etc. The same process is gone through with 5, but this time passing over four numbers and striking out the fifth (a multiple of 5)—3 5 7 9 11 13 15 17 19 21 23 25 27 29 31 33 35, etc. The process may be repeated with consecutive odd numbers as many times as one likes, on each occasion, if n is the odd number, n-1 numbers being passed over and the next struck out; the remaining numbers will all be prime. Pappus (late third century) also attributes to Eratosthenes a work On Means (Περί μεσοτήτων), the contents of which are a matter of conjecture but which was important enough to form part of what Health calls the Treasury of Analysis (άναλνόμενος τόπος), comprising works by Euclid, Apollonius, Aristaeus, and Eratosthenes (Pappus, Collectio, Hultsch, ed., VII 3, p. 636, 24; see Heath, History of Greek Mathematics, II, pp. 105, 399 ff.).

வடிவியலின் தந்தை எரடோஸ் தனிஸ்..!

எரடோஸ்தனிஸ் கணிதத்தின் முதன்மை எண்களில் ரொம்ப கெட்டி. எரடோஸ்தனிஸின் இன்னொரு முக்கிய புத்தகமும் அழிந்து போனது. அதன் பெயர் வழிகளிலே (On means ) -கணித வழிகள் என்பதாகும். இதுதான் வடிவியலின் இன்றியமையாத புத்தகங்களில் ஒன்றாகும். இதனைக் குறிப்பிட்டு, அதன் தகவல்களையும் தந்தவர் பாபஸ் ( Pappus) என்பவர். (another lost book written by Eratosthenes was On means. It is mentioned by Pappus as one of the great books of geometry.)

Doubling the cube ..!

The history of the problem of doubling the cube and the various solutions proposed are fully discussed by Health (History of Greek Mathematics, I, 244–270). Briefly, the problem resolves itself into finding two mean proportionals in continued proportion between two given straight lines: if a and b are the two given straight lines and we find x and y such that a:x = x:y = y:b, then y = x 2/a = ab/x; eliminating y, we have x3 = a2 b, and in the case where b is twice a, x3 = 2a3, and thus the cube is doubled. Eratosthenes’ mechanical solution envisaged a framework of two parallel rulers with longitudinal grooves along which could be slid three rectangular (or, according to Pappus, loc. cit., triangular) plates (marked with their diagonals parallel—see Figure 3) moving independently of each other and able to overlap; if one of the plates remains fixed and the other two are moved so that they overlap as in Figure 4, it can easily be shown that points A, B, C, D lie on a straight line in such a way that AE, BF, CG, DH are in continued proportion, and BF and CG are the required mean proportionals between the given straight lines AE and DH.

பூமி-சூரியன் தொலைவினைக் கண்டுபித்த எரடோஸ்..!

பூமியின் சுற்றுப் பாதை மற்றும் சூரியன் எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பதை அறியவும் கூட எரடோதனிஸ் அதில் திரிகோணமிதியின் சூத்திரம் மற்றும் அப்போது கிடைத்த தகவல்களைக் கொண்டே பூமி-சூரியன் தொலைவினை கண்டறிந்தார். அப்போது இன்னொரு முக்கிய விஷயமும் அவருக்குக் கிடைத்தது. சூரியன் வெகு தொலைவில் உள்ளதால்தான் அதன் கதிர்கள் பூமியில் இணைகோடுகளாக (Parallel) வருகின்றன என்பதையும் அனுமானம் செய்தார்.அது மட்டுமல்ல. பூமி-சூரியனுக்கு இடையில் உள்ள தூரம் 149 மில்லியன் கி.மீ என்றும் தெரிவித்தார். இப்போது நாம் அறியப்படும் புவி-சூரிய தொலைவு 149 .5 மில்லியன் கி.மீ தான். அதாவது 1 % மட்டுமே வித்தியாசம் இருந்தது.இந்த வித்தியாசம் ஒரு விஷயமே அல்ல.ஆனால் பூமியின் சாய்மானத்தை மிகத் துல்லியமாக 23 .5 பாகை என்று கணக்கிட்டார். ஆனால் துரதிருஷ்ட வசமாக பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம் என அவர் குறிப்பிட்ட 144,000 கி.மீ என்பது மட்டும் தவறாகி விட்டது. இது தற்போதைய தூரத்தை விட மூன்று மடங்கு அதிகம்.

பீட்டா எரடோஸ்தனிஸ்..!

எரடோஸ்தனிஸ் பல்துறை வித்தகராக இருந்தாலும் கூட எந்த துறையிலும் அவர் முதனமையாய் இல்லாததால் அவரை இரண்டாம் நிலைக் குறியீடான பீட்டாவை வைத்து பீட்டா என்றே அழைக்கின்றனர்.பீட்டா என்று குறியீட்டுப்பெயரில் இவரைக் கூறியவர் சுதா லெக்சிகான் (Suda Lexicon,) மற்றும் அவரது சம காலத்தவருமே. ஆனால் முதன்மை அறிஞர்களை விட எரடோஸ் தனிஸ் மிக மிக முக்கியாமானவர். அவரது கண்டுபிடிப்புகளும், சூத்திரங்களும். கொள்கைகளும் இன்றும் மக்களால் பின்பற்றப்படுகின்றன.

எரடோசின் விமரிசனமும்..பிளாட்டோவும்..!

எரடோஸ்தனிஸ் எழுதிய கணித விமர்சனம் மிகவும் முக்கியமானது. அதுவே, பிளாட்டோவின் தத்துவத்திற்கு அடித்தளம் என்றும் சொல்லப்படுகிறது. எரடோஸ்தனிஸின் எழுத்தில் எண்கணிதம் (arithmetic ) மற்றும் வடிவியல் (geometry) போன்றவற்றிற்கு கணித அடிப்படை விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் ஏராளமான விஷயங்கள் விவாதிக்கப் பட்டன. மேலும் , அதில் (கணிதத்தில்) இசையையும் இணைத்தே கூறியுள்ளார் எரடோஸ்தனிஸ். இவற்றை எல்லாம் நாம்

ஸ்மியார்னா(Smyrna) வில் வாழ்ந்த தியோனின் பதிவுகள் மூலமே அறிகிறோம். தியோன்(Theon of Smyrna -Theon) மற்றும் ஈடோசியஸ்(Eutocius) வழியாக, கிரேக்க கணித முக்கிய மூன்று பிரச்சினைகளான வட்டத்தின் பரப்பு (squaring a circle), கனசதுரத்தின் இரட்டிப்பு (doubling a cube) மற்றும் ஒரு கோணத்தின் முப்பிரிவு (trisecting an angle) போன்ற மூன்று பிரச்சினைகள் இருந்தன.அதில் ஒன்றான கன சதுரத்தின் இரட்டிப்பு என்பதற்கான பிரச்சனை பற்றி எரடோஸ்தனிஸ்,தீர்த்து வைத்தார் என்று தெரிவித்துள்ளனர்.

எரடோசின் முதுமையும்..முடிவும்..!

எரடோஸ்தனிசுக்கு முதுமை எட்டியதும் பல வகைகளில் சங்கடப்பட்டார். முக்கியமாக அவருக்கும் 80 வயதாகும்போது அவருக்கு பார்வை இழப்பு ஏற்படுகிறது. அதனால் மிகவும் மனம் நொந்த எரடோஸ்தனிஸ் கண்பார்வை போன பின் மனிதனுக்கு மதிப்பு மரியாதை இல்லை என்றும், அதனால் விரைவில் இறப்பது உசிதம் என்று எண்ணி பல நாட்கள் உண்ணா நோன்பிருந்து பின்னரே உயிர் நீத்தார்.இதுதான் இவரது வாழ்வில் வேதனையான ஒரு நிகழ்வாகும். எரடோஸ்தனிசின் உயிர் இந்த புவியிலிருந்து பிரிந்த வருடம் கி.மு. 192 .தன் 84 வது வயதில் இந்த உலகைத் துறந்தார். .எரடோஸ்தனிசுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சந்திரனில் உள்ள ஒரு பள்ளத்திற்கு எரடோஸ்தனிஸ் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல,தனது காலத்தில், அரிஸ்ட்டாட்டில் மனித இனத்தை கிரேக்கர்கள் மற்றும் காட்டுமிராண்டிகள் என்று கூறு போட்டதையும் எதிர்த்தவர் எரடோஸ்தனிஸ்.

Wednesday, January 18, 2012

பழங்கால பெண் கணிதவியலாளர்கள்:

பழங்கால பெண் கணிதவியலாளர்கள்:

by Mohana Somasundram on Monday, January 16, 2012 at 11:57pm

பழங்கால பெண் கணிதவியலாளர்கள்:

அறிவியலின்.. மகாராணி

அறிவியலின் மகாராணி என்றால்அது கணிதத்தை மட்டுமே.குறிக்கும்..! கணிதம் இன்றி ஒரு செயல்பாடும் செய்ய முடியாது. எதைச் செய்தாலும், அதன் பின்னணியில் கணிதம் இருக்கும். மனிதன் முதலில் அறிந்து கொள்ள முயன்றது கணிதவியல் முறைதான். சூரியன் எப்போது உதிக்கிறது, இரவு எப்போ வரும்,, எவ்வளவு வேகத்தில் கல் வீசி, விலங்கைக் கொல்லலாம், குடும்பத்தில் எத்தனை பேர், எத்தனை விலங்குகள் துரத்தின, குடும்பத்திற்கு எத்தனை விலங்கு வேண்டும் என்பதெல்லாம் கணிதம் தொடர்பான தகவல்கள்தானே..! அதன்பின், வீடு கட்டும்போதும், எவ்வளவு நீளம், எவ்வளவு உயரம் என்றெல்லாம் தெரிய வேண்டியிருந்தது..! மனிதகுல நாகரிகத்துக்கு முன்பே, உயிர் உருவாக்கத்திற்கான காலம் கணிக்க, மாதவிடாய் நாட்கள் கணிக்க,மகப்பேறு காலம் அறிய தேவை ஏற்பட்டது. இவையும் கணிதம்தான்.! எனவே, கணிதத்தின் பிதாமகனான எண்கள் உருவானதும், எண்ணிக்கை வந்ததும், சுவையான கதையே..!

மனித.இன.பதிவுகளும்..பொருள்களும் ..!

மனிதன் ஆதி காலத்தில், கற்காலத்தில் பயன்படுத்திய கற்கருவிகள்,ஈட்டி, கோடரி, பானைகள்,எலும்பு ஊசி,எலும்பு தூண்டில், பொத்தான்கள், செருப்பு இவற்றை ஒட்டுமொத்தமாக, கலைப்பொருட்கள் என்கிறோம். மனிதன் ஆதிகாலத்தில், தான் வாழ்ந்த குகைகளில் இவற்றை ஓவியமாக வரைந்து வைத்திருக்கிறான். பயன் படுத்திய பொருட்கள் அந்த மலைக்குகைகளில் கிடைக்கின்றன. பாறைகளில் அவனது உற்று நோக்கல்கள், வான்பட வரைவு போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆப்பிரிக்காதான் மனித இனத்தின் தொட்டில் என கருதப்படுகிறது. மனிதன் முதன் முதலில் தங்கி வாழ்ந்த இடமும் இதுதான். தென்னாப்பிரிக்காவின் தென் முனையில் உட்கார்ந்துள்ளது பிலோம்போஸ் குகைகள் (Blombos Caves).இங்கேதான் மனிதன் கூட்டாக வாழ்ந்த துவக்ககால நாகரிகத்தின், மிக, மிகப் பழைய, ஆதிகால பொருட்கள் காணப்படுகின்றன. அங்கே செம்பழுப்பு நிற சுண்ணாம்பு பாறைகளில் செதுக்கப்பட்ட துண்டுகள் கிடைத்தன. இவைதான், உலகில் மனிதனால் முதலில் கலைவடிவமாக செதுக்கப்பட்டவை என கருதுதப்படுகிறது.வயது சுமார் 75,000 ஆண்டுகள்.இவற்றுடன் 80,௦௦௦000 வயதுடைய சில எலும்பு சாதனங்களும் கிடைத்தன. மேலும் இங்கே, எலும்பு கருவியால் , துளையிடப்பட்டு , அணிகலன்களாக அணிந்த நத்தையின் கூடுகளும் கிடைத்துள்ளன. இவைதான், மனித இனம் முதன்முதல் பயன்படுத்திய நகைகள்.

முதல்..காலண்டர்...பாறை.!

அது மட்டுமல்ல. ஆப்பிரிக்காவில், மனிதன் தான் உருவாக்கிய காலண்டரை, ஒற்றைப் பாறைகளில் வடித்திருக்கிறான்.அவை அங்கு ஏராளமாக விரவிக் கிடக்கின்றன. அங்கு கிடைத்த பொருட்களிலிருந்து, மனிதன் அங்கே, சுமார் 2,00,000 ஆண்டுகளுக்கு முன்பே தங்கி வாழ்ந்திருக்கவேண்டும் என்பதும் தெரிகிறது. சுமார் 6 ஆண்டுகால ஆராய்ச்சி மூலம் கிடைத்த தகவல்கள் இவை.

கணிதத்தின்..பொருள் என்ன?

இன்று நாம் உச்சரிக்கும் கணிதம் (Mathematics) என்ற வார்த்தையே கூட கிரேக்கத்திலிருந்து வந்ததுதான். அதன் பொருள் என்ன தெரியுமா? methamaa என்ற கிரேக்க சொல்லுக்கு, அறிவு,படிப்பு, கற்றல் என்ற பொருளாகும். இது அளவு,வெளி, அமைப்பு மற்றும் மாற்றம் போன்றவற்றைப் படிப்பதாகும். கணிதம் புதிய புதிய வழி முறைகள் கண்டறிந்து அதற்கான இலக்கணம் வகுப்பதாகும்.கணிதவியலாளர்கள், கணிதத்தின் நிரூபணம் மூலம் ஒரு விஷயம் உண்மையா, பொய்யா என்பதை சொல்லிவிடுவார்கள். ஆனால் அறிவியலின் ராணியான கணிதத்தில் பல விற்பன்னர்கள் இருக்கிறார்கள். இதில் இருபதாம் நூற்றாண்டு வரை, பெண்களுக்கு பெரும்பாலும் இடம் தரப்படவில்லை என்பதே உண்மையும் கூட.

முதல் கணிதப் பதிவு..!

கணிதத்தின் பரிணாமம் என்பதே அதனுடைய காரண காரியமான உண்மைகளைத் தேடுவதைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதே..! இது விலங்குகளைப் பங்கு போடுவதிலிருந்து துவங்கி இருக்கக் கூடும். . இதுதான் எண்கள் உருவாகக் காரணி. இரண்டு ஆடுகளும், இரண்டு மாடுகளும் சேர்ந்தால் என்ன கணக்கு/எண்ணிக்கை என்பது இன்று நமக்குத் தெரியும். ஆனால் ஆதிகால மனிதனுக்கு குகைகளில் வாழந்தவனுக்கு எப்படி இதனைப் புரிந்து கொண்டிருக்க முடியும். இதன் விளைவாக உருவாகி விளைந்ததே கணிதம். அது மட்டுமா?வரலாற்றுக்கு முன் வாழ்ந்த மனித சமுதாயத்திற்கு,சூரியன் எப்போது உதித்தது, எப்போது மறைந்தது, எப்போது மழைவரும், எப்போது காற்றடிக்கும் என்பதை அறியவும், நாட்கள், காலம், ஆண்டுகள் அறிய ஏதாவது தகவல் வேண்டி இருந்தது. அதைவிட முக்கியமாக, உடலில் மாற்றம் ஏற்பட்டு கரு உருவானவுடன், எப்போது அது பிறக்கும், அதன் காலம் தெரிய வேண்டி இருந்தது, எனவே, அதற்கு முக்கியமாக, சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறை குறிப்புகளே உதவின.மேலும் கணிதத்தின் முதல் உருவாக்கம் கோடுகள் போட்டு எண்ணுவதிலிருந்தே துவங்கியது என்பதும் கூட பதிவுகள் மூலம் தெரிய வருகிறது. இதனை செய்தது ஒரு பெண்தான் என்று பழங்கால சான்றுகள் நிரூபிக்கின்றன.

சரித்திரம்& கணிதம் பேசும் எலும்பு..!

வரலாற்றில், அதுவும் ஐரோப்பியர்கள் தொடர்பான சரித்திரத்தில், ஆப்பிரிக்க எகிப்திய கணிதம் அடியோடு மறுக்கப்பட்டது. அல்லது வரலாறும் , கணிதமும் அதன் அடிப்படை தன்மைகளிலிருந்தே ஒதுக்கப்பட்டன. ஆனால் பதிவு செய்யப்பட்ட வரலாற்ரின் முகம் வேறு விதமாக இருக்கிறதே..! மத்திய நிலநடுக்கோட்டு ஆப்பிரிக்காவின் மலைப்பகுதியில் உள்ள , உகாண்டா மற்றும் சைரே நாடுகளுக்கிடையில் உள்ளது எட்வர்ட் (Lake Edward) என்னும் ஏரி.இதன் நீர்வள ஆதாரம் நைல் நதி. இதன் கரைகளில் தற்போது இது குறைவான மக்கள் வசிக்கும் பகுதியாக இருந்தாலும், சுமார் 25,000 ஆண்டுகளுக்கு முன் இங்கு மீன் பிடித்து, விவசாயம் செய்த சமூகம் வாழ்ந்தது. அவர்கள் அங்கு நிகழ்ந்த எரிமலை வெடிப்பு அப்படியே அந்த மக்களை விழுங்கி விட்டது. அவர்களின் அனைத்துப் பொருட்களையும் எரிமலை கபளீகரம் செய்துவிட்டது. 1960 களில் பெல்ஜியத்திலிருந்து வந்த ஜீன் டி பிராகூர்ட் (Belgian Jean de Heinzelin de Braucourt ) என்ற விஞ்ஞானியின் குழு புதைவுற்ற எரிமலைக் குழம்பிலிருந்து அந்த இடத்திலிருந்து சில பொருட்களை எடுத்துள்ளனர். அதில் கணிதத்தின் வரலாறு பேசும் மிக முக்கியான பொருட்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்றுதான் இஷாங்கோ எலும்பு (Ishango bone) எனப்படும் ஒரு பபூன் குரங்கின் முன்னங்கால எலும்பு.. அதுதான் உலகத்தின் மிகப் பழமையான இரண்டாவது கணிதப் பதிவு கிடைத்துள்ளது.இதுதான் உலகின் மிகப் பழமையான முக்கிய எண்கள் (Prime Numbers) என்றும் கூட சிலர் சொல்கின்றனர். அதனை நுண்ணோக்கி மூலம் ஆராய்ந்ததில், அதில் 6 மாத கால சந்திர காலண்டர் குறியீடு செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.

முதல் கணிதக் கருவி பெண்ணாலா?

அந்த இஷாங்கோ எலும்பு பழைய கற்காலத்தின் முற்பகுதியைச் சேர்ந்தது என்று தெரியவருகிறது.எலும்பு கரும்பழுப்பு நிறத்தில் உள்ளது.மேலும் இதன் முனையில் ஒரு படிகக்கல் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம்தான்

இந்த எலும்பின் மேல் எழுதப்பட்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இதுதான் உலகில் பதிவு செய்யப்பட்ட கோட்டுக்கணக்கு டாலி குச்சி( Tally stick) என்றும் சொல்லப்படுகிறது. இதில் மூன்று வரிசை கோடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவைதான் முதல் கணித பதிவு என்றும் தெரிய வருகிறது. துவக்க காலத்தில் இதன் வயது கி.மு 9,500 -6 ,500 என்று கணக்கிட்டனர். பிறகுசுமார் பத்தாண்டுகளுக்கு முன் கார்பன் மூலம் ஆராய்ந்து இந்த எலும்பின் வயது சுமார் 20, 000 ஆண்டுகள் என்று அறிவியல் பூர்வமாக அறியப்பட்டுள்ளது.இதன் அருகின் உள்ள சுவாசிலாந்தில் கிடைத்த மற்றொரு எலும்பின் பெயர் லேம்போம்போ எலும்பு(Lembombo Bone in Swaziland ). இதன் வயது 43 ,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. இதுதான் உலகின் முதல் கணிதப் பதிவு. இதனை ஒரு பெண்தான் தான் கருவுற்ற காலத்தின் நாட்களை அறிய பயன்படுத்தி இருக்கவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

கணிதத்தின் பிதாமகள்..!

இறுதியில் இஷங்கோ எலும்பினை ஆராய்ந்த கிளாடியோ, இதனை உருவாக்கியது ஒரு பெண் என்றும், அவள் தன் மாதவிடாய் பற்றிய குறிப்புகளைப் பதிவு செய்ய சந்திரனின் பிறைகளைப் பயன்படுத்தி இருக்கிறாள் என்றும் தெரிவித்தார். அந்தக்கால நேரப் பதிவு, சந்திரனின் பிறைநிலைகள் கொண்டு உருவாக்கப் படவில்லை, மேலும் உயிர்கள் உருவாகக் காரணமான , பெண்களின் புனிதமான மாதவிடாய் சக்கரத்திற்கும், சந்திர பிறை நிலைகளுக்கும்தான் தொடர்பு படுத்தினர். எனவே, பெண்கள்தான், கணிதவியலின் பிதாமகர்கள்/தாய் என்று கருதப் படுயறது. இதனைப் பற்றி, வரலாற்றியலாளர்கள் பிளினியும், மார்க்கோபோலோவும் கூட குறிப்பிடுகின்றனர். இப்போது இந்த இஷாங்கோ எலும்பு, பெல்ஜியத்திலுள்ள அருங்காட்சியத்தில் , பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கிறது.

.பெண்கள் கணிதவியலாளர்கள் ..!

இருபதாம் நூற்றாண்டுக்கு முன், குறிப்பிட்ட மிகச் சில பெண்களே கணிதத்தில் திறமை பெற்றிருந்தனர். அவர்களும் கணித மேதைகளின் மனைவியாகவோ, மகளாகவோ அன்றி சகோதரியாவோ இருப்பார்கள். அது மட்டுமல்ல அவர்கள் மேல்தட்டு வர்க்கத்தினராகத்தான் இருப்பார்கள். அதுவும் பெரும்பாலும் அவர்கள் கிரேக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஏனெனில் கிரேக்க நாடுதான் அறிவியல் தொடபான அனைத்தையும் பதிவு செய்து வைத்திருக்கின்றது . அப்படிப்பட்ட பெண்களில் 10 முக்கியமான பெண் கணிதவியலாளர்கள் இருக்கின்றனர். அவர்களில் மிக முக்கியமானவரும் முதன்மையானவரும் பித்தகராஸ் தேற்றத்தின் உரிமையாளரான, கணிதவியலாளர் பித்தாகரசின் மாணவியும், பின்னர் மனைவியுமான தியானோ ஆவார். தங்க விகிதத்தை உருவாக்கியவர் தியானோதான். இவர்தான் பித்தகரசையும், அவரது கணிதப் பள்ளியையும், அவரது/ அறிவியலின் எதிரிகள் எரித்து துவம்சம் செய்த பின்னும் கூட., கணிதத்தையும் அதன் மாணவர்களையும், பித்தாகரசின் மகள் மற்றும் மகனையும் காப்பாற்றியவர். பித்தாகரசின் மாணாக்கர்களுடன் இணைத்து பித்தாகராஸ் பள்ளியை நடத்தியது மட்டுமின்றி, அதில் வெளியான அனைத்து கணித சூத்திர விதிகளுக்கும், பித்தாகரசின் பெயரை சூட்டினர்.தியானாவே பித்தாகரசின் வாழ்க்கைச் சரிதத்தையும் எழுதியுள்ளார். ஆனால் துரதிருஷ்டவசமாக அதுவும் காணாமல் போய்விட்டது.

கிரீசின் பெண் கணித மேதைகள்..!

பழங்கால கணிதம் பற்றி சில சுவையான தகவல்கள் கிடைத்துள்ளன. அதுவும் முக்கியமாக கிரீசில் வாழ்ந்த 330 கணித வியலாலர்களில் 12 % பேர் பெண்களாம். அவர்களில் பெரும்பாலோர் பித்தகரசின் மாணவர்களாம். இதில் 25% பேர் பித்தாகரசின் மாணாக்கர்கள். அதுவும் பெரும்பாலோர், இன்றைய துருக்கி எனப்படும் பழங்கால இயோனா என்ற கடற்கரையை ஒட்டிய இடத்தில் வாழ்ந்த ஆதிவாசிகளின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தான். இந்த சமுதாய கலாச்சாரத்தில் பெண்கள் சுதந்திரமானவர்களாகவும், பலசாலிகளாகவும் இருந்தனராம். சில பெண் கணிதவியலாளர்கள் இந்த காலத்தை "ஏதென்ஸின் பொற்காலம்" என்றும் அழைக்கின்றனர். இந்த பெண் kanithaviyalaalarkalil முதல் பெண் என்பவர் கணிதமேதை அய்த்ரா (Aythra) என்று அழைக்கப்படுகிறார். அய்த்ரா என்ற சொல்லுக்கு தூய்மை/தெளிவு (clarity) என்று பொருளாம். இந்த பெண்களின் பட்டியலில் கடைசியில் வந்து இணைபவர், கொடூரமாக மத வெறியர்களால் கிழித்து எறியப்பட்ட ஹைப்பேஷியா என்ற பெண் கணிதவியலாளரும், வானவியலாளரும் ஆவார்.ஆண்கள் அவரது அதீத திறமையை முன்னிட்டே தவிர்க்க முடியாமல் குறைவாக மதிப்பிட்டே பதிவு செய்தனர் அப்போது.

டாமோ..அவரின் இரத்தங்கள்..கணிதம்..!

கிரேக்கத்தில் குரோடோன் நகரில் வாழ்ந்த கணிதமேதை பித்தாகராஸ் மற்றும் தியானோவின் மகள்களில் ஒருவர் டாமோ (Damo ca. 535 BC - 475 BC ).அவர் குரோட்டனில் பிறந்தவர் அவரது பெற்றோர் இருவரும் தத்துமேதைகள் மற்றும் கணிதத்தில் விற்பன்னர்கள். அவரது சோதரிகள் அரிக்நாட், மையா . சகோதரர் டேலாஜெஸ்.டாமோ குரோட்டனிலேயே படித்து, அங்கேயே வரும் மாணாக்கர்களுக்கு கல்வியும் போதித்தார். டாமோ அவரது திறமையால், அவரது தத்துவம், கணிதத்திறமை, அவரது பொறுப்பான செயல்பாடு இவற்றால் பெருமை பெற்றார். பித்தாகராஸ் அவரது இறப்புக்கு முன்னரே, பித்தாகராஸ் தனது மகள் டாமோவின் திறமை மற்றும் பொறுப்பை நம்பி தனது கையெழுத்துப் கை எழுத்துப் பிரதிகளை எல்லாம்,டாமோவிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்கச் சொன்னார்.இதனை பின்னர் தன் மகளான பிடலே ( Bitale) மூலம் பத்திரமாக வைத்திருந்து பதிவு செய்யத் தந்தார். குரோரோனில் பித்தாகரசின் பள்ளி மூடப்பட்டபோது, டாமோ ஏதென்ஸ் நகருக்கு இடம் பெயர்ந்தார். அங்கும் டாமோ தத்துவம், கணிதத்தைப் போதித்தார். பித்தாகர்சுக்குப் பின் டாமோ மற்றும் டேலாஜெஸ் தான் கணித ஆசிரியராக இருந்தனர் என்றும், அதுவும் கி.மு 5 ம் நூற்றாண்டில் வாழ்ந்த எம்பீடொக்லெஸ்( Empedocles. ) என்ற தத்துவஞானிக்கு கல்வியும், கணிதமும் போதித்ததனர்.

பித்தாகராஸ் பள்ளியில் பெண்கள்..!

பழங்கால கிரீசில் பித்தாகராஸ் காலத்தில் வாழ்ந்த பெண் கணிதவியலாளர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களில் சிலர் முக்கியமானவர்கள். பித்தாகரசின் ஆசிரியரும், அவரை உருவாக்கியவருமாகிய, தெமிச்டோக்லையா (Themistocleia ) ஒருவர்.இவர் கி.மு.6 ம் நூறாண்டில் வாழ்ந்தார். இவரை பித்தாகரசுக்கு ரொம்பவும் பிடிக்கும்.அவரின் சீடராக இருந்தார். அதனாலேயே பித்தாகராஸ் தன் பள்ளியில் பெண்களுக்கு சுதந்திரமும், படிக்கும், போதிக்கும் வாய்ப்பும் மற்றும் ஆராய்ச்சியும் செய்யப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. பித்தாகரசின் மாமியாரான டைனோ(Deino ,6th century B.C.) பித்தாகரசின் மாணவராகவும், பள்ளியில் போதகராகவும் இருந்தார். எலோரிஸ்(Eloris),பின்டைஸ் (Phintys)மற்றும் மெலிசா (Melissa) ஆகிய பெண்களும் பித்தாகரசின் மாணவர்களே ..!

கணிதப் போதகர்கள் பெண்கள்..!

டைமிச்சா (Tymicha) என்ற பெண் ஸ்பார்டா விலிருந்து கணிதம் பயில,போதிக்க பித்தாகரசிடம் வந்தவர். அவர் பித்தாகரசின் பள்ளிக்கு நிறைய அர்ப்பணிக்குகளைத் தந்துள்ளார் என அயம்ப்ளிசூஸ் (Iamblichus ) என்ற வரலாற்றியலாளரால் சொல்லப்பட்டவர். ஆனால் அவர் கருவுற்றிருந்த போதும் கூட பித்தாகராஸ் பள்ளியின் ரகசியங்களைச் சொல்லுமாறு சைராகுயூசின் கொடூரனான டையோநிசியசால் (Dionysius ) நிர்பந்திக்கப்பட்டார். ஆனாலும் கூட பித்தாகரசைக் காட்டிக் கொடுக்காமல், தன் பல்லாலேயே தன் நாக்கை கடித்து வெட்டிக்கொண்டார்.அதன் பின் இறந்தார். இருப்பினும் அந்த கொடூரன் நிறைய பித்தாகரசின் மாணவர்களையும், ஆசிரியர்களையும் கொலை செய்தான். அது மட்டுமல்ல தாலமைஸ்,லைசிஸ், ரைடாக்கோ, ஊக்கேலோ, எக்கலோ, க்கிலோனுஸ்,க்ரதீஸிலையா என ஏராளமான பெண்கள் பித்தகராஸ் பள்ளியில் பணியாற்றி கணிதம் போதித்துள்ளனர். சாக்ரடீசின் ஆசிரியரான டையோடிம (Diotima , 6th-5th cenury B.C.)வும் பித்தாகராஸ் கணிதக் கூடத்தில் பணியாற்றிய பெண் கணிதமேதை. பிளாட்டோ என்ற தத்து வஞானியின் தாயான பெரிக்தியோன் (Periktione)என்பவரும் பித்தாகராஸ் பள்ளியில் பணியாற்றியவர்தான் .எனவே, பதிவு செய்யப்பட்ட பெண் கணிதமேதைகள் குறைவாக இருந்தாலும், ஏராளமான பெண்கள் கல்விக்கும், கணிதத்திற்கும் தங்களின் அர்ப்பணிப்பைச் செய்துள்ளனர்.


உலகின் மிகச் சிறிய முதுகெலும்பி... குட்டியூண்டு தவளை..!

உலகின் மிகச் சிறிய முதுகெலும்பி... குட்டியூண்டு தவளை..!


உலகின் மிகச் சிறிய முதுகெலும்பி... குட்டியூண்டு தவளை..!

அமெரிக்க ஐக்கிய நாட்டு விஞ்ஞானிகளின் குழுவைச்சேர்ந்த கிரிஸ் ஆஸ்டின் என்ற விஞ்ஞானி , சமீபத்தில் நியூகினியாவில் இரண்டு புதிய இனங்களைச் சேர்ந்த தவளைக் கண்டுபிடித்துள்ளார். எலும்புள்ள விலங்குகளில் இதுதான் உலகிலேயே மிக மிகச் சிறியது என்பது வியப்புக்குரிய விஷயமாகும். இந்த தவளை எவ்வளவு பெரிசு தெரியுமா? சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். இதன் அளவு 7 .7 மி.மீ தான். ஒரு இன்ச் நீளம் என்றால் உங்களுக்குத் தெரியுமல்லவா ? அந்த ஒரு இன்ச்சில் மூன்றில் ஒரு பகுதியைவிடச் சிறியது. இதற்கு முன் உலகின் சிறிய முதுகெலும்பி என்று பெயரும், பெருமையும் பெற்றிருந்த 8 மி.மீ நீளமுள்ள இந்தோனீசிய சின்ன மீனை இந்த தவளை பின்னுக்குத் தள்ளி விட்டது. இந்த குழு மூன்று மாதங்களாக உலகில் மிகப் பெரியதும், உயரமான வெப்ப மண்டல தீவான நியூகினியாவின் தீவை ஆராய்ந்து தேடித் தேடி இந்த தவளை இனங்களை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பானது ஆஸ்டின் குழுவினருக்கு மிகப் பெரிய சவாலும்,சாதனையுமாகும்.

இம்மாத்தூண்டு தவளையைக் கண்டுபிடிப்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. இதன் பெயர் பீடோபைரினி அமானூன்சிஸ்(Paedophryne amauensis) என்பதாகும் .இதன் ஆண் தவளையின் கீச்சிடும் ஒலி , ஒரு பூச்சியின் ஒலியைப் போலிருக்குமாம் . அதன் மூலம்தான் இந்த தவளையைக் கண்டுபிடித்தோம் என்று ஆஸ்டின் கூறுகிறார் . ஆனால் இது மிக மிகப் பெரிய கண்டுபிடிப்புதான்...! இதனைக் கண்ணால் காண்பதே பெரிய் விஷ்யம்தான். பொதுவாக நியூகினியா அதிகவகையான உயிரினங்கள் வாழும் ஓர் உயிரிப்பன்மையின் உச்ச பட்ச இடம். அந்த இடத்தில் எப்போதுமே புதிய வகை உயிரினங்களை கண்டுபிடிக்கலாம். கண்டுபிடிக்க முடியும்.அதனால்தான் ஏதாவது புதிய வகை உயிரினங்கள் கிடைக்குமா என்று தேடியவர்களுக்கு மிகப் பெரிய புதையல் அகப்பட்டதுபோல் கிடைத்ததுதான் இந்தப் புள்ளித் தவளை.இந்த தவளை பற்றிய தகவல் வெளியுக்லகுக்கும், அறிவியல் இதழிலும் 2012 , ஜனவரி 11 ம நாள் வெளியிடப்பட்டது.

அங்கு கிடைத்த இரண்டாவது தவளை., இந்த பீடொபைரீன் அமானூன்சிஸைவிட துளியூண்டு பெரிது. அதன் அளவு, 8 .5 மி.மீ ஆகும். இந்த குட்டியூண்டு தவளையின் பெயர் பீடோபைரினி ஸ்விப்ட்டோரம் (Paedophryne swiftorum ). பொதுவாக முதுகெலும்பிகளில் மிகச் சிறியதும், மிகப் பெரியதும் கொஞ்சம் பெருமையும், பிரபலமும் உடையவை. மனித இனம் அறிந்த 60,000 வகை முதுகெலும்பிகளில், மிகப் பெரியது நீலத் திமிங்கலமே..! அது எவ்வளோ பெரிசு தெரியுமா? சுமார் 25 மீட்டர் அளவு இருக்கும். அதாவது 75 அடி. அம்மாடியோவ் ஒரு வீடு சைஸ் என்று சொல்லலாமா? அதற்கு அடுத்த படி, மிகச் சிறிய முதுகெலும்பி, இந்தோனீசிய மீன்தான் என்று இதுவரை நம்பிக் கொண்டிருந்தோம்.அதன் சைஸ் வெறும் எட்டு மி.மீ மட்டுமே. ஆனால் அந்த எண்ணத்தை தூக்கி கபளீகரம் பண்ணி சாப்பிட்டுவிட்டது இந்த துளியூண்டு பூச்சி சைஸ் தவளை. ஒரு தண்ணீர்ப் பூச்சியைவிடச் சிறியது. இந்த குட்டி,பொட்டுத் தவளையின் சைஸ் 7 .7 மி.மீ. இதுவரை உலகின் மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய முதுகெலும்பிகள் நீரில்தான் இருக்கும் என்றும் நினைத்தோம். அந்த எண்ணத்தையும் முறித்துவிட்டது இந்த தவளையார். ஆமாம் இது தரை வாழ் விளங்கல்லவா ? வாழிட சூழலில் மழைக்காடுகளின் தரையில், இலைகளில்தான் இந்த மாதிரி சிறிய விலங்குகள் வாழ்க்கை நடத்துகின்றன என்று ஆஸ்டின் தெரிவிக்கிறார் . அமெரிக்க பணமான டைமில்(Dime) .(.நம்ம ஊரு ஒரு பைசா நாணயம் போலத்தான் இந்த டைம்.).இந்த தவளையை வைத்து படம் எடுத்துள்ளனர். பாருங்களேன்..!

Sunday, January 15, 2012

நான் வளர்கிறேனே மம்மி..அயொடின்.!

நான் வளர்கிறேனே மம்மி..அயொடின்.!

by Mohana Somasundram on Wednesday, December 14, 2011 at 8:59pm

நான் வளர்கிறேனே மம்மி..அயொடின்.!

உங்கள் வளர்ச்சியில்.. அயொடின்!

நான் வளர்கிறேனே மம்மி..என்று உங்கள் அம்மாவிடம் தமிழில் கொஞ்சினாலும், கொஞ்சாவிட்டாலும், உங்களின் வளர்ச்சிக்கு அயொடின் அவசியத் தேவை.சார். நீங்கள் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வளர்கின்றன. வளர்ச்சிதான் உயிரோடு இருப்பதை நினைவூட்டும் விஷயம். அந்த வளர்ச்சிக்கு தூண்டுகோல் எது தெரியுமா? அயோடின்தான்உயிருக்குஉயிரான முக்கிய கனிமம். ஆனால் பூமியில்

கிடைக்கும் தனிமங்களில் மிகவும் அரிதானதும்,அதிக கனமானதும் இதுதான் .ஆனால் இது பொதுவாக கடல் உணவிலும் சில காய்கறிகளும் உள்ளது. இருப்பினும் அயொடின் உயிரிகளின் உயிர்வாழ்தலுக்கும், உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கும் மிக மிக இன்றியமையாதது. அது மட்டுமல்ல. இது உடல்நிலை வெப்பம் தக்கவைக்கவும், முடி, தோல், பல் மற்றும் நகங்களை நல்ல நிலையில் பாதுகாக்கவும் உதவுகிறது.

எங்கெங்கு அயொடின் உள்ளது.?

நம் உடலில் கழுத்துப்பகுதியில் தைராய்டு என்ற சுரப்பி ஒன்று இருக்கிறது. அதுதான் உடல் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் முக்கிய காரணி. தைராய்டு சுரப்பில் சுரக்கும் தைராய்டு ஹார்மோன்தான் வளர்ச்சியைத் தூண்டுகிறது.தைராய்டு ஹார்மோனின் அடிப்படைப் பொருள் அயொடின் (Iodine). 15 -20 மி.கி அயோடின் தைராய்டு சுரப்பியிலும், மீதி 65 % உடலின் அனைத்து திசுக்களிலும் உள்ளன.உடலின் தற்காப்புத் திறன் உருவாக மிகவும் அயொடின் உதவுகிறது. அயொடின் பல தளங்களிலிருந்து கிடைத்தாலும் கூட, எளிதில் கிடைக்குமிடம் உப்பு மட்டுமே. அயொடின் ரொட்டி, கடல் உணவு மற்றும் கடல் தாவரங்களின் திசுவுடன் பிரிக்க முடியாத இணைப்பாக உள்ளது.

அயொடின் என்றால் என்ன?

அயோடின் ஒரு வேதியல் தனிமம். இதன் குறியீடு "I". அயோடின் என்ற சொல் கிரேக்கத்துக்கு சொந்தமானது.ஐயோடேஸ் (Iyodes)என்ற கிரேக்க சொல்லுக்கு வயலட்/கருநீலம் நிறம் உள்ளது என்று பொருள். இதன் நிறத்தை ஒட்டியே அயொடின் எனற பெயர் இதற்கு சூட்டப்பட்டது..சூரிய குடும்பத்திலேயே இது ஓர் அரிதான தனிமம். இதன் அணு எண் 16 .அதன் அணு எடை:126.9045 g.mol -1இது புவியில் கிடைக்கும் அரிதான தனிமங்களில் 47 வது இடத்தில் உள்ளது . இது 114 °C யில் உருகும். ஆனால் திட நிலையிலிருந்து நேரிடையாக வாயு நிலைக்குப் போய்விடும். இதற்கு பதங்கமாதல் நிகழ்வு என்று பெயர்.இதன் உப்புக்கள் நீரில் கரையக்கூடியவை. அதன் மூலம்தான் அயோடின் கரைசல் கிடைக்கிறது.

அயொடினின் குணங்கள்.!

அயொடின் ஒரு கலப்பில்லாத அலோகத் (non-metallic)த்னிமம். இது கருஞ்சாம்பல்/கரு நீலம் கலந்த பளபளப்பான வனப்புமிகு அலோகத் தனிமம்..இது ஹாலோஜன் (halogen) குடும்பத்தைச் சேர்ந்தது. இது பல உலோகங்களுடன் இணைந்து காணப்படுகிறது.இது இயல்பாகவே காற்று, நீர் மற்றும் நிலத்தில் காணப்படுகிறது. அயொடின் நச்சுத்தன்மை வாய்ந்தது. இதன் வாயு கண்ணையும் நுரையீரலையும் எரிச்சலடையச் செய்யும். ஆனால் முக்கியமாக அதிக அளவு அயொடின் பெருங்கடலில்தான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உத்தேசமாக, 400.000 டன்கள் அயொடின் அயோடைடு,ஹைடிரோ குளோரிக் அமிலம் மற்றும் மீத்தைல் அயொடைடு என்று கடல் உயிரிகள் மூலம் உற்பத்தியாகை கடலில் பரவிக்கிடக்கிறது. இவற்றில் பெரும்பான்மையானவை அங்கேயே நிலத்தில் படிந்து உயிர்ச்சுழற்சியின் பிரிக்க முடியா பங்காளியாகி விடுகிறது. அயொடின் 131 என்ற அதன் ரேடியோநியூக்ளிடைடுகள் (radionuclides) வான்வெளியில் வெடிக்கும் அணு ஆயுதகருவிகள் உறபத்தியில் பங்குபெறுகின்றன. அதன் பயன்பாடு 1945,ல் துவங்கி 1980 ல் சீனா சோதனை செய்ததுடன் அதன் சரித்திரம் முடிந்துவிட்டது. அயொடின் 131 புற்றுநோய் அபாயத்தை அதிரிகரிக்கிறது.

அயொடின் கண்டுபிடிப்பு.ம் பயனும்.!

பூமிலிருந்து அயோடின் கிடைத்தாலும், முதன் முதலில் இந்த தனிமத்தைக் கண்டறிந்தவர் பிரெஞ்சு விஞ்ஞானியான பெர்னார்டு கூர்டாய்ஸ்(Bernard Courtois ) என்பவர் தான். பெர்னாட்ர்டு கடல் பாசியுடன் கந்தக அமிலத்துடன்க் கடல்பாசி சாம்பலைக் கலந்தபோது,1811 ம ஆண்டு இந்த தனிமத்தைக் கண்டுபிடித்தார்.உலர்ந்த கடல் பாசிகள், குறிப்பாக, லிமினரியா (Liminaria) குடும்பத்தைச் சேர்ந்தவைகளில் அதிகம் அயொடின் உள்ளது. . இதில் ௦. 0.45 % அயொடின் உள்ளது.அயொடின் மருத்துவத்துறையிலும், புகைப்படக்கலையிலும், சாயம் தோய்க்கவும் பெரிதும் பயன்படுகிறது. அயொடின் இயற்கையாக, கடல்நீரில் சூழலுட்ன் இணைந்து கரைந்த நிலையில் உள்ளது.சிலசமயம் இது சில தாது உப்புக்களுடன் கலந்து நிலத்திலிருந்தும் கிடைக்கும்.

அயொடின் சொல்லும் கதை..!

ஒவ்வொரு தனிமத்தின் கண்டுபிடிப்பும் சுவை நிரம்பியதும்,,கதைநிரம்பியதும்தான். ஒருக்கால் அப்போது நோபல் பரிசு இருந்திருந்தால், பெர்னார்டு நிச்சயம் இரண்டு நோபல பரிசினை வாங்கி

இருப்பார். இதிலுள்ள கூத்து என்னவென்றால் மனிதனைக் கொல்வதற்கான வெடிமருந்து செய்துகொண்டிருந்த கூர்டாய்ஸ், மனிதனின் உயிரைக் காப்பாற்றும் அருமருந்தான அயொடினைக் கண்டு பிடிக்க நேர்ந்தது ஒரு எதிர்பாராத விபத்துதான். பிரெஞ்சு இளைஞரான விஞ்ஞானி பெர்னார்டு கூர்டாயஸ் பாரிஸிலுள்ள தன் ஆய்வக்த்தில் பணி புரிந்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு புது வகையான தனிமம் தன் செயல்பாட்டில் குறுக்கிட்டதைப் பார்த்து அசந்து பிரமித்து போனார்.. அவரது குடும்ப பண்ணையினர் நெப்போலியனின் போருக்காக சால்ட் பீட்டர் என்னும் வேதிப்பொருளைத் தயாரித்தனர்.இது துப்பாக்கி மருந்துக்கானது. சால்ட் பீட்டர் என்பது பொட்டாசியம் நைட்டிரேட் (potassium nitrate)ஆகும். அப்போது மரச்சாம்பலையே சால்ட் பீட்டர் தயாரிப்புக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால் அது போர்க்காலமாகையால், மரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

எதிர்பாராத கண்டுபிடிப்பான அயொடின்..!

பிரான்சில் சால்ட் பீட்டர் தயாரிக்க, மரத்திற்கு மாற்று தேடினர். அப்போது கிடைத்ததுதான் பிரான்சின் வடக்குக் கடற்கரையில் ஏராளமாய் மண்டிக்கிடக்கும் கடல் பாசிகள். இந்த கடல்பாசியை எரித்து அந்த சாம்பலுடன், அடர்கந்தக அமிலத்தையும் சேர்த்தனர். அடர் கந்தக அமிலம், கடல்பாசி சாம்பல் துகளுடன் இணைந்த மாத்திரத்திலேயே, கூர்டாய்ஸ் ஓர் அற்புதமான அபார நிகழ்வைச் சந்தித்தார்..எதிர்பாராவிதமாக, கருநீலவண்ணத்தில் ஒரு புகை அதிலிருந்து எழுந்தது. அது செம்பு குடுவைகளின் ஓரத்தில் படிகமாகப் படிந்தது. அது மட்டுமல்ல. செம்பு பாத்திரத்தை அரிக்கவும் செய்தது. இதனைப் பார்த்து வியந்து போய், ஆச்சரியத்தில் பேசக்கூட மற்ந்துபோனார் கூர்டாய்ஸ். பின்னர் தான் கண்டுபிடித்த அதிசயப் பொருளை பாட்டிலில் அடைத்து,இதன் குணங்களை அறிய தனது நண்பர்களான நிக்கொலஸ் கிளமெண்ட்(F .Nicolas Clement (1779–1841) மற்றும் பெர்னார்டு டெசோர்மெஸ்ஸுக்கு (J. Benard Desormes(1777–1862)க்கும் அனுப்பினார். பின்னர் அதனை நிரூபணம் செய்ய ஜோசப் கே லூஸ்ஸாக் (Joseph Gay-Lussac) என்பவரின் தலைசிறந்த ஒரு வேதிநிறுவனத்திற்கும் இந்த புதிய பொருளை அனுப்பி வைததார். அதனையே, இயற்பியலாளார் ஆண்ட்ரே மேரி ஆம்பியருக்கும் (physicst Andre-Marie Ampere (1775–1836) அனுப்பினார். அனைவருமே . இந்த தனிமத்தின் பெயர் அயொடைடு/அயொடின் எனறு சொன்னார்கள். கூர்டாய்ஸ் கண்டுபிடித்த புது பொருளுக்கு கிரேக்க வழியிலேயே அயொடின் (அயோடின்) என்ற பெயரும் சூட்டப்பட்டது.கிளமெண்ட்டும், டெசோர்ஸஸும் கூர்டாய்ஸ்தான் அயொடினின் கண்டுபிடிப்பாளார் என 1813,நவம்பர் 29 அன்று கூர்டாய்ஸின் கண்டுபிடிப்பை உலகறிய அறிவித்தனர்.

அயொடினின் ஆபத்திலிருந்து தப்பித்த கூர்டாய்ஸ்.!

இளைஞரான கூர்டாய்ஸ் கொஞ்சம் ரொம்பத்தான் புதிய தனிமத்துடன் விளையாடிப்பார்த்தார். ஆனால் அவர் அதன் மூலம் அதிர்ச்சி அடைந்ததுதான் மிச்சம். இந்த அயொடினை அம்மோனியாவுடன் சேர்த்துப் பார்த்தார். விளைவு? ஒரு சாக்லெட் வண்ண திடப்பொருள் கிடைத்தது. அதன்பெயர்தான் நைட்டிரஜன்-டிரை –ஆக்சைடு என்ற வெடிமருந்து. கூர்டாய்ஸ் இப்படி அயொடினுடன் விளயாடிய போது அது பயங்க்ரமாய் அதி வேக சத்தத்துடன் வெடித்தது. அதிர்ஷ்ச வசமாய் குறைந்த காயங்களுடன் தப்பித்துவிட்டார் கூர்டாய்ஸ்.ஆனால் அவரின் சமகாலத்தவரான பியரி டூலாங்(Pierre Dulong) கொஞ்சம் அதிர்ஷடக்கட்டை என்றுதான் சொல்ல வேண்டும்.இந்த அயொடின், அம்மோனியா இணைப்பு விளையாட்டில் ஒரு கண்ணையும், கையின் ஒரு பகுதியையும் இழந்தவர். பயங்கரமான வெடிமருந்தின் நீண்ட பலியாளர்கள் பட்டியலின் முதல் போணி பியரி டூலாங்தான்..

மருத்துவ குணங்கள் மலிந்த அயொடின்..!

அயொடின் மோசமான நச்சு குணம் உடையதுதான். ஆனால் அதன் ஆல்கஹாலுடன் சேர்த்து டிங்க்சர் அயொடின் என்ற மஞ்சள்-பழுப்பு நிற திரவமான கிருமிநாசினி தயாரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இது பரவலாகப் பயன்படுத்தவும் படுகிறது.இன்றும் கூட, பெரும்பாலும் பொதுவான நீர் சுத்திகரிக்க அயொடின் அடிப்படையிலான மாத்திரைகளே பயன் படுகின்றன. அயொடின் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே, இது மிகவும் முன்னேறிய வேதி தொழில்நுட்பத்தில்பரவலாகப் பயன்படுகிறது.

தினமும், நமக்கு வேண்டிய அயொடின்:

  • ஆண்களுக்கு ............. 150.. பெணகளுக்கு................. 120 மைக்ரோ கிராம்
  • தாய்மையுற்ற பெண்கள்:... 150..மைக்ரோ கிராம்
  • பாலூட்டும் பெண்ட்களுக்கு.. 170 மைக்ரோ கிராம்
  • குழந்தைகளுக்கு.............. 70-150....... மைக்ரோ கிராம்

சின்ன குழ்ந்தைகளுக்கு 50-60 மைக்ரோ கிராம்

அள்வுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

    1. அயொடின் அளவு அதிகரித்தாலும் கூட முன்கழுத்து கழலை நோய் வரும்.
    2. அயொடின் பாதிப்பு உள்ளவர்கள் தினம் 300 மைக்ரோகிராம்அயொடின் உட்கொள்ள வேண்டும்.
    3. கிராம் கடல்உணவில் உள்ள் அயொடின் 60 மைக்ரோ கிராம்
    4. ஒரு தேக்கரண்டி அயொடின் கலந்த உப்பில் 150..மைக்ரோ கிராம் அயொடின் உள்ளது.
    5. 100கிராம் காய்கறி/மாமிசம்/முட்டையில் உள்ள் அயொடின் 25 மைக்ரோ கிராம்
    6. 100கிராம் பால்பொருள்/ரொட்டி/தானியத்தில் மைக்ரோ கிராம் அயொடின் உள்ளது

Table 1: Recommended Dietary Allowances (RDAs) for Iodine]

Age.....................................Male....................................Female...............................Pregnancy.........................Lactation

Birth to 6 months............110 mcg*..........................110 mcg*

7–12 months..................130 mcg*..........................130 mcg*

1–3 years......................90 mcg.............................90 mcg

4–8 years......................90 mcg.............................90 mcg

9–13 years....................120 mcg............................120 mcg

14–18 years..................150 mcg.............................150 mcg...................220 mcg.......................290 mcg

19+ years.....................150 mcg.............................150 mcg...................220 mcg......................290 mcg

Table 2: Selected Food Sources of Iodine

Food.................................................Approximate Micrograms (mcg) per serving........................Percent DV*

Seaweed, whole or sheet, 1 g.......16 to 2,984 ..................................................................11% to 1,989%

Cod, baked, 3 ounces..................99 .................................................................................66%

Yogurt, plain, low-fat, 1 cup............75 .................................................................................50%

Iodized salt, 1.5 g (approx. 1/4 teaspoon)..71...........................................................................47%

Milk, reduced fat, 1 cup..................56 ................................................................................37%

Fish sticks, 3 ounces......................54 .................................................................................36%

Bread, white, enriched, 2 slices.........45 .................................................................................30%

Fruit cocktail in heavy syrup, canned, 1/2 cup...42.......................................................................28%

Shrimp, 3 ounces.........................35 ...................................................................................23%

Ice cream, chocolate, 1/2 cup .........30 ...................................................................................20%

Macaroni, enriched, boiled, 1 cup......27...................................................................................18%

Egg, 1 large ..............................24 ...................................................................................16%

Tuna, canned in oil, drained, 3 ounces...17 ................................................................................11%

Corn, cream style, canned, 1/2 cup....14 ....................................................................................9%

Prunes, dried, 5 prunes...................13 ...................................................................................9%

Cheese, cheddar, 1 ounce................12 ...................................................................................8%

Raisin bran cereal, 1 cup..................11 ...................................................................................7%

Lima beans, mature, boiled, 1/2 cup.....8 ....................................................................................5%

Apple juice, 1 cup..........................7 ....................................................................................5%

Green peas, frozen, boiled, 1/2 cup....3 ...................................................................................2%

Banana, 1 medium........................3 .....................................................................................2%

அயொடின் பாதிப்பால்...!

உடலில் அயொடின் குறைபாடு இருந்தால், முன்கழுத்துக்கழலை (goiter)என்ற நோய் வரும், குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி இருக்காது. உலக நலன் கருதும் நிபுணர்கள், அயொடின் போதாமை என்பது தடுக்கக்கூடியதுதான். ஆனால், அயொடின் போதாமையால், உலகம் முழுவதும் சுமார் 1,500,000,000 மக்கள் மூளை பாதிப்பு அடையும் நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கின்றனர்.அதே போல உலகம் முழுவதும் 50,000,000 குழந்தைகள் அயொடின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கருவுற்ற பெண்களுக்கு அயொடின் போதவில்லை என்றால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி இருக்காது. கருச்சிதைவு ஏற்படும். மிகக் குறைவான அயொடின் பற்றாக்குறை கூட, குழந்தைகளின் அறிவுத்திறனைப் பாதிக்கும்; மூளை வளர்ச்சியையும், கற்றல் திறனையும் அழிக்கிறது.. இந்தியாவின் சுகாதாரத் துறை அமைச்சர் தரும் தகவ்ல படி, ஆண்டில், கோடிப்பேர் அயொடின் பற்றாக்குறையால் அவதிப் படப்போகின்றனர் என்று இரண்டு மாதம்(நவம்பர்) முன்பு தெரிவித்துள்ளார்.